-
3rd March 2014, 11:49 PM
#11
Junior Member
Devoted Hubber
கமலின், உத்தம வில்லன் படப்பிடிப்பு தொடங்கியது!
விஸ்வரூபம்-2 பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. நண்பர் ரஜினிகாந்தின் கோச்டையான் ரிலீசை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் கமல். கோச்சடையானும், விஸ்வரூபம் 2வும் மோதவேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார். கோச்சடையான் ரிலீஸ் தேதி உறுதியான பிறகு அதற்கு முன்பா, பின்பா என்பதை கமல் முடிவு செய்ய இருக்கிறார்.
இந்த நிலையில் தனது அடுத்த படமான உத்தம வில்லனை துவக்கி விட்டார். இன்று (பிப்ரவரி 3) ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலத்தில் முறைப்படி படப்பிடிப்பு துவங்கியது. ஒரே ஷெட்யூலில் அதாவது 40 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க கமல் திட்டமிட்டுள்ளார். கமல்தான் படத்தின் கதை எழுதி திரைக்கதையை வடிவமைத்துள்ளார். கிரேசி மோகன் வசனம் எழுதுகிறார். கமலின் நண்பரும், கன்னடத்தில் முன்னணி நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். ஷ்யாம்தத் ஒளிப்பதிவு செய்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் லிங்குசாமியின் சகோதரர் என்.சுபாஷ் சந்திர போஸ் மற்றும் கமலும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
உத்தம வில்லனில் கமல் மேடை நாடக கலைஞராக நடிக்கிறார். பிளாக் த்ரில்லர் காமெடி கதை. இரவில் நாடகத்தில் கோமாளியாக நடிக்கும் கமல் பகலில் தன் சொந்த வாழ்க்கையை நாசமாக்கிய வில்லன்களை அழிக்கும் உத்தம வில்லனாக வருகிறார். உத்தம வில்லனை வருகிற தீபாவளிக்கு வெளியிட கமல் முடிவு செய்திருக்கிறார்.
(dinamalar.com)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd March 2014 11:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks