Page 22 of 46 FirstFirst ... 12202122232432 ... LastLast
Results 211 to 220 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #211
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ரம்யா கிருஷ்ணன் எப்போதும் அப்படித்தான்!


    "தங்கம்' தொடரில் இளவஞ்சியை எதிர்த்து வெளுத்து வாங்குறீங்களே எப்படி?அந்த சீரியலில் காவேரி அக்காதான் எப்பவுமே எல்லோரரையும் ஆதிக்கம் பண்ணுவாங்க. ஆனா அவங்களுக்கே டென்ஷன் கொடுக்கிற கேரக்டர் எனக்கு. அதனாலதான் எதிர்த்து சண்டை போட்டுட்டிருக்கேன். டென்ஷனுக்கே டென்ஷன்ங்கறது வித்தியாசமான அனுபவமா இருக்கு. என் கேரக்டர் மக்கள்கிட்ட நல்ல ரீச் ஆகியிருக்கிறதுக்கு அதுதான் காரணம்.பார்வையாளர்களிடம் வரவேற்பு கிடைக்கிறதா?
    என்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க, நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்குது. வெளியே எங்கேயாவது ஆடியன்ஸ் பார்த்தாக் கூட "எப்பங்க உங்களுக்கு கல்யாணம்? நீங்க கல்யாணமாகி அங்கே போங்க.. அப்பதான் நல்லா இருக்கும்'னு சீரியல் சம்மந்தமாதான் அதிகம் பேசறாங்க.சின்னத்திரைக்கு வந்தது எப்படி?நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஹைதராபாத். இப்போ நடிக்கறதுக்காக சென்னையில் என் அத்தை, மாமாவோடதான் தங்கியிருக்கேன். நான் குட்டிப் பொண்ணா இருந்தப்போ எங்கள் வீட்டில் டி.வி. எல்லாம் பார்க்கக்கூடாது. ஒரே ஒரு ரேடியோதான் இருக்கும். அதுவும் எங்க அப்பாதான் வைச்சிருப்பார். சின்ன வயசுல இருந்தே எனக்கு டி.வி.யில வருபவர்கள் போட்டிருக்கும் நகைகள், டிரஸ் எல்லாம் ஆசையாப் பார்ப்பேன். அதற்காகவே டி.வி. பார்ப்பேன்.காலேஜ் முடிச்சதும் மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். மாடலிங்கில் இருந்த டைம்லதான் "லட்சியம்' தொடரின் டைரக்டர் என்னைப் பார்த்துட்டு நீங்க இந்த தொடர்ல நடிச்சா நல்லாருக்கும்'னு சொல்லிக் கேட்டார். ஆஹா.. இதுதானே நான் நினைச்சதுன்னு கமிட் ஆகிட்டேன். அதன் பிறகு, மற்ற தொடர்களில் நடிக்க ஆரம்பித்தேன்."தங்கம்' தொடர்ல ரம்யா கிருஷ்ணனோட நடிக்கும் அனுபவம் எப்படி?நான் அவங்களோட படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். அப்பவே எனக்கு அவங்களை ரொம்பப் பிடிக்கும். ஆனால், படத்தில் பார்த்ததற்கும் இப்போ நேரில் பார்ப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. ஒரு சாதாரணக் குடும்பப் பெண் எப்படி இருப்பாங்களோ, பழகுவாங்களோ அப்படித்தான் பழகுறாங்க.பெரிய ஹீரோயின் என்ற பந்தா எல்லாம் ரம்யா அக்காகிட்ட கிடையாது. எல்லோர்கிட்டயும் எப்பவும் அதே பக்குவத்தோடயும் அன்போடவும்தான் இருப்பாங்க. யார் எந்த சீன் நல்லா நடிச்சாலும் உடனே பாராட்டுவாங்க.காவேரிகூட சீரியல்ல சண்டை போட்டுட்டே இருக்கீங்களே..தங்கம் யூனிட்ல எல்லோரும் ஒருத்தரோடு ஒருத்தர் ரொம்ப அன்பாப் பழகுவாங்க. குறிப்பா நானும் காவேரி அக்காவும் சீரியல்ல எதிரிகளாக இருந்தாலும். நிஜத்தில் ரொம்ப திக் ஃபிரண்ட். செட்ல எப்பவும் அரட்டை அடிச்சுக்கிட்டு ஜாலியா பேசிக்கிட்டே இருப்போம். வெளியே ஷாப்பிங் எங்கே போனாலும் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாதான் போவோம். எனக்கு இப்போ சென்னையில் இருக்கிற ஒரே தோழி அவங்கதான்.டான்ஸ் மீது இவ்வளவு ஆர்வமாக இருக்கிற நீங்க, சின்னத்திரையில் நடக்கிற நடன போட்டிகள்ல கலந்துக்கறதில்லையே ஏன்?ஏற்கெனவே நிறைய சீரியல் கமிட் ஆகியிருக்கேன். அதனால அந்தளவுக்கு நேரம் கிடையாது. தேவையில்லாத விஷயங்கள்ல கவனம் திரும்புனா நடிப்புல கவனம் செலுத்த முடியாதுங்கறது என்னோட பாலிஸி. இதனால பிரஷர்தான் அதிகமாகும். சின்னத்திரை நிகழ்ச்சிகள், நட்சத்திர இரவு மாதிரி எப்போதாவது ஸ்பெஷலா டான்ஸ் ஷோ செய்யணும்னு ஆசை இருக்கு. ஆனா போட்டிகள்ல கலந்துக்க விருப்பமில்லை
    Last edited by aanaa; 26th February 2012 at 09:21 PM.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #212
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Last edited by aanaa; 29th June 2012 at 02:39 AM.
    "அன்பே சிவம்.

  4. #213
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    போல்டான கேரக்டரில் நடிக்க ஆசை: 'திருமதி செல்வம்' அபிதா புதன்கிழமை, ஜூன் 27, 2012, 10:22


    திருமதி செவ்வம் தொடரில் அப்பாவி அர்ச்சனாவாக வந்து பெண்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் அபிதா. இல்லத்தரசிகளின் ஒட்டுமொத்த அனுதாபத்தையும் பெற்றிருக்கும் அபிதா தன் சொந்த வாழ்க்கையில் எப்படி? அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வோம்.


    பொறுப்பான குடும்பத் தலைவன் செல்வத்துக்கு ரொம்ப சாஃப்ட்டான திருமதி நான். மிடில் கிளாஸ் குடும்பமா இருந்து இப்போ கோடீஸ்வர குடும்பமா மாறியிருக்கோம். இந்தத் தொடரைப் பார்த்தீங்கன்னா நிறையக் குடும்பங்களில் நடக்கிற நிஜ சம்பவம் போலவே இருக்கிறது என்று நிறையப் பேர்போன் செய்து சொல்லியிருக்கிறார்கள். இன்ப,துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. அதைத்தான் திருமதிசெல்வம் சொல்கிறது.

    இந்தத் தொடரைப் பொறுத்தவரை எனக்கு எப்பவுமே சலிப்பு வந்ததில்லை. அவ்வளவு எதார்த்தமான கதை இது. நாம் நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளும், சந்தோஷத்தையும், துக்கத்தையும் கண்முன்னே கொண்டு வருவதால் ரசிகர்களின் வரவேற்பு இந்தத் தொடருக்கு அதிகம் கிடைக்கிறது.

    இரண்டு வருடங்களுக்கு முன் நான் ஆக்ஸிடென்ட்ல இறந்து போயிட்டதா ஒரு வதந்தி வந்ததல்லவா? அப்போது பார்த்தீங்கன்னா நிறைய பேர் அழுதுகிட்டே எனக்கு போன் செய்து விசாரித்தார்கள். அதுபோல சென்னை கோயிலில் ஓர் அம்மா கையில் சூடம் ஏற்றி பூஜை செய்தார்களாம். அப்போது அங்கு சென்ற இன்னோர் அம்மா அதைப் பார்த்துவிட்டு என்னவென்று விசாரித்திருக்கிறார்கள் அதற்கு அந்தம்மா சொன்னார்களாம். திருமதி செல்வம் தொடரில் வரும் அர்ச்சனாவுக்கு ஆக்சிடண்ட் ஆகிவிட்டதாம். அவங்களுக்கு எதுவும் ஆகாமல் நல்ல படியா பிழைத்து வரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

    நான் இங்கு சூட்டிங் வந்த பிறகு இந்த விஷயத்தை எங்களுக்குப் போன் மூலம் அம்மா தெரிவித்தார்கள். கேட்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்த ஆடியன்ஸ் எல்லாம் எப்படி என்னை அவர்கள் வீட்டு பெண்ணைப் போல பாவிக்கிறார்கள் என்று நினைக்கும் போது ஒவ்வொருநாளும் இதைவிட இன்னும் நல்லா செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வருகிறதே தவிர, சலிப்பு ஏற்பட்டதில்லை.

    அர்ச்சனா கேரக்டரைப் போன்றுதான் நான். அதனால்தான் தொடரில் என்னால் எளிதாக நடிக்க முடிக்கிறது. அதைத் தவிர இந்தத் தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு நிறையப் பேர் போன் செய்து சொல்லியிருக்கிறார்கள். எங்க வீட்டில் நடப்பது போன்று இருக்கிறது. அல்லது அக்கம் பக்கத்து வீட்டு ஆட்களைப் பற்றி சொல்லுவது போல இருக்கிறது என கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றபடி ஸ்பாட்ல டைரக்டர் என்ன சொல்றாரோ, அதைத்தான் செய்கிறேன்.

    கேரளாவில் இருந்து சூட்டிங்கிற்காக சென்னைக்கு வந்து போவது ஆரம்பத்தில்தான் சிரமம் தெரிந்தது, இப்பொழுது பழகிவிட்டது. சூட்டிங் இல்லாத நாட்களில் கேரளாவில் என் குழந்தையோடு தான்இருப்பேன். எனக்கு ஒய்வு நேரம் எல்லாம் கிடைப்பதே இல்லைங்க. வீட்டில் இருந்தால் குழந்தையோடவே நேரம் சரியாக இருக்கும். அதே போல வீட்டில் இருக்கும் பொழுது நான்தான் சமையல் வேலைகளை எல்லாம் கவனிப்பேன். நன்றாகச் சமைக்கவும் செய்வேன். மற்றபடி சூட்டிங் சென்றுவிடுவேன்.

    எனக்கு மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள். மூன்று பேருமே திருமணமாகி கேரளாவிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள். நான் நாலாவது பெண். அம்மா என்னோட தான் இருக்கிறார்கள். என் கணவர் சுனில். என் குழந்தை பேரு அல்சா. என் கணவர் ஒரு பிஸினஸ்மேன் என்பதனால் அவரோடு இணைந்து நானும் ஏதாவது பிஸினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. மற்றபடி வருங்கால திட்டம் என்று எதுவும் கிடையாது. எனக்கு சின்ன குழந்தை இருப்பதால் சினிமாவில் கொஞ்சநாள் கழித்து நடிக்கலாம் என்று காத்திருக்கிறேன். நல்ல பேனர்ல, நல்ல கேரக்டர்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறினார் அபிதா.

    அமைதியான அர்ச்சனாவிற்கு படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தது போன்ற போல்டான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையாம். அது போல நல்லா சண்டை போடுவது போல் நெகட்டீவ் கேரக்டர்களும் செய்ய வேண்டும் என்று ஆசையிருக்கிறதாம்.

    அப்ப கூடிய சீக்கிரம் இன்னொரு நீலாம்பரியை பார்க்கலாம்.



    நன்றி: OneIndiaதி
    Last edited by aanaa; 29th June 2012 at 02:56 AM.
    "அன்பே சிவம்.

  5. #214
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அன்பான அக்கா நான்: டான்ஸ் மாஸ்டர் கலா


    சினிமாவில் நடன இயக்குநர் சின்னத்திரையில் மானாட மயிலாட நிகழ்ச்சியின் இயக்குநர் என பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறது நடன இயக்குநர் கலாவின் வாழ்க்கை. மனோரமாவை திரையுலகில் ஆச்சி என்று அழைப்பது போல, நடன இயக்குனர் கலாவை எல்லோரும் அக்கா என்றே அழைக்கிறார்கள். எம்.எம் சீசன் 7ல் பிஸியாக இருந்த கலா மாஸ்டரை நமக்காக பத்து நிமிடம் ஒதுக்கச் சொன்னோம்.


    "புதுப்புது அர்த்தங்கள்' படம் தொடங்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட 350 படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி உள்ளேன். இப்போது எம்.எம் சீசன் 7 வரை போய் கொண்டிருக்கிறது. என்னை எல்லோரும் மாஸ்டர் என்று அழைப்பதை விட "அக்கா' என்று அழைப்பதையே விரும்புகிறேன். அக்கா என்பதிலேயே இடைவெளி இல்லாத நெருக்கம் இருக்கும் என்று கூறி தொடர்ந்தார்.


    நடனத் துறைக்கு பெண்கள் அதிகளவில் வருகிறார்கள். ஆனால் அவர்கள் நிலைத்திருக்க விரும்புவதில்லை. திருமணம் வரைக்கும் இருப்போம் என்கிற நினைப்போடு வந்து போய்விடுகின்றனர். இந்தத் துறையில் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். முன்புபோல இந்தத் துறைக்கு வந்தால் ஏழ்மையாகவே இருப்பார்கள் என்பதெல்லாம் இல்லை.


    கலைஞர் டிவி தொடங்கும் போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிக வரவேற்பு இருந்தது. அதன் அடிப்படையில் மானாட மயிலாட தொடங்கினோம். அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது அதுதான் சீசன் 7 வரை தொடர காரணமாக இருக்கிறது. மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆடுவதற்கு திறமை இருப்பவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறோம் என்றார். எங்களுடையை நிகழ்ச்சியில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை கெமிஸ்ட்ரி. இப்பொழுது அது பலரும் பொதுவாக பயன்படுத்தும் வார்த்தையாக மாறிவிட்டது.


    இது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் நீதிபதிகளுக்கு இடையே சண்டை போடுவது டி.ஆர்.பி.ரேட்டிங்கிற்காக சிலர் செய்கிறார்கள். இந்நிகழ்ச்சிக்கு நான்தான் இயக்குனர். என் நிகழ்ச்சியில் இந்த ஏமாற்று செய்கை இருக்காது. குஷ்பு, ரம்பா, நான் மூவருமே நல்ல தோழிகள். எங்களிடையே சண்டையே வராது!. எங்களின் தீர்ப்பும் சரியாக இருக்கும் அதனால்தான் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடர காரணமாக இருக்கிறது என்று கூறி நிகழ்ச்சிக்கு கிளம்பினார் கலா மாஸ்டர்.
    Last edited by aanaa; 9th July 2012 at 05:35 PM.
    "அன்பே சிவம்.

  6. #215
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வில்லி கேரக்டர்தான் ரொம்ப பிடிச்சிருக்கு..புவனேஸ்வரி



    சின்னத்திரை, சீரியல், சினிமா, அரசியல் என ஒரு ரவுண்ட் சென்று விட்டு நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சின்னத்திரையில் வாழ்வே மாயம் சீரியலில் களம் இறங்கியுள்ளார் நடிகை புவனேஸ்வரி. சவுபர்ணிகாவில் தொடங்கி வாழ்வே மாயம் வரை அவரின் பயணம் குறித்து அவரிடமே கேட்போம்.


    சவுபர்ணிகா சீரியல் தொடங்கி வாழ்வே மாயம் வரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்து விட்டேன். பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்திருக்கிறேன். என் வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை சந்தித்து இப்போது மீண்டும் சீரியல் பயணத்தை தொடங்கியிருக்கிறேன்.


    சினிமாவை விட சீரியலுக்குத்தான் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பேன். எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரக்கூடிய கதாபாத்திரங்கள் அங்குதான் அமைகின்றன. வில்லி காதாபாத்திரம் தானாக அமைகிறது. இருந்தாலும் அது எனக்கு பிடித்திருக்கிறது.


    என்னுடைய கண்கள்தான் எனக்கு ப்ளஸ் பாய்ண்ட். அதேபோல் ஐஸ்வர்யா ராயின் கண்களையும், அவரின் அழகையும் பார்த்து நான் பொறாமை பட்டிருக்கிறேன்.
    பொதுவாகவே எனக்கு முன்கோபம் அதிகம் வரும். அப்பொழுது எனக்கே என்மீது பயம் ஏற்படும். அந்த கோபம்தான் என் வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களை ஏற்படுத்திவிட்டது. அதை மறக்க நினைக்கிறேன்.


    எனக்கு அரசியல் வாழ்க்கை தானாக அமைந்து விட்டது. நடிகையானதை நினைத்து ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. ஆனால் திருமணமாகி செட்டில் ஆகி இருக்கலாமோ என்று எப்போதவாது நினைத்துக்கொள்வேன் என்று கூறிவிட்டு சிரித்தார் சின்னத்திரை வில்லி புவனேஸ்வரி.
    Last edited by aanaa; 9th July 2012 at 05:36 PM.
    "அன்பே சிவம்.

  7. #216
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நான் பொறுப்பான அம்மா ... விஜி சந்திர சேகர்







    விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பான ‘அழகி' தொடரில் தன்னம்பிக்கை சுந்தரி. வீட்டு வேலை, ஹாஸ்பிடல், பெட்ரோல் பங்க் என பல வேலைகளைப் பார்த்து கஷ்டப்படும் பெண்ணாக நடித்து நடுத்தர குடும்பத்துப் பெண்களின் ஒட்டு மொத்த அனுதாபத்தையும் சம்பாதித்து வைத்துள்ளார் விஜி சந்திரசேகர். சினிமாவில் நடித்த விஜி நீண்ட இடைவெளிக்குப் பின் சீரியலில் எண்ட்ரி ஆகியுள்ளார்.

    முள்ளும் மலரும் தொடரில் துறு துறு என்று நடித்த விஜி சந்திரசேகர் சில வருடங்கள் காணமல் போய் கிழக்குச் சீமையிலே தொடரில் வடிவேலுக்கு ஜோடியாக வந்தார். அப்புறம் அங்கொன்றும் இங்கொன்றுமாக பட வாய்ப்புகள், சீரியல் வாய்ப்புகள் என இருந்தாலும் கொஞ்சகாலம் மீடியாக்களின் கண்களில் சிக்கவில்லை. இப்பொழுது திடீர் சீரியல் பிரவேசம். எதனால் இந்த இடைவெளி என்று கேட்டோம்.

    ரெண்டு குழந்தைகளை வளர்க்கவே நேரம் போதலை. பெரியவ காலேஜ் போறா சின்னவள் ப்ளஸ் டூ அதனால் இப்பத்தான் கொஞ்சம் நேரம் கிடைச்சிருக்கு சீரியல்ல வந்துட்டேன்.

    அழகி சீரியல் எனக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்திருக்கு. சில மாதங்களுக்கு முன் தி.நகர் பக்கம் ஷாப்பிங் போயிருந்தேன். கஸ்டமர்ஸ்ல இருந்து சேல்ஸ் கேர்ள்ஸ் வரைக்கும் 'சுந்தரி'யைக் கொண்டாடினது, எனக்கே சர்ப்ரைஸ்.

    'சுந்தரி மேடம்... நீங்க எவ்ளோ கஷ்டப்படுறீங்க..?! வீட்டு வேலை, ஹாஸ்பிட்டல் வேலை, பெட்ரோல் பங்க் வேலைனு ஒவ்வொரு நாளும் அவ்வளவு உழைக்கிறீங்க. சோர்ந்து போகும்போதெல்லாம், 'சுந்தரியைவிடவா..?'னு உங்களைத்தான் நினைச்சுக்கிறோம்...'னு ஒரு பணிப்பெண் சொன்னப்போ, தொடர் ஆரம்பிச்ச சில மாசத்துல இப்படி ஒரு ரீச்சானு ஆச்சர்யமா, சந்தோஷமா இருந்தது.

    நானும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்பதால் அதன் கஷ்ட நஷ்டங்கள் புரிந்து இந்த சீரியலில் நடிக்கிறேன் என்று கூறினார் விஜி சந்திரசேகர்.
    ஒரு முக்கிய செய்தி: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜி நடித்திருக்கிறாராம். வீட்டில் விஜி சந்திரசேகர் ஸ்டிரிக்ட் அம்மா என்று கூறுகின்றனர்.

    விஜியின் பெரிய பெண் சுரக்ஷா எம்.பி.பி.எஸ் மாணவியாம். சின்னபெண் லல்லின் ப்ளஸ் ஒன் படிக்கிறாராம். இருவருக்கும் செல்போன் வாங்கி கொடுத்தது கிடையாதாம். டிவி சேனல்ஸ் பார்க்க தடை விதித்துள்ளாராம். பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களில் எல்லாம் அவர்களுக்கு நட்பு வட்டம் கிடையாதாம். இப்போதைக்கு படிப்பு ஒன்றுதான் முக்கியம் என்று கூறி குழந்தைகளை வளர்க்கிறாராம்.
    பொறுப்பான அம்மாதான்!
    "அன்பே சிவம்.

  8. #217
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    என்னோட முதல் தொடரே ராதிகா மேடம் கூட – மகாலட்சுமி



    புடவையோ, மாடர்ன் டிரஸ்ஸோ எந்த உடை என்றாலும் அழகாய் பொருந்துகிறார் மகாலட்சுமி. ஆனால் அந்த வில்லத்தனம்தான் இல்லத்தரசிகளி ன் மனதில் கோபத்தை உண்டு பண்ணு கிறது. அரசியில் தொடங்கி, செல்லமே, உதிரிப்பூக்கள், ஜெயா டிவியில் இரு மலர் கள் என தொடர்ந்து வில்லத்தனம் செய்தே வீடுகளில் திட்டுவாங்குகிறார்.

