- 
	
			
				
					7th March 2014, 05:54 AM
				
			
			
				
					#1511
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  g94127302  
 பதிவுகளுக்கு சம்பந்தமான படங்களை போடுவதில் நீங்கள்  என்றுமே முதலாவதாக இருக்கிண்டீர்கள்   கோல்ட் ஸ்டார் அவர்களே - நன்றி 
 
 
 Thank you Ravi sir. Its my duty to keep publish our NT photos....
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							7th March 2014 05:54 AM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					7th March 2014, 11:46 AM
				
			
			
				
					#1512
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Mr Rahul & Mr Ravi
 
 Both of you are doing a wonderful service in sustaining the tempo of this
 thread. Pls continue your good job.
 
 Regards
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					7th March 2014, 12:15 PM
				
			
			
				
					#1513
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
 
 
- 
	
			
				
					7th March 2014, 12:18 PM
				
			
			
				
					#1514
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							அன்புள்ள ராகுல்ராம் - உங்களுக்கு இன்னும் ஒன்று சொல்ல விழைகிறேன் - 
 
 1. NT ஒரு தங்க சுரங்கம் -  எவ்வளவோ தவறான விஷயங்கள் , பொய் , பித்தலாட்டங்கள் , பொறாமை , வயதெரிச்சல் என்ற  தூசிகள் , அழுக்குகள் அவரை பற்றிய  பல அரிய உண்மைகளை  இன்னும் அந்த தங்கத்தை மறைத்துகொண்டுதான் இருக்கின்றன - நாம் தான்  நம் அலசல்கள் மூலம் ஒன்று பட்டு அந்த மறைந்த  உண்மைகளை வெளி உலகிற்கு கொண்டு வரவேண்டும் - வெறும் கதையுடனோ , நடிப்புடனோ முடிவதில்லை அவரின் பெருமைகள் - இந்த திரியிலேயே பல உண்மைகளை எல்லோரும் கொண்டு வந்திருகின்றனர் - இருந்தாலும் சூரியனை மறைக்கும் கரு மேகங்கள் போல சில நல்ல உண்மைகள் படிப்பவர் மனதில் தங்குவதில்லை - மீண்டும் மீண்டும் அவைகளை  சொல்ல வேண்டியுள்ளது .
 
 2. சிவாவின் பதிவுகள் பலர் மறந்திருக்க கூடும் - சாதனைகள் , வசூல் விபரம் புல்லரிக்கிக்க வைக்கின்றது - இன்னும் சில மாதங்களில் இவைகள் புதிதாக படிப்பவர் மனங்களில் தங்காமல் போகலாம் - அதனால் தான்  அவரை சற்றே  இடைவெளி கொடுத்து மீண்டும் போடும் படி கேட்டுக்கொள்கிறேன் .
 
 3. கண்டிப்பாக நாம் எவ்வளவு முயன்றாலும்  , ராகவேந்தர் சார் போலவோ ,வாசு மாதிரியோ , முரளியின் நடையிலோ , கோபாலின் தமிழின் வளத்திலோ எழுத முடியாது -  பல பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கும் . எழுத முயல்வதும் நல்லதல்ல - நாம் நம்  எண்ண ஓட்டத்தில் பதிவுகள் இட்டால் அவைகளின் சுவை அருமையாகவும் , மாறுபட்டும் இருக்கும் - சில உண்மைகளை , இது வரை பிறர் அறியாத உண்மைகளை பதிவிடும் போது உங்கள் அலசலுக்கு ஒரு வெற்றி கிடைப்பது நிச்சயம் - ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன் - ப்ராப்தம் வெற்றி அடைந்து இருக்க வேண்டிய ஒரு படம் - NT யின் பல நல்ல யோசனைகளை  சாவித்திரி நிராகரித்துவிட்டார் - நட்பு ஒன்றுக்காவே NT  பணம் பெறாமல் நடித்து கொடுத்தார் - இந்த உண்மை நம்முள்ளேயே  பல பேருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை
 
 4. NT  வெறும் பணத்திற்காகவே பல படங்களில் நடித்தார் என்று ஒரு வதந்தி வழி முறையில் உள்ளது - இதை நாம் தான் , நம் திரியில் தான் தவிர்த்து பொடியாக்க வேண்டும் - உண்மையில் பல படங்கள் சம்பந்த பட்ட வர்கள் வாழ வேண்டும் என்று உயர்ந்த மனப்பான்மையில் பணம் வாங்காமல் நடித்து கொடுத்தவர்  NT  ஒருவராகத்தான் இருக்க முடியும் - ஆனால் அவரால் பயன் அடைந்தவர்கள் பலர் எட்டையப்பனாகவும் , நன்றி மறந்தவர்களாகவும் தான் இருந்தார்கள் - NT  பாத்திரம்  அறிந்து நடித்தார் ஆனால்  பாத்திரம்  அறிந்து பிச்சை போடவில்லை - சில படங்கள் அவருடைய புகழுக்கு  உரம் சேர்ப்பவை அல்ல என்று தெரிந்தும் தன்னை நம்பியவர்களுக்காக நடித்து கொடுத்தார் .
 
