-
15th January 2014, 09:24 PM
#11
Senior Member
Diamond Hubber
என்னுடய உறவினர் பையன் ஒருவர் திவிர விஜய் ரசிகர் .அவரிடம் கேட்ட போது ஜில்லா படத்தை விட வீரம் படம் நன்றாக இருப்பதை ஒப்புக்கொண்டார் . அஜீத்துக்கு எப்போதும் கிடைக்கும் நல்ல ஒப்பனிங் , ஜில்லாவை விட வீரம் பரவாயில்லை என்னும் பரவலான கருத்தோட்டம் , வழக்கமான நகரமயமான பாணியில்ருந்து அஜீத் விலகி நின்ற வகையில் வழக்கத்துக்கு மாறாக அஜீத் ரசிகர்களையும் தாண்டி பொதுவான சினிமா ரசிகர்களிடையேயும் குறிப்பாக பெண்களிடையேயும் சற்று அதிகமாக இந்த முறை அஜீத் சென்று சேர்ந்திருக்கிறார் என தெரிகிறது . விஜய்க்கு ரசிகர்கள் தாண்டி (குடும்ப) பெண்கள் , சிறுவர்களிடமிருக்கும் செல்வாக்கு ஜில்லா படத்தின் ஒப்பீட்டளவில் சறுக்கலை தாங்கிப் பிடிக்கும் என்ற வகையில் , தமிழகத்துக்கு வெளியே கேரளா , சிங்கப்பூர் , மலேசியா போன்ற இடங்களில் உள்ள கூடுதலான வரவேற்பு இதையும் கவனத்தில் கொண்டால் ..ஒட்டு மொத்த வசூல் இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இருக்காது என்பது என் கணிப்பு
-
15th January 2014 09:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks