சென்னை சர்வதேச திரைப்பட விழா.. கமல்- அமீர்கான் தொடங்கி வைக்கிறார்கள்
11வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 12-ம் தேதி தொடங்குகிறது.
8 நாட்கள் நடக்கும் இந்த விழாவை கமல் ஹாஸன் மற்றும் அமீர்கான் தொடங்கி வைக்கிறார்கள். நிறைவு விழாவில் மோகன் லால் கலந்து கொள்கிறார்.
சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள வெங்கடசுப்பாராவ் நினைவு அரங்கில் திரைப்பட விழாவின் தொடக்க, இறுதி நிகழ்ச்சிகள் நடக்கிறது.
8 அரங்குகளில் படங்கள் திரையிடப்பட உள்ளன. அவை, அபிராமி மெகா மால், உட்லண்ட்ஸ் காம்ப்ளக்ஸ், கேசினோ, ஐநாக்ஸ், ராணி சீதை ஹால் ஆகியவைதான் இந்த 8 அரங்குகள்.
இந்த விழாவில் பங்கு பெற பல்வேறு நாடுகளிலிருந்தும் செய்தியாளர்கள், பல நாட்டு தூதர்கள், இயக்குநர்கள் பங்கேற்கிறார்கள்.
திரைப்படங்கள் குறித்த விவாத கருத்தரங்குகளும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு அமிதாப் பச்சன் பெயரில் இளம் சாதனையாளருக்கான விருது அறிமுகப்படுத்தப்படுகிறது. மொத்தம் 58 நாடுகளிலிருந்து 163 படங்கள் சென்னை திரைப்பட விழாவில் கலந்து கொள்கின்றன.
ரஜினியின் வயது 162. இப்படி சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. டிசம்பர் 12 ந் தேதி ரஜினிக்கு பிறந்த நாள். அதற்கு முன்னதாக தமிழகமெங்கும் இப்படியொரு போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. ரஜினி மட்டுமல்ல, உலகின் முன்னணி பிரபலங்கள் பலரது புகைப்படத்துடன் அவர்களின் வயதை தாறுமாறாக அதிகப்படுத்தி குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த சுவரொட்டியை பார்த்து, ரசிகர்கள் என்னவென்று புரியாமல் வியந்தபடியும் தங்களுக்குள் விவாதித்தபடியும் செல்கிறார்கள்.
‘சாய்ந்தாடு சாய்ந்தாடு' படத்திற்கான பிரமோஷன் போஸ்டர்தான் அது என்றாலும், படத்தில் இதுகுறித்த விளக்கங்கள் காட்சியாக வைக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகத்தோடு பத்திரிகையாளர்களும் படத்தின் இயக்குநர் கஸாலியை தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறார்கள். கஸாலி கூறும்போது, ‘இந்த போஸ்டரில் உள்ள பிரபலங்களுக்கு நாங்கள் குறிப்பிட்டிருக்கும் வயதிற்கும், கதைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நம்மால் வியக்கப்பட்ட இந்த பிரபலங்கள் சராசரி வயதிற்கும் மேல் இன்னும் ஐம்பது ஆண்டுகளோ, அதையும் தாண்டியோ, மாறாத இளமையோடும் உற்சாகத்தோடும் வாழ்ந்தால் அது எவ்வளவு சந்தோஷமான விஷயம்? அப்படியொரு கனவை மெய்யாக்க நினைக்கிற விஷயம் ஒன்றும் படத்தில் இடம் பெறுகிறது. அதை சூசகமாக சொல்லதான் இப்படி ஒரு போஸ்டரை உருவாக்கினோம்' என்றார். கஸாலியின் கனவு நனவானால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்!
Bookmarks