-
13th January 2014, 06:56 AM
#11
Senior Member
Regular Hubber
1 Nenokkadine....
மகேஷ் பாபுவின் பொங்கல் ரிலீஸ்...
சில பல காரணங்களால் தன் சிறு வயது ஞாபகங்களை தொலைத்த ஒருவன் , பெற்றோரை கொன்றவர்களை பழிவாங்கும் கதைதான் என்றாலும், முடிவும் ஆரம்பமும் தெலுங்கு படம் போலில்லாமல் ரொம்பவும் வித்யாசமாக இருந்தது... spoilers இல்லாமல் இந்த கதைக்கு விமர்சனம் எழுதுவது கொஞ்சம் கஷ்டம் .... and suspense தெரிந்தால் அவ்வளவு thrill இருக்காது .... so ஒரு கஜினி அல்லது bourne identity inspired movie எதிர்பார்க்காமல் dark knight inspired emotional thriller எதிர்பார்த்து சென்றால் சரியாக இருக்கும்..
மகேஷுக்கு நல்ல ரோல்... layer layer ஆகா சட்டை போட்டவர், இதில் sleeveless போட்டு வளைய வருகிறார். 6 pak எல்லாம் காண்பிக்கவில்லை, முதுகை மட்டும் பார்க்கலாம்... but action scenes எல்லாம் ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார்கள் ... and interval sequence ரொம்பவுமே பிரமாதம்... totally unexpected
இவ்வளவு action இருக்கும் போது அந்த emotional climax எதிர்பாராதது ...
பார்க்கவேண்டிய படம்... மகேஷ் படம் வித்யாசமாக இருக்கும் என்று எதிர்பார்த்து செல்லும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக ரொம்பவுமே பிடிக்கும்..
-
13th January 2014 06:56 AM
# ADS
Circuit advertisement
Bookmarks