வரிகள்/இசை/பாடகர்: கிரீஷ் கோபாலக்ருஷ்ணன்
திரைப் படம்: விடியும் முன்


விடியாத இரவு முடியாத நிலையில்
ஆடும் தாயம் இதுவோ
கலையாத கலங்கி அசையாத
சிலந்தி வலையில் ஒய்ந்து விடுமோ
தேடும் விழிகளென ஓடும் கால்களென
ஓயாத நாடகம்
குலையும் நிலைகளென
மறையும் வழிகளென
பதியாத காவியம்
தண்ணீரில் மிதக்கும் இலையைப் போலவே
தடயங்கள் மிதக்குதே
பல கிளைகள் விரிந்த நதியைப் போல்
மாய மனக் கிளைகள் விரியுதே
மறந்தாய் மரித்தாய் மிதந்தாய்
விதியின் கருவறையில்
தவழ்ந்தாய் தவித்தாய் திகைத்தாய்
கண்கள் மூட மறுத்தாய்...