    சின்னத்திரைக்கு வந்து சிறிது காலத்திலே யே தனக்கென்று ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் மகாலட்சுமி. இப் போது செல்லமே, இருமலர்கள், உதிரிப் பூக்கள் என தமிழில் மட்டுமல்லாது தெலு ங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏகப்பட்ட தொடர்களை கை வசம் வைத்துக் கொண்டு, படு பிஸியாக இருக்கும் மகாலட்சுமி, தன து சின்னத்திரை பயணம் பற்றி கூறுவதைக் கேட்போம்.

    என்னுடைய சின்னத்திரை பயணம் சன் மியூசிக்கில் காலை நேரத் தில் வாழ்த்தலாம் வாங்க நிகழ் ச்சியில் ஆரம்பித்தது இப்போது சீரியல்களில் தொடர்கிறது. நடி க்கணும் என்ற எண்ணமே கிடையாது. நிகழ்ச்சி தொகுப் போ, சீரியலோ இரண்டுமே தானாகவேதான் அமை ந்தன.

    அம்மா சுபி. அப்பா சங்கர் அவர் சினிமாவில் கொரியோகிராபி பண்ணிக்கிட்டு இருக்கார். தம் பி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறான். அம்மா எக் ஸ்போர்ட் பிஸினஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அவுங்களுக்கு திடீர்ன்னு உடம்பு சரியில்லாம போனதால நான்தான் பிசினஸைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போ என் பெரியம்மா மகள் நீபா மூலமாகத்தான் எனக்கு சீரியல் நடி க்க வாய்ப்பு வந்தது.

    என்னோட முதல் தொடரே ராதிகா மேடம் கூட பண்ணுகின்ற வாய்ப்பு கிடைச்சது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நடிக்க வருவதற்கு முன்பே அவுங்களோட ரசி கை நான். எனக்கு அவுங்களை ரொம்ப பிடிக்கும். அவுங்களோட பழகும்போது அவுங்க கேரக்டர் ரொம்ப பிடிச்சது. அப்படி பிடித்தவர்களோட சேர்ந்து நடித்தது ரொ ம்ப சந்தோஷமா இருந்தது.

    சீரியலில் எனக்கு நெகடிவ் ரோல்தான் அதிகமாக கிடைக்கிறது. சாதரணமாகவே எனக்கு நெகட்டீவ் ரோல் ரொம்பப் பிடிக்கும். பாஸி ட்டிவ் ரோல் பண்ணுவதற்கு நிறைய பேர் வருவாங்க. ஆனால் ஒரு சிலர்தான் நெக ட்டீவ் ரோல் பண்ணுவார்கள். நெகட்டீவ் ரோல் ரொம்ப சேலஞ்சிங்கா இருக்கும். பாஸ்ட்டீவ் ரோலைவிட நெகட்டீவ் ரோல் பண்ணும் போது மக்கள்கிட்ட நல்ல ரீச் கிடைக்கும்.

    நான் பரதநாட்டியம் முறைப்படி கற்றுக் கொண்டேன். அரங்கேற்றம் வரும் சமய த்துல டென்த் எக்ஸாம் வந்திடுச்சு. அதனா ல அப்படியே நிறுத்திட்டேன். அதுக்கு பிற கு தொடருவதற்கு டயம் கிடைக்கல. ஆனா ஸ்கூல்ல, காலேஜ்ல படிக்கும் போ து நிறைய டான்ஸ் பெர்பாமன்ஸ் பண்ணி யிருக்கேன். ஆனா அக்கா அளவுக்கு எல்லாம் நான் டான்ஸர் கிடை யாது. அவ சூப்பரா டான்ஸ்ல வெளுத்து வாங்குவா. நான் எப்படி சொல்லி கொடுக்கிறாங்களோ அப்படியே ஆடுவதோடு சரி.


    என்னை பொருத்தவரை எந்த ஒரு விஷ யம் எடுத்துக்கிட்டாலும் அதில் உறுதியா இருக்கனும். அப்போதான் ஜெயிக்க முடி யும். ஒரு விஷயம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதில் எவ் வளவு தடைகள் வந்தாலும் சரி கண்டிப் பாக செஞ்சி முடிச்சுடுவேன் என்று கூறி விட்டு சீரியலில் நடிக்க கிளம்பினார் மகா லட்சுமி.
    "அன்பே சிவம்.

  9. #218
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மனதில் வந்த கம்பீரம்! அனுஜா ஐயர் பெருமிதம்!!


    சின்னத்திரை தொடரில் வக்கீலா நடித்து வரும் நடிகை அனுஜா ஐயர், தனது மனதில் தானாக கம்பீரம் வந்திருப்பதாக கூறியுள்ளார். சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு சென்ற அனுஜா ஐயர் விஜய் டிவியில் இரவு பத்துமணிக்கு ஒளிபரப்பாகும் தர்மயுத்தம் தொடரில் வக்கீல் கோட் போட்டு கம்பீரமாக வருகிறார்.


    சீரியல் அனுபவங்கள் குறித்து அனுஜா அளித்துள்ள பேட்டியில், சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தாலும் டெல்லியில்தான் மாஸ் கம்யூனிகேசன் படித்தேன். மாடலிங் வாய்ப்போடு சினிமாவும் தேடி வந்தது. உன்னைப்போல் ஒருவன் சினிமாவில் ரிப்போர்ட்டராக நடிக்கும் போதே ஒரு கையில் சிகரெட்டும் மறுகையில் மைக்குமாக தில்லாக நடித்து இருந்தேன். அது பரபரப்பாக பேசப்பட்டது. இப்பொழுது அதேபோல் தில்லான கேரக்டர் சின்னத்திரையில் அமைந்திருக்கிறது.


    தர்மயுத்தம் தொடரில் கார்த்திக்குக்கு ஜோடியாக நடிக்கிறேன். இது சீரியல் என்பதை விட சீரியஸான தொடர் என்றே சொல்ல வேண்டும். ஏழு வருடங்களாக குடும்ப விஷயம் ஒன்றுக்காக கோர்டுக்கு போனது இப்போது சீரியலில் நடிக்க ஈஸியாக இருக்கிறது என்கிறார் அனுஜா. சின்னத்திரை தொடர்களிலேயே இந்த தொடர்தான் 5 டி கேமராவில் ஷூட் செய்யப்படுகிறது. இது மாறுபட்ட ஃபார்மேட் என்பதால்தான் இந்த தொடரில் நான் கமிட் செய்து கொண்டேன். இந்த தொடரைப் பார்த்துவிட்டு என் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன. சீரியலுக்காகத்தான் கறுப்பு கோட்டை அணிகிறேன் என்றாலும் மனதில் தானாகவே ஒரு கம்பீரம் வந்து ஒட்டிக்கொள்கிறது, என்று கூறியுள்ளார்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  10. #219
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரையில் இருந்து...
    திருமதி செல்வம், முந்தானை முடிச்சு, இளவரசி, தென்றல், மருதாணி, வசந்தம், அத்திப்பூக்கள், உதிரிப்பூக்கள், பிள்ளை நிலா என ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் கேரக்டர் ரோல்களில் தன் நடிப்பால் ரசிகர்கள் மனதில் நின்று போனவர் மதுரை பிரியா. மதுரை நரிமேட்டைச் சேர்ந்த மதுரை பிரியா, சென்னைக்கு நடிக்க வந்து மூன்றாண்டுகள் முடிந்திருக்கிறது. அதற்குள் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் நடிப்புப் பிரவேசம். எப்படி? நாடக அனுபவம் தான் காரணமா?


    பிரியாவைக் கேட்டால்...


    ஒருவர் பேசும்போதே அவர்கள் மேனரிசம் எப்படி இருக்கிறது என்பதை மனதில் படம் பிடித்துக் கொள்வேன். பிறகு அவர்கள் மாதிரி பேசிப்பார்ப்பேன். சிறு வயதிலேயே என்னை தொற்றிக் கொண்ட பழக்கம் இது. இதனால் என் பள்ளிக்கால தோழிகளில் பலரும் நீ நடிக்கத்தான் லாயக்கு என்பார்கள். அப்படியாக என்னை பற்றிக்கொண்டது தான் கலையார்வம். ஊரில் நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேடையில் நடிப்புக்கு கிடைத்த கைதட்டல் தந்த தைரியத்தில் தான் சென்னை வந்தேன். வந்ததும் வாய்ப்புக்கு முயன்றபோது தங்கம் சீரியலில் டாக்டர் கேரக்டர் வந்தது. அந்த டாக்டர் கேரக்டர் ஏற்படுத்திய பாதிப்பில் அத்திப்பூக்கள் உள்ளிட்ட அடுத்தடுத்த பல சீரியல்களில் டாக்டர் வேடமா? கூப்பிடு பிரியாவை என்கிற அளவுக்கு நிலைமை போய் விட, அப்போது தான் நான் சுதாரித்துக் கொண்டேன். கதைக்குள் இணைந்த வித்தியாசமானகேரக்டர்களை கேட்டு வாங்கினேன்.


    இதன் பிறகே பெரியதிரை அழைப்புகள் வரத்தொடங்கின. தூங்காநகரம் படத்தில் நடிகர் விமலுக்குஅக்காவாக வந்தேன். மதுரை சம்பந்தப்பட்ட கதை என்பதால், மதுரையில் இருந்து வந்த எனக்கு முக்கிய கேரக்டர் தந்து நடிக்க வைத்தார், டைரக்டர் கவுரவ். தொடர்ந்து காவலன், கோ, வேலாயுதம், அவன் இவன் என படங்கள் தொடர்ந்ததில் இப்போது துட்டு படத்தில் கஞ்சா கருப்புவின் ஜோடியாகி இருக்கிறேன். இந்த காமெடி கேரக்டர் எனக்கு சினிமாவில் புது விலாசம் தரும்.


    வில்லியாக நடிக்க ஆசையில்லையா?


    யார் சொன்னது? வந்தால் அதையும் ஒரு கை பார்த்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் வெண்ணிலாவின் அரங்கேற்றம் படத்தில் கொடுமையான வில்லி கேரக்டர். நடிக்க முடியுமா? என்று கேட்டார்கள். கதை கேட்டபோது தூள்சொர்ணக்கா மாதிரியான அடாவடி கேரக்டர் என தெரிந்ததும் உடனடியாக ஒப்புக்கொண்டு விட்டேன். இனி வில்லியாகவும் அதகளம் பண்ணவிருக்கிறேன்.


    சின்னத்திரையிலும் தொடர்வீர்கள் தானே?


    என்னை ரசிகர்களிடம் முதலில் கொண்டு சேர்த்தது சின்னத்திரை தான். எனவே பெரியதிரையில் பிசியானாலும் சின்னத்திரை வாய்ப்புக்களையும் தொடரவே செய்வேன்.
    உற்சாகமாக சொல்கிறார், மதுரைபிரியா.
    "அன்பே சிவம்.

  11. #220
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ......
    பாலுமகேந்திரா படத்தில் நடித்தது என் அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார் சீரியல் நடிகை நடிகை ரம்யா. தலைமுறைகள் படத்தில் நடிக்கும் போது பால்ய பருவ நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வார் பாலுமகேந்திரா...சுயசரிதை எழுதும் அளவிற்கு அந்த சம்பவங்கள் அடங்கியுள்ளன. ஒருவருடம் தலைமுறைகள் படத்தில் நடித்தேன். இன்னும் கொஞ்சநாள் அந்த படத்தில் நடிக்க மாட்டோமா? என்றிருந்தது என்று கூறியுள்ளார். சீரியல், மாடலிங், சினிமா, காதல் திருமண வாழ்க்கை போட்டோகிராபி என வாழ்க்கையில் சுவையான சம்பவங்களை மனம் திறந்து கூறியுள்ளார் ரம்யா.


    மாடலிங் சின்னத்திரை நான் எம்.ஏ. பப்ளிகேஷன்ஸ் படித்துள்ளேன். மாடலிங் துறையில் எனக்கு ஆர்வம் அதிகம். சின்னத்திரைக்குள் ‘இது ஒரு காதல் கதை' நான் அறிமுகமான முதல் சீரியல்.


    சினிமாவில் மந்திரப்புன்னகை அதை தொடர்ந்து கரு. பழனியப்பன் சார் இயக்கி நடித்த ‘மந்திரப்புன்னகை' படத்தில் கதாநாயகனின் சின்ன வயது அம்மாவாக நடித்தேன். எல்லோராலும் பாராட்டப்பட்ட அந்த கேரக்டர் மூலம் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.


    தடையற தாக்க கண்டுபிடி கண்டுபிடி' எனும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் சீமான் சார் ஜோடியாக நடித்துள்ளேன். ‘தடையற தாக்க' படம் பார்த்தவர்கள் அத்தனை பேரும் என்னை அடையாளம் கண்டு கொண்டு பாராட்டுகிறார்கள். தமிழ் சினிமாவின் கேமரா கவிஞரும், மிகப்பெரிய இயக்குனருமான பாலுமகேந்திரா சார் படத்தில் நடித்ததை மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன். . எனக்கு போட்டோகிராபியில் ஆர்வம் இருந்ததால் அதைப் பற்றி பாலுமகேந்திராவிடம் நிறைய கேட்டு தெரிந்து கொண்டேன்
    "அன்பே சிவம்.

  12. Thanks R.Latha thanked for this post
Page 22 of 46 FirstFirst ... 12202122232432 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •