-
25th November 2013, 09:48 PM
#461
Senior Member
Senior Hubber
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..என்ன சொல்வதென்று தெரியவில்லை....
இந்த இழையைக் கொஞ்சம் மெதுவாக மாற்றியமைக்கு நானும் ஒரு காரணம் என்பதால் வருந்துகிறேன்..
*
சந்திர சேகர் சார், உங்கள் முயற்சிகள் வெகுவாகப் பாராட்டத் தக்க ஒன்று..தொடருங்கள் உங்கள் நற்பணியை..மிக்க நன்றி..
*
ராகவேந்திரர் சார்..மன்னிக்க.. நீங்கள் சொன்னது என நினைத்தது என் தவறு தான்..
*
ஒரு இனிய பதிவுடன் உங்களை வந்து சந்திக்கிறேன்..
-
25th November 2013 09:48 PM
# ADS
Circuit advertisement
-
26th November 2013, 12:37 AM
#462
கீழ்கண்ட பதிவை நேற்றே பதியும் நேரம், மின்சார இணைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது. ராகவேந்தர் சார் இந்த விஷயத்தை அழகாய் குறிப்பிட்டிருக்கிறார். இருந்தாலும் திரியை open செய்ய முடியாமல் பல முறை அவதிப்பட்டவன் என்ற முறையில் என் கருத்தையும் பதிவு செய்கிறேன்.
ராகுல்,
சொர்க்கம் பற்றிய விவரணை ok. அதே நேரத்தில் அந்தப் பதிவில் இத்துணை video-கள் தேவையா? காரணம் இத்துணை வீடியோக்கள் பதிவிடும் போது பல நேரங்களில் திரியை open செய்வதே ஒரு சவாலாக இருக்கிறது. Broad Band உபயோகிக்கும் எனக்கே இந்த நிலைமை என்றால் dial up connection இருக்கிறவர்களை நினைத்து பாருங்கள். பலர் இதனாலேயே திரிக்குள் வராமல் சென்று விடுகிறார்கள். ராகுல் என்றல்ல வீடியோக்கள் பதிவிடும் அனைவருக்கும் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். வீடியோவே வேண்டாம் என்று சொல்லவில்லை. அளவோடு தேவையான இடங்களில் மட்டும் பதிவிடலாம். இந்த திரிக்கு வரும் 99% மனிதர்களும் படிக்க தான் வருகிறார்கள். இது போன்ற வாசகர்கள் வேறு எந்த திரிக்கும் கிடையாது. ஆகவே குறைந்த அளவு வீடியோ, நிறைந்த செய்திகள் என்று தொடருவோம். அனைவரும் புரிந்துக் கொண்டு ஒத்துழைப்பீர்கள் என நம்பிக்கையுடன்
அன்புடன்
-
26th November 2013, 12:47 AM
#463
ராகவேந்தர் சார்,
நீங்கள் திரியில் நேரிடையாக வந்து பல விளக்கங்களை அளித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. காரணம் நான் உங்களிடம் அலைபேசியில் உரையாடியபோது சொன்னது போல் சில தவறான impressions-ஐ அகற்ற அது பயன்படும். அதே போல் நண்பர் சின்ன கண்ணன் அதை புரிந்துக் கொண்டிருக்கிறார். இனி நீங்கள் சொன்ன சில points-கு வருகிறேன்.
ஒவ்வொருவரின் பதிவுகளுக்கு பின்னல் இருக்கும் உழைப்பை அறியாதவன் அல்ல நான். குறிப்பாக வாசுவிடமே நான் அதை கூறியிருக்கிறேன். ஹிட்லர் ஆய்வைப் பற்றிய பதிவை பற்றிய என் கருத்தை கூட நீங்கள் படித்திருக்கலாம். நண்பர் கார்த்தி (HR) எழுதியது சரியல்ல என்றுதானே குறிப்பிட்டிருக்கிறேன். இன்னும் கடுமையாக சொல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்வது எப்படி என்று புரியவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் (அது உங்களுக்கே கூட தெரியும்) என்னால் யாரையும் கடுமையாக பேச முடியாது. அது எனக்கு வராது. என்னை நேரிடையாக தாக்கி எழுதியவர்களை கூட நான் அப்படி பேசியதில்லை. ஆழமாக வருத்தத்தை பதிவு செய்யவில்லை என்பதாலே நண்பர் HR சொன்ன கருத்தை நான் ஒப்புக் கொள்கிறேன் என்றோ எதிர்க்கவில்லை என்றோ அர்த்தம் ஆகி விடாது. இது நண்பர்களுக்கு புரியும் என நம்புகிறேன்.
இரண்டாவது point. மாற்று கருத்தை பற்றி சொல்லியிருந்ததை வைத்து நடிகர் திலகம் செய்தது தவறு என்று ஆகி விடாது என்று சொல்லியிருக்கிறீர்கள். அவர் செய்தது தவறு என்று நான் எங்கே சொல்லியிருக்கிறேன்? மீண்டும் படித்துப் பாருங்கள் "அவர் எடுத்த அரசியல் நிலைப்பாட்டை பற்றியே மாற்று கருத்து கொண்டு அதை அவரிடமே நேரில் சொன்ன தீரா மறவர் கூட்டம் நமது ரசிகர் கூட்டம்" என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.சரி, தவறு என்ற விவாதமே அங்கே வரவில்லை. மாற்றுக் கருத்தையும் வரவேற்போம் என்றுதான் சொன்னேன்.
இன்னும் சற்று விளக்கமாக சொன்னால் பெருந்தலைவர் மறைவிற்கு பின் நடிகர் திலகம் எடுத்த அரசியல் நிலைப்பாட்டை ஆதரிப்பவர் நீங்கள். அதில் மாற்றுக் கருதது கொண்டவன் நான். நாம் இருவரும் இந்த கருத்தில் மாறுபடுகிறோம் என்பது நம் இருவருக்கும் தெரியும் இந்த திரியை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கும் தெரியும். அதனால் நம் நட்பில் விரிசல் விழுந்து விட்டதா இல்லையே! இல்லை நமது திரியை பாதித்து விட்டதா,இல்லையே!
இதே போல் அருமை நண்பர் ஜோ திராவிட இயக்கங்களையும் குறிப்பாக திமுகவையும் அதன் தலைவரையும் ஆதரிப்பவர். நான் திராவிட இயக்கங்களுக்கு எதிரானவன். Current Topics பகுதியில் நானும் அவரும் பல முறை இது பற்றி விவாதங்கள் நடத்தியிருக்கிறோம் என்பதும் உங்களுக்கு தெரியும். ஆனால் எங்கள் நட்பில் விரிசல் இல்லை. நமது திரியை பாதித்து விட்டதா,இல்லையே! இவ்வளவு ஏன் நண்பர் கார்த்திக் கூட திமுக ஆதரவாளர்தான். அவருடனும் arguments நடந்திருக்கிறது. ஆனால் அது நடிகர் திலகத்தின் திரியை பாதித்ததில்லை. சுருக்கமாக சொன்னால் சுயமாக சிந்திக்க தெரிந்தவன் சிவாஜி ரசிகன். இதை எந்த இடத்திலும் பெருமையாக சொல்லுவேன்.
மூன்றாவது point. நடிகர் திலகத்தை விட்டுக் கொடுப்பது. இதை எந்த காலத்திலும் செய்ததுமில்லை இனி செய்ய போவதுமில்லை. இந்த திரியிலும் பல முறை பதிவு செய்திருக்கிறேன். பலரிடமும் நேரில் சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். இந்த திரி எனக்கு அறிமுகமானபோது நான் எழுத ஆரம்பித்த போது எனக்குள் இரண்டு இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டேன். ஒன்று நடிகர் திலகம் என்றாலே முதல் மரியாதை & தேவர் மகன் என்ற குறுகிய வட்டத்துக்குள் ஒரு பிம்பமாக அவரை நினைத்துக் கொண்டிருந்த இளைய தலைமுறை மற்றும் நடுத்தர வயதை எட்டிப் பிடிக்கும் தலைமுறையிடமும் நடிகர் திலகம் என்பவர் இது போன்ற சட்டமிட்ட பிரேமில் வரையப்பட்டவர் அல்ல. எதனுள்ளிலும் அடக்க முடியாதவரும் எதனாலும் அளக்க முடியாதவரும் கூட என்பதை அவர்களிடம் கொண்டு சேர்ப்பது. இரண்டாம் இலக்கு பல வருடங்களாக மறைத்து வைக்கப்பட்ட அவரது பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை வெளியுலகதிற்கு உரக்க சொல்லுவது என்பதுதான். ஆண்டவன் அருளாலும் நீங்கள், சுவாமி, வாசு மற்றும் கோபால் போன்றவர்களின் பங்களிப்பாலும் இந்த இரண்டு இலக்குகளையும் முழுமையாக அடைந்து விட்டோம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கணிசமான தூரத்தை வெற்றிகரமாக கடந்திருக்கிறோம் என்பதை பெருமையாக் சொல்லிக் கொள்ளலாம்.
இப்போதும் அந்த மன நிலையில் மாற்றமில்லை என்பதனால்தான் நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான தகவல்கள் வரும்போது அதை சுட்டிக் காட்டி உண்மைகளை உரக்க சொல்லும் உண்மை உணரும் நேரம் போன்றவற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். இனியும் அது தொடரும்.
கசப்புணர்வுகளை மறந்து திரிக்கு மீண்டும் பங்களிப்பு செய்யுமாறு உங்களையும் வாசுவையும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
-
26th November 2013, 12:50 AM
#464
மதுரை ஜெய்ஹிந்தபுரம் அரவிந்த் திரையரங்கிற்கு விஜயம் செய்திருக்கிறார் பாரிஸ்டர் ரஜினிகாந்த். பாரிஸ்டர் வந்தாலே பரபரப்பிற்கு பஞ்சம் வராதே! சனி ஞாயிறு இரண்டு தினங்களும் திரையரங்கும் சரி அரங்க வளாகம் மற்றும் அரங்கம் அமைந்திருக்கும் தெருவும் சரி இரண்டுபட்டு விட்டது என்று நேரில் கணடவர்கள் சொன்னார்களாம். ஞாயிறு மாலை அரங்க வாசலில் வைத்திருந்த போஸ்டர் ஒட்டிய தட்டியே கீழே விழுந்து விடுமோ என்று நினைக்கும் அளவிற்கு மலர் மாலைகள் குவிந்து விட்டனவாம். உள்ளே வெளியே நடந்த அலப்பரையையும் கூட்டத்தையும் பார்த்துவிட்டு அண்மைக் காலத்தில் இப்படி ஒரு சந்தோஷ கொண்டாட்டத்தையும் கூட்டத்தையும் பார்த்ததில்லை என்று தியேட்டர் நிர்வாகத்தினர் வியந்து சொன்னதாக தகவல்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை நம்முடன் பகிர்ந்து கொண்ட திரு குப்புசாமி அவர்களுக்கும் நண்பர் ராமஜெயம் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன்
-
26th November 2013, 07:04 AM
#465
Junior Member
Newbie Hubber
முரளி,
நீங்கள் சொன்னது மிக சரியான நிலை பாடு.நான் நடந்ததை மறந்து பாரிஸ்டர் விஜயத்தை கொண்டாட என் பார்வையில் பாரிஸ்டர் ஐ கொண்டாட முடிவு செய்துள்ளேன். 1973 இல் பாரிஸ்டர் உம ,பைரவனும் என் விரிவான பார்வையில் விரைவில் உலா வருவார்கள்.
-
26th November 2013, 08:20 AM
#466
Senior Member
Diamond Hubber
முரளி சார்,
என்னைப் பொறுத்தவரை மாற்றுக்கருத்து உள்ளவர்களிடையே தான் உள்ளார்ந்த மரியாதையும் நட்புணர்வும் நிலவும் .அரசியல் ரீதியாக நாம் வேறுபட்டு நிற்பதல்ல முக்கியம் அதன் உள்ளார்ந்த நியாயங்களையும் அவ்வாறு வேறுபட்டு நிற்பதற்கான உரிமையை மதிப்பதும் தான் முக்கியம் .அத்தகைய மனநிலை இருந்து விட்டால் இங்கே நடைபெறும் குழப்பங்களுக்கு இடமில்லை .
சிலர் சில இயக்கத்தை கொள்கையை ஏற்றுக்கொண்டதால் அந்த இயக்கத்தை சார்ந்த கலைஞருக்கு ரசிகராக இருக்கலாம் .சிலர் ஒரு கலைஞருக்கு ரசிகராக இருப்பதால் அவர் சார்ந்திருக்கும் இயக்கத்தை கொள்கையை ஆதரிக்கலாம் .சிலர் இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கலாம் ,அதனால் வேறு வேறாக அமையலாம் .சிலருக்கு இரண்டுமே ஒத்ததாய் இயல்பாய் அமைந்து விடலாம் .இதில் நான் மூன்றாம் ரகம் .நீங்கள் நான்காம் ரகம் என நினைக்கிறேன் . இதில் எந்த ரகமாய் இருந்தாலும் அதில் தவறில்லை , இல்லை என் ரகம் தான் சரி என்று மல்லுக்கட்டாதவரை .
Last edited by joe; 26th November 2013 at 12:52 PM.
-
26th November 2013, 08:22 AM
#467
Junior Member
Seasoned Hubber
டியர் CK - உங்கள் வருகை மிகவும் சந்தோஷத்தை தருகின்றது - முரளி சாரின் பதிவையும் , ராகவேந்திர சாரின் பதிவையும் படித்த பிறகு , யாருக்கும்மே மன்னிக்கும் தன்மையும் , மன்னிப்பு கேட்கும் தன்மையும் , மற்றவர்கள் பதிப்புகளில் இருக்கும் தவறுகளை மறக்கும் தன்மையும் , பிறர் மனதை புன்படுத்தகூடாத பெருந்தன்மையும் வந்துவிடும் .
என்னை பொறுத்தவரை , தவறுகளை எடுத்து சொல்வதில் பிரச்சனையே இல்லை ஆணால் அதுவே மற்றவர்களை புண்படுத்தும்படி இருக்ககூடாது - புண்படுத்தும்படி இருக்குமானால் அவர்கள் தவறுகளை திருத்திகொள்ளும் வாய்ப்பை தவற விடுகிறார்கள் .
உங்கள் ரசிகன் என்ற உரிமையில் உங்களுக்கு ஒரு பதிவு இட்டிருந்தேன் - நீங்கள் பதில் போடாததினால் , என்மீதும் கோபம் கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன் - அப்படி இருக்காது என்றால் தயவு செய்து , கிருபா சாரையும் திரிக்கு மீண்டும் வர வையுங்கள் - நீங்கள் கூப்பிட்டால் கண்டிப்பாக வருவார் - அவர் பதிவுகளில் சின்ன சின்ன தவறுகள் இருக்கலாம் நான் பதிவிடுவதைபோல - ஆனால் அவர் வந்த பிறகு , இந்த திரியில் , நகைச்சுவை உணர்ச்சி அதிகமானது - திரியும் வேகமாக செல்ல ஆரம்பித்தது - மீண்டும் உங்களிடம் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் - இங்கு நாம் தமிழில் பட்டம் பெற வரவில்லை - நம் மனதை கவர்ந்த NTயை புகழ வந்திருக்கிறோம் - அவரவர்கள் தன் தனிப்பட்ட திறமையின் மூலம் பக்தியை காட்டுகிறார்கள் - பிடித்திருந்தால் படிப்போம் - பாராட்டுவோம் - பிடிக்காவிட்டால் விட்டுவிடுவோம் அவர்கள் மனம் புண்படாமல் - அடுத்த உங்கள் பதிவையும் , கிருபா சாரின் பதிவையும் ஆவலுடன் எதிபார்க்கும்
அன்புடன் ரவி

-
26th November 2013, 08:33 AM
#468
Senior Member
Seasoned Hubber
Last edited by goldstar; 26th November 2013 at 08:36 AM.
-
26th November 2013, 12:28 PM
#469
Junior Member
Seasoned Hubber
Dear Murali Sir,
I got your point, I knew it was too much on my part to include many videos but considering the very good print I was overjoyed and hence I did it, sorry sir, I will make sure that I restrict videos to minimal max 4-5 in case or nil
thanks for pointing out
-
26th November 2013, 12:50 PM
#470
Senior Member
Devoted Hubber
சற்று முன் வந்த தகவல்.... (தினமணி இணையதள செய்தி)
"மெரினா கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றலாம் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று தமிழக அரசு பதில் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில், காமராஜர் சாலையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்பும் போது, மற்ற மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களை இந்த சிலை மறைப்பதால், இந்த பகுதியில் அதிக விபத்துகள் நேர்ந்துள்ளன என்றும், இதனால் அநதச் சிலையை அகற்றலாம் என்றும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது."
இந்த அரசுக்கு நம் நடிகர்திலகத்தின் மீது என்ன பகை? யார் யார் சிலைகளோ இங்கு வீற்றிருக்க நம் தலைவர் சிலை மீது கை வைக்கிறார்கள் என்றால் ஏதோ உள்நோக்கம் உள்ளதோ என சந்தேகிக்க வேண்டி உள்ளது.
Last edited by J.Radhakrishnan; 26th November 2013 at 12:55 PM.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
Bookmarks