 5. படங்களை நாம் அலசும் போது சில (சொல்லாத)உண்மைகளையும் வெளிச்சத்திற்கு
 கொண்டுவந்தால் நம் பதிவுகள் இன்னும் சிறப்பாக அமையும் என்பதில் சிறிதும் சந்தேகம்  இல்லை . உங்கள் பாணியை  பின் பற்றுங்கள் - யாரை போலவும் எழுத வேண்டாம் - சொல்லும் போது - படிப்பவர்கள் இந்த படத்தை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவலை உண்டாக்குங்கள் - ஏதேனும் சொல்லாத உண்மைகள் உள்ளனவா என்று ஆராய்ந்து பிறகு பதிவிடுங்கள் -
 
 படிக்க நாங்கள்  காத்து கொண்டுருக்கின்றோம்
 
 அன்புடன் ரவி
 
    
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					7th March 2014, 12:45 PM
				
			
			
				
					#1515
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
 
 
- 
	
			
				
					7th March 2014, 12:58 PM
				
			
			
				
					#1516
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
 
 
- 
	
			
				
					7th March 2014, 01:05 PM
				
			
			
				
					#1517
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					7th March 2014, 01:07 PM
				
			
			
				
					#1518
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							 "] "]
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					7th March 2014, 01:10 PM
				
			
			
				
					#1519
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Murali Srinivas  
 சிவா சார்,
 
 . ஒன்று இந்த நோட்டிஸ்களிலெல்லாம் நடிகர் திலகத்தின் சாதனைகள் புரிந்த படங்களைப் பார்தோமென்றால் அவை அனைத்துமே 80-களில் வந்த படங்கள். வா கண்ணா வா, சங்கிலி, தீர்ப்பு, தியாகி, நீதிபதி, மிருதங்க சக்கரவர்த்தி, வெள்ளை ரோஜா,திருப்பம் மற்றும் வாழ்க்கை ஆகிய படங்களின் சாதனை துளிகளை அள்ளி தெளித்திருக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் lean period என்று ஒரு சாரார் சொல்லக் கூடிய காலகட்டத்திலேயே இப்படி வசூல் என்றால் அவர் என்றுமே Vasool Chakravarthi Ganesan என்பது எத்தனை நிதர்சனமான உண்மை!
 
 
 
 
 Probably I feel, From 80's we would have had a better awareness on the collections, profit amount, Return on Investment etc (from money point of view) and the data more easily available than in yesteryears, the lean period many would say is more on the overall film quality (that includes story, direction, screen play, supporting cast, some forced additions to suit the generation etc.,)
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					7th March 2014, 02:49 PM
				
			
			
				
					#1520
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							சற்றே  ஒரு மாறுதலுக்காக - ஒரு கற்பனை பேட்டி - சிரிக்க , சிந்திக்க - பெயர்களும் ஒரு கற்பனையே 
 
 மாபெரும் கலை நடிகர் ரஞ்சன் பாபுவை  பேரழகி வஞ்சனா மாரியா  23ஜூன் 1967 இல்  பேட்டி கண்டதை மீண்டும் இங்கே பதிவிடுவதில்  மகழ்ச்சி அடைகிறோம் :
 
 வஞ்சனா  : வணக்கம்  ரஞ்சன் அவர்களே - உங்களை பேட்டி எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் -  பாக்கியமாகவும் கருதுகிறேன்
 
 ரஞ்சன் : உங்களுக்கு  பேட்டி  கொடுப்பதில் நானும் மிகவும் மகழ்ச்சி அடைகிறேன் - அதுவும் உங்களை மாதிரி ஒரு அழகான நடிகையிடம் பேட்டி கொடுக்கவேண்டுமென்றால் நான்தான்  பாக்கியம் செய்திருக்கவேண்டும் ---
 
 வஞ்சனா : நன்றி - என் முதல் கேள்வி - நீங்கள்  நடிக்கும் படங்கள் எல்லாம் சமூக சம்பந்த  பட்ட படங்களாகவே இருக்கின்றன - படத்தை கொஞ்சம் பார்த்தவுடன்  கதை இப்படிதான் இருக்கும் என்று  புரிந்து விடுகின்றதே - ஏன் நீங்கள் சற்று  மாறுப்பட்ட கதா பாத்திரங்களில்  நடிக்க கூடாது ??
 
 ரஞ்சன் :  சமூகம் என்னால் தான் திருந்த வேண்டும் - நான் ஒருவன் தான் திருத்தவேண்டும் என்று என் ரசிகர்கள் எதிர்பார்க்கும் போது என்னால் என்ன செய்ய முடியும் ?  அப்படியும் மீறி சில சமூகம் அல்லாத - கத்தி சண்டைகள் நிறைந்த , கவர்ச்சி நிறைந்த , சுத்தமான குடும்ப படங்களில் நடித்து இருக்கிறேனே ! நீங்கள்  பார்த்ததில்லையா ?
 
 வஞ்சனா : ஒரு படம் பார்த்திருக்கிறேன் - நீங்கள் அந்த குடும்ப படத்தில் நான்கு  கதா நாயகிகளுடன் பாட்டு  பாடி ,  ஒருவரை மட்டும்  திருமணம் செய்துகொண்டு , உங்கள்  சித்தப்பாவை கொலை செய்துவிட்டு சித்தியுடன் சிந்தாதரி பேட்டையில் தங்கி விடுவதாக படம் முடியும் - பல திருப்பங்களையும் , நல்ல குடும்ப சண்டைகளும் நிறைந்த படம்
 
 வஞ்சனா - உங்கள் படங்கள் மூலம் நீங்கள்  சொல்ல   வரும் கருத்துக்கள் ??
 
 ரஞ்சன் :  கருத்துக்கள்  என்று பார்க்காதீர்கள் - எல்லோரும் வாருங்கள் - அதிகமாக  சிந்தித்து மூளையை கசக்கி கொள்ளும் காட்சிகள் என் படங்களில் இருக்காது - கற்பனைக்கும் எட்டாத காட்சிகள் இருக்கும் - வில்லனுக்கு நல்ல உள்ளமே இருக்க முடியாது /கூடாது - நிறைய பாடல்கள் - கவர்ச்சிகளுக்கு நான் தடை போட்டதில்லை .
 
 வஞ்சனா : நீங்கள் நடித்த படம்  " புலிக்கு பிறந்தது ஒரு பூனையாகுமா ? - இந்த படத்தில்  ஒரு  விரலால் ஒரு பெரிய புலியை சுழற்றி 800 KM  தொலைவில் உள்ள காட்டில் அனுப்பி விடுவீர்கள் " எப்படி சார் உங்களால் அப்படி செய்ய முடிந்தது ?
 
 ரஞ்சன் :  உங்களுக்கு தெரியும் எனக்கு புகழ்ச்சி பிடிக்காது என்று - அதே தயாரிப்பாளர் எடுத்த " பூனைக்கு பிறந்தது ஒரு புலியே " என்ற படத்தில் வில்லனை 1000km வரை ஒரே விரலில் அடித்துக்கொண்டே செல்வேனே - மறந்து விட்டீர்களா ?
 
 வஞ்சனா : உங்கள் ரசிகர்களை பற்றி ------
 
 ரஞ்சன்  : பாவம்  என்ன சொல்வது ?? என்னை அதிகமாகவே நம்புகிறார்கள் ----
 
 வஞ்சனா : உங்கள் தயாரிப்பளர்களை  பற்றி -----
 
 ரஞ்சன்  : அவர்களும் பாவம் - அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அவர்களை கடவுள் பணக்காரர்களாகட்டும் ...
 
 கடைசியாக  ஒரு கேள்வி - உங்கள் படங்களில் பல அபலை பெண்களுக்கு நீங்கள் வாழ்வு கொடுப்பதாக வருகின்றதே - நீங்கள் உங்கள் நிஜ வாழ்க்கையில் எவ்வளவு அபலை பெண்களுக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளீர்கள் ?  நாங்கள் அறியலாமா ??
 
 ரஞ்சன் -  குறைந்தது 6 பெண்களுக்கு - ஒவ்வருவருக்கும் ஒரு வீடு கட்டி கொடுத்துள்ளேன் - என் பெயரை அவர்களின் பெயர்களுடன் இணைத்து கொள்ள என் முழு சம்மதத்தையும் அவர்களுக்கு கொடுத்துள்ளேன் - இதற்கும் மேல் என்னை புகழ்ந்து கொள்ள எனக்கு பிடிக்கவில்லை ----
 
 வஞ்சனா : உங்கள் அருமையான , படிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக உள்ள பேட்டியை கொடுத்ததிற்கு மிகவும் நன்றி
 
 ரஞ்சன் : அருமையான , அறிவுபூர்ணமான கேள்விகளை கேட்டதற்கு உங்களுக்கும் நன்றி ---------
 
 -----------------
 
 அன்புடன் ரவி
 
    
 
 
 
 
 
 
 
Bookmarks