Page 196 of 400 FirstFirst ... 96146186194195196197198206246296 ... LastLast
Results 1,951 to 1,960 of 3995

Thread: Makkal Thilagam MGR Part 8

  1. #1951
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Mumbai
    Posts
    0
    Post Thanks / Like
    பெரம்பலூரில் திறக்கப் படவிருக்கும் புதிய பேரூந்து நிலையத்தின் அருகில் அமைக்கப் படவிருக்கும் மக்கள் திலகத்தின் திருஉருவச்சிலைக்கான வளைவின் வரை படம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1952
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by boominathanandavar View Post
    " எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.

    ஏறக்குறைய எல்லா நடிகர்களின் வாழ்வும் இப்படிப் பட்டதாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்ந்து மிகச் சிரமப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் நடித்து அதற்குப்பின் ஐந்நூறு ஆண்டுகள் உழைத்தால்தான் பல இலட்சங்களைப் பார்க்க முடியும். ‘அப்படியெல்லாம் இருந்தாரே அவரா இவர்? என்று சிலர் பார்த்துக் கேட்கக் கூடிய நிலை பிறக்கும்.

    நடிகர்களின் வருமானம் கூட்டல் கணக்கல்ல கழித்தல் கணக்கு. இவ்வாண்டு ரூ.5 இலட்சம் என்றால் அதற்கு அடுத்த ஆண்டு இரண்டு இலட்சம் என்றுதான் அந்தக் கணக்கு காட்டும். ஆகவே கிடைக்கிற காலத்தில் அது நற்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட தாகக் கணக்கு இருந்தால்தான் அதுதான் போற்றத்தக்கது.

    ஆனால் நண்பர் இராமச்சந்திரன் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.

    அப்படியில்லாது நண்பர் இராமச்சந்திரன் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார். இந்த அனாதைகள் இல்லத்திற்கு அவ்வை இல்லம் என்று பெயர் இருப்பதை மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும். "

    - சென்னை அவ்வை இல்லத்திற்கு ரூபாய் 30,000 நிதிவழங்கிய மக்கள் திலகம் எம்ஜியாரைப் பாராட்டி
    அண்ணா , 30 - 1 -1961 , நம்நாடு இதழில் .
    அகிலம் ஆண்ட ஆண்டவர் மீது அளவற்ற பாசம் கொண்ட எங்கள் அன்பு நண்பர் திரு. பூமிநாதன் ஆண்டவர் அவர்களை இந்த திரிக்கு வருக வருகவென வரவேற்கிறோம். திரு. பூமிநாதன் ஆண்டவரின் இந்த பதிவு நம் பொன்மனச்செம்ம்மலின் பொன் மனதைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது. நன்றி.


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  4. #1953
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Mumbai
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Devotee from Coimbatore Auto Ganesh feels MGR his God and have written in his Autorickshaw MGR Thunai.

  5. #1954
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Mumbai
    Posts
    0
    Post Thanks / Like
    என் அன்பு அண்ணன் ''கலியபெருமாள் விநாயகம்'' அவர்களுக்கு என் இதயகனிந்த நன்றிகள் பல .

  6. #1955
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் நடித்த படங்களில் மிக சிறப்பான உடைகளுடன் தோன்றிய் படங்கள் .

    நாடோடி மன்னன்

    எங்க வீட்டு பிள்ளை

    ஆயிரத்தில் ஒருவன்

    அன்பே வா

    பறக்கும் பாவை

    ரகசிய போலீஸ் 115

    குடியிருந்த கோயில்

    ஒளிவிளக்கு

    அடிமைப்பெண்

    ராமன் தேடிய சீதை

    உலகம் சுற்றும் வாலிபன் .

  7. #1956
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1957
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1958
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ்ப்பட உலகுக்கு எம்.ஜி.ஆர். மூலம் அறிமுகம் ஆனார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
    பதிவு செய்த நாள் : புதன்கிழமை, மார்ச் 26, 9:39 pm ist

    எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' படத்தில் 'ஆயிரம் நிலவே வா' பாடலைப்பாடி, பெரும் புகழ் பெற்றார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

    சென்னையில் படிக்கும்போது, தியாகராயர் கல்லூரியில் நடந்த மெல்லிசைப் போட்டியில் கலந்து கொள்ள பாலு சென்றார். அப்போது, பிரபல விளம்பர டிசைனர் பரணி அவருக்கு அறிமுகம் ஆனார். இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

    பாலுவை, டைரக்டர் ஸ்ரீதரிடம் அறிமுகம் செய்து வைத்தார், பரணி. ஒரு பாட்டுப் பாடும்படி ஸ்ரீதர் கூற, பிரபலமான பாடல் ஒன்றைப் பாலு பாடினார்.

    மறுநாள், தன்னுடைய சித்ராலயா அலுவலகத்துக்கு வந்து, இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்கும்படி ஸ்ரீதர் கூறினார்.

    அதன்படி பாலு அங்கே சென்றபோது, சுமார் 50 பேர் கொண்ட வாத்தியக் குழுவினருடன் இசை அமைத்துக்கொண்டிருந்தார், எம்.எஸ்.விஸ்வநாதன்.

    பாலு இதற்கு முன் சினிமாவுக்காக 10 தெலுங்குப் பாடல்களைப் பாடியிருந்தபோதிலும், இவ்வளவு பெரிய வாத்தியக் கோஷ்டியை பார்த்தது இல்லை. அதனால் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்.

    அவர்கள் ஒத்திகை முடிந்ததும், பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஸ்ரீதர் அறிமுகம் செய்து வைத்தார்.

    எம்.எஸ்.விஸ்வநாதன் தனது ஆர்மோனியப் பெட்டி முன் அமர்ந்து, 'எங்கே, ஒரு பாட்டுப் பாடுங்கள்!' என்றார். உடனே, ஒரு இந்திப் பாடலைப் பாடினார், பாலு.

    'ஒரு தமிழ்ப்பாட்டு பாடமுடியுமா?' என்று எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்க, 'தமிழ்ப்பாட்டுப் புத்தகம் எதுவும் என்னிடம் இல்லையே' என்றார், பாலசுப்பிரமணியம். உடனே, 'காதலிக்க நேரமில்லை' படத்தின் பாட்டுப் புத்தகத்தை கொண்டு வரச்சொல்லி, அதில் இடம் பெற்ற 'நாளாம் நாளாம் திருநாளாம்' என்ற பாடலை பாடச் சொன்னார், விஸ்வநாதன்.

    அந்த தமிழ்ப்பாட்டை, தெலுங்கில் எழுதிக்கொண்டு சிறப்பாக பாடினார், பாலு. அவருடைய குரல் வளம் எம்.எஸ்.வி.க்கு மிகவும் பிடித்திருந்தது. எனினும், தெளிவான உச்சரிப்புடன் தமிழில் பாட முடியுமா என்று சந்தேகப்பட்டார். 'தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டுவிட்டு, பிறகு என்னை வந்து பாருங்கள்' என்று கூறி பாலுவை அனுப்பி வைத்தார்.

    பாடுவதற்கு அப்போது வாய்ப்பு கிடைக்காமல் போனாலும், தன்னுடைய குரல் மெல்லிசை மன்னருக்கு பிடித்துவிட்டதில் பாலு திருப்தி அடைந்தார்.

    இதன்பின் பல தெலுங்குப் படங்களுக்கு அவர் பின்னணி பாடினார்.

    இதற்கு சரியாக ஒரு ஆண்டுக்குப்பிறகு, ஒரு ரிக்கார்டிங் தியேட்டரில் பாலசுப்பிரமணியமும், எம்.எஸ்.விஸ்வநாதனும் தற்செயலாக சந்தித்துக் கொண்டனர்.

    தன்னை விஸ்வநாதன் மறந்திருப்பார் என்று பாலு நìனைத்தார். ஆனால் அவரோ, 'தம்பி! ஸ்ரீதர் ஆபீசில் என்னை சந்தித்தது நீங்கள்தானே?' என்று கேட்டார்.

    ஆமாம்' என்று பதிலளித்தார், பாலு.

    'மீண்டும் என்னை வந்து பார்க்கச் சொன்னேனே! ஏன் பார்க்கவில்லை?' என்று எம்.எஸ்.வி. கேட்க, 'தமிழை `இம்ப்ரூவ்' செய்து கொண்டு வரச்சொன்னீர்கள். அதனால்தான் வரவில்லை' என்று பாலு சிரித்துக்கொண்டே சொன்னார்.

    'இப்போது உங்கள் தமிழ் நன்றாகத்தான் இருக்கிறது. நாளைக்கே என்னை வந்து பாருங்கள்!' என்றார், எம்.எஸ்.விஸ்வநாதன்.

    அதன்படி, மறுநாள் எம்.எஸ்.விஸ்வநாதனை போய் சந்தித்தார், பாலு. 'ஓட்டல் ரம்பா' என்ற படத்துக்கு பாடல் பதிவு நடந்தது. எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ஒரு பாடலை பாடினார், பாலசுப்பிரமணியம்.

    முதன் முதலாக அவர் பாடிய 'ஓட்டல் ரம்பா' படம் வெளிவரவே இல்லை!

    சில நாள் கழித்து 'சாந்தி நிலையம்' படத்தில், 'இயற்கை என்னும் இளைய கன்னி' என்ற பாடலைப்பாடும் வாய்ப்பை, பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கினார், எம்.எஸ்.விஸ்வநாதன்.

    பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் இணைந்து பாடிய அந்தப்பாடல் அற்புதமாக அமைந்தது.

    தன்னுடைய இந்த பாடல் பெரிய `ஹிட்' ஆகும், அதன் மூலம் தனக்கு புகழ் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தார், பாலு.

    அதற்குள், எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. பாலுவின் குரல் வளத்தை அறிந்த எம்.ஜி.ஆர், அவரை தன்னுடைய 'அடிமைப்பெண்' படத்தில் பயன்படுத்திக் கொள்ள எண்ணினார். கே.வி.மகாதேவன் இசை அமைப்பில், 'ஆயிரம் நிலவே வா' என்ற பாடலை பாலு பாடுவது என்று முடிவாகியது.

    ஆனால், துரதிர்ஷ்டவசமாக பாடல் பதிவாகும் தினத்தில் பாலுவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, படுத்த படுக்கையில் இருந்தார்.

    அவர் குணம் அடைய 2 மாதம் பிடித்தது. தனக்கு பதிலாக வேறு பாடகரை வைத்து, பாடலைப் பதிவு செய்திருப்பார்கள் என்று அவர் நினைத்தார்.

    ஆனால், எம்.ஜி.ஆர். அப்படிச் செய்யவில்லை. பாலு குணம் அடையும்வரை, காத்திருந்து பாடலை பதிவு செய்தார்.

    பாலு, எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்று நன்றி செலுத்தினார். 'தம்பி! என் படத்தில் பாடப்போவதாக எல்லோரிடமும் சொல்லியிருப்பீர்கள். உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் உங்கள் பாடலைக் கேட்க ஆவலோடு காத்திருப்பார்கள். அவர்களையும், உங்களையும் ஏமாற்ற நான் விரும்பவில்லை. அதனால்தான், வேறு யாரையும் பாட வைக்காமல், பாடல் பதிவை 2 மாதம் தள்ளிப்போட்டேன்!' என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

    அதைக்கேட்டு கண் கலங்கிவிட்டார், பாலு.

    சாந்தி நிலையத்துக்காக, 'இயற்கை என்னும் இளைய கன்னி' என்ற பாடலைத்தான் முதலில் பாலசுப்பிரமணியம் பாடினார் என்றாலும், அந்தப்படம் வெளிவருவதற்கு 3 வாரம் முன்னதாக (1969 மே 1-ந்தேதி) 'அடிமைப்பெண்' வெளிவந்துவிட்டது!

    எனவே, தமிழ்த்திரையில் ஒலித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடல் 'ஆயிரம் நிலவே வா'தான். அந்த ஒரே பாடல் மூலம், அவர் புகழின் சிகரத்தை அடைந்தார்.

  10. #1959
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1960
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    ஏ.வி.எம். ராஜேஸ்வரி அரங்கில் ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம் வெளியானபோது , தலைவரின் படத்திற்கு வரவேற்பு தரும் வகையில் ,திரு.ஜி.பலராமன் என்கிற
    பக்தர் ,எம்.ஜி.ஆர். மன்றம், ஜாபார்கான்பேட்டை சேர்ந்தவர் வைத்திருந்த பேனர்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு

    ஆர். லோகநாதன்.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •