-
15th January 2014, 08:21 PM
#891
Junior Member
Senior Hubber

Originally Posted by
rsubras
just a curiosity, which were the three roles that won? it will definitely be a very hard choice......................... my pick would be 1.drama artiste 2. hero's uncle 3. the rough and tough guy who gets killed after taking revenge
NONE of the above DOCTOR has won first proze, i mote to furnish the other deails later,aft
er conf with seniors.
-
15th January 2014 08:21 PM
# ADS
Circuit advertisement
-
15th January 2014, 09:45 PM
#892
Junior Member
Seasoned Hubber
முரளி சார் , அருமை - உங்கள் பதிவுகளில் இருக்கும் உண்மை , எழுதும் விதம் , யாராலுமே சவால் செய்ய முடியாத விபரங்கள் - மெய் சிலிர்க்க வைக்கின்றன - நீங்கள் எங்கள் முகாமில் இருப்பதால் நாங்கள் பிழைத்தோம் - அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் - தொடருங்கள் - பொய்யை மெதுவாக சொன்னாலும் போதும் உண்மையாகி விடும் இந்த காலத்தில் , உண்மையை சத்தமாகவும் , ஆணித்தரமாகவும் சொல்லவேண்டியுள்ளது - அப்படி சொல்வது உங்களுக்கே உரித்தான கலை !!
அன்புடன் ரவி

-
15th January 2014, 09:58 PM
#893
Junior Member
Seasoned Hubber
பிரம்மாண்டத்தின் மகுடத்தில் வைரமாக ஜொலிக்க போகும் தங்க சுரங்கத்தை வெளியிடும் சுப்புவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் - நல்ல திரை அரங்கமாக வெளியிடுங்கள் முரளி சொன்னது போல - வெற்றி உங்களுக்கு நிச்சயம் !!!
அன்புடன் ரவி

-
17th January 2014, 01:24 PM
#894
Senior Member
Devoted Hubber
RAGHAVENDRA SIR'S POST
அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாய் நமக்கு ஒவ்வொரு முறையும் புத்தம் புதிய பரிமாணத்தில் ரசனையை உருவாக்குபவை நடிகர் திலகத்தின் நடிப்பில் அமைந்த காட்சிகள். இவற்றை விவாதிக்க லட்சக்கணக்கில் புதினங்களும் காணொளிகளும் இணைய தளங்களும் போதாது. இதை நிரூபிக்கும் வகையில் புதியதாய் மலர்ந்துள்ளன, நடிகர் திலகத்திற்கென உள்ள இணைய தளங்கள். ஏற்கெனவே உள்ள www.nadigarthilagam.com, www.nadigarthilagamsivaji.com, www.nadigarthilagam.proboards.com, என உள்ள இணையதளங்களுடன் புதியதாய் மலர்ந்துள்ள மற்றொரு இணைய தளம்,
www.thalaivansivaji.com
தமிழ் இலக்கிய ஆர்வலர், எழுத்தாளர், கதாசிரியர், கவிஞர், பேச்சாளர், திரு நாஞ்சில் இன்பா அவர்களின் இந்த இணைய தளம், இதுவரை அணுகாத புதிய கோணத்தில் நடிகர் திலகத்தின் பொது வாழ்வு. சமுதாய அர்ப்பணிப்பு, சேவை போன்ற அம்சங்களை முன்னிலைப் படுத்தும் வகையில் இவ்விணைய தளத்தின் தலைப்பு அமைந்துள்ளது. இது நிச்சயமாக நடிகர் திலகத்தின் புகழையும் பெருமையையும் மக்களிடம் பெரும் அளவில் கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.
திரு நாஞ்சி்ல் இன்பா அவர்களுக்கு நமது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
18th January 2014, 12:27 AM
#895
நடிகர் திலகம் இரட்டை வேடங்களில் கலக்கிய எவர் கிரீன் entertainer என்னை போல் ஒருவன் சென்னை ஓட்டேரி சரவணா திரையரங்கில் இன்று [17.01.2014] முதல் தினசரி மூன்று காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.
