-
20th April 2014, 07:37 AM
#3531
Junior Member
Diamond Hubber
Sathyam complex AAyirathil oruvan Monday Ticket Status (21.04.14) Eve.show Status image uploaded by Chokalingam
Thanks Chokalingam sir
-
20th April 2014 07:37 AM
# ADS
Circuit advertisement
-
20th April 2014, 07:39 AM
#3532
Junior Member
Diamond Hubber
Sathyam complex AAyirathil oruvan Monday Ticket Status (21.04.14) Eve.show Status image uploaded by Chokalingam ( this is 40th day )
Thanks Chokalingam sir
-
20th April 2014, 07:44 AM
#3533
Junior Member
Diamond Hubber
-
20th April 2014, 08:21 AM
#3534
Junior Member
Diamond Hubber

அந்த 1984 ஆம் ஆண்டு! சென்னை மீனம்பாக்கம் விமான நிலய எதிர்புறம்! தமிழக மக்களே இடம்பெயர்ந்து கூடியிருந்த காட்சி!
அடடா! வங்கக்கடல்தான் பொங்கி புகுந்ததோ! அப்படி ஒரு மக்கள் கூட்டம்!
ஏன் எதற்கு இப்படி? தமிழகத்தின் நாற்புறமுமிருந்து ஓடி வந்து அளவற்ற ஆவலோடு காத்து நிற்கிறதே! அதுவும் ஆகாயத்தையே அண்ணாந்து பார்த்தபடியே தங்களுக்குள்ளாக பேசிக் கொள்கின்றனர். முன்போலவே இருப்பாரா! அந்த மல்லிகை மலர் சிரிப்பு அவர் ரோஜா இதழில் பூக்குமோ! சந்தனமேனி நிறமாறாமலே இருக்குமோ! அனைவரையுமே இனம் கண்டே களிப்படைந்த காட்சி கிடைக்குமோ!
இப்படி பாமரன் முதல் படித்தவர் வரை ஆச்சரிய, கேள்வி, ஆனந்த குறிகளோடு!
ஒரு அறிவிப்பு! பாம்பே ஏர் இந்தியா விமானம் இன்னும்
சற்று நேரத்தில் விமான நிலையத்தை
அடையும்! ஆ....அதென்ன இடியோசையோ! அடேங்கப்பா! லட்சகணக்கானரோரின் கரவொலிகளால் அந்த
இடமே...பூகம்ப ஓசையை எழுப்பி அடங்க நீண்ட நேரம் ஆனது! கொஞ்ச தூரத்தில் வானில்
அந்த விமானம் புள்ளியாய் தோன்றி நெருங்குகிறது!
தலைவர் வாழ்க!தலைவர் வாழ்க! வள்ளலே வாழ்க! வாழ்வே வருக! விண்ணதிர வாழ்த்து கோஷங்கள் அந்த விமானத்தை தாண்டியும் எதிரொலித்தது! இப்பொது அந்த விமானம் ஒரு அன்னப்பறவையாய் அரைவட்டமடித்து தரையில் கால்பதித்துதன் தடம் ஓடி நிற்கிறது!
மீண்டு வாழ்த்தொலிகள் வான்தாண்டியே! திக்திக்கிட்ட நெஞ்சங்களின் படபடப்பு! பல லட்சவிழிகள் அந்த விமானத்தின் வாசல் நோக்கியே ஆவலாய்!
மெல்லத்திறந்த கதவு வாழ்த்தி வழிய அனுப்பும் விமானப்பணிப்பெண்ணின் புன்னகைப் பணிவு!
ஒவ்வொருவராய் பயணிகள்! எங்கே எங்கே எம் தலைவர் ஆவல் உந்திய மக்கள் அலை!
அது சுனாமிக்கு கூட இல்லை அந்அந்த அதீத சீற்றம்! இங்குமங்குமாக மக்கள் கூட்டம் முண்டி மோதுகிறது! ஆனாலுமே அப்படியே கட்டுக்கோப்பாக!
எந்த அசம்பாவங்களுமின்றி! அதோ! அதோ! ஆம்!
ஆமாம் ஆமாம் அவரேதான்! வாயிலில் தன் மனைவி சகிதமாக! ஆஹா! ஆஹா! அந்த ராமச்சந்திர மூர்த்தியே ஜானகி தேவியோடு தரிசனம்! அதே வழக்கமான பாணியிலேயே தன்னைக் காணத்துடித்து நிற்கும் மக்கள் வெள்ளத்தைப் பார்த்தே கரம் சற்றே உயர்த்தி
அசைக்கிறார்! இதழோரம் அதே மலர் சிரிப்பு! அதே கம்பீரம்! சில நிமிடங்கள் வெடித்து சிதறும் வாழ்த்து கோஷங்கள்! கண்ணுற்ற விழிகளில் காட்டாற்று வெள்ளமென..கண்ணீர் பெருக்கு! கோடிகள் பரிசாக கிடைத்தாலுமே காணாத மகிழ்ச்சி மக்களின் மனங்களில்! இன்னமொரு பிறவி கண்ட அந்த தர்ம தேவனுக்குத்தான் எத்தனை எத்தனை வழிபாடுகள்,பிராத்தனைகள், வேண்டுதல்கள்!
அனைத்து மதங்களுமே ஒரணியிலே நின்று அவரவர்
முறையிலே வேண்டினரே! இதோ அந்த.....ஒன்றுபட்ட பலனை இன்று கண்ணெதிரே தந்துவிட்டரே ஆண்டவன், அல்லாஹ்,
ஏசுபிரான், இதயம் நிறைந்த நன்றிகளை அப்போதே அவரவர் வாய் முணுமுணுக்கிறது ..
நன்றி : ராம் மோகன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th April 2014, 08:26 AM
#3535
Junior Member
Diamond Hubber
JAYA DISCUSSED WITH OUR GOD REGARDING PARLIMENT ELECTION CAMPAIGN
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th April 2014, 08:30 AM
#3536
Junior Member
Diamond Hubber
THE TRUE PUBLIC LEADER
-
20th April 2014, 08:34 AM
#3537
Junior Member
Diamond Hubber
மதங்களை கடந்து வாழும் உன்னத மகான்
Inauguration of Mother Theresa Women's University, Kodaikanal by Mother Theresa in 1984.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th April 2014, 11:04 AM
#3538
Junior Member
Regular Hubber
" யாரிவன் , எங்கிருந்து வந்தான் , என்ன இவன் பழைய கதை என்றெல்லாம் குழம்பும் உன் மனசாட்சி . தெள்ளிய நீருக்கும் , இல்லறத்துப் பெண்ணுக்கும் கள்ளம் புரியாது ; கபடம் தெரியாது .
கண்ணாடி உன்மனம் , அதிலே நீ காண்பது உன் கணவனின் முகம் .
அரண்மனை , அதிகாரம் ஆள் , அம்பு , சேனை இதுதான் நீ காணும்
உலகம் . இன்னொரு உலகம் உண்டு , நான் கண்டது , நீ காணாதது .
காடு சுற்றுவார்கள் , கலப்பை பிடிப்பார்கள் , உழுவார்கள் , விதைப்பார்கள் , அறுப்பார்கள் சுமப்பார்கள் ; ஆனால் உண்ண மட்டும்
உணவின்றித் தவிப்பார்கள் . அத்தகைய மாபெரும் கூட்டத்திலே நானும் ஒருவன் .
படையிலே சேர்ந்தேன் , மக்களுக்குப் பணி புரிய , நாட்டைக்
காக்க . சேர்ந்த பின்பே அறிந்தேன் , ஆற்ற வேண்டிய படை மக்களை அழ வைத்தது ; வாழ வைக்க வேண்டிய படை மக்களை மாள வைத்தது என்று . சண்டை வேண்டாம் , உணவு வேண்டும் ,வாழ்வு வேண்டும் என்று அலறுவார்கள் மக்கள் . அவர்களை அடிக்கச் சொல்வார் தளபதி , அணைக்கத் தாவும் என் மன சாட்சி .
ஏன் இப்படி ? எதற்காக ? நடக்கலாமா ? சரிதானா ? என்று எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன் . கடைசியில் ஒரே ஒரு முடிவுக்கு
வந்தேன் . மக்களின் மதிப்பைப் பெற்ற ஒருவன் நாட்டில் தலைவன் ஆகும் வரை , உங்கள் சர்வாதிகார ஆட்சிக்கு எல்லையே இல்லை என்று உணர்ந்து , புரட்சிக் கூட்டத்திலே புகுந்தேன் .
புரட்சி என்றதும் பயந்து விடாதே ! இது ஆளைத் தீர்க்கும் ஆயுதப் புரட்சி அல்ல . அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை . நாங்கள் தீயிடுவோம் தீமைக்கு , கொள்ளை அடிப்போம் மக்கள் உள்ளங்களை , குவித்து வைத்து அனுபவிப்போம் அறிவுப் பொருட்களை . கத்தி எடுக்காத ரத்தம் சிந்தாத அறிவுப் புரட்சி அது .
பிடிபட்டேன் ஒருநாள் , சிறையில் வதை பட்டேன் . பாராளும் மன்னனாகப் பார்க்கிறாயே இப்போது , அவன் சிறையிலே சிறையிலே
இருந்தபோது , பாராளுவோர் தந்த பரிசுகள் , சவுக்கடி , சூடு !
செல்வந்தன் வீட்டு மாட்டுக்கும் வைத்திய வசதி உண்டு , ஏழை அதனினிலும் இழிந்தவனா உங்கள் நாட்டிலே ? என்று கேட்டதற்காகவா இந்த தண்டனை ? "
Last edited by boominathanandavar; 20th April 2014 at 11:07 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
20th April 2014, 11:07 AM
#3539
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th April 2014, 11:09 AM
#3540
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks