கடல் டப்பா படம். அது ஓடியிருந்தாதான் ஆச்சரியம். இதை எழுதுவதற்கு சற்று வருத்தமாக இருந்தாலும் உண்மை என்னவென்றால், மணிரத்னம் சரக்கு முழுக்க தீர்ந்து போய் ரொம்ப நாளாச்சு. இதிலே வேடிக்கை என்னன்னா சில வலை தளங்களில் இரஹ்மானை தனது ஆஸ்தான இசையமைப்பாளர் ஆக்கியதில் இருந்துதான் மணிரத்னத்திற்கு இறங்கு முகம், அவர் இராஜாவின் கூடாரத்திற்கு வந்தால் தான் விமோசனம் என்று சகட்டு மேனிக்கு பதிவிடுகின்றனர். "ரோஜா", "பம்பாய்", "அலை பாயுதே", ஏன் "கன்னத்தில் முத்தமிட்டால்" கூட ஹிட்தான். இந்தியில் "குரு" ஹிட்தான். "இராவனன்", "கடல்" படங்களுக்கு யார் இசையமைத்திருந்தாலும் அந்த படங்களின் கதி இதே அதோகதிதான். இந்த படங்களின் தோல்விக்கு இசை காரணமல்ல. நல்ல இசை இருந்தும் படங்கள் தோற்றதற்கு சுமாரான கதையும் திரைக்கதையுமே காரணம்.

"மரியான்" படமும் சுமார்தான். தனுஷ் நன்கு நடித்திருந்தார். ஆனால் திரைக்கதை ஆமை வேகத்தில் சென்றது. மக்கள் குதிரை வேகத்தில் திரையரங்குகளை விட்டு வெளியேறினர். பாவம் நம்ம தலைவர். அருமையான இசையை கொடுத்தும் படம் ஓடவில்லை.

"கோச்சடையான்" கதை வேறு. சூப்பரின் இரசிக கண்மணிகள் எப்படியும் ஒரு முறை பார்த்து விடுவர். ஆனால் பட்ஜெட்டிற்கு மேல் வசூலாகுமா என்பது சந்தேகமே.

இதனால எல்லாம் தலைவரின் மார்க்கெட் குறையப்போவதில்லை. இறைவன் அருளால், மார்க்கெட் ஏற்ற இறக்கம் பற்றி கவலை கொள்ளும் நிலையிலும் அவரில்லை. அவர் தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டுதானிருப்பார். எப்படியோ நமக்கு நல்ல இசை விருந்து கிடைச்சா சரிதான்.