Page 141 of 178 FirstFirst ... 4191131139140141142143151 ... LastLast
Results 1,401 to 1,410 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #1401
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாட்டுப் பேச வா - 3
    *-****************************
    கைகேயி “யூ ஹாவ் டு கோ டு ஃபாரஸ்ட் மை பாய்” எனச் சொல்லிவிட ராமர் காட்டிற்குப் புறப்படுகிறார்.. அவர் புறப்படுவதை சோகத்துடனும் அழுகையுடனும் பார்க்கும் மக்கள் எப்படி இருக்கிறார்களாம்..

    *

    வால்மீகி ராமாயணத்தில் இவ்வாறு வருகிறது…

    *

    ஒரு பெரிய தாமரைக் குளம்..தண்ணீர் முழுதும் நிரம்பி இருக்கின்றது.. அங்கே சின்ன,பெரிய, நடுத்தர மீன்களெல்லாம் கூட்டம்கூட்டமாய் வந்து அங்கு நிரம்பியிருக்கும் தாமரைத் தண்டுகளில் மோதுகின்றதாம்..அப்போது என்ன ஆச்சாம்.. குளத்திலிருந்து தண்ணீரெல்லாம் பலதிசையில் சிதறுகிறதாம்.. அது போல மக்களின் கண்ணீர் சிதறின.. என்கிறார் வால்மீகி..

    *

    சரி கம்பன் என்ன சொல்கிறார்..

    *

    ஆவும் அழுத அதன்கன்று அழுத;; அன்றலர்ந்த
    ..பூவும் அழுத;புனல்புள் அழுத கள் ஒழுகும்
    காவும் அழுத: களிறு அழுத; கால்வயப்போர்
    ..மாவும் அழுத;- அம்மன்னவனை மானவே

    ராமனுடைய பிரிவால் துன்பமுற்ற தசரதனைப் போல் பசுக்கள் அழுதன; பசுக்கள் ஈன்ற கன்றுகள் அழுதன;அப்போது மலர்ந்த பூக்கள் கூட அழுதன;யானைகளும் அழுதன\; காற்றின் வலிமை கொண்ட குதிரைகள் கூட அழுதன..

    *

    எனில் எதற்காக இவையெல்லாம்..ம்ம் கண்ணீர்.. இந்தக் காலத்துக் கவிஞன்(ம்க்கும்! ) என்ன சொல்றான்..

    *

    உன்னதத்தில் பொங்குகின்ற உணர்விலே தான்வரும்
    கண்ணீரும் தருமோர் காட்சி – திண்ணமாய்
    நெஞ்சிலே பட்டவலி நேர்படக் கண்ணீராய்த்
    துஞ்சுவதும் ஓர்காட்சி தான்….

    *
    உன்னதம்..மகிழ்ச்சியிலும் கண்ணீர் வரும்; சோகத்திலும் கண்ணீர் வரும்.. ஆமாம்..இதே
    ஸிம்ப்பிளா திரைப்பாடலில் வந்துருக்கே.
    .
    *

    சிரித்தாலும் கண்ணீர் வரும் அழுதாலும் கண்ணீர் வரும்
    உறவினிலே சிரிப்பு வரும் பிரிவினிலே அழுகை வரும்..
    சிரித்தாலும் அழுதாலும் சுகமாக அமைதி வரும்..

    அதெப்படி அமைதி..ஆமாம் வாய்விட்டு சிரிச்சா மட்டுமில்லை வாய்விட்டு அழுதாலும் பாரம் குறையும்..மனசு பாரம் கொஞ்சம் குறையும்..

    *

    திரைப்பாடல்கள்ல பார்த்தா காதல் க்கு மட்டும் தான் கண்ணீர் குத்தகை எடுத்திருக்காங்க..
    இந்தாள் என்ன சொல்றார்…

    கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
    வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
    என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
    வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்

    (காதலிக்கறப்ப இப்படித்தான் இருக்கும் குரு..கல்யாணம் ஆச்சுன்னா..ம்ம்பார்க்கலாம்!!)

    *

    இன்னொரு பொண்ணு..கண்ணனை நினச்சு தன்னோட கொழுக் மொழுக் உடம்பு உருக உருகப்பாடுது...

    கண்ணன் முகத்தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம்கொண்டேன்
    கண்டவுடன் ஏங்கி நின்றேன் கன்னிசிலையாக நின்றேன்
    என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ கண்ணீர் பெருகியதே.
    .
    கண்ணனைப்பார்த்துட்டாளாம்..பேச்சு வல்லை..மூச்சு மட்டும் ஓரிழையாய் வர எல்லாமே மறந்துபோகுது.. கண்ணுக்குள்ள இருந்து வாட்டர் டேங்க்ல தண்ணீர் ஜாஸ்தியா ஏறிச்சுன்னா கொட்டறாப்புல பொலபொலன்னு கண்ணீரா வருதாம்..ம்ம் இது ஆனந்தக் கண்ணீர்

    *

    சமத்தா பொண்டாட்டியோட சந்தோஷமா இருக்க வந்த ஆள பொசுக்குன்னு கடத்திட்டுப் போய்டறாங்க தீவிர வாதிங்க..பாவம்..சின்னப் பொண்ணாச்சே .. என்ன கஷ்டப் படறாளோ..வாழ்க்கையோட ஆரம்பத்திலேயே இப்படி ஆச்சே..ம்ம்னு நினச்சு மனசுக்குள்ள தேடிப்பாக்கறது பாட்டா திரையில் வருது..

    *

    காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
    கண்ணீர்வழியுதடி கண்ணே
    : கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்

    ம்ம் நல்ல பாட்டுதேன்..

    *

    கண்ணீர்ங்கறது என்ன பிரிவின் வேதனை உள்ளத்தின் வலியை உடல் வெளிப்படுத்தும் முறை..அது வந்து ஒரு அழுகை போட்டுக்கிட்டா கொஞ்சம் ரிலாக்ஸீம் ஆகலாம்..இல்லியோ.

    *

    இங்க பாருங்க இந்தப் பையன் புலம்பறத.. அந்தக் கண்ணீர் கண்ணுக்குள்ளயே தங்கிடுதாம்..அதோட வெப்பம் கண்ணையே சுட்டுப்பொசுக்குதாம்...

    *

    விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
    விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
    நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
    சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
    தத்திச்செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
    இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
    முல்லை பூவில் முள்ளும் உண்டோ கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன

    *

    நல்ல சிச்சுவேஷ்னல் பாட்டு.. ஆனா ஹீரோயினா இன்னும் நல்லா ஆடத்தெரிந்த யாரையாவது போட்டிருக்கலாம்..

    *

    காதலில் சோகம்னா சிவாஜி தான் முதலில் கண் முன் வர்றார்.. கண்ணதாசன் வரி, டிஎம் எஸ் குரல், நடிகர் திலக நடிப்பு..ம்ம் மறக்க முடியுமா இந்தப் பாட்டை..

    *
    காதல் கிளிகள் பறந்த காலம்
    கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
    கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
    நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்

    *
    ம்ம் ஒரே பாடல்..உள்ளத்தைக் கவ்வும்..

    *
    அட இந்தக் காலப் பாட்டிலும் வந்துருக்கே.. என்ன கொஞ்சம் வித்தியாசமாக.

    *
    .
    மார்கழித் திங்களல்லவா...
    இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
    உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
    இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
    நீ மட்டும் என்னுடல் காண்பாயா

    **
    நல்ல சாங் தானில்லை..
    **
    கடைசியா நம்மை விட்டுக் குறுகியகாலத்திலேயே பிரிந்த ஸ்வர்ணலதாவோட பாட்டு..

    போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
    தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு
    பால் பீச்சும் மாட்ட விட்டு
    பஞ்சாரத்து கோழியே விட்டு
    போறாளே பொட்ட புள்ள ஊரை விட்டு
    *
    ம்ம் நிறையக் கண்ணீர் விட்டுட்டேன்னு நினைக்கறேன்..இன்னும் விடுபட்டுப் போயிருக்கும்.. நீங்கதான் இருக்கீங்களே..சொல்றதுக்கு..

    *
    Last edited by chinnakkannan; 12th December 2013 at 10:31 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1402
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    கண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை சென்னீரால் காத்தோம்

    mannavane azhalaama kaneerai vidalaama!

    kaNNeer kadantha gnaanam ketten

    sindhaadha kaneer illai.......sirippukkum panjam illai! unakennna mele nindraay...oh nandalaale
    unadhaanai....

  4. #1403
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கண்ணீர் விட்டதுக்கப்புறம் தான் ஞானமே வரும்.. நல்ல கவிதை..பாட்டாக மாற்றும்போது அப்படியே எடுத்ததால - மரணம் மரணம் கேட்டேன்..என்கிற வரியாலகல்யாண வீட்டில பாட முடியாம ப் போய்டுச்சு..

    சிந்தாத கண்ணீர் இல்லை -ம்ம் வாலி.. தாங்க்ஸ் ஷக்தி..

  5. #1404
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அதான் சொல்லிட்டாங்க இல்லே... கண்ணிலே நீர் எதற்கு.. காலமெல்லாம் அழுவதற்கு

    வெள்ளை மனிதன் வேர்வையும் கறுப்பு மனிதன் கண்ணீரும் உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே என்று கடல் நீர் உப்பு கரிப்பதன் காரணத்தைச் சொல்லிட்டாங்க.

    தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சைச் சுடும் என்றும் துனபம் தாளாமல் ரெண்டு கண்ணில் நீரோடை என்றும் அம்மாவின் ஆற்றாமையையும் சொல்லிட்டாங்க.

  6. #1405
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Too much கண்ணீர் for one day; but here is my contribution...
    All by K.J. Yesudas:

    கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது
    கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே செல்வது...

    தண்ணீரில் மீன் ஆழுதால்
    கண்ணீரை கண்டது யார்
    தனியாக நான் அழுதால்
    என்னோடு வருவது யார் யார் யார்...

    பச்சைக்கிளிகள் தோளோடு
    பாட்டு குயிலோ மடியோடு
    பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
    இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை...

    பூங்காத்தே பூங்காத்தே போனவளே பூங்குயிலே பார்த்தியா
    தாங்காம தவிச்சேனே சின்னவளே என்னிடத்தில் சேர்ப்பியா
    கண்ணாலே பார்த்தது கனவாக தோணுது
    கண்ணுக்குள்ளே கண்ணீர் வற்றி போனது...

    ஒரு தரம் கண்ணீர் விட
    ஓடைஞ்சதே கம்மாக்கர
    உன்ன எண்ணி அனலாச்சு ஆத்தங்கர
    பூங்காத்தே பூங்காத்தே
    போனவளே பூங்குயிலே பார்த்தியா...

  7. #1406
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Here is more "kaNNeer" ! There is no dearth of kaNNeer in Indian movies!

    kaariruL neram kaalaiyo dhooram 'kANNEER' baaram nenjile
    ,,,,,,,,,,,,,,,,,,,
    paadhaiyil kaNNeer aaviyil kaNNeer paarkkum vaan thaarai kaNNeer
    paniyo sava thirai thaniyaam yaathirai..

    Lyrics by Kambadhasan for Avan, Tamil dubbed version of Aah (Hindi).
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  8. #1407
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆஹா..எவ்வளோ கண்ணீர்.. நன்றி மதுண்ணா, ராகதேவன் ராஜ்ராஜ்.. ம்ம் என்னோட டேட்டா பேஸ்ல எவ்ளோ கம்மியா பாட்டு இருக்கு..ம்ம் இம்ப்ரூவ் பண்ணனும்

    ஒன்று எங்கள் ஜாதியே - நல்ல பாட்டு உப்பு நீருக்கும் - கடல் அண்ட் வியர்வை..

    கண்ணுக்குள்ளே கண்ணீர் வற்றிப் போனது..ம்ம் நல்ல வரி..

    காரிருள் நெரம் காலையோ தூரம் கண்ணீர் பாரம் நெஞ்சிலே - நலல் வரி ஆனால் ஆனால் (ஏவிஎம் ராஜனுக்கு அடைப்பது போல்) நான் இந்தப் பாட்டு கேட்டதில்லை..

  9. #1408
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    காரிருள் நெரம் காலையோ தூரம் கண்ணீர் பாரம் நெஞ்சிலே - நலல் வரி ஆனால் ஆனால் (ஏவிஎம் ராஜனுக்கு அடைப்பது போல்) நான் இந்தப் பாட்டு கேட்டதில்லை..

  10. #1409
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாட்டுப் பேச வா - 4
    *-****************************

    ஒன்று என்றால் தனி..இரண்டு என்றால் ஜோடி.. மூன்று அதற்கு மேல் என்றால் என்னவாம்..( யாரோ முணுமுணுக்கறாங்க. என்னய்யா சொல வர்றே. )


    *

    ஒரு குட்டிக் கவிதை (?!!)

    *

    நிலவெனும் நல்லாள் மெல்ல
    .. நேர்படச் சிரித்து நிற்க
    கலகல வென்ற ஓசை
    ..காதிலே தேனாய்ப் பாய
    களவினை மனத்தில் தாங்கி
    …கண்களைத் தார கைகள்
    வளமுடன் சிமிட்டிப் பார்க்க
    …வானிலிக் காட்சி அன்றோ...

    *

    மூன்றுக்கு மேல் என்றால் கூட்டம் தானே.. ம்ம் கரெக்ட்..கூட்டம் என்ற பாடல்கள் இருக்கிறதா என நினைத்தால் என் மனதில் வந்தது இரண்டு பாடல்கள் தான்.. ஆனால் தேடினால் கூட்டம் கூட்டமாய்க் கொட்டுகிறது பாடல்கள்- திரையிசைப் பாடல்கள்..

    *

    முதலில் மனதில் வந்தது ஒருஜொள் பாட்டு.. அது சரி ஜொள் என்றால் என்னவாம்..

    ஜொள்ளெனப் பட்டது யாதெனில் யாதொன்றும்
    வன்மை இலாத செயல்!

    அப்படின்னு யாரோ சொல்லியிருக்காங்க..

    *

    அவன் துறு துறு இளைஞன்.. பின் என்ன…அவன் தொடர்வது இளம் பெண்களை.. என்ன பாடுகிறான்..

    காதல் மலர் கூட்டம் ஒன்று
    வீதி வழி போகும் என்று
    யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

    பாதம் முதல் கூந்தல் வரை
    பால் வடியும் கிளிகள் என
    பாதம் முதல் கூந்தல் வரை
    பால் வடியும் கிளிகள் என
    யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

    *

    ம்ம் சிவாஜி ப்ளஸ் ஜெயலலிதா அண்ட் கோ.. நல்ல வேகப் பாடல்..

    *

    கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
    என் தோட்டத்திலே ஆடத் துணிந்து வந்தவரோ.. – இதுவும் மனதில் வந்தது..

    *

    ஒட்டுக்க எல்லாப் பெண்களையும் பார்த்துப் பாடினால் ஜொள் என்று சொல்லலாம்..ஆனால் தன் காதலியைப் பார்க்கும் போது இந்த ஆளுக்கு என்ன ஆகுது.. நட்சத்திரக் கூட்டம் லாம் வந்து அவன்கிட்ட மொய்க்குதாம்..கொஞ்சம் ஓவர் தான் இல்லை..

    *

    ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே
    அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
    இதை உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா
    என் தேகம் முழுவதும் ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே

    *

    அப்புறம் தேடினால் வைரமுத்து அதிசயப்பட்ட பாடல்..

    பூவிற்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்..(உண்மை தான்)

    *
    குட்டியாய் ஒரு குறள்.

    பாகம் பிரித்துதான் பக்குவமாய் உண்டிடும்
    காகம் கருத்தை அறி..

    *

    கரெக்ட் தானே ..காக்கை என்ன செய்யறது.. ஏதாவது இரை கிடைத்தால் சிலோன் ரேடியோவில் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வது போல தனது அப்பா அம்மா அப்பத்தா சித்தப்பா சித்தி பெரியம்மா மாமி என எல்லாரையும் கூவி அழைத்து ஒற்றுமையாய் உண்ணும் (ம்ம் என் கையில் இருக்கும் சாக்லேட் உங்களுக்குத் தரமாட்டேன் )

    *

    இந்தப் பாட்டும் அஃதே..

    *

    ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் அந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
    காக்கா கூட்டத்த ப் பாருங்க அதுக்குக் கத்துக் கொடுத்தது யாருங்க..

    *
    அவர் சூப்பர் ஸ்டார்..அவரே இயந்திரமாய் நடிக்கிறார்..ஸோ என்ன பண்ணலாம்.. ரோபோக்கும் கூட்டமாம்..

    ஆட்டோ ஆட்டோக்காரா - யே
    ஆட்டோமேட்டிக் காரா
    கூட்டம் கூட்டம் பாரு - உன்
    ஆட்டோக்ராப்க்கா

    *
    ஏதாவது தப்பு நடந்தா மக்கள் கூட்டமே தண்டிக்கும் என்பது ஜன நாயக மரபு.. இந்தப் பொண்ணு என்ன சொல்றா..

    கேட்டு ப் பார் கேட்டுப் பார்
    கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
    பாட்டுப் பாடு பாவை என்னோடு
    கேட்டகேள்விக்கு பதிலில்லை என்றால்
    கூட்டம் பார்த்து கும்பிடு போடு..

    ம்ம் நல்ல பாட்டு..

    *

    அந்தக்காலத்தில மருதகாசி என்ன சொல்றார்..

    சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா
    குள்ள்நரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்
    நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் - நீ
    எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா
    எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா - அவற்றை
    எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா

    நல்லாத் தான் இருக்கு.. பட் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் பார்ப்போமே..

    *

    திட்டம் போட்டு திருடுற கூட்டம்
    திருடிக் கொண்டே இருக்குது - அதை
    சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
    தடுத்துக் கொண்டே இருக்குது

    *

    இன்றளவுக்கும் உண்மை தானே..

    *

    அழகா வானத்தில பறவைகள் சென்ற் கொண்டிருக்கின்றன.. ஹலோ.. அப்படின்னு நாம கீழ இருந்து கூப்பிட்டா அதுக்குக் கேக்குமா என்ன..அதுக்குக் கேக்கும்னு நினைக்கறது தப்புதான்..அப்படி நினைச்சா – அதை எதுக்கு இந்தக் கவிஞர் கம்பேர் பண்ணியிருக்கார்..

    *

    அழைப்பதை கானல் நீராய், அறியாது பறவை கூட்டம்
    தொடுவானம் போலே காதல், அழகான மாய தோற்றம்

    *

    ஸ்வர்ணலதா பாடின பாட்டு .. நான்கேட்டதில்லை..கேட்கணும்..

    *

    இன்னொரு அழகான டூயட்ல கொழுக் மொழுக் ஹீரோ கொஞ்சம் ஷார்ட்டான ஹீரோயினோட திடீர்னு ஒரு அழகான பாட்டுபாடிடுவாரு படத்துல..

    *

    தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
    பாதாதி தேகமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
    வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
    கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்
    அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?
    அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன
    இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட
    சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

    *

    மிலிட்டரில்லருந்து ஹீரோ லிவுல ஊருக்கு வர்ற்ச்சே நடுவில் நண்பர்களோட ஆடறார்..என்ன தான் பெரிய மேஜர் போஸ்ட்ல இருந்தாலும்.. தன்னடக்கம் ஜாஸ்தி.. தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் என்னவா வர்ணிக்கிறார்?

    *

    குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம்
    பல்லே பல்லே பட்டு தோட்டம்
    சுத்தி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம்
    சாலை எங்கும் சேலை தோட்டம்

    *
    *

    பட்டாம் பூச்சிக் கூட்டமும், நண்பர் கூட்டமும் இன்னும் இருபாடல்களில்..

    *

    உந்தன் வார்த்தையில் எந்தன் கவிதைகள்
    என்ன காரணம்...ஓ ஓ ஹோ
    உந்தன் கண்களில் எந்தன் பார்வைகள்
    என்ன காரணம்...ஓ ஓ ஹோ
    ஒரு பட்டாம்பூச்சி கூட்டம்
    என்னை என்னை மெல்ல மிரட்டுதே மிரட்டுதே
    ஒரு சூறாவளிக்காற்று வந்து வந்து குடை பிடிக்குதே
    ஓ...ஓ... ஹோ இதுதானோ காதல் கலவரம்
    ஓ...ஓ... ஹோ உனக்குள்ளே என்ன நிலவரம்
    ஓ...ஓ... ஹோ

    *
    பானுப்ரியா அகலக் கண்களோட ஆடும் நடனம்..

    *
    அகப்பட்ட இடம் தொட்டு கோவில் கட்ட நினைக்கிற
    நண்பர் கூட்டம் இங்கே
    நண்பர் கூட்டம் இங்கே
    அட நான்முகன் தலையிலே போட்டது பொய் எழுத்து
    நான் ரசிகனின் நெற்றியில் இடுவது கை எழுத்து
    ரசனை வாழ்க ...ரசிகன் வாழ்க
    ரசனை வாழ்க ...ரசிகன் வாழ்க


    நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்

    *

    கடைசியா (அப்பாடா முடிச்சுட்டான்யா..) ஒரு அழகானபாட்டோட இன்னிக்கு செஷன் கம்ப்ளீட் பண்ணலாமா..

    *
    மாலையில் யாரோ மனதோடு பேச
    மார்கழி வாடை மெதுவாக வீச
    தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
    மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
    நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

    *

    வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
    வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
    வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
    ஒரு நாள் வண்ண மாலை சூட
    வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
    அதில் நாயகன் பேரெழுது

    *

    கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
    கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
    கண்ணை பார்க்க அடடா நானும்
    மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
    அலைகள் வெள்ளி ஆடை போல
    உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
    அதில் நாயகன் பேரெழுது

    *

    ம்ம் இப்படி நிறைய பாட்டுக் கூட்டம் இங்கிருந்தாலும் கொஞ்சம் மிஸ் ஆகியிருக்கும்.. நீங்க சொல்லத் தானே போறீங்க..

    *

  11. #1410
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    naan vera ennatha solla poren
    ...
    கங்கைக் கரை தொட்டம்
    கன்னிப் பெண்கள் கூட்டம்
    கண்ணன்...நடுவினிலே

    (any other better koottam than this )

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •