Page 67 of 401 FirstFirst ... 1757656667686977117167 ... LastLast
Results 661 to 670 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #661
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கவிதையில் ஒரு நன்றி - 3

    இது ராகவேந்திரா சாருக்காக

    உங்கள் பதிவுகளில் - பாசமலரை பார்த்தோம் - பரவசபட்டோம்

    உங்கள் உழைப்பில் அந்த நடிப்பு உலக இறைவனை பார்த்தோம் - சிலையாக வியர்ந்து நிற்கின்றோம்

    இந்த திரி கர்ணனின் தேர் மாதிரி நிலத்தில் சிக்கிக்கொண்டு விட்டது - எப்பவோ செய்த தர்மத்தினால் , உயிர் மட்டும் உடம்பில் ஒட்டி கொண்டுள்ளது - இந்த திரியின் வேகம் ஆமை , நத்தை இவைகளின் வேகத்தை கூட இழந்து விட்டது - நீங்கள் மீண்டும் வந்தால் , மிஞ்சிய உயிரை தானம் கேட்க மாட்டீர்கள் - இந்த திரிக்கு உயிர் ஊட்டுவீர்கள் என்பது நிச்சயம் - வரவேண்டும் என்பதே எங்கள் ப்ராத்தனை

    " பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச - பஜதாம் கல்பவிக்க்ஷாய
    நமதாம் காமதேனுவாய நம க :
    "

    அன்புடன் ரவி :
    smile2

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #662
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கவிதையில் ஒரு நன்றி - 3

    இது "கோபால்" க்காக :

    கண்ணனின் வேணுகானம் உண்டு உம் பதிவிலே - அந்த நாளும் வந்திடாதோ - Brindavanathil கண்ணன் வளர்த்த அந்த நாளும் வந்திடாதோ என்று எங்களை பாட வைக்கும் !!

    அந்தோணியின் அழகும் உண்டு உம் எழுத்தில் - அதிலே அந்தோணியின் கோபம் மட்டுமே தலை உயர்ந்து நிற்கும் --- [ தவிர்க்கத்தான் மன்றாடுகின்றோம்

    நம் இறைவனை இது வரை யாரும் அணு அணுவாக அலசியதில்லை - உம்மால் மட்டுமே முடிந்த கலை இது

    உம் வழி தனி வழி தான் ( road less traveled) ஆனாலும் அன்பு நிறைந்த , பக்தி நிறைந்த , பாசம் நிறைந்த வழி - " கோபால்" minus "கோபம்" - மிஞ்சுவது "பால் " அதன் நிறத்தை மனமாக கொண்டவர் நீர் - திரியின் வேகம் - உங்கள் விவேகத்தில் மீண்டும் வேகமாக முன்னேறும் என்பதில் எள்ளு அளவும் சந்தேகமில்லை

    அன்புடன் ரவி :
    smile2

  4. #663
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கவிதையில் ஒரு நன்றி - 5

    இது நம் பம்மளார் க்காக

    ஆவண திலகமாக இந்த திரியில் வந்தீர் - எங்களையெல்லாம் ஆட்கொண்டீர்

    ஆணியை எப்படி அடிப்பது எண்டு சொல்லைகொடுத்தீர் - அதனால் மாற்றுமுகாம் இருந்த இடம் தெரியாமல் போனது

    நம்மை திட்டுபவர்களுக்கும் நல்லது செய்தீர் - பதிவுகள் உங்கள் உயர்வை போற்றின

    இப்பொழுது எடுத்துக்கொண்ட முயற்சி ஒரு புனிதமானது - நாங்கள் அணிலாகத்தான் உங்களுக்கு உதவி பண்ண முடியும் - அந்த உழைப்பு இல்லை எங்களிடம்

    ஒரு கலங்கரை விளக்கம் இந்த திரியில் ஒளி தராவிட்டால் , விட்டில் பூச்சிகளான எங்களால் என்ன ஒளியை தந்துவிட முடியும் ???

    உங்கள் புதிய முயற்சிக்கு என்றும் எங்கள் துணையும் , வாழ்த்தும் என்றும் உண்டு ----

    அன்புடன் ரவி :

  5. #664
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கவிதையில் ஒரு நன்றி - 6

    இந்த காணிக்கை KC சேகர் சாருக்கு


    ஒரு காலத்தில் தலைவருடன் பணி புரிந்த நன்றிக்காகவே கர்ணன் மாதிரி உழைக்கும் ஒரு நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் சொன்ன வார்த்தைகள்

    உழைப்புக்கு ஒரு பாடம் எடுத்தால் , உங்கள் பயணம் தான் உதாரனமாக எடுத்துசொல்ல முடியும் - தலை நிமிர்கிறோம் ஆணவத்தால் அல்ல - உங்களை பெற்றதனால் ------ உழைப்புக்கு ஒருவனான உங்கள் சக்தி வெற்றிக்கு ஒருவனான நம் NT யை லக்ஷ்மணன் கிழித்த கோடுபோல் என்றும் வலம் வரும் , உண்மை வெல்லும்.

    அந்த பராசக்தியின் அருள் என்றும் உங்களுக்கு உண்டு

    அன்புடன் ரவி


  6. #665
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கவிதையில் ஒரு நன்றி - 7

    இது இந்த திரியின் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் காணிக்கை

    ஒரு கை தட்ட ஓசை வருவதில்லை

    ஒருவர் இழுக்க தேர் ஓடுவதில்லை

    ஒருவர் படைப்பால் காவியம் பிறப்பதில்லை

    ஒருவர் உழைப்பினால் வாழ்கை சிறப்பதில்லை

    சிலையாக நிற்கின்றோம் - சிலைக்கு வந்த சோதனையால்

    சோதனைகள் நமக்கும் , NTக்கும் புதியது அல்லவே - துவண்டு விடாமல் இந்த திரிக்கு முதலில் உயிர் கொடுப்போம் - அந்த சக்தியில் சிலையும் மகிழ்ந்து அங்கேயே நிலைத்துவிடும்

    அன்புடன் ரவி


  7. #666
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    சிவாஜியே கட்டக் கடேசீல "என் தமிழ் என் மக்கள்"-னு வந்து அரசியலை முடித்துக் கொண்டார். இங்கே பழைய காங்கிரசு பெருங்காயங்கள் வந்து தேசம் பக்தி என்று ஒப்பாரி வைப்பது வீண் வேலை. கப்பலோட்டிய தமிழனையே பிச்சைக்காரனாக ஆக்கி சாக விட்டதுதான் காங்கிரசின் தேசியம்.

    தமிழ்க் கலையின் தலைமகன் சிவாஜியை தமிழ்த்தேசியம் கைவிடாது.
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

  8. #667
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ரவி,

    மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். என்னை பாராட்டியதால் மட்டும் இல்லை. உள்ளத்தின் அடித்தட்டிலிருந்து எழுதியிருக்கிறீர்கள் என்பது படிக்கும் போதே தெரிகிறது. வாழ்த்துகள். தொடருங்கள்.

    திரியின் பங்களிப்பாளார்கள் அனைவரும் மீண்டும் வந்து திரிக்கு பெருமை சேர்ப்பார்கள். ஆகவே கவலை விடுத்து நம் பணியில் கவனம் செலுத்துவோம்.

    அன்புடன்

  9. #668
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    பல உள்ளங்கள் இணைய போகும்,இருவர் உள்ளத்தை வரவேற்கும் ஆவலில் ,மனம் பீ.எஸ்.பள்ளியில்.இன்று மாலை சிந்திப்போம்.
    ஒரு அற்புதமான மாலை நேரம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியாமல் அனைவரும் லயித்து ரசித்து ஆர்ப்பரித்து கைதட்டி ஓசை எழுப்பி மனமகிழ்ந்த காட்சியை பார்க்க முடிந்தது. இன்றைய திரையிடலை தவற விட்டவர்கள் உண்மையிலே வருத்தப்பட வேண்டும். மூன்று மணி நேரம் செல்வம் மற்றும் சாந்தாவோடு வாழ்ந்துவிட்டு வந்த உணர்வு. இப்போதும் அந்த தாக்கம் இருக்கிறது. இதுவரை திரையரங்குகளில் மட்டுமே ரசிகர்கள் once more கேட்பதை பார்த்திருக்கிறோம். இங்கே நமது NT FAnS அமைப்பில் நடத்தப்பட்ட திரையிடலிலும் இன்று இது நடந்து பறவைகள் பலவிதம் பாடல் காட்சி மீண்டும் திரையிடப்பட்டது. இதைப் பற்றிய எண்ண அலைகளை தொடரும்.

    அன்புடன்

  10. #669
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    நான் சுவாசிக்கும் சிவாஜி! (11) - ஒய்.ஜி. மகேந்திரன்







































    பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013,00:00 IST

    புகழ் பெற்ற, பரத நாட்டிய கலைஞர் தனஞ்செயன் பற்றி, அவருடைய சிஷ்யர்கள், ஒரு வீடியோ படம் எடுத்திருக்கின்றனர். அதைப் பார்க்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்தது. தனக்கு, 'இன்ஸ்பிரேஷ'னாக இருந்த தன் குருமார்கள் குறித்து பேசும் போது, 'பரத நாட்டியத்தில், முக்கியமான அபிநயத்திற்கு, எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் சிவாஜி...' என்று, பெருமையோடு குறிப்பிட்டார் தனஞ்செயன்.
    என் மகள் மதுவந்தியின் பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு, சிவாஜியை அழைக்க, என் மகளுடன், அவர் வீட்டிற்கு சென்றிருந் தேன்.
    அப்போது, 'எனக்கு பால சரஸ்வதி நடனம் தான் பிடிக்கும்...' என்றார் சிவாஜி.
    'அவங்ககிட்ட போய் கத்துக்க முடியாது. (பால சரஸ்வதி முன்பே காலமாகி விட்டார். மதுவந்தி, பத்மா சுப்ரமணியத்திடம் தான், பரதநாட்டியப் பயிற்சி எடுத்திருக்கிறாள்...' என்றேன் கிண்டலாக.
    'டேய், சரியாக சொல்ல வேண்டுமானால், பாலாவுக்கு அடுத்து, பத்மா சுப்ரமணியத்தின் நடனம் தான், எனக்கு ரொம்ப பிடிக்கும்; கண்டிப்பாக வரேன்...' என்று கூறியதோடு, பாலம்மாவின் நடன சிறப்பை புகழ்ந்து பேசினார்.
    இன்று, இசையில் அசத்திக் கொண்டிருக்கும், அருணா சாய்ராமின் தாயார் ராஜம்மா, சிவாஜியின் ரசிகை. சிவாஜி படத்தை, ரிலீசாகும் முதல் நாள், முதல் காட்சியில் பார்த்து ரசிப்பவர்.
    ராஜம்மாவிற்கும், பாலசரஸ்வதிக்கும் நெருங்கிய நட்பு உண்டு. பால சரஸ்வதி, பம்பாய்க்கு போனால், ராஜம்மா வீட்டில் தான் தங்குவார். அவர்களும், சென்னைக்கு வரும் போதெல்லாம், பாலசரஸ்வதியை சந்திப்பர்.
    ராஜம்மா, ஒருமுறை சென்னை வந்திருந்த போது, சிவாஜி நடித்த படம் ஒன்று, சன் தியேட்டரில் ரிலீசாகியிருந்தது, ராஜம்மாவுக்கு சிவாஜி படத்தை பார்க்க ஆசை. அதே சமயம், பாலாவையும் பார்க்க போக வேண்டும். என்ன செய்வது என்று யோசித்து, கடைசியில், பாலாவை, தொலைபேசியில் அழைத்து, நிலைமையை விளக்கினார். 'எனக்கும் அதே பிரச்னைதான். நானும், அதை தான் சொல்ல நினைத்தேன். தம்பி சிவாஜியின் படத்தை பார்க்க ஆசை...' என்றிருக்கிறார் பாலா.
    பாலா, ராஜம்மா, சிறுமி அருணா சாய்ராம் மூவரும் சன் தியேட்டருக்கு போயுள்ளனர். படத்திற்கு, டிக்கெட் கிடைக்கவில்லை. ஹவுஸ் புல் ஆகிவிட்டது. வந்திருப்பது, பெரிய பரத நாட்டிய கலைஞர் என்று அறிந்த தியேட்டர் மானேஜர், அவர்களை திருப்பி அனுப்ப விரும்பாமல், தியேட்டர் முதலாளிக்கு இருக்கும், பிரத்யேக பாக்சில், அவர்களை உட்கார வைத்து, படம் பார்க்க வைத்தார்.
    இச்சம்பவத்தை அருணா சாய்ராம் நினைவு கூர்கிறார்:
    படத்தைப் பார்த்தேன். கூடவே, பாலா அம்மாவையும் ரசித்தேன்; படத்தில், சிவாஜி பாடினால், இவங்களும் பாடறாங்க, அவர் சிரித்தால், இவங்களும் சிரிக்கிறாங்க, அவர் அழுதால், அழறாங்க, நடனம் ஆடினால், பாலா அம்மாவும் தன் கால்களை, ஆட்டறாங்க... ஒவ்வொரு பிரேமிலும், சிவாஜியை முழுமையாக ரசித்தார் பாலா அம்மா, என்றார்.
    பத்மா சுப்ரமணியத்தின் நாட்டியம், சிவாஜிக்கு ரொம்ப பிடிக்கும். பத்மாவும், சிவாஜி நடிப்பை ரசித்து, நிறைய பேசுவார். ஒருமுறை, பத்மா, என்னிடம் பகிர்ந்து கொண்ட, சுவையான தகவல் இது:
    நாட்டிய சாஸ்திரத்தை, உருவாக்கியவர் பரதமுனி. அவர், நாட்டிய கலைஞரின் முகம் குறித்த சாமுத்ரிகா லட்சணங்களை விரிவாக எழுதியிருக்கிறார். ஒரு நாட்டிய கலைஞருக்கு, 'பர்பெக்ட்' முகம் என்றால், அது எப்படி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த இலக்கணப்படி, சிவாஜியின் முகத்தை அளந்து பார்த்தால், பரதமுனி சொன்ன அத்தனை லட்சணங்களும், சிவாஜியிடம் இருக்கின்றன, என்றார். பத்மாவிடம் இது குறித்து பேசிக் கொண்டிருந்த போது, நாட்டிய சாஸ்திரமும், நடிகர் திலகமும் என்ற பெயரில், ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய, ஒரு நிகழ்ச்சியை தயாரிக்கும்படி கேட்டேன். பத்மாவும், மகிழ்ச்சியோடு, ஒப்புக் கொண்டு, அதை தயாரித்தார்.
    நாட்டிய சாஸ்திரத்தை, சிவாஜி எப்படியெல்லாம் கையாண்டிருக்கிறார் என்பதை, பல திரைப்படங்களின், 'க்ளிப்'பிங்களுடன் விளக்குவதாக, அந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டிருந்தது.
    எங்கள், 'பாரத் கலாச்சார்' அமைப்பின் ஆதரவில், அதை திரையிட்ட போது, அமோக வரவேற்பு கிடைத்தது. கமலா அம்மாவும், அவரது குடும்பத்தினரும் மெய் மறந்து ரசித்தனர். என் மகள் மதுவந்தியும், நானும் அதற்கான, 'எடிட்டிங்' பணியை செய்திருந்தோம்.
    ஒருமுறையாவது, சிவாஜியை, இந்த நிகழ்ச்சியை பார்க்க வைக்க ஆசை. நீண்ட வற்புறுத்தலுக்கு பின், நிகழ்ச்சிக்கு வர ஒப்புக் கொண்டார். 'பாரத் கலாச்சார்' சார்பில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு, நடிகை லட்சுமியை தலைமை வகிக்க செய்தோம். அன்று மாலை, பலத்த மழை பெய்தும் கூட நிகழ்ச்சி, 'ஹவுஸ் புல்!'
    பார்வையாளார்கள் அனைவரும் திரையை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்க, நான் மட்டும் சிவாஜியை பார்த்துக் கொண்டிருந்தேன்.
    மாபெரும் நடிகன் என்றாலும், தான் பாராட்டப்படும் போது, ஒரு வித கூச்சமும், மகிழ்ச்சியும் அவருடைய முகத்தில் பிரதிபலிப் பதை கண்டேன்..
    சிவாஜியின் நடிப்பில் உள்ள எல்லா சிறந்த அம்சங்களைப் பற்றியும் பேசினார் நடிகை லட்சுமி. 'என்னை பேசச் சொல்லாதே...' என்று சிவாஜி, என்னிடம் சொல்லியிருந்தும், அந்த சிறப்பு நிகழ்ச்சியில் அவர் பேசினால், அனைவரும் ரசிப்பர் என்று கருதி, கடைசியில், அவரையும் பேச அழைத்தேன். பொதுவாக, எந்த மேடையிலும், கையில், சிறு குறிப்பு கூட வைத்துக் கொள்ளாமல், நீண்ட நேரம் தங்கு தடையின்றி பேசும் சிவாஜி, அன்று, சற்று தயங்கி தயங்கி பேசினார்.
    நிகழ்ச்சியில் சொல்லப்பட்டதெல்லாம், சரி என்றால், அது, ஆணவமாக கருதப்படலாம். இல்லை என்றும் சொல்லி விட முடியாது. அது தான், அவரது தயக்கத்திற்கு காரணம்.
    'இவங்க எல்லாரும், என் நலம் விரும்பிகள். என்னைப் பற்றி, என்னவோ செய்திருக்காங்க. நவரசம் என்றெல்லாம் சொல்கின்றனர். ஆனால், எனக்கு பிடித்தது மிளகு ரசம் தான். நீங்க எல்லாம் பாராட்டும் போது, நானும் ஏதோ செய்திருக்கிறேன் என்று தோன்றுகிறது...' என்றார். அவர் கண்கள் பனித்ததோ என்னவோ, பார்வையாளர்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீர்.
    மிருதங்க சக்கர வர்த்தி'படத்தில் நடிப்பதற்கு முன், பிரபல மிருதங்க வித்வான், உமையாள்புரம் சிவராமனை, தனக்காக, தனியாக மிருதங்கம் வாசிக்க சொல்லி, அதை கவனித்து, மிருதங்க வாசிப்பின் நுணுக்கங்களை புரிந்து, அதை, படத்தில் செய்தார்.
    -- தொடரும்.
    தொகுப்பு: எஸ்.ரஜத்

    dinamalar

  11. #670
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இருவர் உள்ளம்- 1963

    நடிகர்திலகத்தின் நடிப்பின் பாணி stylised method acting ஆக விளங்கிய 60 களில் மீண்டும் அவருடைய தெய்வ பிறவி,இரும்புத்திரை பாணி,இயல்பு நடிப்பில் அடக்கி வாசித்த படம் இருவர் உள்ளம். சிவாஜியின் குரு எல்.வீ.பிரசாத் இயக்கி தயாரித்து, கருணாநிதி மீண்டும் நடிகர்திலகத்துடன் இணைந்தார் குறவஞ்சிக்கு பிறகு மூன்று வருட இடை வெளியில். எழுத்தாளர் லட்சுமியின் புகழ் பெற்ற பெண் மனம் (ஆனந்த விகடனில் வெளியான தொடர்) என்ற நெடுங்கதையை தழுவி ,கருணாநிதி அவர்களால் திரைக்கதை அமைக்க பெற்றது.மூல கதையில் இருந்த பிராமண குடும்ப கதையை(ஜகன்னாதன்-சந்திரா) பிராமணம் அல்லாததாக (செல்வம்-சாந்தா) செய்து, அருமையாய் திரைக்கதை அமைத்திருந்தார்.
    சிவாஜி ,எப்பவுமே, கதாநாயகியை மையமாய் கொண்ட கதா பாத்திரங்களிலும் நடிக்க தயங்காதவர்.(ஆனாலும் முதல் பரிசை தட்டி சென்று விடுவார்)
    மங்கையர் திலகம்,பெண்ணின் பெருமை ,கை கொடுத்த தெய்வம், நீல வானம்,சிவகாமியின் செல்வன்,வாணி-ராணி உதாரணங்கள். இந்த வரிசையில் நாயகியை மைய படுத்தினாலும்,கதையின் நாயகனுக்கும் நிறைய scope கொடுத்த மிக சிறந்த படம் இருவர் உள்ளம்.

    இருவர் உள்ளத்தின் கதை-

    மிக பெரிய செல்வந்தர் வீட்டு இளைய மகன் செல்வம் டாக்டருக்கு படிக்கிறேன் என்ற பெயரில் பெண்களுடனும்,தவறான நண்பர்களுடனும் சீரழிந்து கொண்டிருப்பவன். செல்வத்தின் தந்தை பெரிய வக்கீல். மூத்த அண்ணன் ,வக்கீலுக்கு படித்திருந்தாலும்,தொழிலில் திறமையின்றி ,நிறைய பிள்ளை குட்டிகளோடு, கூட்டு குடும்ப நிழலில் வாழ்பவன்.செல்வத்திற்கு ஒரு தங்கை.செல்வத்தின் நடவடிக்கை பிடிக்காமல் ,படிப்பை பாதியில் நிறுத்தி ஊருக்கே வர வழித்து விடுகிறார் தந்தை. செல்வம் ஊரில் வந்தும் திருந்தாமல்,இஷ்டப்படி வாழ்கிறான்.

    ஒரு நாள், காரில் தன பெண் நண்பி ஒருத்தியுடன் திமிராக சென்று, சாந்தா என்ற ஏழை டீச்சர் பெண்ணை, இடிப்பது போல் நிறுத்தி tease செய்கிறான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ,அவள் மேல் காதலில் விழுந்து அவளை பின் தொடர்கிறான். சாந்தா காதலுக்கு பச்சை கொடி காட்ட மறுக்கிறாள்.அவளை அடையும் ஆசையில் செல்வம் ஒரு முறை, அவளை யாருமில்லா நேரம் ,தன வீட்டுக்கு தந்திரமாக வர வழைத்து அவள் காதலை வேண்டுகிறான். ஆனால் சாந்தா மறுத்து விட்டு செல்லும் போது,தவறுதலாய் பார்த்தவர்கள் ,ஊரில் தவறாக பேச,ஏழை சாந்தா விருப்பமின்றி ,செல்வத்தை மணமுடிக்கிறாள்.

    மணமுடித்த நாளில் இருந்து, செல்வத்தை வெறுக்கும் சாந்தா தாம்பத்ய உறவில் விருப்பமின்றி இனங்குவதால்,செல்வம் , அவள் தன்னை விரும்பி ஏற்கும் வரை,கணவன் என்ற உரிமையை எடுக்க மாட்டேன் என்று சத்யம் செய்கிறான். குடும்பத்தினர் அனைவருமே,செல்வம் திருந்தி வாழ நினைப்பதை அறியாமல், செல்வத்தையே குற்றம் சொல்கின்றனர். ஒரு சமயம் ,நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில்,செல்வத்தில் பழைய பெண் நண்பியின் குறுக்கீட்டால் திரும்ப பிளவு அதிகமாகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை சதி செய்ய,செல்வம் ,சாந்தா நெருங்கவே முடியாமல் இருக்கும் தருணம்,சாந்தா செல்வம் திருந்தி விட்டதை உணர்ந்து அவனிடம் தன்னை ஒப்படைக்க முயலும் தருணத்தில், செல்வத்தின் பழைய நண்பியை கொன்ற பழி(செய்தது அவளின் புது நண்பன்) விழ, தந்தை செல்வத்திற்கு எதிராகவும்,அண்ணன் செல்வத்திற்காகவும் வாதாடி, செல்வம் விடுதலையாகி ,சாந்தாவுடன் சேர்கிறான்.


    முதல் காட்சியிலேயே களை கட்டி விடும் இருவர் உள்ளம். நடிகர் திலகம் அழகென்றால் அவ்வளவு அழகாக ,ஸ்டைல் ஆக தொப்பியுடன் ,காரில் பறவைகள் பலவிதம் பாட ஆரம்பிப்பார். பல பெண்களுடன் ,நடிகர்திலகத்தின் அத்தனை பாடல்,நடன காட்சிகளும் பிரமாதமாய் வந்திருக்கும்.(யாரடி நீ மோகினி,பறவைகள் பலவிதம்,காதல் மலர் கூட்டம் ஒன்று,ஏன் ஏன் ஏன்,ராஜா யுவ ராஜா,கண்ணா லீலாவிநோதம்,என் ராஜாத்தி வாருங்கடி).கே.வீ.எம்.மாமாவின் பாடலுடன் ,மன்மதனின் ஆடல் (ஜெயந்தி முதல் பத்மினி பிரியதர்ஷினி வரை இந்த பாட்டில்) கேட்க வேண்டுமா குதூகலத்தை?

    அடுத்தடுத்த காட்சிகளில் காமெடியில் தூள் பரத்துவார். பல பெண்கள் ஒன்றாக வந்து விட ஒருத்திக்கு தெரியாமல் இன்னொருத்தியை சமாளிக்கும் அழகு. தன்னை நோட்டம் பார்க்க வந்த மாமாவிடம் கையும் களவுமாக மாட்டி கொண்டு முழிப்பது,மாட்டுவது, முதல் காட்சியிலேயே சரோஜா தேவியை டீஸ் பண்ணி விட்டு பிறகு இம்ப்ரெஸ் ஆவது, பிறகு தங்கைக்காக சாந்தா டீச்சரை சிபாரிசு செய்து மாட்ட பார்ப்பது,டீச்சர் தங்கைக்கு டியூஷன் எடுக்கும் போது வழிவது, கீசகன் கதையை சொல்லும் சாக்கில் தன்னை கன்னா பின்னாவென்று திட்டும் சரோஜாதேவியுடன் இனிமே எதுவும் சொல்ல தேவையில்லை அவன் போறான் என்று வாபஸ் வாங்குவது, திருட்டு தனமாக டிரைவர் வேடத்தில் சரோஜா தேவியை வீட்டுக்கு வர வழைத்து விளையாட்டாய் முதலில் பேசி பிறகு தன் காதலை வெளியிட்டு கெஞ்சுவது, தன்னை புரிந்து கொள்ளாத மனைவியிடம் முதலிரவில் விட்டு கொடுப்பது, இதய வீணை பாட்டில் சரோஜா தேவி தன் துயரத்தை அப்படியே வெளியிட,நண்பர்களின் கேலி கண்டு, கூனி குறுகி, நாணி குமுறுவது,குடும்பத்தினரும் தன்னை புரிந்து கொள்ளாதது கண்டு மௌனமாய் உருகுவது , ஒவ்வொரு முறையும் மனைவியுடன் நெருங்கும் சந்தர்ப்பத்திலும் பழைய நண்பர்களாலும்,நண்பிகளாலும் கெடும் போது பதைத்து, பதறுவது, மனைவியிடம் தன் நிலையை சொல்லி வருந்துவது என்று நடிகர்திலகம் ஒவ்வொரு பிரேமிலும் பிரமாத படுத்துவார்.

    சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பே நடிகர்திலகத்துடன் இணையும் போதுதான்.(பாக பிரிவினை,பாலும் பழமும்,புதிய பறவை,தேனும் பாலும்)என்னும் போது தோதாக இப்படி ஒரு பாத்திரம். விடுவாரா? ஆரம்ப காட்சியில் தன்னை சீண்டிய பெரிய இடத்து வாலிபனிடம் வெறுப்பை உமிழ்வதில் துவங்கி,அவனின் காதலை சொல்லும் அனைத்து முயற்சிகளையும் முறித்து போடுவது, அவமான படுத்த பட்டு கல்யாணத்திற்கு கட்டாய படுத்த படுவது, கணவனுடன் ஒட்டாத வாழ்க்கை,நெருங்க விரும்பும் நேரத்தில் கணவனின் பழைய வாழ்க்கையின் நிழல் துரத்தி அவமான பட நேரும் தருணங்கள்,பிறகு அவனின் நல்ல மனத்தை அறிந்து சேர வரும் போது,மிக பெரிய பிரச்சினையை எதிர் கொள்ள நேருவது என்ற தருணங்களில் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுப்பார்.

    ரங்கா ராவ், எம்.ஆர்.ராதா,சந்தியா, ராமா ராவ்,கருணாநிதி,முத்து லட்சுமி,பத்மினி பிரிய தர்சினி,ராமச்சந்திரன் அனைவருமே அவரவர் பங்கை சிறப்பாக செய்திருப்பார்.

    சிவாஜி-கருணாநிதி இணைவில் வந்த அத்தனை சமூக படங்களுமே magic தான். பராசக்தி,திரும்பிப்பார்,ராஜாராணி,புதையல்,இருவ ர் உள்ளம் எல்லாமே அருமை. (மனோஹரா ஒரு சரித்திர பட சாதனை அதிசயம்) திரைக்கதை அமைப்பில் மு.க ஒரு மேதை. மூலக்கதை சிதையாமல்,பாத்திர வார்ப்பு கெடாமல், படிக்கும் கதை வேறு பார்க்கும் படம் வேறு என்பதை தெளிந்து திரைக்கதை அமைத்த இரண்டே மேதைகள் மு.கவும்,ஏ.பீ.என். மட்டுமே. மு.க தன திரைக்கதையால் படத்தை மிக மிக சுவாரஸ்யமாக்கி பாத்திரங்களுடன் ஒன்ற வைப்பார்.வசனங்களும் அவ்வளவு அருமையாய்,காலத்தை ஒட்டியதாய் அமைத்து படத்தை மெருகேற்றும். காமெடி, பஞ்ச் வசனங்கள் என்று கலக்கியிருப்பார்.(குடுக்கும் போது வாட்ச் பண்றதாலேதான் வாட்ச்னு பெயர் வச்சாங்களா)

    பிரசாத் என்ற அற்புதமான இயக்குனர் ,தயாரிப்பாளராகவும் அமைந்து விட்டால்? கேட்கவா வேண்டும்? எல்லா technical அம்சங்களும் நன்கு கவனிப்பு பெற்றிருக்கும்.(கேமரா,எடிட்டிங்) சிவாஜியும் இவரை தன் குருவாக மதித்ததால் ,இவர் சொன்னதை உள்வாங்கி மிதமாய் நடித்ததை சிவாஜியே குறிப்பிட்டுள்ளார்.அற்புதமான இயக்கம்.

    கே.வீ.மகாதேவன் ,சிவாஜியுடன் இணைந்ததில் மறக்க முடியாத சமூக படங்களில் ஒன்று.(மற்றவை- பாவை விளக்கு,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம்,அன்னை இல்லம்,செல்வம்,பேசும் தெய்வம்,வியட்நாம் வீடு,வசந்த மாளிகை).பறவைகள் பலவிதம், புத்தி சிகாமணி, கண்ணெதிரே தோன்றினால், இதய வீணை தூங்கும் போது, நதி எங்கே போகிறது, ஏனழுதாய், கண்ணே கண்ணே உறங்காதே, அழகு சிரிக்கிறது போன்ற படத்தோடு ஒட்டிய சூப்பர்-ஹிட் பாடல்கள் கே.வீ.எம்-கண்ணதாசன் இணைப்பில். இந்த படத்தின் மிக மிக சிறப்பான அம்சங்களில் ஒன்று ரி-ரெகார்டிங் எனப்படும் பின்னணி இசை சேர்ப்பு. பின்னாளில் பெரிதாக பேச பட்ட கேரக்டர் based மூட் மியூசிக் ,எனக்கு தெரிந்து இந்த படத்தில்தான் அறிமுகமானது.(சிவாஜி,சரோஜாதேவியை பின் தொடரும் இடங்கள்).இதைதான் இளைய ராஜா தன் பதினாறு வயதினிலே,முள்ளும் மலரும் போன்ற படங்களில் தொடர்ந்து பெயரெடுத்தார்.

    பெண்ணின் மனதை விலை கொடுத்து வாங்க முடியாது, அப்படி வாங்கினாலும் உடலன்றி உள்ளம் உன்னை சேராது, மனதை அடையும் ஒரே வழி தூய நல்லிதயத்தின் அன்பு ஒன்றுதான் என்ற கான்செப்ட் ,அனைவரின் கூட்டு முயற்சியால் ,பிரம்மாண்ட வெற்றி படமாகி, இன்றளவும் ரசிகர்களை மட்டற்ற குதூகலத்தில் ஆழ்த்தும் அற்புத படமாகவே,காலத்தை கடந்து ஒளி வீசி கொண்டிருக்கிறது.
    Last edited by Gopal.s; 16th December 2013 at 08:13 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •