அஜீத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோனே-சன்னி லியோன்!
மார்ச் 10, 2014 | தமிழ் சினிமா | Tags:அனுஷ்கா
WP Greet Box iconXதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:
Deepika Padukone Hq Stills in Kochadaiyaan Movieவீரம் படத்தையடுத்து கெளதம்மேனன் இயக்கும் அஜீத் படத்தில், கதாநாயகியாக அனுஷ்கா நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர் அது மறுக்கப்பட்டது.
ஆனால் இப்போது அப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக கோச்சடையான் நாயகி தீபிகா படுகோனே நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு, வடகறி படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்துள்ள கவர்ச்சிப் புயல் சன்னி லியோனும் இன்னொரு நாயகியாக நடிக்கிறாராம்.
மேலும், சமீபகாலமாக தான் சொல்லும் கதைகளைக்கேட்டு மேல்தட்டு ஹீரோக்கள் தெறித்து ஓடுவதால், அஜீத் நடிக்கும் படத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்ற பாலிவுட் திரைக்கதை ஆசிரியர் ஸ்ரீதர் ராகவன் என்பவரை கூட்டணி சேர்த்திருக்கிறார் கெளதம் மேனன். இவர் இந்தியில் காகி, தம் மரோ தம், பிளப் மாஸ்டர் உள்பட பல ஹிட் படங்களுக்கு திரைக்கதை எழுதியவராம்.
ஆக, அஜீத் படம் மூலம் கோலிவுட்டுக்கு என்ட்ரியாகும் ஸ்ரீதர் ராகவன், இப்படத்தில் தீபிகா படுகோனே நடித்தால் பிரமாதமாக இருக்கும் என்று கருத்து சொன்னதோடு, சன்னி லியோனுக்கும் சிபாரிசு செய்தாராம்.
அதனால், தீபிகாவை புக் பண்ணியவர்கள், இப்போது சன்னியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். சன்னியுடனான பேச்சுவார்த்தை முடிந்ததும் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடுகிறார்களாம்.
http://123tamilcinema.com/2014031030610.html
ahhhhhhhhhhhhhhh...................

Bookmarks