-
3rd March 2014, 01:19 PM
#151
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப்படம் கதை-அகிலன்: டைரக்ஷன்-எம்.ஜி.ஆர்
தமிழக முதல்-அமைச்சராகப் பதவி ஏற்பதற்கு முன், எம்.ஜி.ஆர். நடித்து முடித்து கடைசியாக வந்த படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.'' இது, அகிலன் எழுதிய கதை.
"பாவை விளக்கு'' படம் தயாராகி வந்தபோதே, அகிலனின் மற்றொரு கதையும் சினிமாவுக்காக தேர்வு செய்யப்பட்டது. "கலைமகள்'' இதழில் அகிலன் எழுதிய "வாழ்வு எங்கே?'' என்ற கதைதான் அது.
சினிமாவுக்காக படத்தின் பெயர் "குலமகள் ராதை'' என்று மாற்றப்பட்டது. திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றின் அதிபர், "ஸ்பைடர் பிலிம்ஸ்'' என்ற கம்பெனியைத் தொடங்கி இப்படத்தைத் தயாரித்தார்.
படத்தின் கதாநாயகன் சிவாஜிகணேசன். மற்றும் சரோஜாதேவியும், தேவிகாவும் நடித்தனர்.
திரைக்கதை - வசனத்தை ஏ.பி.நாகராஜன் எழுத, கே.சோமு டைரக்ட் செய்தார். இசை: கே.வி.மகாதேவன்.
காதல், கலப்பு திருமணத்தை வலியுறுத்தும் விதத்தில் கதையை அகிலன் எழுதியிருந்தார். இந்தப் படத்தில் கண்ணதாசன் எழுதியிருந்த "இரவுக்கு ஆயிரம் கண்கள்'', "உன்னைச்சொல்லி குற்றம் இல்லை'' போன்ற பாடல்கள் `ஹிட்' ஆயின. படம், வெற்றிகரமாக ஓடியது.
அகிலன் எழுதிய "வேங்கையின் மைந்தன்'' சரித்திர நாவல் "சாகித்ய அகாடமி'' விருது பெற்றதாகும். அதை சிவாஜிகணேசன் நாடகமாக நடத்தி வந்தார். போர்க் காட்சிக்காக, குதிரைகளை மேடையில் ஏற்றி பரபரப்பை உண்டாக்கினார்.
இந்த நாடகத்தை, சினிமாவாக தயாரிக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். ஆனால் சிவாஜிகணேசன், "இதை நானே படமாக எடுக்கிறேன்'' என்று கூறிவிட்டார்.
இதை அறிந்த எம்.ஜி.ஆர், அகிலனின் மற்றொரு சரித்திரக் கதையான "கயல்விழி''யை படமாகத் தயாரிக்க எண்ணினார். அப்போது சென்னை ராயப்பேட்டையில் எம்.ஜி.ஆரும், அகிலனும் அருகருகே வசித்தனர். திடீரென்று ஒருநாள், அகிலன் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார்.
"கயல்விழி கதையை படமாக்க விரும்புகிறேன். நீங்களே வசனத்தையும் எழுதவேண்டும்'' என்று அகிலனிடம் கூறினார்.
எம்.ஜி.ஆரின் அன்பில் நெகிழ்ந்து போன அகிலன், கயல்விழியை படமாகத் தயாரிக்கும் உரிமையை எம்.ஜி.ஆருக்குத் தர சம்மதித்தார். ஆனால், "வசனத்தை நான் எழுதவில்லை. நீங்கள் விரும்பும் ஒருவரை வசனம் எழுத ஏற்பாடு செய்யலாம்'' என்று தெரிவித்தார்.
"கயல்விழி'' என்ற பெயர், சினிமாவுக்காக "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' என்று மாற்றப்பட்டது.
படத்தை, பி.ஆர்.பந்துலு டைரக்ஷனில் பிரமாண்டமாகத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
படப்பிடிப்புக்கான இடத்தை தேர்வு செய்ய, பி.ஆர்.பந்துலு கர்நாடக மாநிலத்திற்கு சென்றார். எதிர்பாராத வகையில், அங்கு திடீரென்று காலமானார்.
பி.ஆர்.பந்துலுவின் மரணத்தால் பெரிதும் துயரம் அடைந்த எம்.ஜி.ஆர், எப்படியும் படத்தை எடுத்து முடிக்க தீர்மானித்தார். "சோளீஸ்வரா கம்பைன்ஸ்'' என்ற பேனரில் படம் தயாராகியது. திரைக்கதை - வசனத்தை ப.நீலகண்டன் எழுத, எம்.ஜி.ஆரே டைரக்ஷன் பொறுப்பை ஏற்றார்.
எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக லதா, பத்மபிரியா ஆகியோர் நடித்தனர். மற்றும் எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.சகஸ்ரநாமம் ஆகியோரும் நடித்தனர்.
தி.மு.க.வை விட்டு விலகி, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலகட்டம் அது. அரசியல் பணிகளுக்கு இடையே, படப்பிடிப்பையும் தொடர்ந்து நடத்தினார், எம்.ஜி.ஆர். ஜெய்ப்பூர், டெல்லி, மைசூர் என்று பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.
படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், 1977 தேர்தல் வந்தது. ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. எமë.ஜி.ஆர். முதல்-அமைச்சராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
"மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' பூர்த்தியாக, ஒரு சில காட்சிகள் பாக்கி இருந்தன. அவற்றை இரவு - பகலாக எடுத்து முடித்து விட்டு, முதல்-அமைச்சராக பதவி ஏற்றார், எம்.ஜி.ஆர்.
அவர் பதவி ஏற்ற பிறகு, "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' வெளிவந்தது.
முதல்-அமைச்சர் ஆன பிறகு எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்கவில்லை. எனவே, அவர் நடித்த கடைசி படம் என்ற சிறப்புக்குரியது "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.''
-
3rd March 2014 01:19 PM
# ADS
Circuit advertisement
-
3rd March 2014, 01:29 PM
#152
Junior Member
Diamond Hubber
Now Nadodi Mannan running in madurai alankar theater.
http://entertainment.oneindia.in/mov...+Mannan+8.html
-
3rd March 2014, 01:36 PM
#153
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் புதிய படங்கள் முதல் வெளியீட்டில் அதிக பட்சமாக 40 அரங்குகளில் தென்னகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது . மறு வெளியீடு படங்களில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் - அடிமைப்பெண் - ஆயிரத்தில் ஒருவன் - உலகம் சுற்றும் வாலிபன்
தமிழகமெங்கும் ஒரே நேரத்தில் 20 முதல் 30 அரங்குகள் வரை திரையிடப்பட்டுள்ளது .
புதுப்பிக்கப்பட்ட ''ஆயிரத்தில் ஒருவன்'' தமிழகமெங்கும் மிகவும் அதிகமான அரங்கில் வருவதாக
தகவல்கள் கிடைத்துள்ளது .அநேகமாக தென்னகமெங்கும் 100 அரங்குகளில் வரலாம் என்று
தெரிகிறது .
சென்னை நகரில் சத்யம் - ஆல்பர்ட் - அபிராமி - மகாராணி - ராஜேஸ்வரி - சங்கம் அரங்கில் வரலாம்
என்று தெரிகிறது .
விரைவில் மேலும் சில தகவல்கள் ..............
-
3rd March 2014, 01:39 PM
#154
Junior Member
Diamond Hubber
நமக்கு ஏற்படும் அவமானங்களை , மன்னித்து விடலாம்...
ஆனால் ...எளிதில் மறக்க முடியுமா..?
ஆனானப்பட்ட எம்.ஜி.ஆருக்கே ,எவ்வளவு அவமானங்கள்..துன்பங்கள்...!
இதோ..எம்.ஜி.ஆரின் அவமான அனுபவங்கள்....
"நான் ஹீரோவாகவும், டி.வி.குமுதினி ஹீரோயினாகவும் நடிச்சித் தொடங்க இருந்த ‘சாயா’ங்குற படம் விளம்பரத்தோட நின்னு போயிடுச்சி. வேற ஏதேதோ காரணத்தினால அந்தப்படத்தைத் தயாரிப்பாளருங்க கைவிட்டுட்டாங்க.
எனக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்? கடைசில பழியை எம்மேல சுமத்துனாங்க. ‘ராமச்சந்திரன்’ ராசி இல்லாதவன். அதனாலதான் படம் நின்னு போயிடுச்சின்னு சொல்லி எம்மேலேயே எனக்கே ஒரு அவநம்பிக்கை உண்டாகும்படி பண்ணி என்னைக் கோழையாக்கிட்டாங்க.
அப்போ அவுங்களால எனக்கு ஏற்பட்ட அவச்சொல், அவமானம், துன்பம் எதையுமே நான் மறக்கலே. இன்னிக்கும் அதெல்லாம் என் ஞாபகத்துல இருக்கு.
இப்போ எங்கே போச்சு அந்த ராசி? எத்தனையோ நடிகருங்க வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்காங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா, அவங்கள்ள யாருமே என்னைப்போல அவமானமும், துன்பமும் பட்டிருக்க மாட்டாங்க...."
ஆம்..அவமானங்களை மன்னித்து விடலாம்...
மறப்பது ...... கொஞ்சம் கஷ்டம்தான்...!!- courtesy net
-
3rd March 2014, 01:43 PM
#155
Junior Member
Diamond Hubber
One of My Favourite Song From Madurai Veeran
Yes Madurai Veeran Engal Kula Sami
-
3rd March 2014, 01:49 PM
#156
Junior Member
Diamond Hubber

Originally Posted by
esvee
மக்கள் திலகத்தின் புதிய படங்கள் முதல் வெளியீட்டில் அதிக பட்சமாக 40 அரங்குகளில் தென்னகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது . மறு வெளியீடு படங்களில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் - அடிமைப்பெண் - ஆயிரத்தில் ஒருவன் - உலகம் சுற்றும் வாலிபன்
தமிழகமெங்கும் ஒரே நேரத்தில் 20 முதல் 30 அரங்குகள் வரை திரையிடப்பட்டுள்ளது .
புதுப்பிக்கப்பட்ட ''ஆயிரத்தில் ஒருவன்'' தமிழகமெங்கும் மிகவும் அதிகமான அரங்கில் வருவதாக
தகவல்கள் கிடைத்துள்ளது .அநேகமாக தென்னகமெங்கும் 100 அரங்குகளில் வரலாம் என்று
தெரிகிறது .
சென்னை நகரில் சத்யம் - ஆல்பர்ட் - அபிராமி - மகாராணி - ராஜேஸ்வரி - சங்கம் அரங்கில் வரலாம்
என்று தெரிகிறது .
விரைவில் மேலும் சில தகவல்கள் ..............
-
3rd March 2014, 01:50 PM
#157
Junior Member
Diamond Hubber
jeya tv coverage for aayirarathil oruvan special
-
3rd March 2014, 01:51 PM
#158
Junior Member
Diamond Hubber
My favourite Sword fight In Aayirathil Oruvan
-
3rd March 2014, 01:53 PM
#159
Junior Member
Diamond Hubber
My Favourite Scene in Aayirathil Oruvan
What a Dialogue It's suite for All Time Of Thalaivar Politics
-
3rd March 2014, 03:12 PM
#160
Junior Member
Diamond Hubber
Aayirathil Oruvan Re-Released in Aug' 2008 in Pandiyan theatre
http://bp0.blogger.com/_NSxK-BA3kHo/...r_devotees.jpg
Bookmarks