-
11th December 2013, 09:22 AM
#501
Senior Member
Seasoned Hubber
riots in Singapore
சட்டமும் ஒழுங்கும் தலைமேற் கொள்ளும் சிங்கப் பூரரசு
சாலைகள் சந்துகள் எல்லாம் தூய்மை உலகில் இதுஅரிது
கொட்டம டக்கிக் குறும்பரை வைக்கும் கொள்கை அதுபெரிது
குற்றம் அரிதெனக் கூறும் தீவினில் கலகம் ஒருவியப்பே!
அறிகுழு அமைத்தும் அதன்கா ரணம்தரும் நாளை எதிர்பார்ப்போம்
பிறிதொரு காரணம் உண்டிது பிறந்த திகதி நாள் நட் சத்திரம்
அறிவது யாதெனின் ஆகுநே ரம்குன்றி ஆகா ததுவிரிந்தால்
பெறுவது தீமையே என்பதும் உண்மையே பேசும் இதுதெளிவே.
சூடு கிளப்பி சூறாவளி தோன்றாமல்
பாடு தவிர்த்தபண் பட்டகா வல்துறை.
Last edited by bis_mala; 11th December 2013 at 10:56 AM.
B.I. Sivamaalaa (Ms)
-
11th December 2013 09:22 AM
# ADS
Circuit advertisement
-
11th December 2013, 09:58 AM
#502
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
அச்சச்சோ..ஏன் காஸ்பரஸ்கி (kaspersky anti virus) வைத்துக் கொள்ளவில்லையா
கசமுசா பெயர்கொண்ட பொருள்தான் - கொஞ்சம்
. கணினியுள் புகுந்தேதான் செய்திடும் அருள்தான்
பசப்புக்கள் பலசெய்த வாறே - உள்ளே
..பக்குவ மாய்நுழைந்த கிருமியை அள்ளும்
வசம்பினை உண்டதால் உடலும் - நல்ல
..வசப்பட்டு வேகமாய் குணமடைதல் போலும்
கசக்கிய துணியான கணிணி - மாற்றி
..கண்குளிர வேலைசெய வைத்திடும், போற்றி!
thank you CK!
Good pleasant-to-read lines. Is your kaspersky available in CD-Rom.?
ஏவிஜி என்டி வைரஸ் உள்ளது--இருந்தும்
வைரஸ் இப்படித் துள்ளுது--என் எழுத்துக்குள்
குப்பைகளைக் கொட்டித் தள்ளுது-- அறியா என்
கண்ணையும் காதையும் கிள்ளுது
-
11th December 2013, 10:18 PM
#503
Senior Member
Seasoned Hubber
நெல்சன் மண்டேலா
இனம் மொழி மதம் கடந்து
மனித இனத்தை நேசித்தார்
தனி மனித உரிமை களைத்
தலைதாழ்ந்து பணிந்திட்டார்.
நிறவெறி தனைஎதிர்த்து
நெடுங்காலம் போரிட்டார்
அறநிலை பிறழ்தலிலாப்
பெருவாழ்வில் நிலைநின்றார்
இன்னொரு காந்தியென
இவ்வுலகில் ஒளிவீசி,
தம்மரு நறுநாட்டின்
தலைமையிலும் கொடிநாட்டி
மின்னலென அது நீங்கி
மேலான தனிவாழ்வில்
தாமாக அமைந்திட்டார்.
தரணியில்யார் ஒப்பவரே?
நெல்சன் மண்டேலாவின்
நீடுபுகழ் பறைசாற்ற
கல்நின்று அணிசெய்யும்
மன்று ஒன்று நாட்டுவரோ?
மறைந்தாலும் மறைவில்லா
மாமனிதர் புகழ் ஓங்க
நிறைந்துயரந்த தமிழ்ப்பாவால்
நின்றுபணிந்தேத்திடுவோம்.
Last edited by bis_mala; 12th December 2013 at 06:42 AM.
B.I. Sivamaalaa (Ms)
Bookmarks