-
10th March 2014, 06:41 AM
#481
Junior Member
Platinum Hubber
வெற்றி தேவதை - அதிர்ஷ்ட தேவதை
யாருக்கு கிடைத்ததோ இல்லையோ மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு அன்றும் கிடைத்து . இன்றும் கிடைத்து
வருகின்றது . நாளையும் கிடைக்க உள்ளது .
சரித்திரம் போற்றும் மகத்தான சாதனைகள் - வரலாற்று வெற்றிகள் என்று அரசியல் - சினிமா இரண்டு துறைகளிலும்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் நேரிடயாக கண்டு கொண்டாடியவர்கள் .
எம்ஜிஆரின் புகழை இருட்டடிப்பு செய்பவர்களை நாங்கள் நினைப்பதில்லை .
எம்ஜிஆரின் புகழ் கண்டு மனம் வெதும்பும் ஆரியருக்காக பரிதாப படுகிறோம் .
-
10th March 2014 06:41 AM
# ADS
Circuit advertisement
-
10th March 2014, 08:20 AM
#482
Junior Member
Platinum Hubber

நேற்று , அலுவலக சங்க கூட்டம் விஷயமாக ஈரோட்டிற்கு சென்று
இருந்தேன். அங்கு மத்திய பேருந்து நிலையம் , ராயல் அரங்கு அருகில்
வைக்கப்பட்டிருந்த புரட்சி தலைவரின் பேனர் நமது திரி நண்பர்களின்
பார்வைக்காக , நேற்று இரவு எடுக்கப்பட்ட புகைப்படம் பதிவிடுவதில்
மகிழ்ச்சி. ஈரோடு- ராயல் அரங்கில் 1974-ல் மக்கள் திலகத்தின் "உரிமைக்குரல் " 155 நாட்கள் ஓடியது நினைவுக்கு வந்தது.
ஆர். லோகநாதன்.
-
10th March 2014, 08:45 AM
#483
Junior Member
Platinum Hubber
-
10th March 2014, 01:46 PM
#484
Junior Member
Diamond Hubber
சத்யா மூவிஸ்' தயாரித்த "காவல்காரன்'' படத்தில் எம்.ஜி.ஆரின் தம்பியாக சிவகுமார் நடித்தார்.
1966-ம் ஆண்டின் பிற்பகுதியில் "காவல்காரன்'' படம் தயாராயிற்று. முதன் முதலில் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, சிவகுமாரை அவர் கைகுலுக்கி அன்புடன் வரவேற்றார்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர். தன் தாயார் சத்யா அம்மையார் பற்றியும், குடும்ப நலனுக்காக அவர் செய்த தியாகங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
சிவகுமாரும் தன் தாயார் பற்றி எம்.ஜி.ஆரிடம் கூறினார்.
இதுகுறித்து சிவகுமார் எழுதியிருப்பதாவது:-
"என் தாயாரின் வைராக்கியம், தியாகம், எதற்கும் கலங்காத நெஞ்சுரம், நிலத்தில் கடுமையாகப் பாடுபடும் உடல் நலம் பற்றி எல்லாம் எம்.ஜி.ஆருக்கு தைரியமாக எடுத்துச் சொன்னேன்.
ஒரு சமயம் அம்மாவின் வலது கை மணிக்கட்டுக்கு மேலே இரண்டு எலும்புகள் ஒடிந்து தொங்கும் அளவுக்கு விபத்து ஏற்பட்டு, ஆறு மாத காலம் எனக்குச் சொல்லாமல் வைத்தியம் பார்த்து கையை சரிப்படுத்திக் கொண்டார். என் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த விபத்து பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை. என் நண்பர்களையும் மிரட்டி, எனக்குக் கடிதம் எழுத விடாமல் தடுத்துவிட்டார்.
இதை அறிந்ததும், எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.
இந்த உரையாடல் நடந்து 3 மாதத்தில், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காண யாரும் அனுமதிக்கப்படவில்லை. நான் பலமுறை மருத்துவமனைக்குச்சென்று ஆர்.எம்.வீ. அவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். உடல்நிலைப் பற்றி விசாரித்து விட்டுத் திரும்பிவிட்டேன்.
எம்.ஜி.ஆர். உடல் நிலை சற்று முன்னேறியதும், அவரைப் பார்க்க என்னை உள்ளே அனுப்பி வைத்தார், ஆர்.எம்.வீ.
எம்.ஜி.ஆர். படுத்திருந்தார். காவல்காரன் படத்தில், நானும், அவரும் ஒரே ஒருநாள்தான் நடித்திருந்தோம். என் முகம், உடனடியாக அவர் நினைவுக்கு வரவில்லை. கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப்பார்த்தபடி தீவிரமாக யோசித்தார். நான் சிவகுமார் என்பதைத் தெரிந்து கொண்டார்.
அந்த உடல் நிலையிலும் - கழுத்தில் பெரிய பேண்டேஜ் உறுத்திக் கொண்டிருந்தபோதிலும், முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டு `வாங்க' என்றார்.
குண்டடிப்பட்ட சமயம், ஊருக்கு போயிருந்ததாக சொன்னேன்.
அவர் முகத்தில் ஒரு மின்னல் வெட்டு. "ஊருக்கு போனியா... அ...ம்...மா... உன் அம்மா... சவுக்கியமா?'' என்று, விசாரித்தார். என் தாயார் பற்றி நான் கூறிய தகவல்களை மரண வாசல் வரை போய் மீண்டு வந்த அந்த நேரத்திலும் நினைவில் வைத்திருந்து அவர் விசாரித்ததைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.
எம்.ஜி.ஆர். என்னைத் தேற்றி, "எனக்காக அம்மாவை வேண்டிக்கச் சொல். சீக்கிரம் குணமாகிவிடுவேன்'' என்றார்.
எம்.ஜி.ஆர். குணம் அடைந்தபின், "காவல்காரன்'' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி வேகமாக நடந்தது.
7-9-1967-ல் இப்படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.- Courtesy Malaimalar
-
10th March 2014, 01:57 PM
#485
Junior Member
Diamond Hubber
My Favourite Scene in Nall Neram
-
10th March 2014, 03:09 PM
#486
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
Vinod sir if possible please upload the cover story.
-
10th March 2014, 03:50 PM
#487
Junior Member
Platinum Hubber
THAI MAGAZINE 1981
-
10th March 2014, 03:53 PM
#488
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர். நடித்து 1965–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆயிரத்தில் ஒருவன். தற்போதைய முதல்வர் ஜெயலலிதா நாயகியாக நடித்து இருந்தார். நாகேஷ், நம்பியார், ஆர்.எஸ். மனோகர் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வந்தனர். பி.ஆர்.பந்துலு இயக்கினார்.
இப்படம் நவீன தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தமிழகம் மற்றும் கேரளாவில் வருகிற 14–ந்தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. கலர் மெருகேற்றப்பட்டு உள்ளது. டிஜிட்டலிலும் புதுப்பித்து உள்ளனர். மொத்தம் 100 தியேட்டர்களில் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்படும் என்று திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் குவித்தன.- courtesy malaimalar
-
10th March 2014, 03:56 PM
#489
Junior Member
Platinum Hubber
-
10th March 2014, 04:02 PM
#490
Junior Member
Platinum Hubber
Bookmarks