Page 223 of 401 FirstFirst ... 123173213221222223224225233273323 ... LastLast
Results 2,221 to 2,230 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2221
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    படத்தை பற்றி:

    முக்தா ஸ்ரீனிவசன் படங்களின் trade mark அம்சமான ஒரு disorder தான் இந்த படத்தின் மையம் .வழக்கம் போலே அந்த disorder ஹீரோக்கு அல்ல , மாறாக இரண்டாவது கதாநாயகனுக்கு தான் அந்த disorder .
    படத்தின் பெயர் போடும் பொது ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தேன் காரணம் தொடக்கத்தில் ஒரு கார் பந்தயம் காட்டபடுகிறது , (கதை வசனம் திருமாறன் அந்த கால கட்டத்தில் வந்த பல action படங்களில் இவர் பங்களிப்பு அதிகம், தேவர் films ஆஸ்தான கதாசரியர் ) பெரிய action treat என்று நினைக்கும் பொது என்னை அப்படியே ஏமாற்றி நல்ல குடும்ப கதையாக கொடுத்து உள்ளார் திருமாறன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2222
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    முதலில் பிரபுவை பற்றி :

    நம்மவர் எந்த படத்தில் நடித்தாலும் அந்த கேரக்டர் ஆகவே மாறிவிடுவார் , இந்த படத்தில் அவர் அறிமுகம் ஆடம்பரம் இல்லாத அறிமுகம் , கதவை திறந்து ஆபீஸ் ல் நடந்து வரும் பொது என்ன ஒரு மிடுக்கு. ரேடியோ நாடகத்தில் நடிக்க சரோஜா தேவிடம் வாய்ப்பு கேட்க அதற்கு அவர் பிகு பண்ண நம்மவர் மனோகரா வசனம் பேசி காட்டுவது self satire. பல நடிகர்கள் இந்த வசனத்தை பேசி காட்டி தான் சான்ஸ் கிடைத்தது என்று அவர்கள் பேட்டியில் சொன்னதை பார்த்து உள்ளேன் , இதில் அவரே அதை செய்யும் பொது ரசிக்கும் படி தான் உள்ளது

    தான் வாங்கும் பொருட்களின் விலைகளை முதலில் அதிகமாக சொல்லுவதும் பிறகு உண்மை வில்லையை சொல்லுவதும் typical middle class ஆட்களின் குணத்தின் பிரதிபலிப்பு . தன் தங்கை தன் முதலாளியை காதலிப்பது தெரிந்ததும் அதுவும் அவரின் கோட் பாக்கெட் ல் வைத்து தகவல்களை பரிமாறி கொள்வதை அறிந்து அதே பாணியில் பதில் கொடுப்பது சபாஷ்

    இது வரைக்கும் இயல்பான அண்ணன் தங்கை கதையாக செல்லும் படம் தன் தங்கையின் வருங்கால கணவர் ஒரு குடிகாரன் என்று தெரிந்த உடன் வழக்கமான தியாகம் செய்யும் அண்ணனின் பாத்திரமாக மாறிவிடுகிறது , எத்தனை தடவை பொறுப்புள்ள அண்ணன் என்ற சட்டையை அணிந்து நடித்து இருப்பார் சிவாஜி சார் , ஆனால் அதை வித்தியாச படுத்தி காட்டி நம்மளை கவர்ந்து விடுகிறார்

    தன் தங்கையின் வருங்கால கணவர் குடிகாரன் என்பதை காணும் பொது அவர் முகத்தில் வெடிக்கும் ஏமாற்றம் , விரக்தி , அழுகை - என்ன ஒரு கலைஞன் . பிறகு குடிப்பது போலே நடிப்பதும் , டாப் குடித்து விட்டு கஷ்டபடுவதை போலே முத்துராமன்யை திருத்த வலியால் துடிப்பதை போலே நடிக்கும் காட்சியில் சோ நம்மவரை தாங்கி பிடித்து கொள்ள , அவரை மீறி நம்மவர் துள்ளி குதித்து, தரையில் உருண்டு விழும் காட்சியில் சோ வின் முகத்தில் உண்மையில் அதிர்ச்சி (ஒரு செகண்ட் )

  4. #2223
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தன் தங்கை தன் கணவர் கூட இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குடிகாரனாக நடித்து விட்டு , லக்ஷ்மி நகைகளை தன் மேலே எரிந்து விட்டு போன உடன் , நீ உறவை வேண்டாம் என்று சொல்லலாம் , என்னால் அது முடியாது என்று அவர் போன உடன் சொல்லும் இடத்தில கண்களை குளமாகி விடுகிறார் நடிகர் திலகம்

    குடிகாரனாக நடிக்கும் காட்சிகள் அனைத்தும் நச்சு

    தன் நண்பருக்கு உதவி செய்ய ரவுடி வேஷத்தில் சண்டை போடும் காட்சி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று .
    அந்த காட்சி ஒரு பெரிய பாலம் போல் இருக்கும் பார்க் ல் எடுக்க பட்டு இருக்கும் . சோ, தேங்காய் ஸ்ரீனிவாசன் , இருவரும் பார்த்து கொண்டு இருப்பார்கள் . சிவாஜி , நீலு இருவரும் இரண்டு சுத்து சுத்தி நடந்து விட்டு , பேசி கொள்ளுவதை போலே நடித்து விட்டு , சிவாஜி கத்தியை எடுப்பார் , கத்தி டால் அடிக்கும் , அதை எடுத்து குத்தி விட்டு , நடந்து போவார் பாருங்கள் , திரும்பி திரும்பி , ஆட்டி ,ஆட்டி , ஒரு திமிரான பார்வையை பார்த்து விட்டு, சட்டையும் சரியாக இன் செய்ய படாமல் செம்ம ஸ்டைல் ஆக இருக்கும் , re ரெகார்டிங் அதற்கு வலு சேர்த்து இருக்கும்

    தன் மேல் குடிகாரன் என்று முத்திரை விழந்த உடன் அதை தாங்கி கொள்ளும் பிரபு , அது ஆபீஸ் ல் reflect ஆகும் பொது (demote செய்ய படும் காட்சி ) அதை தாங்கி கொள்ளாமல் தவிக்கும் காட்சி , ஒரு நபர் தன் வேளையில் எவளோ பற்று வைத்து இருக்கார் என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு . இதை தாங்கும் சிவாஜியின் இதயம் அவர் திருடன் என்று குற்றச்சாட்டு வைக்க படும் பொது மறுத்து பேசி , வேலையை விட்டு போகும் பொது , கதவு வரை சென்று விட்டு , DO YOU SAY I AM A THIEF ? என்று கர்ஜிக்கும் பொது சிலுகிறது

  5. #2224
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    என்னடா இது படம் முழுவதும் ஒரு வித submissive கதாபாத்திரத்தில் மட்டுமே நம்மவரை பார்க்க வேண்டுமா என்று நினைக்கும் பொது , கால சகரம் சுழல நம்மவர் அதிகாரம் செலுத்துகிறார் , முதலில் குலதெய்வம் ராஜகோபால் தான் திருட்டு தனம் செய்தவர் என்று அவரை கொடையும் காட்சியில் ராஜகோபால் உண்மையிலே பயபடுவதை காணலாம்

    பிறகு முத்துராமன் வீட்டில் பணக்காரனாக அறிமுகம் ஆகும் சிவாஜி தோள்களை உயர்த்தி சிரிக்கும் காட்சி , நான் உன்னை ஒரு கை பார்கிறேன் என்று சொல்லுவதை போல் இருந்தது .

    முத்துராமன் பண விஷியத்தில் சரியாக இல்லாமல் இருப்பதை அறிந்து , அவரை கண்டிக்கும் காட்சியும் , கோபாலக்ரிஷ்ணனிடம் தன் தங்கைக்காக கெஞ்சுவதும் , அவர் மறுக்கவே , வேறு வழி இன்றி அவரின் பனி நீக்கம் உத்தரவை தயாரித்து விட்டு , மேலவும் முடியாமல் நிற்பதும் , தான் தன் குடும்பத்தில் இருந்து வெகு தூரத்தில் சென்று கொண்டு இருப்பது போன்ற சூழ்நிலைக்கு சென்று விட்டதை போன்ற முக பாவத்தில் கலக்கி இருப்பார் மனிதர் .கடைசியில் முத்துராமன் காலில் விழும் காட்சி ( கதாபாத்திரம் தான் முக்கியம் , heroism next ) வெடித்து உண்மையை சொல்லும் காட்சியும் , truly கணேசன் CLASS
    (அதான் மாஸ்டர் கிளாஸ் )

  6. #2225
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சோ , மனோரமா, நீலு :

    இந்த படத்தில் அவருக்கு மிகவும் முக்கிய கதாபாத்திரம் , குனசிதிரம் + காமெடி , சிவாஜிக்கு ஐடியா கொடுப்பது படத்துக்கு உதவுகிறது என்றால் அவரின் ரியல் லைப் நண்பர் திரு நீலு உடன் சேர்ந்து பார்வையாளர்கள் வயிர்யை பதம் பார்க்கிறார் , மெட்ராஸ் பாஷையில் வேறு கலக்கி இருக்கார்கள் , நீலுவை ரவுடி ஆக நடிக்க வைத்து , பிறகு தன் அண்ணன் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து தேங்காய் வர அவர் கண்ணை கட்டி விடுவதும் , நீலு அப்பா வேஷம் போட்டு மெட்ராஸ் பாஷையில் உளறுவதும் , மந்திரவாதி டிரஸ் போட்டு கொண்டு கனவு காட்சியில் தெலுங்கு எம்மண்டி பாடல் மனோரமாவின் குரலில் (வா வாத்தியாரே ஊடண்ட ஸ்டைல் )

    நல்ல காமெடி track

    முத்துராமன் :

    அருண் என்ற கதபாதிரம் , ஊட்டி வரை உறவு , அவன் தான் மனிதன் , மூன்று தெய்வங்கள் போன்ற பல வெற்றி படங்களை போலே இந்த படத்திலும் நல்ல chemistry , அவரால் தான் இந்த கதை ஒரு நல்லவன் சூழ்நிலை எப்படி கெட்டவானக மாற்றுகிறது என்பதற்கு இவர் கதாபாத்திரம் தான் உதரணம் , தன் தங்கையை கல்யாணம் பண்ண போகும் பிரபு குடிகாரன் என்று சொல்லும் பொது , நடிகர் திலகம் கொடுக்கும் reaction தான் இவர் நடிப்புக்கு நாம் கொடுக்கும் மார்க் ,ஆம் நன்றாக நடித்து இருக்கார் (வெறுப்பை வாங்கி கொட்டி கொள்ளுகிறார் )

  7. #2226
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சரோஜா தேவி

    சரோஜா தேவியின் பங்கு இந்த படத்தில் கிளைமாக்ஸ் பகுதியில் அதிகம் , அவர் தன் காதலர் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கையில் உண்மையை வெளியே கொண்டு வரும் காட்சியில் நன்றாக நடித்து இருக்கார் . முதல் காட்சியில் அவர் சிவாஜியிடம் கேள்வி கேட்கும் பொது , நம்மளுக்கு சிரிப்பு தான் வருகிறது , இருவரும் கண்களில் பேசி கொள்ளும் காட்சி , சிவாஜி ரொமாண்டிக் லுக் கொடுக்க , இவர் மூஞ்சியை அஷ்ட கோணல் ஆகி கொள்ள சிரிப்பு . தன் காதலரிடம் இருந்து பொறுப்பை தட்டி பறிக்க நேரிடும் பொது தவிப்பதும் , சிவாஜி சரோஜாவை தட்டி கொடுப்பதும் உண்மை காதல் , veterans performance
    அதே நபர் சிவாஜி திருடியதை நம்புவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் , சிவாஜி கத்தும் பொது நிற்பதும் really superb

    லக்ஷ்மி :

    அண்ணன் சிவாஜியின் அன்பு தங்கை அவரால் தான் நம்மவர்க்கு இத்தனை சோதனை . சிவாஜிக்கு காதல் வசனம் பேச சொல்லி குடுப்பதும் , அண்ணனிடம் மாட்டி கொண்டு விளிக்கும் காட்சியும் , அதே அண்ணன் குடிகாரன் என்று நினைத்து நகைகளை தூக்கி போடு விட்டு போவதும் ,வீட்டுக்கு வர உருமை இல்லை என்று அண்ணனை திட்டுவதும் என்று நன்றாக நடித்து இருக்கிறார் (அந்த காட்சியில் நடிகர் திலகம் கோபத்தில் கத்துவது டாப் , he steals that scene )

    பாடல்கள் :

    மாமா என்று அன்போடும் , மரியாதையுடன் அழைக்க படும்
    திரு KV மகாதேவன் தான் இசை :
    எங்கள் வீடு தங்கத்தேரில் பாடல் SPB மற்றும் சுசீலா குரலில் மயக்கிறது

    முத்து பவளம் பாடல் ஷூட்டிங் spot , மற்றும் பல இடங்களில் ல் எடுக்க பட்ட பாடல் என்று நினைக்கிறன் , simple steps but graceful steps ல் ஜோடி கலக்கி இருப்பார்கள்

    உலகம் ஆயிரம் பாடல் நல்ல philosophical பாடல் , கேமரா work பிரமாதம் + நடிகர் திலகத்தின் நடை அழகை இந்த பாடலில் ரசிக்கலாம்

    மொத்தத்தில் என்னை கவர்ந்த நடிகர் திலகத்தின் படம் , 100 நாட்களை தொடவில்லை என்பது வருத்தம் தான்

  8. #2227
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Maadi veetu ezhai this weekend, naam pirantha mann - tuesday

  9. #2228
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear RKS ,

    Nice picture to describe the mindset of people


    Dear Ravi sir,

    Thank you for complementing / supporting my writings with your pictures, inputs, its only for you I am disclosing about the movies that I wish to write

    looking forward to work together in future

    Dear Gopal sir,

    Vietnam veedu, Sumathi en Sundari swept me off my feet superb sir

  10. #2229
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    In continuation to the successive blast run in Coimbatore and Trichy, our beloved Bairavar is ready to make a grand march from 11th April @ Mahalaxmi Daily 3 Shows.

    Yes ! ENGAL THANGA RAJA is on his way to Chennai Mahalaxmi to enthrall audience from 11th APRIL ! - Engal Thanga Raja - Grandeur is too ordinary for him !


  11. #2230
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ragulram11 View Post
    Dear RKS ,

    Nice picture to describe the mindset of people

    Dear Ragulram sir,

    Kudos to your writeups ! So is our Hyd Ravi sir and Mr.Gopal ! Excellent writers are at their best as usual !

    Thanks for the compliments too

    Regards
    RKS

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •