-
13th February 2014, 05:59 PM
#1191
Junior Member
Regular Hubber
14/02/2014 முதல் கோவை ராயலில்
நடிகர்திலகம்
சிவாஜி
பெருமகனார்
நடித்த
####$$$$$ நீதி ####$$$$$
-
13th February 2014 05:59 PM
# ADS
Circuit advertisement
-
13th February 2014, 08:19 PM
#1192
Junior Member
Regular Hubber
Thankyou Mr Vasudevan sir.Mr.Ramesh sir interview in our thalaivan sivaji.com-sivaji kural-2.is superb.kindly do read in this e-paper.How our fans were treated by our thalaivar is written in this e-paper.
-
13th February 2014, 08:27 PM
#1193
Junior Member
Diamond Hubber
காதலிக்க நேரமில்லை' படம் பார்த்துவிட்டு சிவாஜி உடனே போன் செய்து பாராட்டினார். 'உன் பேரைச் சொன்னாலே 'அழுமூஞ்சி டைரக்டர்' என்று சொன்னவர்கள் முகத்தில் கரி பூசுகிறமாதிரி படத்தை அருமையா எடுத்திருக்கே. எனக்கும் கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன். சண்முகம் கிட்டே சொல்லி டேட்ஸ் தரச்சொல்றேன்' என்றார்.
அண்ணே, 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் யோசனை பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்' என்றேன். ஆனால் இடையில் வெண்ணிற ஆடையில் நான் பிஸியாக இருந்ததால், உடனடியாக அவரோடு படம் பண்ண முடியவில்லை. இடையிடையே செட்டில் சந்திக்கும் போதெல்லாம் அதைப்பற்றிக் கேட்பார். 'அண்ணே அந்த ஸ்க்ரிப்டை உங்களுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். பண்ணினால் அதை உங்கள வச்சுதான் பண்ணுவேன். இப்போ நாம ரெண்டுபேருமே பிஸி. கொஞ்சம் பொறுங்கள் பண்ணிடுவோம்' என்றேன்.
சொன்ன மாதிரியே அந்தக்கதையை அவரை வச்சு பண்ணினேன். கோவை செழியன்தான் தயாரிப்பாளர். 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற அந்தக்கதைதான் 'ஊட்டி வரை உறவு' என்ற பெயரோடு படமாக வெளியாகி சக்கைபோடு போட்டது.
- பொம்மை இதழில் இயக்குனர் ஸ்ரீதர் .
-
13th February 2014, 10:30 PM
#1194
Junior Member
Veteran Hubber

Originally Posted by
RavikiranSurya
Ragulram sir,
You are most welcome and my pleasure too !
Would be equally delighted if you could take some snapshots on the celebrations at Theater and post it here....
Thanks and Regards
கோவில் ல பிரசாதம் எதுக்கு குடுக்கறாங்க சார் ...அது ஒரு மனத்ருப்திக்குதான்...ஒரு ஆத்ம த்ருப்திக்குதான் !
quality is ok...just to have a glimpse and enjoy thats all sir....Insite the theater photos outside...would be fine sir..forget about quality..
-
13th February 2014, 10:33 PM
#1195
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
காதலிக்க நேரமில்லை' படம் பார்த்துவிட்டு சிவாஜி உடனே போன் செய்து பாராட்டினார். 'உன் பேரைச் சொன்னாலே 'அழுமூஞ்சி டைரக்டர்' என்று சொன்னவர்கள் முகத்தில் கரி பூசுகிறமாதிரி படத்தை அருமையா எடுத்திருக்கே. எனக்கும் கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன். சண்முகம் கிட்டே சொல்லி டேட்ஸ் தரச்சொல்றேன்' என்றார்.
அண்ணே, 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் யோசனை பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்' என்றேன். ஆனால் இடையில் வெண்ணிற ஆடையில் நான் பிஸியாக இருந்ததால், உடனடியாக அவரோடு படம் பண்ண முடியவில்லை. இடையிடையே செட்டில் சந்திக்கும் போதெல்லாம் அதைப்பற்றிக் கேட்பார். 'அண்ணே அந்த ஸ்க்ரிப்டை உங்களுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். பண்ணினால் அதை உங்கள வச்சுதான் பண்ணுவேன். இப்போ நாம ரெண்டுபேருமே பிஸி. கொஞ்சம் பொறுங்கள் பண்ணிடுவோம்' என்றேன்.
சொன்ன மாதிரியே அந்தக்கதையை அவரை வச்சு பண்ணினேன். கோவை செழியன்தான் தயாரிப்பாளர். 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற அந்தக்கதைதான் 'ஊட்டி வரை உறவு' என்ற பெயரோடு படமாக வெளியாகி சக்கைபோடு போட்டது.
- பொம்மை இதழில் இயக்குனர் ஸ்ரீதர் .
Dear Yukesh Sir,
Thanks for sharing this wonderful piece of article.
I do not know if it is true statement from Sridhar because Nadigar Thilagam had time and again acted in comedy based films like Sabaash Meena, Manamagan Thevai, Kalyaanam Panniyum Brahmachaari, Arivaali, BalePandiya etc.,
So, logically, there is no need for Nadigar Thilagam to defame himself and ask Sridhar to pen something for him !
-
13th February 2014, 11:07 PM
#1196
Junior Member
Veteran Hubber
பிப்ரவரி 14....காதலர்கள் தினம்.- திரைப்படங்களில் காதல் ஒரு முக்கிய அம்சமாக அன்றும் இன்றும் கருதபடுகிறது.
திரைப்படங்களில் காதல் காட்சிகள் வரும்போது அது எந்த காலம் ஆனாலும் நமக்குள்ளும் ஒரு மின்மினிபூச்சிகள் சிறகடிக்கும்.
தமிழ் திரைஉலகம் பொறுத்தவரையில் காதல் காட்சிகளில் நடிக்கும்போது முகம் இறுகிய நடிகர்கள் கூட பொலிவுடன் நடித்திருப்பதை நாம் பார்த்திரிகிறோம்..அன்றும் இன்றும்...இது தொடர்ந்து நடைபெறும் ஒரு விஷயம்..!
தமிழ் திரை உலகை பொருத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல சிறந்த நடிகர்கள் தங்களால் முடிந்தவரை காதலர் பாத்திரத்தை சிறப்பாக நடித்திருப்பார்கள் !
அப்படி மக்கள் மனதில் நல்ல ஒரு காதலனாக இவர்கள் இடம் பிடித்ததால் தான் காதல் இலவரசர்களாகவும் காதல் மன்னர்களாகவும் அழைக்கப்பட்டார்கள் !
அப்படி வலம் வந்த இளவரசர்கள், மன்னர்கள் மத்தியில் ஒரு நடிகர், குடும்ப கதைகளை மையமாக கொண்ட கதைகளில் தன்னுடைய நவரச நடிப்பை தந்த ஒரு நடிகர்...காதாலா...? செரி ஒரு கை பாப்போம் என்று ஒரு திரைப்படத்தில் நடித்தார்
எத்துனை இளவரசர்கள், மன்னர்கள் தோன்றினார்கள் அடேயப்பா...ஆனால் இவர் நடித்த இந்த ஒரு படம்...காதலை மையமாக கொண்ட ஒரு படம் ..அதுதான் காதல் மன்மதனின் வசந்த மாளிகை ...
அந்த நடிகர் நமது நடிகர் திலகம்.
இன்றுவரை வசந்தமாளிகைக்கு இணை ஒன்றும் இல்லை !
ஒரே ஒரு படம் ! அத்துணை காதல் படங்களையும்...சாய்த்த படம் !
நடிகர் திலகம் ஜமீன்தார் ஆனந்தாக ..காதல் வயப்படும் மன்மதனாக வாழ்ந்திருப்பார்...யாரால் மறுக்க மறைக்க முடியும் இந்த உண்மையை..
காதலுக்காக அவர் பேசியபோது தமிழகம் மட்டுமல்ல..உலக காதலர்கள் பேசினார்கள்...காதலுக்காக அவர் கண்ணீர் சிந்தியபோது உலக காதலர்கள் கண்ணீர் சிந்தினார்கள்...காதலுக்காக அவர் தியாகம் செய்தபோது உலக காதலர்கள் தியாகம் செய்தார்கள்..காதலியுடன் அவர் கைகோர்த்தபோது அனைவரும் ஆனந்தாக மாறி கை கோர்த்தனர் அவர்தம் காதலியுடன் !
இது இறந்துபோன ராணிகாக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல ..உயிரோடிருக்கும் காதலிக்காக கட்டப்பட்ட வசந்த்தமாளிகை ..
இது சமாதி அல்ல ! சந்நிதி !
நடிகர் திலகம் இதை கூறும்போது திரை அரங்குகள் அதிர்ந்தன கைதட்டல்களால் !
ஆயிரம் இளவரசர்கள், மன்னர்கள் சக்ரவர்த்திகள் வருவார்கள் போவார்கள் ...ஆனால் காதல் என்றால் அது வசந்த்தமாளிகை ...! ஏன் என்றால் அது சமாதி அல்ல ! காதலர்களின் சந்நிதி !
வாழ்க நடிகர் திலகம் !
ஆயிரம் பாடல்கள் பதிவிடலாம் !
இந்த ஒரு பாடலுக்கு ஈடாகுமா ?
-
14th February 2014, 12:11 AM
#1197
நமது ஹப்பில் நடிகர் திலகத்தின் திரியில் புதிய வரவாக நுழைந்திருக்கும் கல்லூரி காலம் முதலே எனது அருமை நண்பர் சந்திரசேகர் அவர்களை வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். நடிகர் திலகத்தின் initials என்று சொல்லக்கூடிய VC யை தன பெயரிலே வைத்திருக்கும் சிவாஜியின் அதிதீவிர ரசிகர் இவர். நடிகர் திலகத்திற்கும் இவருக்கும் உள்ள அந்த பிணைப்பு இனிஷியலில் மட்டுமல்ல அதையும் தாண்டியது என்பதற்கு இவர் பிறந்த நாளை குறிப்பிட்டாலே போதும். அந்த நாள் ஜூலை 21. ஆனால் அந்த நாள் வாழ்நாள் முழுவதும் நம்மை வருத்தத்தில் ஆழ்த்திய நாள் என்பதால் 2001 முதல் தன பிறந்த நாளை கொண்டாடுவதையே நிறுத்தி விட்டார். அவரின் வருகையும் பங்களிப்பும் நமக்கு மேலும் பல சுவையான செய்திகளை தரும் என்பதில் ஐயமில்லை.
இந்த நேரத்தில் அவரை வரவேற்று பதிவிட்ட ராகவேந்தர் சாருக்கு நன்றி கூறுவதுடன் அவர் தொடர்ந்து பங்களிப்பை தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அது போன்றே அருமை நண்பர் வாசு அவர்களும் என் கோரிக்கையை ஏற்று மீண்டும் நமது திரியில் தன அற்புத பணியை தொடர வேண்டும் என வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
-
14th February 2014, 12:17 AM
#1198
தூத்துக்குடி நகருக்கு வெளியே அமைந்துள்ள முல்லை நகர் சத்யா அரங்கம் இப்போது நடிகர் திலகத்தின் படங்களை நிரந்தரமாக திரையிடும் ஒரு அரங்காக மாறிக் கொண்டிருக்கிறது. சென்ற ஞாயிறு முதல் நடிகர் திலகத்தின் பேசும் தெய்வம் திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது. சண்டைக்காட்சிகளோ மசாலா அயிட்டங்கள் போன்ற எதுவுமே இல்லாத இந்த கருப்பு வெள்ளை குடும்பச் சித்திரம் மக்களை பெரிய அளவில் அரங்கத்திற்கு வரவழைத்திருக்கிறது. பெரிய விளம்பரங்கள் எதுவுமின்றி திடீரென்று ஞாயிற்றுக்கிழமை முதல் திரையிடப்பட்ட போதிலும் அன்றைய தினம் மாலைக்காட்சிக்கே 367 டிக்கெட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. மெட்ரோ நகரங்களில் கூட ஒரு சில படங்களுக்கு ஞாயிறு மாலைக் காட்சிக்கு இத்தனை டிக்கெட்டுகள் விற்பதில்லை என்ற சூழலில் தூத்துக்குடி நகருக்கு வெளியே அமைந்திருக்க கூடிய ஒரு திரையரங்கத்திற்கு இத்தனையும் நபர்கள் வருகிறார்கள் என்று சொன்னால் அதுதான் நடிகர் திலகத்தின் சக்தி.இப்படி ஒரு மகத்தான ஆதரவு தர ரசிகர்களும் பொது மக்களும் இருக்கும் போது அரங்க உரிமையாளர் தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட ஆர்வம் காட்டுவது இயல்புதானே! தகவல் உதவி திரு ராமஜெயம்.நன்றி சார்!
அன்புடன்
-
14th February 2014, 02:13 PM
#1199
Senior Member
Seasoned Hubber
Doctor Sivaji - Physiotherapist
My father was bedridden for few weeks and now started walking slowly. To help him walk, doctor suggested him to use a walking stick. He was struggling to use walking stick, so I asked the doctor if we can ask some physiotherapist to train him. he said "adellaam onnum vendaam. Uyarndha ullam padam pottu kaaminga. Easya kaththukkalaam"... the doc is a funny guy and he definitely joked but I end up watching it and now I feel like i want to have my own walking stick. Dr Sivaji, physiotherapist.
Musical Tsunami - On Feb 23, 2013 @ Prudential Center, NJ - Maestro Ilayaraja Live - First time in USA.
-
14th February 2014, 02:48 PM
#1200
Junior Member
Veteran Hubber

Originally Posted by
njv
My father was bedridden for few weeks and now started walking slowly. To help him walk, doctor suggested him to use a walking stick. He was struggling to use walking stick, so I asked the doctor if we can ask some physiotherapist to train him. he said "adellaam onnum vendaam. Uyarndha ullam padam pottu kaaminga. Easya kaththukkalaam"... the doc is a funny guy and he definitely joked but I end up watching it and now I feel like i want to have my own walking stick. Dr Sivaji, physiotherapist.
Uyarndha Manithan it should be ! - Few Walking Stick songs for you
Andha Naal Gyaabagam....from Uyarndha Manithan
Ponaal Pogattum Poda.....from Paalum Pazhamum
ninaivaalae silai seidhu .....from Andhamaan Kaadhali
Last edited by RavikiranSurya; 14th February 2014 at 02:52 PM.
Bookmarks