-
31st January 2014, 03:09 PM
#41
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mareen
ondra varusathula oru padam'ngra nillamaikku vanthutaar.
nalla kadhai, acting-ku nalla scope irukkara maadhiri role-la nadikkattum. Selective-ah nadichaa dhaan field-la irukka mudiyum... last yearla karthi nadicha 2 padamum flop..
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
31st January 2014 03:09 PM
# ADS
Circuit advertisement
-
1st February 2014, 11:30 PM
#42
Senior Member
Senior Hubber

Originally Posted by
Cinemarasigan
nalla kadhai, acting-ku nalla scope irukkara maadhiri role-la nadikkattum. Selective-ah nadichaa dhaan field-la irukka mudiyum... last yearla karthi nadicha 2 padamum flop..
Karthi'ku padam hit aagurathe periya vishayam. Mass masala padam VJ/AJ senjala hit aagurathu ippellam periya vishayam...
-
2nd February 2014, 06:06 PM
#43
Junior Member
Seasoned Hubber
Team # Anjaan .shifted to Panchgani near Pune to shoot a
super song from Yuvan.at.some beautiful locations. Looking
forward
- Dhananjayan Govind # UTV Via Twitter (@Dhananjayang)
-
7th February 2014, 05:17 PM
#44
Junior Member
Seasoned Hubber
Samantha
Shot a high energy dance number for #anjaan.So much respect for the background dancers..no umbrellas,no fancy caravans,no juice
Phew and it's a schedule wrap for me.. Bye bye panchgani.Homeward bound..some polishing and shining before I start work again - See more at:
-
9th February 2014, 01:12 PM
#45
Junior Member
Seasoned Hubber
Yuvanshankar Raja @Raja_Yuvan 4m
Been super busy with work,working on anjaan now recorded two songs happy with it... And I love the visuals.
-
12th February 2014, 12:19 PM
#46
Senior Member
Veteran Hubber
-
12th February 2014, 02:36 PM
#47
Junior Member
Seasoned Hubber
http://tamil.thehindu.com/cinema/tam...cle5680390.ece
'அஞ்சான்' குழுவில் இணையும் விவேக்
சூர்யா - லிங்குசாமி இணைந்திருக்கும் 'அஞ்சான்' படத்தில் நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
'நான் தான் பாலா' படத்தின் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் விவேக். இப்படத்தில் விவேக் தான் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படத்தினைத் தொடர்ந்து 'பாலக்காடு மாதவன்', 'விஞ்ஞானி', 'வை ராஜா வை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமன்றி சூர்யா - லிங்குசாமி இணைந்திருக்கும் 'அஞ்சான்' படத்தில் விவேக் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
விரைவில் விவேக் கலந்து கொள்ளும் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. லிங்குசாமி இயக்கத்தில் 'ரன்' படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார் விவேக். அதனைத் தொடர்ந்து 'அஞ்சான்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
-
20th February 2014, 12:25 PM
#48
Senior Member
Veteran Hubber
சூர்யாவைக் கிண்டலாக கமெண்ட் செய்த சமந்தா! - vikatan
லிங்குசாமி இயக்கும் 'அஞ்சான்' படத்தில் சூர்யாவும், சமந்தாவும் நடித்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் சமந்தா சூர்யா குறித்து சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
'' நான் 11ஆம் வகுப்பு படிக்கும்போது சூர்யாவின் ’காக்க காக்க’ படம் ரிலீஸ் ஆனது. அப்போதெல்லாம் நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. அதனால் முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவேன்.ஆனால், அதற்குப் பிறகு நான் கொஞ்சம் மாறிவிட்டேன். அதற்குப் பிறகு நான் என் தோழிகளுடன் சேர்ந்து விஜய் மற்றும் விக்ரம் படங்களை விரும்பிப் பார்த்தேன்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டிருந்த தருணம் அது. அப்போது எங்கள் கல்லூரி விழாவுக்கு சூர்யா வந்தார்.நான் என்னுடைய தோழிகளுடன் விழா மேடைக்கு விரைந்தேன்.
சூர்யா மேடையில் பேசும்போது பயங்கரமாக கத்திக்கொண்டே சூர்யாவைப் பேசவிடாமல் கிண்டலாக கமெண்ட் அடித்து ரகளை செய்தேன்.ஆனால், இப்போது சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். இதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது.'' என்றார் சமந்தா.
-
20th February 2014, 12:57 PM
#49
Senior Member
Seasoned Hubber
ahhhhhhhhhhh....that's so sweet
-
4th March 2014, 04:26 AM
#50
Senior Member
Seasoned Hubber
இதுதான் அஞ்சான் கதை!
[ Monday, 03 March 2014, 01:05.18 PM GMT +05:30 ]
சூர்யாவின் அஞ்சான் படத்தின் படக்கதை காற்று வழியாக கசிந்துள்ளது.
லிங்குசாமியின் தயாரிப்பு, இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.
முதன் முறையாக இயக்குனர் லிங்குசாமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிவடைந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இறுதி கட்ட படப்பிடிப்பு கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் நியூசிலாந்தில் நடக்க இருக்கிறது. சமந்தா இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்து வருகிறார்.
லிங்குசாமியின் வட்டாரத்திலிருந்து கசிந்த வரையில் படத்தின் கதையாக, சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான சூர்யா, மும்பையில் நடக்கும் ஒரு கருத்தரங்கிற்காக செல்கிறார். மும்பையில் தன் கண்முன்னால் நடக்கும் ஒரு தவறை தட்டிக் கேட்கிறார். அது சின்ன தவறுதான். ஆனால் அதற்கு பின்னால் மும்பையின் அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் இருக்கிறார்கள்.
தன் வேலையை முடித்து விட்டு சூர்யா சென்னை வந்து விடுகிறார். வந்த உடனேயே அவரது வேலை பறிக்கப்படுகிறது. அவருக்கும், அவரது குடும்பத்துக்கும், காதலிக்கும் முகம் தெரியாத மனிதர்களால் அச்சுறுத்தலும், பிரச்னைகளும் வருகிறது.
அவை எல்லாமே மும்பை தாதாக்களால் செய்யப்படுவது. அப்போதுதான் சூர்யாவுக்கு மும்பை சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது. அப்படி பெரிதாக எதுவும் செய்யவில்லையே என்று துளாவி பார்க்கும்போதுதான், மும்பையில் நடந்தது சாதாரண விஷயம் இல்லை நாம் வசமாக தாதாக்களின் வலையில் சிக்கி விட்டோம் என்பதை உணர்கிறார்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதைப்போல தாதாக்களை சந்திக்க சூர்யாவும் தாதாவாக மாறுகிறார். இதுதான் படத்தின் கதை என்கிறார்கள்.
Bookmarks