-
14th March 2014, 12:47 AM
#11
Breaking News அல்லது அண்மை செய்தி என்று சொல்லலாமா! நமது ஹீரோ 52 - 2014-ஐ விழாக் கோலத்துடன் வரவேற்க மதுரையம்பதி தயாராகி விட்டது என்ற செய்திதான். முன்னாட்களில் நடிகர் திலகம் நடித்த புதிய படங்கள் வெளியாகும் போது முதல் நாள் இரவு படம் வெளியாகும் திரையரங்க வாசலில் ரசிகர்கள் கூடி நின்று அலங்காரம் செய்வது, பானர் அமைப்பது, மாலைகள் போடுவது, கொடி தோரணங்கள் கட்டுவது என்று பல்வேறு உற்சாகமாக ஈடுபட்டிருப்பார்கள். அதா நாள் மீண்டும் வந்ததோ என எண்ணும் வண்ணம் இன்றைய இரவு அதாவது சற்று முன்னர் வைர நெஞ்சம் வெளியாகும் அலங்கார் தியேட்டர் முன்பு சுமார் 50 ரசிகர்கள் திரண்டு கொடி, தோரணங்கள், பானர் என்று அமர்களப்படுத்தி விட்டனராம். புதிய படத்திற்கு இன்றைய முன்னணி ஹீரோ நடித்த படத்தின் பானருக்கோ அல்லது கட்-அவுட்ற்கோ கூட இத்தனை மாலைகள் போடப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே! இப்போதே ஏறத்தாழ சுமார் 20 மாலைகள் அணிவிக்கப்பட்டு விட்டனவாம். சுமார் 10 பானர்கள் கட்டப்பட்டு விட்டனவாம். அலங்கார் தியேட்டர் அமைந்திருக்கும் காமராஜர் சாலையின் அந்தப் பகுதியே ஜெகஜோதியாக காட்சியளிக்கிறது என்று நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ஏற்பாடுகளெல்லாம் சாதாரண ரசிகன் தானே இழுத்து போட்டுக் கொண்டு செய்கிறான் என்பதுதான். முதல் நாள் இரவே இந்த response என்றால் இனி போக போக?
இதே நேரத்தில் சென்னை ரசிகர்களும் நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று மகாலட்சுமி திரையரங்கை அலங்காரம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நேரில் பார்த்த நண்பர் ஒருவர் செய்தியை பகிர்ந்து கொண்டார். தியேட்டரின் முகப்பையே மறைத்து பிரம்மாண்ட பானர் கட்டிக் கொண்டிருக்கின்றனராம். வரும் நாட்களில் மகாலட்சுமி அரங்கமும் அதன் சுற்று வட்டாரமும் அதிரப் போவது உறுதி என்று சொல்கிறார்கள்.
சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி நகரங்களில் நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட இருக்கும் விநியோகஸ்தர்களுக்கும், அரங்க உரிமையாளர்களுக்கும், காண வருகை தர இருக்கும் ரசிக கண்மணிகளுக்கும் நமது வாழ்த்துகளும் நன்றிகளும்!
அன்புடன்
-
14th March 2014 12:47 AM
# ADS
Circuit advertisement
Bookmarks