Page 114 of 401 FirstFirst ... 1464104112113114115116124164214 ... LastLast
Results 1,131 to 1,140 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #1131
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Fiji
    Posts
    0
    Post Thanks / Like
    WELCOME Gopal SIR along with Rajinikanth and Kannan.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1132
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Location
    West India
    Posts
    0
    Post Thanks / Like
    Rare picture !!! #legends

  4. #1133
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கெளரவம்(1973)- பகுதி-2

    நடிகர்திலகத்தால் மட்டுமே இந்த பாத்திரத்தை பண்ண முடியும் என்ற வகையே இதில் வரும் ரஜினிகாந்த் பாத்திரம்.prestige பத்மநாபனுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நாராயணசாமி போல இதில் வரும் ரஜினிகாந்துக்கு டி.வீ.எஸ்.கிருஷ்ணா என்ற தொழிலதிபர்,கோவிந்த் சுவாமிநாதன் என்ற வக்கீல்,மற்றும் மோகன் ராமின் தந்தை வீ.பீ ராமன் என்ற மூவர் கூட்டணியில் இந்த பாத்திரத்தை வடிவமைத்தார் நடிகர்திலகம்.

    குணசித்திர ஒருங்கமைவு,பேசும் பாணி,சிறு சிறு பாத்திர இயல்புகள்,ஸ்டைல்,பாமர மக்களையும் ,படித்தவர்களையும் ஒருங்கே ஈர்த்த பாத்திரம். ஆங்கில வசனங்கள் பாத்திர படைப்புக்கேற்ப அள்ளி தெறிக்க பட்டிருந்தாலும் ,பீ,சி சென்டர்களையும் வெற்றிகரமாக ஈர்த்த பெருமை இந்த படத்துக்குண்டு.

    இதில் ரஜினிகாந்த் பாத்திரம், உலவும் ரோல் மாடல்களை கொண்டு சிவாஜியின் கற்பனை திறனால் meisner முறை நடிப்பில் ,ஆஸ்கார் வைல்ட் பாணி சுதந்திர கற்பனை வளம் கொண்ட செழுமையான ஒன்று.

    கண்ணன் பாத்திரமோ ,இயல்பு பாணி கொண்ட stanislavsky கூறுகள் அதிகம் கொண்டது.எப்போதுமே ஒரு பாத்திரத்தை ஓங்க வைக்க நடிகர்திலகம் கையாளும் அற்புத உத்தி இதுவாகும்.

    An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .

    Doing justice to the character - என்பதைப் பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். அதற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. மேம்போக்கான அபிப்ராயம் உள்ளவர்களுக்கு அதைப் புரிய வைக்க, அணுக இலகுவாக்க, பார்வை விரிவடைய சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம்.

    அதே சமயத்தில், இதைத் தாண்டி 'இந்த நடிப்பை வெளிப்படுத்த வாகாக ஒரு பாத்திரம் தேவை' - என்ற வகையையும் நாம் சொல்லவேண்டும். End-product என்று பார்த்தால் 'பாத்திரத்துக்குக் கச்சிதமான நடிப்பு' என்ற சட்டகத்திலிருந்து பிரித்து சொல்லமுடியாதபடிக்கு இருக்கலாம். ஆனால் இந்த பாத்திரமே நடிப்புக்காக வார்க்கப்பட்டது என்பதை உணர்ந்து சுவைக்கும் துய்ப்பே தனி!

    நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.

    Strasberg&Stanislavsky focused on the Sense Memory technique using events in one’s past as a way of emotionalizing, Meisner developed his technique using Stanislavski’s revised method. Rather than delving exclusively into one’s past memories as a source of emotion, one could more effectively summon up the character’s thoughts and feelings through the concentrated use of the imagination and the belief in the given circumstances of the text. Meisner defined acting as doing things truthfully under imaginary circumstances and his technique is still known for its depth, reliability and balanced approach.

    நாம் ஏற்கெனெவே நடிப்பு பள்ளிகளை விரிவாக இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடரில் அலசி விட்டதால் இங்கு கோடி காட்டி விட்டு , நடிகர்திலகத்தின் பாத்திர அணுகலை,அது சார்ந்த என்னுடைய ரசனை துயிப்பை இனி விரிவாக அலசுவேன்.

    (தொடரும்)
    Last edited by Gopal.s; 8th February 2014 at 07:51 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #1134
    Senior Member Seasoned Hubber hattori_hanzo's Avatar
    Join Date
    Nov 2007
    Posts
    640
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    நடிகர்திலகம் சிவாஜி சிலை சம்பந்தமான வழக்கில் நடிகர்த்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு அம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிலுவையில் உள்ளது.

    நடிகர்திலகம் சிவாஜி சிலை சம்பந்தமாக, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் கடந்த 23-01-2014 அன்று நடைபெற்ற, நான் பங்கேற்றுப் பேசிய, "எத்தனை கோணம் எத்தனை பார்வை" என்ற விவாத நிகழ்ச்சியின் இணைப்புகளை இத்துடன் இணைத்துள்ளேன். பார்க்காத நண்பர்கள், பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி.
    KCSHEKAR sir, what a fluency! And Great speech. But Kalaignar TV should have brought at least one person from the ruling party to support their stand, and to get blasted by others.
    Read a news recently and got surprised by the contrast in attitude of 2 State Governments of our Country towards "Shivaji statue"
    Maharashtra govt clears 100 crore for Shivaji statue
    http://www.thehindu.com/news/nationa...cle5659541.ece
    ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானோ..

  6. #1135
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by hattori_hanzo View Post
    KCSHEKAR sir, what a fluency! And Great speech.
    Thanks Sir. (Please mention your name)
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #1136
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அவர் தான் சிவாஜி.....கோவை ராயலில் 7 நாட்களில் வசூல்ஆன தொகை 60 000 தாண்டியது.கடந்த 2 வருடங்களில் இரவுக்ககாட்சிக்கு வந்தவர்களின் எண்ணிக்கையும் இந்த படத்திற்கு தான் அதிகம் என்று தியேட்டர் ஊழியர்கள் கூறினர்.வேறு நடிகரின் படங்கள் 55 ஆயிரத்தை தாண்டியதில்லை என்பது கூடுதல் தகவல் சிவாஜி. சிவாஜி..சிவாஜி...

  8. #1137
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like

    Lightbulb

    அவன் தான் மனிதன் வசூல் 68000 என்று திருத்திக்கொள்ளவும்
    Attached Files Attached Files

  9. #1138
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Kc சார் உங்கள் கருத்துக்கள் நன்றாக இருந்தது. தவற விட்டதை பார்க்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.

  10. #1139
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பார்த்ததில் பிடித்து -10

    இந்த பதிவில் நான் எழுத போகும் படம் இலங்கையில் தயாரான மற்றும் இந்தியா- இலங்கை கூட்டு தயாரிப்பில் உருவான முதல் படமான
    பைலட் பிரேம்நாத்.
    இந்த படம் தான் நடிகர் திலகத்தின் 200 வது படம் என்று நான் நினைத்து கொண்டு இருந்தேன் , இந்த படம் மெழுகு பொம்மைகள் என்ற பெயரில் நாடகமாக நடத்தப்பட்டு அதற்கு பிறகு திரைப்படமாக வந்தது

    இந்த படத்தை அநேக நண்பர்கள் பார்த்து இருப்பார்கள் என்ற காரணத்தினால் படத்தின் கதையை சுருக்கமாக எழுதி விடுகிறேன்

    பைலட் பிரேம்நாத்க்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் , மகள் (ஸ்ரீதேவி) கண் தெரியாதவர் , மூத்த மகன் (விஜயகுமார்) எஸ்டேட் விவகாரத்தை கவனித்து வருகிறார். இளைய மகன் (ஜெய்கணேஷ்) race வீரர் . பைலட் பிரேம்நாத் ஒரு widower . மனைவியை இழந்தும் அவர் நினைவாக வாழ்ந்து வருகிறார் .

    மூவருக்கும் திருமணம் செய்யும் நேரத்தில் , 3 பிள்ளைகளில் ஒன்று பிரேம்நாத்க்கு பிறந்தது இல்லை என்று தெரிய வருகிறது , இதனால் குடும்பத்தில் குழப்பம். இந்த விஷயம் பிள்ளைகளுக்கும் தெரிய வருகிறது .
    காலம் , விதி வைத்த தேர்வில் பிரேம்நாத் & அவர் பிள்ளைகளும் எப்படி எதிர் கொண்டு வந்தார்கள் என்பதே கதை

    படத்தை பற்றி :

    இந்த படத்தில் 3 ஹீரோக்கள் முதல் ஹீரோ ஒளிபதிவாளர் விநாயகம். இலங்கையை பார்க்க வேண்டும் என்றால் இந்த படத்தை பார்த்தல் போதும் , கண்ணில் ஒத்தி கொள்ளலாம் , காட்சிகள் அனைத்தும் அழகு , குறிப்பாக வெளிப்புற காட்சிகள் .

    இரண்டு : இசை

    பொதுவாக நான் இசையை பற்றி அதிகமாக எழுவது இல்லை , காரணம் நான் அதிகமாக பாடல்கள் கேட்பது இல்லை . ஆனால் இந்த படத்தில் 5 பாடல்களும் அருமை - MSV க்கு ஒரு கை குலுக்கல்.
    சிலோன் மனோகர் பாடும் பாப் பாடல் சூப்பர் ,
    who is the black sheep - icing in the cake

    சிவாஜி :

    என்னை பொறுத்த வரையில் : A man who never ceases to surprise me .
    என்ன ஒரு controlled performance . இதை கூற காரணம் over acting செய்ய நிறையக சான்ஸ் உண்டு . இதை உணர்த்து அவர் ஒரு balanced act செய்து இருக்கார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் இருக்கும் பிரேம்நாத் என்ற பாத்திரத்துக்கும் நடிகர் திலகத்தின் real character க்கும் நிறைய ஒற்றுமை உண்டு

    பிரேம்நாத் ஊர் ஊராக சுற்றி திரியும் நபர் அப்படி இருந்தும் வீட்டுக்கு வந்ததும் குடும்பமே அவர் உலகம் , வெளியே உலகமே அவர் வீடு .

    மனைவியை எந்த அளவுக்கு நேசித்து இருக்கார் என்றதற்கு ஒரு உதாரணம் , இறந்து போன அவர் மனைவி உடன் உரையாடும் காட்சி , மற்றும் கடிதங்களை வைத்து இருப்பது.

    சிவாஜி சாரின் தோற்றம் மற்றும் வயசான சிங்கத்தின் தோற்ற்றம் & கர்ஜனை, லேசாக தங்கபதக்கம் படத்தின் பாதிப்பு என்றே தோன்றியது

    சிவாஜி சார் என்றால் நடிப்பு , மற்றும் expression . இந்த படத்தில் தான் எத்தனை விதமான முக பாவனை

    பிரேம்நாத் வாழ்க்கையில் எல்லாமே இருக்கிறது , அன்பான குடும்பம் , நல்ல நண்பர்கள் மற்றும் அளவில்லா செல்வம் . சரி பிரேம்நாத் retirement age நோக்கி செல்லும் பொது அவருக்கு retirement blues
    ஏற்படுகிறதா ,prestige பத்மநாபன் போலே என்றால் அதுவும் இல்லை

    ஒரு அழகிய பெண்ணை திருமணம் செய்து வாழ்கையை நன்றாக அனுபவித்து வரும் பொது விதி வசத்தால் ஒரு தீ விபத்தில் தன் மனைவியை இழந்து விடுகிறார் , அதற்கு முன்னால் திருமண நாளில் அவர் மனைவி உடன் அடிக்கும் லூட்டி இளமை துள்ளல்

    அதுவும் அவர் மனைவி see thru ஆடை அணிந்து கொண்டு இவர் வெளியே நின்று கொடுக்கும் expressions priceless , அதே மனைவி இதனை இனிமையாக நாட்களை கழித்த பின் அவர் கண் முன்னே இருக்கும் பொது அவர் கொடுக்கும் முக பாவனைகள் டாப் .
    பிள்ளைகள் உடன் அவர் பொழுதை கழிக்கும் பொது அவர் குழந்தை தான் .
    அதற்கு உதாரணம் முதல் காட்சியில் அவர் விமானத்தை திறமையாக தரை இறக்கி விட்டு , வீட்டுக்கு வந்த உடன் அட்டாக் என்று மகள் சொன்ன உடன் சிலையாக உறைந்து போய் நிற்கும் காட்சி .
    மனைவி இல்லை என்ற ஒரே ஒரு குறையை தவிர அவர் வாழ்வில் ஒரு குறையும் இல்லை . சிவாஜி சார் தன் கண் தெரியாத பெண்ணை கூட்டி கொண்டு ஷாப்பிங் காட்சி இங்கிதம் என்ற சொல்லுக்கு ஒரு எடுத்துகாட்டு .

    தந்தை தொப்பி வாங்கும் பொது மகள் அதை தொட்டு பார்த்து கருத்து சொல்லுவதும் , அதே சமயம் மகள் உள்ளாடைகள் வாங்கும் பொது பிரேம்நாத் திரும்பி நிற்பதும் , டாப்

    கண் தெரியாத அந்த பெண்ணுக்கு காதல் வருகிறது , அந்த நபரின் தந்தை ஒரு குற்ற்றவாளி , அதற்கு சம்மதிக்கிறார் பிரேம்நாத்

    பிரேம்நாத் தான் தான் காதலிக்கும் பெண்ணின் தந்தை என்பதை அறியாமல் அவர் பேசுவதும் (பிரேமானந்த் ) அதை கேட்டு கொண்டு சிவாஜி நிற்பதும் , உண்மை தெரிந்ததும் அதற்கு react பண்ணுவதும் சொல்லுவதற்கு வார்த்தை இல்லை
    விஜயகுமாரின் காதல் தெரிய வரும் இடமும் , ஜெயசித்ரா தன் காதலர் என்று நினைத்து சிவாஜியை கண்டதும் ஏமாந்து போய் நிற்பதும் , சிவாஜியை ஜெயசித்ரா பார்ப்பதும் , சிவாஜி தலையை வெளியே நீட்டி பார்ப்பதும் , பின் தன் மகனிடம் உன்னை பார்க்க ஒரு நபர் வந்து உள்ளார் என்று சொல்லி , அவர் காதலுக்கு பச்சை கொடி காட்டுவதும் - அன்புள்ள அப்பா.
    வாழ்கை இப்படியே இனிமையாக போய் விடுமா ,
    தன் மனைவி எழுதிய கடிதத்தை தன் நண்பர் படித்ததும் தான் தெரிகிறது ஒரு பிள்ளை தனக்கு பிறந்தது இல்லை என்று .

    ஒரு மனிதன் உணர்ச்சிவச படும் பொது என்ன ஆகும் , முகத்தில் சோர்வு தெரியும் , தலை முடி களையும் , சிவாஜி சார் நடிப்பில் இதுவும் நிகழ்கிறது , அவர் எதை தான் தொடவில்லை நடிப்பில்

    பிரேம்நாத் உண்மையை தான் கண்டுபிடிக்க முயல்கிறார் , அவர் பிள்ளைகளை வெறுக்க வில்லை .
    அந்த கடிதம் தன் மூத்த மகனிடம் கிடைத்த உடன் சிவாஜி சார் காட்டும் பரபரப்பு நம்மளுக்கும் தொற்றி கொளுகிறது.

    ஒரு ஒரு நபரும் தான் தான் black sheep என்று எண்ணி கொண்டு வெளியே செல்ல முயற்சிக்கும் பொது சிவாஜி சார் நடிக்க வில்லை , அடுத்தவர்களை முந்த நினைக்கவில்லை , மிகவும் கூலாக handle செய்து இருப்பார் .
    அதுவும் ஜெய் கணேஷ் குதி குதி என்று ரணகளம் செய்யும் பொது நம்மவர் அட்டாக் என்று சொல்லி அவரை handle செய்யும் காட்சி , விஜயகுமார் தைரியம் இல்லாத நபர் என்று சொன்னதும் , அதை உடைப்பதும் சிவாஜி சாரின் மிகை இல்லாத நடிப்புக்கு ஒரு உதாரணம்.

    who is the black sheep பாடலில் அவர் நடிப்பை இனிமேல் யாரிடம் பார்க்க போகிறோம்

    கடைசியில் தன் மனைவி களங்கம் இல்லாதவர் , நண்பர் துரோகி அல்ல என்பதை அறிந்து அவர் கதறும் காட்சியும் , அது வரை வெறும் பொம்மை போல் இருக்கும் ஸ்ரீதேவி பேசும் வசனம் - மேஜர் உடன் combination என்று fitting climax for a emotional drama .
    தன் மனைவி தூய்மையானவர் என்பது தெரிந்த உடன் அவர் வெள்ளை உடை அணிந்து கொண்டு கணவர் உடன் பேசும் காட்சி ,
    டைரக்டர் A.C .T stamp

    வசனம் ஆரூர் தாஸ் , சிவாஜி சாரின் பல வெற்றி படங்களுக்கு வசனம் எழுதியவர் . ஷார்ப் dialouges
    காமெடிக்கு தேங்காய் - தமிழ் பாஷையை கொலை பண்ணுகிறார்

    ஆனால் emotional scenes பேசும் பொது நல்ல தமிழ் பேசுகிறார்

    நல்ல குடும்ப படத்தை நினைவு கூற ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சி உடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன் .

  11. #1140

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •