I am an ardent fan of Nadigar Thilagam and have been reading the postings of various NT Fans and am liked to read the postings of M/s.Raghavendra, Neiveli Vasudevan, Murali Srinivas,Gopal and others.
All these I am reading only the postings of others I have tried to use this forum to ink my thoughts in this forum. Just this is only a test message.
இந்த திரிக்கு புதியதாய் வந்திருக்கும் அன்பு நண்பர் திரு.n.v. Raagavan அவர்களே வருக வருக
தாங்கள் இருக்கும் ப்குதியில் நமது நடிகர் திலகத்தின் செய்திகளை இனிதே தருக
நமக்குள் வரும் கருத்து மோதல்களை விடுங்கள்.தெளிவான ரசிகர்களை கொண்டதால் விளையும் முரண்,அது சார்ந்த கர்வங்கள்,மான பிரச்சினைகள்.இது குடும்பத்துள் அண்ணன் தம்பி பிரச்சினை.இது ஒரு ஆரோக்கியமான சுவாரஸ்யம் நிறைந்த செல்ல மோதல்கள்.
ஆனால் இங்கு நம் திரிக்கு மட்டும் சந்தேகமான நபர்கள் வந்து அதை செய்,இதை செய்யாதே என்று குழப்பம் விளைவிப்பது.பல நகைப்புக்கிடமான விஷயங்கள்,மூட தனங்கள் நிறைந்த இடங்களில் யாரும் சென்று எதையும் சொல்லாத போது நமக்கு மட்டும் என் இந்த கட்டுப்பாடுகள்,சட்ட திட்டங்கள்?பதிவர்களை அவமான படுத்தி திட்டமிட்டு விரட்டுவது போன்ற திரிசம வேலைகள்?
என்னை,ராகவேந்தரை,வாசுவை,முரளியை ,கார்த்திக்கை விடுங்கள்.நாங்கள் போட்டு கொள்ளாத சண்டைகள் இல்லை,விவாதங்கள் உண்டு.ஆனாலும் தெளிவாக சில விஷயங்கள் உண்டு.
1)நாங்கள் அனைவருமே பங்களிப்பாளர்கள்.
2)திரிக்கு சுவை கூட்டி,மெருகேற்றி,பார்வையாளர்களை ஈர்த்து,நடிகர்திலகத்தை பற்றி மேலும் புரிந்து கொள்ள உதவும் குழு.
3)எங்கள் நோக்கம் ஒன்றே ஒன்று.-நடிகர்திலகம் மட்டுமே பிரதானம்.
4)எங்கள் அனைவரிடமே,சொல்ல விஷயங்கள் இன்னும் உண்டு.மெருகேற்றி ,சுவையாக,creative ஆக செய்யும் திறம் உண்டு.
இதில் எங்கே வந்தது ஆக்ரமிப்பு? எங்களுக்கு மட்டும் என் ஆயிரம் கட்டளைகள்,நிர்பந்தங்கள்?
அதுவும் ,பங்களிப்பாளர் அல்லாத மற்றவர்களிடம் இருந்து?
வாசு மற்றும் என் போன்றவர்கள் நொந்து வெளியேறுவதால் திரிக்கு நன்மை உண்டா?வேறு யாரேனும் எங்கள் இடத்தை எடுத்து கொண்டு பணியாற்றினால் மகிழ்ச்சியே.ஆனாலும் அதுவும் நேர்வதாக தெரியவில்லை.
சரி.கொஞ்சம் சுவை கூட்டலாம் என்று பார்த்தால் ஒரு முக்கிய நண்பர் வந்து நாங்கள் ரசிக்கும் மனநிலையில் இல்லை என்கிறார். சிவாஜியை பற்றி சொல்வதற்கும் ,சுவைப்பதற்கும் என்னைய்யா மனநிலை?கோவிலுக்கு செல்லும் மனநிலைதானே?சுகம்,துக்கம் இரண்டிலும் ஆசுவாசம் தர கூடியதுதானே?
மன வருத்தத்துடனே பதிவு செய்கிறேன்.
வாசு,ராகவேந்தர்,கார்த்திக்,முரளி,சாரதி போன்றவர்கள் உடனே வருவது,நாம் கட்டி காத்த கோயில் பாழடையாமல்,திருப்பணி செய்வதற்கு ஒப்பானது.வாருங்கள்.என் அன்பு வேண்டுகோள்.
பம்மலார் ,விரைவில் நமது நூலை கொண்டு வர ,நூறு நிச்சய முன் பதிவுகளாவது எதிர்பார்க்கிறார். நம் திரி பார்வையாளர்களில் பத்தில் ஒருவர் ,committed Fan என்று கணக்கிட்டாலும்,அந்த நூறு முற்று பெற்றிருக்க வேண்டுமே?செய்வீர்களா?அந்த தெய்வ தேவர் திருமகனுக்கு,தமிழகமே கடன் பட்டுள்ளதே?நம் ரசிகர்களாவது,அந்த கடனில் சிறு பகுதியை நேர்த்தியாக செலுத்தாலாமே?
நமக்குள் வரும் கருத்து மோதல்களை விடுங்கள்.தெளிவான ரசிகர்களை கொண்டதால் விளையும் முரண்,அது சார்ந்த கர்வங்கள்,மான பிரச்சினைகள்.இது குடும்பத்துள் அண்ணன் தம்பி பிரச்சினை.இது ஒரு ஆரோக்கியமான சுவாரஸ்யம் நிறைந்த செல்ல மோதல்கள்..
Originally Posted by Gopal,S.
வாசு,ராகவேந்தர்,கார்த்திக்,முரளி,சாரதி போன்றவர்கள் உடனே வருவது,நாம் கட்டி காத்த கோயில் பாழடையாமல்,திருப்பணி செய்வதற்கு ஒப்பானது.வாருங்கள்.என் அன்பு வேண்டுகோள்.
திரு.கோபால் சாரின் கருத்தில் உடன்படுகிறேன். என்னுடைய வேண்டுகோளையும் இணைத்துக்கொள்கிறேன்.
Last edited by KCSHEKAR; 8th December 2013 at 05:34 PM.
நான் உட்பட எங்கள் நண்பர்கள் குழாம் எல்லோரும் சேர்ந்து 1972/73 ஆம் ஆண்டு வாக்கில் சென்னை சைனாபஜார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையை ஒட்டியுள்ள தேரடி வீதியில் நடிகர்திலகம் அவர்களின் பெருமையைக் கொண்டாட " ப்ரஸ்டிஜ் சிவாஜி ரசிகர் மன்றம் " என்ற பெயர் கொண்டு பல ஆண்டுகள் சிறப்பாக நடத்திவந்தோம்.
அவ்வமயம் சென்னை ஆர்மினியன் தெருவிலுள்ள கோகலே ஹாலில் நடிகர்கள் மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீகாந்த் மற்றும் நவசக்தி பத்திரிகையின் செய்தியாளர் நவசக்தி ராகவன் அவர்கள் மூலம் ந்டிப்பின் இமயத்தைப் போற்றி ஒரு சிறப்பு மலர் வெளியிட்டோம். மேலும் அப்பொழுது ப்ரபலமாகாத இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் அவர்களை அழைத்து ஒரு இசைக் கச்சேரியும் நடத்தினோம். மிகச் சிறப்பாக நடைபெற்ற அந்த விழாவினை இப்பொழுது நினைத்தாலும் மிகவும் இன்பமாக இருக்கும். கோகலே ஹால் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதி நிரம்பி வழிந்தது.
நிகழ்ச்சி நடந்த மறுநாள் நடிகர்திலகத்திடம் நிகழ்ச்சிபற்றி விவரித்த பொழுது எங்களைப் பாராட்டி ஊக்குவித்தார். அப்பொழுது உடனிருந்த மேஜர் அவர்களும் அந்த நிகழ்ச்சி பற்றி அவரிடம் சொல்லி எங்களையும் பாராட்டினார்.
பிறகு நண்பர்கள் அலுவல் காரணமாக பிரிய நேரிட்டதால் எங்களால் மன்றத்தைத் தொடர முடியாமல் போனது. இருந்தாலும் நாங்கள் எங்கிருந்தாலும் நடிகர் திலகத்தின் படத்தினை வெளியாகும் நாளில் அதுவும் முதல் காட்சியிலேயே பார்த்துவிடுவோம்.
நான் பணிபுரிந்த டிவிஎஸ் நிறுவனத்தில் என்னுடைய மேனேஜர் நான் ஒருநாள் விடுப்பு எடுத்திருந்தால் மறுநாள் என்னிடம் நேற்று ஏன் நீ வேலைக்கு வரவில்லை ? என்ன சிவாஜி படம் ரிலீஸ் ஆகி இருந்தது என்று கேட்பார். அது மட்டுமில்லாது இனிமேல் படம் பார்ப்பதற்கு என்று நீ விடுப்பு எடுத்தால் உனக்கு லீவு கிடையாது. அன்றுடன் நீ வேலையை விட்டு போக வேண்டியதுதான் என்று கூறுவார். இருந்தாலும் அடுத்த படம் ரிலீஸ் ஆகும்போதும் விடுப்பு எடுத்து படம் பார்க்க சென்று விடுவேன். அநத இளவயது நாட்களும் நடிகர் திலகத்தின் ந்டிப்பை அணு அணுவாக ரசித்ததையும் இன்று அவர் இருந்து வருடத்திற்கு ஒருபடமாவது அளித்து மகிச்சிக்கடலில் ஆழ்த்தமாட்டாரா என்று ஏங்குவதையும் வார்த்தையில் விவரிக்க இயலவில்ல்லை.
Bookmarks