-
10th December 2013, 10:38 AM
#1381
Senior Member
Seasoned Hubber
-பூங்காத்தே பூங்காத்தே
போனவளை பூங்குயிலை பார்த்தியா
தாங்காம தவிச்சேனே
சின்னவளை என்னிடத்தில் சேர்ப்பியா
கண்ணாலே பார்த்தது கனவாக தோணுது
கண்ணுக்குள்ளே கண்ணீர் வற்றி போனது...
-வான் பறவை தன் சிறகினை எனக்குத் தந்தால்
பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே
காதலை வாழ வைப்பேன்
அழுத முகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன்...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th December 2013 10:38 AM
# ADS
Circuit advertisement
-
10th December 2013, 11:33 AM
#1382
Senior Member
Senior Hubber
ஓ..இவ்வளவு பூங்காற்று அடிச்சிருக்கா..தாங்க்ஸ் ஷக்தி, மதுண்ணா, ராக தேவரே
//அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்... என்றும் இருப்போம்
இடி இடித்து எண் திசையும் வெடிபடும் அவ்வேளையிலே//
பூங்காற்று தீண்டறச்சே ஏன் அகக்கடல் பொங்குது..மதுண்ணா..
Last edited by chinnakkannan; 10th December 2013 at 11:39 AM.
-
10th December 2013, 10:14 PM
#1383
Senior Member
Senior Hubber
பாட்டுப் பேச வா
*-****************************
அப்துல்ரஹ்மான் கவிதை தான் முதலில் நினைவுக்கு வந்தது.. என்னவாக்கும் அது..
வானத்துச் சூரியன்
வர்ணங்களின் தலைவன்
அதனால் தான்
அந்திப் பொழுதினில்
அவன் சிதையின் அருகே
அத்தனை வர்ணங்களின்
அனுதாபக் கூட்டம்..!
*
வெகுசின்ன வயதில் படித்த இந்தக் கவிதை மனதில் பதிந்த காரணமும் உண்டு..ஒரு அந்திப் பொழுது..கல்லூரி லைப்ரரியில்கவிதைப் புத்தகத்தைவாங்கி பஸ்ஸில் வருகையில் கொய்ங்க் கொய்ங்க் என்று ஏதோ கஷ்டத்திலோ மன வருத்தத்திலோ சூரியன் மேல் திசையில் ஆற்றமாட்டாமல் சிவந்த கண்களுடன் பஸ்ஸின் வேகத்தோடு ஓடிக்கொண்டிருக்க வெளிச்சமும் குறைய பஸ்ஸில் கூட்டமும் கூடியிருக்க – நல்லவேளை ஜன்னலோரம் சீட் என நினைவு- புரட்டிப் புரட்டிப் படித்ததில் மனதைக் கவ்விய வரிகள் இவை..
ஆமா எதுக்காக..
*
காரணம் அந்தி..
அந்தின்னா என்னவாம்..கூகுளிட்டால் மாலை செவ்வானம் எக்ஸெட்ரா..
ஆக்சுவலாக செவ்வானம் என்பது சரி..
*
வைரமுத்து ப்ரிஸைஸ் ஆ ஒரு விளக்கம் தர்றார்..
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு..
ஸோ பகலோட முடிவாரம்பிச்சு இரவோட ஆரம்பம்..
அதனாலத் தான் ஒரு பாட்டில இப்படி வருது.. (வாலியோ)
பொன் அந்தி மாலைப் பொழுது
பொங்கட்டும் இன்ப நினைவு..
*
ஒரு பாட்டில்காதலன் சொல்கிறான்.. அந்த செவ்வானம் மெல்ல மெல்ல இருள் சூழ ஆரம்பிக்க அப்ப பொதக்கடீர்னு நிலாவேற புறப்பட்டு வருதாம்..அது தான் காதலியாம்..
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்தப் பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ?
அவளும் கோச்சுக்கிட்டு ஆன்ஸர் சொன்னது தெரியும் தானே
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது? (கவிஞர் முத்துலிங்கம் என நினைக்கிறேன்)
*
இந்தஃ அந்தி நேரமும் கொஞ்சம் கஷ்டமான நேரம் போல..பாவம் ஒருத்தனுக்கு என்ன ஆச்சு..
அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே..!
*
ஃபேமஸ் பாட்டு என்னது அது..
அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது..
*
(சூரியனோ மறையற நேரம்….அப்போ மழை பெய்யுது....கொஞ்சம் கொஞ்சமா டபக் டபக்குன்னு இருளரக்கி சூரியப் பழத்தை ஸ்வாஹா பண்ணிக்கிட்டிருக்கற நேரத்தில என்னாகும்.. வெளிச்சம் மங்கும்..அதுல ரெய்ன் ட்ராப் எப்படி இருக்கும்..மங்கலா இருக்கும்..அதுல முகம் தெரியுதுன்னா.. ஒருவேளை காதலியோட அவுட் ஆஃப் போகஸ் போட்டோ வச்சிருப்பானோ
)
*
அந்தின்னுபோட்டா சோன்னு மழை மாதிரி பாடல் நிறைய இருக்கு..
ஒரு சில..
கன்னி மயிலென்ன கண்டேன் உனை நானே அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
*
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
*
அந்தி சாயற நேரம் மந்தாரச் செடி ஓரம்..
*
அந்திவரும் நேரம்
*
முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில்
*
அந்தி பொழுதில் தொடங்கும் அன்பு கவிதை அரங்கம் ....
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம்
கடைசியா ஒரு பாட்டு..
*
அந்தி மயங்குற நேரத்திலே ஆத்தங்கரை ஓரத்திலே அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்
பாவம் தானில்லை..அந்தக் காதலன்…ம்ம் என்னவோ முன்னால் எழுதிப்பார்த்த ஒரு பழையகதையில்எழுதிப் பார்த்த வெண்பாவைக் கொஞ்சம் திருத்தி எழுதினால்..:
*
வான்பொதிகைத் தென்றலில் வட்டமிடும் சந்திரன்
தான்பறித்த பூக்களாம் தாரகைகள் - பின்புலத்தில்
சொல்லாமல் போய்மறைந்த சோகமெந்தன் காதலினால்
கொல்லாமல் கொல்லும் இரவு..
பாவம் அந்தக் காதலனை இரவு கொல்லும் தான்! 
***
-
10th December 2013, 10:19 PM
#1384
Senior Member
Veteran Hubber
-
10th December 2013, 10:23 PM
#1385
Senior Member
Senior Hubber
thanks shakthi..ivLo seekiramaavaaa paaraattu.. ;bow: yErkenavE historical novel paathila mandapathula nikkuthu.. thoosi thatti thodaranum..
-
11th December 2013, 01:06 AM
#1386
Senior Member
Veteran Hubber
chinnakkaNNan: Here is another andhi for you:
andhi mayangudhadi aasai perugudhadi kandhan vara kaaNeNe mayile
by M.L Vasanthakumari !
Last edited by rajraj; 11th December 2013 at 01:08 AM.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
11th December 2013, 10:19 AM
#1387
Senior Member
Senior Hubber
நன்றி ராஜ் ராஜ் சார்..என்ன படமாக்கும் அது?
-
11th December 2013, 10:28 AM
#1388
Senior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
நன்றி ராஜ் ராஜ் சார்..என்ன படமாக்கும் அது?

MLV singing for Kumari Kamala (Kamala Lakshman) in Parthiban Kanavu (old) !
There is another song in the same movie -munnam avanudaiya naamam kEttaaL ...... !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
11th December 2013, 01:00 PM
#1389
Senior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
ஃபேமஸ் பாட்டு என்னது அது..
அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது..
*
(சூரியனோ மறையற நேரம்….அப்போ மழை பெய்யுது....கொஞ்சம் கொஞ்சமா டபக் டபக்குன்னு இருளரக்கி சூரியப் பழத்தை ஸ்வாஹா பண்ணிக்கிட்டிருக்கற நேரத்தில என்னாகும்.. வெளிச்சம் மங்கும்..அதுல ரெய்ன் ட்ராப் எப்படி இருக்கும்..மங்கலா இருக்கும்..அதுல முகம் தெரியுதுன்னா.. ஒருவேளை காதலியோட அவுட் ஆஃப் போகஸ் போட்டோ வச்சிருப்பானோ

)
ck.. this is where the greatness of vairamuthu's imagination is.. the hero had vision in his childhood and later on he becomes blind.. he can't see her face but he can imagine her face.. what does he imagine her as? he imagines her as the RAINBOW.. a rainbow raising from the east
Wikipedia says:
A rainbow is an optical and meteorological phenomenon that is caused by both reflection and refraction of light in water droplets in the Earth's atmosphere, resulting in a spectrum of light appearing in the sky. It takes the form of a multicoloured arc. Rainbows caused by sunlight always appear in the section of sky directly opposite the sun.
-
11th December 2013, 06:57 PM
#1390
Senior Member
Seasoned Hubber
CK: More பூங்காற்று for you...
பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு...
பூங்காற்றே பூங்காற்றே பூ போல வந்தாள் இவள்...
Bookmarks