நான்மாடக் கூடலாம் மதுரை மாநகரில் all time mega hit வசந்த மாளிகை அண்மையில் திரையிடப்பட்டு ஓடிய விவரம் சற்று தாமதமாக கிடைத்திருக்கிறது. சென்ற மாதம் டிசம்பர் இறுதி வாரத்தில் மதுரை மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சென்ட்ரல் திரையரங்கில் மீனாட்சி மணாளன் காட்சியளித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் அழகாபுரி இளைய ஜமீன் ஆனந்த் தன் பங்கிற்கு வைகை வடகரை மக்களை குஷிப்படுத்திக் கொண்டிருந்தார். மதுரையின் வடகரையில் அமைந்துள்ள விஜய் பாரடைஸ் திரையரங்கில் வசந்த மாளிகை திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியிருக்கிறது. ஒரே நேரத்தில் நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் ஓடுவது நமக்கு புதுமையா என்ன? எப்போதும் நடைபெறுவதுதானே!
மேற்கண்ட தகவல்களை நம்முடன் பகிர்ந்துக் கொண்ட நண்பர் திரு ராமஜெயம் அவர்களுக்கு நன்றி!.
அன்புடன்
-
19th January 2014, 06:44 AM
#896
Junior Member
Platinum Hubber
மையம் திரியின் வெற்றி விழாவில் நடிகர் திலகம் ஆற்றிய உரை .

என் இனிய ரசிகர்களே
என்னுடைய படங்கள் பற்றி பல்வேறு பதிவுகள் -இனிய கட்டுரைகள் - ஆய்வுகள்
விளம்பரங்கள் - பாடல்கள் -கருத்து பதிவுகள் என்று களை கட்டிய நடிகர் திலகம் திரி
இன்று அமைதியாக இருப்பது எனக்கு வியப்பாக உள்ளது .
சென்னை - மதுரை - கோவை - திருச்சி - வியட்னாம் -ஹைதராபாத் - பெங்களுர்- நெய்வேலி
நெல்லை - துபாய் - போன்ற நகரங்களில் வாழும் என் இனிய உள்ளங்களே
ஏன் இந்த மௌனம் ?
என் சிலைக்கு ஒன்றும் ஆகாது . கோபதாபங்களை மறந்து என்றும் போல் உங்களின்
பதிவுகளை வழங்கி திரியினை ஒளி ஏற்றுங்கள் .
26.1.1966- மோட்டார் சுந்தரம் பிள்ளை - எண்ணி பாருங்கள் .
26-1-1972
இந்த ராஜாவை நினைத்து கொள்ளுங்கள் .
இன்னும் நான் என்ன சொல்ல .....
[கற்பனை உரை ]
Last edited by esvee; 19th January 2014 at 06:49 AM.
-
19th January 2014, 11:02 AM
#897
Junior Member
Senior Hubber

Originally Posted by
esvee
மையம் திரியின் வெற்றி விழாவில் நடிகர் திலகம் ஆற்றிய உரை .

என் இனிய ரசிகர்களே
என்னுடைய படங்கள் பற்றி பல்வேறு பதிவுகள் -இனிய கட்டுரைகள் - ஆய்வுகள்
விளம்பரங்கள் - பாடல்கள் -கருத்து பதிவுகள் என்று களை கட்டிய நடிகர் திலகம் திரி
இன்று அமைதியாக இருப்பது எனக்கு வியப்பாக உள்ளது .
சென்னை - மதுரை - கோவை - திருச்சி - வியட்னாம் -ஹைதராபாத் - பெங்களுர்- நெய்வேலி
நெல்லை - துபாய் - போன்ற நகரங்களில் வாழும் என் இனிய உள்ளங்களே
ஏன் இந்த மௌனம் ?
என் சிலைக்கு ஒன்றும் ஆகாது . கோபதாபங்களை மறந்து என்றும் போல் உங்களின்
பதிவுகளை வழங்கி திரியினை ஒளி ஏற்றுங்கள் .
26.1.1966- மோட்டார் சுந்தரம் பிள்ளை - எண்ணி பாருங்கள் .
26-1-1972
இந்த ராஜாவை நினைத்து கொள்ளுங்கள் .
இன்னும் நான் என்ன சொல்ல .....
[கற்பனை உரை ]
UMMAI Marandal thane ninaipatharku, our daily routine starts only
after our pasumai ninaivugal about your GLORY.
we will comeback like big TSUNAMI which you have not seen in real
life.
THANKS Essvee sir.
-
19th January 2014, 02:20 PM
#898
Senior Member
Devoted Hubber
புகழ் பெற்ற பாடலான பார்த்த நியாபகம் இல்லையோ பாடலின் ஹம்மிங், போன வருடம் வெளி வந்த இந்தி படம்
தலாஷ் இல் உபயோஹபடுத்த படிருகிறது.
புதிய பறவை கு மூல படம் மராட்டி மொழியோ.
படத்தின் டைரக்டர் தாதா மிரசி, மும்பையை சேர்ந்தவர்.
-
19th January 2014, 06:13 PM
#899
Junior Member
Veteran Hubber
NADIGAR THILAGAM SIVAJI GANESAN's HINT TO BALACHANDER ABOUT THE FATE OF EDHIROLI -
MY GOD WHAT A JUDGEMENT FROM THE GOD OF CINEMA !
பாலசந்தருக்கு சிவாஜிகணேசனுடன் ஏற்பட்ட அனுபவங்கள்
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, டிசம்பர் 30, 10:49 PM IST
சிவாஜிகணேசன் நடித்த "எதிரொலி'' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.
இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது:-
"சிவாஜியின் அலங்கார நிபுணரான ராமகிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார். என் நாடகங்களைப் பார்த்தவர். என் கதையில் சிவாஜி நடிக்க வேண்டும், அதை மாதவன் இயக்க வேண்டும் என்று விரும்பினார்.
நானும் சரி என்று சொல்லிவிட்டேன். மாதவனுடன் உட்கார்ந்து ஒரு கதை தயார் செய்தோம்.
சிவாஜியிடம் கதை சொல்ல ஏற்பாடு நடந்தது.
"நான் நாலைந்து நாட்கள் சூரக்கோட்டைக்குப் போகிறேன். அங்கு ஓய்வு எடுக்கும் வேளையில், கதையும் கேட்கலாமே. அவர்கள் இரண்டு பேரையும் சூரக்கோட்டைக்கு அழைத்துக்கொண்டு வந்துடுங்க'' என்றார், சிவாஜி.
இதை, ராமகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். அவருக்கு சிவாஜி ஏற்கனவே ஒரு படம் நடித்துக் கொடுத்திருக்கிறார். இது இரண்டாவது படம்.
கதை சொல்வதற்காக அதுவரை நான் எந்த வெளியூருக்கும் போனதில்லை. முதல் தடவையாக சூரக்கோட்டைக்கு சென்றேன்.
அங்கு, சிவாஜியின் வீடு பெரிதாக இருந்தது. நிறைய அறைகள் இருந்தன. மாதவன் அப்போது சிவாஜியை வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். நான் சூரக்கோட்டையில் மாதவனுடன் நான்கைந்து நாள் தங்கினேன்.
சிவாஜி அவ்வப்போது என்னை பார்ப்பார். "சாப்பிட்டீங்களா?'' என்று கேட்பார்.
நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவ்வப்போது வேட்டைக்குப் போவார். ஆனால், கதை கேட்க என்னை அழைக்கவில்லை.
சும்மா உட்கார்ந்து இருப்பது, எனக்கு போரடித்தது. இதுபற்றி ராமகிருஷ்ணனிடம் கூறினேன். `ஓய்வு எடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறார். அவரே உங்களைக் கூப்பிடுவார்' என்றார்.
அதேபோல, மூன்றாவது நாள் சிவாஜி என்னை அழைத்து கதை கேட்டார். நான் சொன்னேன். அவருக்குப் பிடித்து இருந்தது. "கதை நன்றாக இருக்கிறது. பண்ணலாம்'' என்று சொல்லிவிட்டார்.
ஆனால், பிறகு என்னுடன் பேசவில்லை. ஒருவேளை மாதவனிடம் பேசியிருக்கலாம். சிவாஜி பிசியாக இருந்ததால், படம் தள்ளிக்கொண்டே போயிற்று. இதற்கிடையே, ராமகிருஷ்ணன் இறந்து போனார். அதனால், அப்படம் தயாரிக்கப்படவில்லை.
இதன் பிறகு, சிவாஜியை வைத்து ஜி.என்.வேலுமணி தயாரித்த "எதிரொலி'' படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
முதல் நாள் படப்பிடிப்பு. சிவாஜியை முதன் முதலாக நான் இயக்கிடும் நேரம். எனது கை-கால் நடுங்கின. "பராசக்தி'', "மனோகரா'' படங்களைப் பார்த்து பிரமித்துப்போன எனக்கு, அவரை எப்படி இயக்குவது என்ற தடுமாற்றம்.
அவர் நடிப்பைப் பார்த்து ராத்தூக்கம், பகல் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவன் நான். அவரை இயக்கும் நேரம் வந்ததும், கை-கால் வெடவெடத்தன.
நிலைமையை சரி செய்து கொண்டு, முதல் காட்சியை அவருக்குச் சொன்னேன். பொதுவாக முதல் நாள் என்றால், ஒரு `சக்சஸ்' அல்லது `வெற்றி' என்று கூறும் வழக்கமான காட்சியாக இல்லாமல், ஒரு நீள வசனத்தை அவரைப் பேசச் சொன்னேன். அப்போது, கே.ஆர்.விஜயாவும் உடன் இருந்தார்.
"நான் உங்களுக்கு இப்படி ஒரு காட்சி வைத்துள்ளேன். சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமானால் சொல்லுங்கள். மாற்றி அமைத்துக் கொள்ளலாம்'' என்று சிவாஜியிடம் சொன்னேன்.
அவர் உடனே, "அய்யய்யோ... நீங்கதான் டைரக்டர். நான் எதுவுமே சொல்லமாட்டேன். நினைக்கவும் மாட்டேன். எப்படி நடிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களோ அப்படியே நடிக்கிறேன்'' என்றவர், வசனத்தைப் படித்துக் காட்டும்படி கூறினர்.
நான் படித்துக்காட்டினேன். "நான் எப்படி பேசவேண்டும் என்பதையும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்க!'' என்றார், சிவாஜி.
"என்ன சார் இது... நீங்க போய் என்னிடம் கேட்கறீங்க... உங்களுக்கு நான் சொல்லிக் கொடுப்பது சரியா வராது!'' என்றேன்.
"இல்லை பாலு! நீங்க எத்தனையோ வெற்றி நாடகங்களை டைரக்ட் செய்திருக்கீங்க. எனக்கும் சொல்ல வேண்டியதுதானே... இந்த படம் என்கிற கப்பலுக்கு நீங்கதான் கேப்டன்'' என்று விடாப்பிடியாகச் சொன்னார், சிவாஜி.
இவ்வாறு சிவாஜி சொன்ன பிறகு எனக்கு தைரியம் வந்தது. படப்பிடிப்பு படுவேகமாக நடந்தது.
இப்படி நடந்து வந்த படப்பிடிப்பின் நடுவே, ஒரு நாள் சிவாஜி என்னைத் தனியாக அழைத்தார். பட்டென்று ஒரு கேள்வி கேட்டார்.
தனது மனசை நீண்ட நாள் உறுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை அவர் கேட்டதும், நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கேட்ட கேள்வி:-
"ஏன் பாலு... எனது நடிப்புக்கு ஏற்றபடி ஒரு காட்சியை எனக்காக வைக்கக்கூடாதா....?''
- இதுதான் சிவாஜி கேட்ட கேள்வி.
நான் திடுக்கிட்டேன். "என்ன சார்... என்ன சொல்றீங்க?'' என்று கேட்டேன்.
"இல்லை. நான் நடிக்கும்படியான ஒரு காட்சி இருந்தால் நன்றாக இருக்குமே'' என்று மீண்டும் சொன்னார்.
எனக்குப் பெரும் அதிர்ச்சி. "அப்படியானால், நீங்கள் இதுவரை நடித்ததெல்லாம் நடிப்பு இல்லையா?'' என்று நான் கேட்க, "இல்லை... அப்படி சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும்... நான் நன்றாக நடிப்பதாகச் சொல்கிறார்கள். நவரச நடிப்பும் கலந்து தரும்படி ஒரு காட்சி வைக்கக்கூடாதா?'' என்று சிவாஜி கேட்டார்.
"இது அப்படி ஒரு கதை அல்ல. ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கை பற்றிய இயல்பான கதை. மிதமிஞ்சிய நடிப்பு இந்தக் கதையில் தேவைப்படாதே'' என்று நான் சொல்ல, "அப்படியென்றால் சரி. கதையும், காட்சியும் மிகச்சிறப்பாக அமைந்துவிட்டன. எனது ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை'' என்று சொல்லி முடித்துவிட்டார், சிவாஜி.
அவர் சந்தேகப்பட்டபடி சிவாஜி ரசிகர்கள் இந்தப்படத்தை ஏற்கவில்லை. அதனால் படம் வெற்றி அடையவில்லை.''
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
-
20th January 2014, 07:53 AM
#900
Junior Member
Senior Hubber
NT.s opinion about Etiroli proved very correct KB's one of the movies where CONTINUIY was lacking is no doubt Ethioli, in additon to improper character build ups. my opinion.
ALL jan 26 was great days for NT and all of us year 1966 day opened with big bang of announcement in all papers with daily thanthi captioned PADMASRI AWARDED TO SIVAJI GENESAN, the day had more festive look at crown mint with lot of crackers burstigs and sweet distributions etc.
most memorable day.
Last edited by Subramaniam Ramajayam; 20th January 2014 at 11:17 AM.
Bookmarks