-
24th February 2014, 09:46 PM
#11
Junior Member
Devoted Hubber
யாருகிட்ட வந்து? இயக்குனரை மடக்கிய கமல்!
‘உலக நாயகன்’ என்று சும்மாவா சொன்னார்கள்? அவருக்கு தெரியாமல் பாம்பு கூட ‘படம்’ எடுக்க முடியாது. உலக அரங்கில் எங்கு ஒரு படம் வெளியானாலும் அது தரமாக இருக்கிற பட்சத்தில் அவரது ஹோம் தியேட்டருக்கு வந்துவிடும். அப்படிப்பட்டவரிடம், ‘இது என்னோட படம்’ என்கிற இறுமாப்பில் எவர் போனாலும் அவருக்கு காசியில் வாழப் போன காக்காவின் கதிதான். வெந்நீர் எது? விபூதி எது? என்று தடுமாறி தவிக்க வேண்டியதுதான். அண்மையில் ஒரு இயக்குனருக்கு நேர்ந்த அதோகதிதான் இப்போது நாம் சொல்லப் போவது.
சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து ஏகப்பட்ட கோடிகளை குவித்த படம் த்ரரிஷ்யம். கலெக்ஷன் மட்டுமல்ல, தரமான படம் என்று பார்த்தவர்களையெல்லாம் கொண்டாட வைத்த படம். இந்த படத்தை தமிழில் முன்னணி ஹீரோக்களான கமல், விக்ரம், ஆகியோர் பார்த்து மயங்கினார்கள். எப்படியாவது ரைட்ஸ் வாங்கி அதில் நாம நடிச்சிருணும் என்கிற ஆசை இவர்களுக்கு இருந்தாலும், அந்த உரிமை யாரிடம் இருக்கிறது என்கிற புதையலை தேடப் போனால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அது நடிகை ஸ்ரீப்ரியாவிடம் இருந்தது. இந்த படம் வெளியானவுடன் அதன் தெலுங்கு மற்றும் தமிழ் ரீமேக் ரைட்சை வாங்கிவிட்டாராம் அவர்.
இதில் கமல் நடிக்க ஆசைப்படுகிறார் என்றதுமே ஸ்ரீப்ரியாவின் மனசில் ஒரு ஆசை. உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க அதை நாமே இயக்கினால் என்ன? அந்த அதிர்ஷ்டத்தை தவற விடவே கூடாது என்று நினைத்துக் கொண்டு நேரடியாக அவரிடமே போய் தனது விருப்பத்தை சொல்ல, தேங்காய்க்கு ஆசைப்படுற எலி, அதன் ஒட்டுலேயே நாக்கை தீட்டுதே என்று சிரித்துக் கொண்டாராம் கமல். ‘த்ரிஷ்யம் படத்தில் நான் நடிக்கிற ஐடியாவே இல்லை’ என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாராம். பிறகு மெல்ல மனசு மாறிய ஸ்ரீப்ரியா, ‘இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் ரைட்ஸ் எங்கிட்டதான் இருக்கு. அதில் வெங்கடேஷ் நடிக்கணும்னு ஆசைப்படுறார். நான் அவரை வச்சு இயக்கிக்கிறேன்’ என்று விலகிக் கொண்டாராம்.
அதே நேரத்தில் த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப்பே கமல் படத்தை இயக்குவதாக முடிவானது. இருவரும் சந்தித்தாக வேண்டுமே? சந்தித்தார்கள். மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குனராக்கும் என்கிற காலர் உயர்த்தலோடு கமலை சந்திக்க வந்தாராம் ஜித்து. அவரது சித்து கமலிடம் எடுபடுமா? இந்த படத்தின் ஒரிஜனல் படமான ஜப்பானிய மொழி படத்தை பற்றி எடுத்துவிட்ட கமல், ‘இந்த கேரக்டருக்கு ஒரிஜனல் ஜப்பான் படத்துல வர்ற அந்த கேரக்டரோட வசனத்தை அப்படியே வச்சுருக்கலாமே’ என்று கூறியதுடன் அந்த ஜப்பானிய வசனத்தையும் எடுத்துவிட, ஏதுடா… மனுஷன் உயர்த்திய காலரை மடக்கி வச்சுதான் அனுப்புவாரு போலிருக்கே என்று அரண்டு போனராம் ஜித்து.
கமல் பேச பேச ‘இந்த படத்துல நான் அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை செய்ய கொடுத்து வச்சுருக்கணும்’ என்கிற அளவுக்கு வார்த்தை குளறி, வடிவம் இடறிப் போனாராம் ஜித்து ஜோசப். பொதுவாக கமல் நடிக்கும் படத்தை யார் இயக்க வந்தாலும், அவர் அறிவிக்கப்பட்ட இயக்குனராகவும் அறிவிக்கப்படாத அசிஸ்டென்ட் டைரக்டராகவும்தான் இருக்க முடியும். அந்த வாய்ப்பை முகம் மலர பெற்றுக் கொண்டு சென்றிருக்கிறார் ஜித்து.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
joe thanked for this post
-
24th February 2014 09:46 PM
# ADS
Circuit advertisement
Bookmarks