Page 163 of 400 FirstFirst ... 63113153161162163164165173213263 ... LastLast
Results 1,621 to 1,630 of 3995

Thread: Makkal Thilagam MGR Part 8

  1. #1621
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Today AAyirthil Oruvan IN pvr Complx 4.00 pm Show booking fast.

    Total 130 seats cost of Rs.120/- ticket booked upto 10.30 pm 79 tickets

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1622
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி - திரு .கோபால் -சென்னை

    முக நூலில் இருந்து
    எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் - நேற்று தேவி பாரடைசில் பார்த்த என்னுடைய அனுபவம் .

    இன்றைய புது படங்களில் அளவிற்கு அதிகமான செயற்கை காட்சிகளும் , வன்முறை காட்சிகளும் இடம் பெற்றுள்ளதை பார்த்த என் போன்ற தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எம்ஜியாரின் ஆயிரத்தில் ஒருவன் படம் மனதிற்கு தெம்பாக , கண்ணுக்கு விருந்தாக இருந்தது .

    நேற்று பிற்பகல் காட்சியில் தேவி பாரடைஸில் ரசிகர்கள் வெள்ளத்தில் படம் பார்க்கும் வாய்ப்பு
    கிடைத்தது . எல்லா தரப்பு வயதினரும் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை கைதட்டி , விசில் அடித்து ஆராவாரத்துடன் படம் பார்த்தது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் .

    50 ஆண்டுகள் முன்பு தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் பந்துலு அவர்கள் மிகபெரிய பிரமாண்ட மாக தயாரித்து இயக்கியுள்ளார் . இன்றைய தொழில் நுட்பத்தில் பல மாற்றங்களோடு படம் பார்க்கும்போது பிரமிக்க வைக்கிறது . ஹாட்ஸ் ஆப் சொக்கலிங்கம் .

    ஆயிரத்தில் ஒருவன் படத்தின் முழு கதா நாயகன் எம்ஜிஆர் .

    இப்படி ஒரு அழகான எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடியை இந்த தமிழ் திரை உலகம் இது வரை கண்டதில்லை . என்ன ஒரு பொருத்தம் . எம்ஜிஆர் தோன்றும் ஒவ்வொரு பிரேமிலும் அழகாக
    எம்ஜிஆர் ஜொலிக்கிறார் .கச்சிதமான வண்ண வண்ண உடைகள் .ஆக்டிவ் காட்சிகள் .

    உலகத்திலேயே வாள் சண்டை வீரர் ஒருவர்தான் . அவர்தான் எம்ஜிஆர் . என்ன ஒரு வேகம் .
    சுறுசுறுப்பு . இன்றைய நாயகர்கள் இந்த படத்தை பார்த்து எம்ஜிஆரின் நடிப்பு - சண்டை காட்சிகள்
    மகிமையை அறிந்து கற்று கொள்ள வேண்டும் .
    நேற்று படம் 3 மணி நேரம் போனதே தெரியவில்லை . இப்படி ஒரு மன நிறைவு தந்த எம்ஜிஆர்
    படம் அகன்ற திரையில் பார்த்து ரசிகர்களுக்கு மேலும் ஒரு வரப்பிரசாதம் .

    முடிந்தால் இந்த வாரம் மீண்டும் இதே தேவி பாரடைஸில் பார்க்க உள்ளேன் .
    Last edited by esvee; 24th March 2014 at 12:20 PM.

  4. #1623
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


    " வேலூர் தொகுதிக்கு சீட் கேட்டு விண்ணப்பித்தவர்களில் ஒருவர் என் மகன் கதிர் ஆனந்த். மற்றொருவர் என் சகோதரர் அப்துல் ரஹமான். இதில், என் சகோதரருக்கு சீட் கிடைத்தது. என் வாழ்க்கையில் எப்போதும் கோஷ்டி கிடையாது. கோஷ்டி வைத்தவன் உருப்படமாட்டான்.
    எம்ஜிஆர் என்னை வளர்த்து படிக்க வைத்தார். என் திருமண பத்திரிகையை எம்ஜிஆரிடம் கொடுத்து, திருமணத்திற்கு வரவேண்டும், என தெரிவித்தேன். என்னை கட்டியணைத்த எம்ஜிஆர், எனக்கு 25 பவுனில் செயினை அணிவித்தார். திமுக என் உயிர் மூச்சு. எம்ஜிஆர் என்னை வாழவைத்த தெய்வம். என்னை ஆட்டிப் பார்க்க வேண்டும் என யாரும் நினைக்க வேண்டாம். கருணாநிதிக்குப் பிறகு மூத்த அரசியல்வாதி நான்தான். 15 ஆண்டுகள் அமைச்சராக இருந்திருக்கிறேன். "

    - வேலூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துரைமுருகன் .

    Thanks to Mr. Chandran Veesamy for the above information.

  5. #1624
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


    பிரபலமானவர்கள் அரசியலில் தோற்பது ஏன்

    இப்போதெல்லாம், கொஞ்சம் பிரபலமானவர்கள் கூட, ரொம்ப பிரபலமாக வேண்டும் என்பதற்காக, ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் தஞ்சம் அடைகின்றனர். கொஞ்சம் முயற்சி செய்து, தேர்தலில் போட்டியிட "சீட்'டும் பெற்று விடுகின்றனர். பல ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தவர்கள் எல்லாம் காத்துக் கிடக்க, நேற்று வந்த இவர்கள் மட்டும், உடனுக்குடன் எப்படித் தான் கட்சியில் உயர் பதவிகளை பிடிக்கின்றனர் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.கட்சியினருக்கு "சீட்' கொடுக்காமல், பிரபலமானவர்களுக்கு உடனுக்குடன் "சீட்' தருவது சரியா என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், இவர்களில் பலர் போன வேகத்திலேயே திரும்புகின்றனர். அல்லது, அரசியலில் தோல்வியை தழுவுகின்றனர்.
    இது குறித்து, "சிஎன்என்-ஐபிஎன்' ஆங்கில சேனலில் விவாதம் நடந்தது. சேனல் ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் விவாதத்தை துவக்கி வைத்தார்.
    சர்தேசாய்: பல்வேறு பிரபலங்களும் தேர்தல் அரசியலில் இறங்கி தோல்வியை தழுவி உள்ளனர். இருப்பினும் அரசியலில் ஈடுபடுவதை அவர்கள் கைவிடுவது இல்லை ஏன்? ஒரு நாள் இவர்கள் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர். இன்னொரு நாள் அரசியல் மேடையில் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
    குல் பனக் (முன்னாள் மிஸ் இந்தியா, சண்டிகர் தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளர்): வாரிசு அரசியலையும் ஊழலையும் ஒழிக்க வேண்டும் என்பதால் தான் என்னைப் போன்றவர்கள் அரசியலில் இறங்குகிறோம். ஏன் அரசியலில் இறங்குகிறீர்கள் என எங்களை கேட்பதே தவறு. மாற்றம் வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். அரசியலில் ஈடுபட மற்றவர்களைப் போல எங்களுக்கும் அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. அரசியல்வாதிகள் கூடத் தான் ஒரு நாள் டிவியில் பேசுகின்றனர். இன்னொரு நாள் நீதிமன்றத்தில் நிற்கின்றனர். எம்.ஜி.ஆர்., அண்ணாதுரை போல சினிமாவில் இருந்துகொண்டு, அரசியலில் சாதித்தவர்கள் உண்டு.
    மூன் மூன் சென் (மேற்கு வங்க நடிகை): மக்களுக்கு ஏதாவது செய்ய நினைக்கும் கட்சியில் தான் நாங்கள் சேர்வோம்.
    அபராஜிதா (ஒடிசா நடிகை): ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள் என எங்களை மட்டும் எதற்காக கேட்கிறீர்கள்? மற்றவர்களைப் போலத் தானே நாங்களும். உ.பி.,யில் 10 ஆண்டுகளாக மக்களுடன் மக்களாக நான் சேவை செய்து வருகிறேன். எனவே அரசியல் எனக்கு புதிது அல்ல. சர்தேசாய்: தேர்தலில் போட்டியிடும் பல பிரபலங்கள், பிசாரம் செய்ததை நான் பார்த்ததே இல்லை. "சீட்' மட்டும் இவர்களுக்கு கிடைக்கிறது.
    சைஷனா (பாஜ): யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இருப்பினும் அரசியல் செயல்பாடுகளின் அடிப்படையிலும் இவர்களை பார்க்க வேண்டும். சமுதாயத்திற்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தான் அரசியலில் ஜெயிக்க முடியும். ஒரே நாளில் பதவியை பிடித்து விடலாம் என நினைத்தால் முடியாது. வாக்காளர்கள் புத்திசாலிகள். இதைப் புரிந்துகொள்வர்.
    சர்தேசாய்: எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., போன்ற தென்னிந்திய நடிகர்கள், அரசியலில் ஜெயிக்க முடிகிறது. ஆனால் வட இந்திய நடிகர்கள், வரும் வேகத்தில் காணாமல் போய் விடுகின்றனர். இது ஏன்?
    நிதிஷ் பரத்வாஜ் (நடிகர்): இப்போது, அரசியல் பலவாறாக பிரிந்து கிடக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி, ஒரு பிரபலம் தான் ஓட்டுகளை பெற முடியும். எம்.ஜி.ஆரும்., என்.டி.ஆரும் சொந்தமாக கட்சியை துவங்கி வெற்றி பெற்றனர். ஆனால் வட இந்திய நடிகர்கள், மற்ற கட்சிகளில் தான் சேர முடிகிறது. அங்குள்ள மூத்த தலைவர்களின் பேச்சைத் தான் கேட்க வேண்டி உள்ளது. இது தான் எங்கள் தோல்விக்கு காரணம்.

    http://election.dinamalar.com/detail.php?id=1612

  6. #1625
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post
    பெட்டியில் தூங்கிய படம்....

    தூசு தட்டப்பட்ட படம்....

    பெயரளவில் பார்வையாளர்களை கொண்ட படம்...

    சிறிய திரை அரங்குகளில் ஓடிய படம்

    நட்சத்திர பட்டாளம் உள்ளதால் ஓடிய படம்.......

    இப்படி பல இலவச விளம்பரங்கள், அந்த நட்சத்திர பட்டாளம் கொண்ட படத்திற்கு இன்னும் கிடைக்க வழி வகை செய்து , போஸ்டர் வெளியிடும் நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி .

    மேற்கூறிய காரணம் எல்லாம் நாங்கள் ஒத்துகொள்கிறோம் என்றே வைத்துகொண்டாலும் ......நட்சத்திர பட்டாளம் கொண்ட படம் 2012இல் செய்த சாதனையை , வியாபார ரீதியாக முழுமையாக முறியடித்து பிறகு இந்த வீர (வீம்பு) வசனம் பேசட்டும் poster தயாரித்தவர்கள் !

    திரைப்படம் வெளியிடும் சமயம் தேர்தல் கமிஷன் போஸ்டர் கெடுபிடி, பள்ளி தேர்வு ...மற்றும் இன்னும் பல புதிய காரணங்கள் தேடி பதிவிடட்டும் !

    இதே தேர்வு அதுவும் STATE மற்றும் CBSE மற்றும் ISCE தேர்வுகள், IPL டௌர்னமெண்ட் 2012இல் நட்சத்திர பட்டாளம் கொண்ட பெட்டியில் தூங்கிய தூசி தட்டப்பட்டு நவீனமயமாக்கபட்ட திரைப்படம் வெளியானபோதும் இருந்தது என்பதை POSTER ஒட்டிய உண்மை விளம்பிகள் மறந்தது ஏனோ ?

    இதுபோன்ற காரணங்கள் பட்டியளிடுவோர் ஒரு விஷயத்தை நினைத்து பார்க்கவேண்டும்.

    இந்த ஆயிரத்தில் ஒருவன் - பிரமாண்டத்தின் மகுடம் என்று பறைசாற்றிகொள்ளும் காவியம், புதுமுகங்கள் நடித்த புது காவியம் அல்ல !

    POSTER கூறுவதை போல வருடம் தோறும் திரையிடப்பட்டுள்ள "வசூல் புரட்சி" திரைப்படம்.

    நடப்பது எதிர் கட்சி ஆட்சி அல்ல ! உங்கள் ஆட்சிதானே ? கதாநாயகியாக நடித்தவர் உங்கள் கட்சியில் இப்போதைய முதல்வர்தானே ?

    போஸ்டர் கெடுபிடி திரைப்படம் திரையிடுவதற்கு முன்பு, திரையிட்டு 3 நாட்கள் வரை எந்த கெடுபிடியும் இல்லை ..

    திங்கள் முதல் அதுவும் ஓரிரு இடங்களில் தான் குறிப்பாக மதுரை, மட்டும் சிறிது STRICT ஆக கடைபிடிக்கப்பட்டது ! சென்னை, கோவை, சேலம், காரைக்கால், காங்கேயம், நாகர்கோயில், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய எங்கும் குறிப்பிடும்படியான நிலைமை இல்லை.

    மேலும் கோவையில் மற்றும் மதுரையில் திரு.MGR, கதாநாயகி நீங்கலாக ராட்சச எழுத்து வடிவில் "திவ்ய நிறுவனம் வழங்கும் " ஆயிரத்தில் ஒருவன் - பிரமாண்டத்தின் மகுடம் "என்று போஸ்டர்கள் மீண்டும் ஒட்டப்பட்டது யாரும் மறுக்க முடியாது !

    ஆகையால், இதுபோல பெட்டியில் தூங்கிய, தூசுதட்டபட்டு நவீனமயமாகி வெளியிட்ட திரைப்படத்தை, அதன் நடிகரை தாக்கும் போஸ்டர்களுக்கு காசு செலவு செய்வதை விடுத்து அந்த காசை ரசிகர்கள் அனைவருக்காகவும் செலவிட்டு ஆக்கபூர்வமாக திரையரங்கில் ஆயிரத்தில் ஒருவன் எனும் நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் மாபெரும் வெற்றியடைய டிக்கெட் வாங்கி பயன்படுத்தினால் சால சிறந்தது !

    சென்னை முழுவதும் 1500 POSTER ஒட்டிய காசுதான் TOTAL WASTE !! PRINTING CHARGES PLUS PASTING BILL !

    இந்த போஸ்டரால் 125இல் ஒரு 45 திரை அரங்கில், திரு MGR அவர்கள் நடித்து வருடா வருடம் வசூல் புரட்சி செய்ததாக கூறப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் திரைபடதை உங்களால் தூக்கி நிறுத்த உதவுமா என்பதை யோசியுங்கள் ?

    பெட்டியில் தூங்கிய தூசுதட்டி நவீனபடுத்தபட்ட திரைப்படத்தையும் அதில் நடித்த நடிகர் பேரில் உள்ள உங்கள் வயிதெரிச்சலயும் காழ்புணர்ச்சியைதான் வெளிக்காட்ட உதவும் ! மக்களிடம் ஒரு "சிம்பதி" அல்லது "எம்பதி" கிடைக்க ஒருபோது வழிவகை செய்யாது என்பதை இனியாவது புரிந்து கொண்டால் நன்று !

    இதுபோல POSTER ஓட்டுபவர்கள் DVD வியாபாரத்தில் பெட்டியில் உறங்கிய, தூசு தட்டப்பட இனியும் தயாராக உள்ள திரைப்படங்களை வெளியிட்டு கொள்ளை லாபம் பார்த்ததை தைரியமாக மனசாட்சி என்ற ஒன்று இருக்குமே என்றால் அதை அடகு வைக்காமல், கழட்டிவைக்காமல் ஒலிக்கிறது எங்கள் உரிமைக்குரல் என்று ஒத்துகொள்ளமுடியுமா ?

    இன்றைய confession விளம்பரம் மக்கள் பார்த்தாலே தெரியும் யார் உண்மையர் ....யார் பொய்யர் என்று !!
    Last edited by RavikiranSurya; 24th March 2014 at 03:19 PM.

  7. #1626
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    GOOD NEWS TODAY SATHYAM COMPLEX STUIO 5 OUR GOD MOVIE AAYIRATHIL ORUVAN FULL.

    http://www.spicinemas.in/chennai/now...rathil-oruvan/ (ONlLY THREE TICKETS BALANCE @ 14.45 HRS)
    Last edited by Yukesh Babu; 24th March 2014 at 03:01 PM.

  8. #1627
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று Deviparadise திரைஅரங்கு உரிமைக்குரல் [Mr. BSR] , பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் மற்றும் தோழமை சங்கங்களின் உறுபினர்கள் கொண்டாட்டம்.


  9. #1628
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று Deviparadise திரைஅரங்கு உரிமைக்குரல் [Mr. BSR] , பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் மற்றும் தோழமை சங்கங்களின் உறுபினர்கள் கொண்டாட்டம்.


  10. #1629
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று Deviparadise திரைஅரங்கு உரிமைக்குரல் [Mr. BSR] , பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் மற்றும் தோழமை சங்கங்களின் உறுபினர்கள் கொண்டாட்டம்.



  11. #1630
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று Deviparadise திரைஅரங்கு உரிமைக்குரல் [Mr. BSR] , பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் மற்றும் தோழமை சங்கங்களின் உறுபினர்கள் கொண்டாட்டம்.



Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •