-
27th March 2014, 11:33 AM
#11
Junior Member
Regular Hubber
" எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.
ஏறக்குறைய எல்லா நடிகர்களின் வாழ்வும் இப்படிப் பட்டதாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்ந்து மிகச் சிரமப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் நடித்து அதற்குப்பின் ஐந்நூறு ஆண்டுகள் உழைத்தால்தான் பல இலட்சங்களைப் பார்க்க முடியும். ‘அப்படியெல்லாம் இருந்தாரே அவரா இவர்? என்று சிலர் பார்த்துக் கேட்கக் கூடிய நிலை பிறக்கும்.
நடிகர்களின் வருமானம் கூட்டல் கணக்கல்ல கழித்தல் கணக்கு. இவ்வாண்டு ரூ.5 இலட்சம் என்றால் அதற்கு அடுத்த ஆண்டு இரண்டு இலட்சம் என்றுதான் அந்தக் கணக்கு காட்டும். ஆகவே கிடைக்கிற காலத்தில் அது நற்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட தாகக் கணக்கு இருந்தால்தான் அதுதான் போற்றத்தக்கது.
ஆனால் நண்பர் இராமச்சந்திரன் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.
அப்படியில்லாது நண்பர் இராமச்சந்திரன் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார். இந்த அனாதைகள் இல்லத்திற்கு அவ்வை இல்லம் என்று பெயர் இருப்பதை மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும். "
- சென்னை அவ்வை இல்லத்திற்கு ரூபாய் 30,000 நிதிவழங்கிய மக்கள் திலகம் எம்ஜியாரைப் பாராட்டி
அண்ணா , 30 - 1 -1961 , நம்நாடு இதழில் .
-
27th March 2014 11:33 AM
# ADS
Circuit advertisement
Bookmarks