Page 242 of 401 FirstFirst ... 142192232240241242243244252292342 ... LastLast
Results 2,411 to 2,420 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2411
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    [B]SIVAJI SEASON - SONG 4 அந்த நாள் ஞாபகம்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே
    டியர் முரளி சார்,
    தங்களுடைய அந்த நாள் ஞாபகம் - திரைப்பாடல் அலசல் பிரமாதம். எனக்கு மிகவும் பிடித்த நடிகர்திலகத்தின் பாடல்களில் ஒன்று. நட்பின் பெருமைக்கு இன்றளவிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பாடல்களுள் ஒன்று. பாடலின் ஒவ்வொரு வரியும் அர்த்தம் பொதிந்ததாக இருக்கும். அதனை தாங்கள் அழகாக எடுத்துக்கட்டியிருக்கிறீர்கள். ஒரு திரைப்படத்தைப் பற்றி விமர்சனம் மிகவும் விரிவாக, சிறப்பாக அலசுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரு பாடலை எடுத்துக்கொண்டும், அதனை இவ்வளவு விரிவாக, ஏன் அக்கு வேறு ஆணி வேறு என்று சொல்வார்களே அதுபோல அலசியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2412
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    தெய்வ பிறவி-1960
    என்னிடம் விட்டால் ,இந்தியாவின் சிறந்த நடிகர் பட்டம் கீழ்கண்ட படங்களுக்கு கொடுக்க பட்டிருக்க வேண்டும்.(ஆனால் இந்த பட்டமே 1969 இல் தான் துவங்க பட்டது)
    1)பராசக்தி- 1952
    2)அன்னையின் ஆணை-1958
    3)பாக பிரிவினை- 1959
    4)தெய்வ பிறவி-1960
    5)பாவ மன்னிப்பு-1961
    6)கர்ணன்- 1964
    7)மோட்டார் சுந்தரம் பிள்ளை- 1966
    8)தில்லானா மோகனாம்பாள்-1968
    9)தெய்வ மகன்- 1969
    டியர் கோபால் சார்,
    தாங்கள் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மையே. 1950-வாக்கில் சிறந்த நடிகர் பட்டம் வழங்கப்படுவது துவக்கப்பட்டிருந்தால், 1952-ல் அறிமுக நடிகராக பராசக்தியிலேயே அதனை வாங்கி சாதனை படைத்திருப்பார். ஆனால், இப்போது "பாரத்" விருது வாங்கும் நடிகர்கள், திரைப்படத்தைப் பார்த்தபிறகு, நான் இப்போதெல்லாம் நினைத்துக்கொள்வது, நல்லவேளை சிறந்த நடிகர் என்ற பாரத் விருதை இவர் வாங்கவில்லை என்று. இவருக்கு "நடிகர்திலகம்" என்ற ஒரு பட்டம் போதும்.
    Quote Originally Posted by Gopal,S. View Post
    எந்த கோணத்தில் நின்று அலசினாலும் உன்னத படம். சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.,பத்மினி சம்பந்தப்பட்ட உணர்ச்சிமிகு காட்சி ஒன்று மிகவும் பேச பட்டது.
    நடிகர்திலகத்தின் நடிப்பை அருமையான நடையில் வர்ணித்திருக்கிறீர்கள். நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #2413
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  5. #2414
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    Sivaji Season - Song No 4 posted in Paadalgal Palavitham thread. Reproduced here for people who had not seen the other thread.


    SIVAJI SEASON - SONG 4

    அந்த நாள் ஞாபகம்

    UYARNDHA MANIDHAN


    (இந்த பாடலில், வாக்கிங் ஸ்டிக்கை ஒரு துணை பாத்திரம் ஆகவே உபயோக படுத்தி இருப்பார். )


    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே

    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே

    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே

    வசனம்:

    பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்

    இதை தவிர வேறு எதை கண்டோம்

    பாடல்

    புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே

    புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே

    பள்ளியை பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே

    நித்தமும் நாடகம் நித்தமும் நாடகம்

    நினைவெல்லாம் காவியம்

    நித்தமும் நாடகம்

    நினைவெல்லாம் காவியம்

    உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்

    (அவர் சிறு வயது சந்தோஷங்களை விவரிக்கும் போது ,ஒரு விளையாட்டு பொருளாய் கையில் சுழலும். உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற வரிகளில் அவர் உயர்ந்திருக்கும் வாக்கிங் ஸ்டிக்கை, கீழே விடும் அழகே தனி.(வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள் உரையில் போடும் அழகை ஒத்தது )

    (அந்த நாள் ---)

    வசனம்:

    பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்

    கடமையும் வந்தது கவலையும் வந்தது

    பாடல்

    பாசம் என்றும் நேசம் என்றும்

    வீடு என்றும் மனைவி என்றும்

    நூறு சொந்தம் வந்த பின்னும்

    தேடுகின்ற அமைதி எங்கே

    நூறு சொந்தம் வந்த பின்னும்

    தேடுகின்ற அமைதி எங்கே

    அமைதி எங்கே

    (அந்த நாள் ---)

    வசனம்

    அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்

    அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்

    பாடல்

    பெரியவன் சிறியவன்

    நல்லவன் கெட்டவன்

    உள்ளவன் போனவன்

    உலகிலே பார்க்கிறோம்

    எண்ணமே சுமைகளாய்

    இதயமே பாரமாய்
    (டென்ஷன் ஆன வரிகளில் வாக்கிங் stick கழுத்திலும், மிக மிக மன அழுத்தத்திற்கு ஆட்படும் வரிகளில் ,நடக்கவே ஒரு சப்போர்ட் போலவும் பயன்படுத்துவார்.)

    தவறுகள் செய்தவன் எவனுமே

    தவிக்கிறான் அழுகிறான்

    தவறுகள் செய்தவன்

    எவனுமே அழுகிறான்

    எவனுமே அழுகிறான்
    (
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே

    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே


    அன்புடன்
    அந்த நாள் ஞாபகம் பாடல்,தமிழ் பட சரித்திரத்தில் மைல் கல். Dancing இல் ஒரு பகுதி usage of property for effective rendering . என்று ஒன்று உண்டு. இந்த பாடலில், வாக்கிங் ஸ்டிக்கை ஒரு துணை பாத்திரம் ஆகவே உபயோக படுத்தி இருப்பார். அவர் சிறு வயது சந்தோஷங்களை விவரிக்கும் போது ,ஒரு விளையாட்டு பொருளாய் கையில் சுழலும். உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற வரிகளில் அவர் உயர்ந்திருக்கும்.வாக்கிங் ஸ்டிக்கை, கீழே விடும் அழகே தனி.(வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள் உரையில் போடும் அழகை ஒத்தது ) டென்ஷன் ஆன வரிகளில் வாக்கிங் stick கழுத்திலும், மிக மிக மன அழுத்தத்திற்கு ஆட்படும் வரிகளில் ,நடக்கவே ஒரு சப்போர்ட் போலவும் பயன்படுத்துவார்.நண்பனுடன் சம நிலையில் பழ குவதாய் பாவனை செய்தாலும்,அலட்சியமாய் கழுத்தில் மாட்டி இழுப்பார். ராஜுவின் குணாதிசயம் வன்மைக்கு பணிதல்(தந்தை,விமலா, கோபால்),கீழோரிடம் empathy இருந்தாலும், ஒரு அந்தஸ்து தோரணை ஒட்டி பிறந்த குணம் போலும்!!
    Last edited by Gopal.s; 22nd April 2014 at 11:51 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #2415
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  8. #2416
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (22/04/2014) 49 வருடம் கடக்கும் சாந்தி.

    சாந்தி- 1965


    ஒரு சிக்கலான முக்கோணம்.அது வரை பழைய காதலன் (அ) காதலி ,கணவன்(அ) மனைவி ,மனைவியான காதலி (அ) கணவனான காதலன் என்று பயணித்த பாதையில் , புத்தம் புதுசாக இன்னொரு கல்யாணமான பெண்ணிற்கு கணவன் போல் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படும் நண்பன்.

    பீம் சிங் இன் பா இல்லாத அறுபதுகளின் படம்.நிறைய சென்சர் பிரச்னையுடன் வந்து ஹிட் ஆன நல்ல படம்.

    சிவாஜி சுமாராக இளைக்க ஆரம்பித்து,கற்றை முடி நெற்றியில் புரள(பின்னாளில் ரவி இதை நிறைய படங்களில்)புரள கியூட் ஆக இருப்பார்.

    எனக்கு மிக மிக பிடித்த சுசிலாவின் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடலும் ,மிக மிக பிடித்த டி.எம்.எஸ். இன் யாரந்த நிலவு பாடலும் இடம் பெற்ற காவியம்.

    கம்பி மேல் வித்தை போன்ற கதைக்கு நல்ல திரைகதை அமைத்து (லாஜிக் மீறல் ஏராளம்)பீம் சிங் நன்கு இயக்கி ,ஏ.எல்.எஸ். தயாரிப்பு. விஸ்வநாதன் -ராமமூர்த்தி அருமையான இசை.

    காமெரா ரொம்ப சுமார் (நிறைய இடங்கள் வெளிரும்).Seperation lighting மிக மோசம்.(கச்சா பிலிம் தட்டுப்பாடு காரணமோ?)

    உற்சாகமாய் நண்பர்களுடன் வாழ்ந்து பார்க்க வேண்டும் என ஆரம்பித்து ,சீராக சென்று ,உணர்ச்சி கொந்தளிப்பில் ,இடை வேளை க்கு பிறகு சூடாகவே செல்லும்.

    தேவிகா உடன் மெல்லிய காமம் ததும்பும் நெஞ்சத்திலே காதல் காட்சி எனக்கு பிடித்த ஒன்று.அதில் ரெட்டை பின்னலை பிடித்து முகத்தோடு இழைவார் பாருங்கள்.காமத்தில் தோய்ந்த கவிதை.

    அம்மாவிடம் தனது காதலை கொஞ்சம் வெட்கம்,நிறைய ஆசை,சிறிது தயக்கம்,சிறிது எதிர்பார்ப்பு,சிறிது பரபரப்பு என்ற நடிப்பு கும்பமேளா ஒரு இடம்.

    யார் இந்த நிலவில் டி.எம்.எஸ் ஐ விழுங்க துடிக்கும் பாவங்கள். மனசாட்சி காட்சி(உபயம் தஞ்சை வாணன்)நடிகர் திலகத்தின் favourite காட்சி.அருமையாய் நடிக்க வேண்டிய இடத்தில் நடித்து அடங்க வேண்டிய இடத்தில் அடங்கி -இனிமேலும் உங்களுக்கு விளக்க என்ன இருக்கிறது?

    எஸ்.எஸ்.ஆர். எப்போதும் போல் நல்ல சப்போர்ட்.தேவிகா தான் ஏ.பீ.என் படத்து கே.பீ.எஸ். போல் வந்து வந்து மாயமாகி விடுவார்.விஜயகுமாரி கு நானும் ஒரு பெண், பூம்புகார் வரிசையில் மற்றுமொரு முக்கிய படம்.ஆனால்........ எனக்கு என்னவோ விஜயகுமாரியை அசோகன் இன் பெண் உருவாகவே தெரியும்.என்ன உணர்சிகளை காட்டினாலும் செயற்கையான அருவருப்பை மூட்டி ,காமெடி ஆக தெரியும்.அவரை எஸ்.எஸ்.ஆறே விரும்பி இருப்பாரா என்பது சந்தேகம்.இந்த படத்தில் ஓரளவு தேறுவார்.மற்றவர்கள் எம்.ஆர்.ராதா உட்பட வழக்கம் போல்.

    முடிவு எதிர்பார்த்தது.மக்கள் ஏற்றார்கள்.

    பார்க்க வேண்டிய படம் என்பதை விட பார்க்க கூடிய படம் என்றே நான் தீர்ப்பு சொல்வேன்.
    Last edited by Gopal.s; 22nd April 2014 at 01:35 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Likes chinnakkannan liked this post
  10. #2417
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சாந்தி கொஞ்சம் நினைவு தெரிந்த வயதில்- கல்லூரிப் பருவத்தில்- சில தியேட்டர்களில் சென்று டிக்கட் கிடைக்காமல் பின் பரமேஸ்வரியில் ரீ ரன் வந்த போது ஓடிப் போய் பார்த்த படம்..படத்தில் முக்கியமாக ட்விஸ்ட் வரும் வரும் என்று எதிர்பார்த்தால் எல்லா கேரக்டர்களும் மற்றவரைப் புரிந்து கொண்டு அப்படியே புஸ்ஸென ஆக்கி விடுவார்கள்..பிடித்த்தது என்.டி தேவிகா ..பிடிக்க்க்காதது..விஜயகுமாரி (செளகாரின் அக்கா ஆர் தங்கை?)

    நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் - படம் பார்க்கும் முன்னரே எனக்கு மனப்பாடம்..கண்ணதாசன் வரிகளுக்காக(?)அதுவும் ந.தி தேவிகா ஜோடி என்றதும் பார்க்க துடித்திருந்தேன்..படம்பார்த்ததும் ஓரளவு நிம்மதி..

    எஸ்.எஸ்.ஆர். ஸோ ஸோ தான்..ம்ம்

  11. #2418
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    We know your feelings and sentiments very well Thaliva
    we will defintely reflect our answers-- your mind ---by casting our votes properly.

  12. #2419
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like


    இந்த விளம்பரத்தில் கீழ் பக்கத்தில் மேற்கண்ட படத்தின்

    விநியோகிஸ்த்தர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது
    இலங்கை விநியோகஸ்தரின் விபரமும் உண்டு
    கவனித்து பாருங்கள் விபரம் பின்னர்

  13. #2420
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இது தேர்தல் நேரம் :

    எண்ணிப்பார்க்க வேண்டிய விஷயங்கள் இவை !

    1) மக்களை ஆட்டுமந்தைகளாக இன்றும் நினைத்து...செய்வீர்களா ...செய்வீர்களா...என்று அடிமைகள் போல கேள்விகேட்கும் அரசியல் வாதிகள் ..

    ஒரு கணம் மக்கள் ....அதே கேள்வியை சற்று மாற்றி...செய்தீர்களா ? ...செய்தீர்களா ? என்று கேள்விகேட்க கூட வேண்டாம்..

    சற்று, யோசித்து...இந்த அரசியல்வாதி சொன்னபடி செய்தார்களா..? ...செய்தார்களா..? ...என்று எண்ணிப்பார்த்தால் போதும்...!

    2) 1) மின்சார பற்றாக்குறையா ...அதற்க்கு அவர்கள் தான் காரணம்...!
    2) விலைவாசி உயர்வா...அதற்க்கு அவர்கள் தான் காரணம்....!
    3) குழாயில் தண்ணி வரலியா....அதற்க்கும் அவர்கள் தான் காரணம் ...!

    போகிறபோக்கில் பார்த்தால் இவர்கள் வீட்டுக்கு தினமும் பால் பக்கெட் போடுபவன் இரண்டு நாள் வரவில்லையென்றால் கூட அதற்க்கும் இவர்கள் தான் காரணம் என்று கூறும் நாள் வெகு விரைவில் வந்துவிடும் என்பது மட்டும் திண்ணம் !


    இப்படி குறை, காரணத்தை சொல்லியே...காலத்தை ஓட்டும் அரசியல் வாதிகளை புறக்கணிக்கவேண்டும்..!

    மற்றவர்களை குறை கூறி தன்னுடைய இயலாமையை மறைக்கவா இவர்களை மக்கள் ஓட்டு போட்டார்கள் ? அவர்கள் செய்யவில்லஎன்றால் நீங்கள் செய்யுங்கள்...!

    அதற்க்கு ஏன் உங்கள்ளுக்கு கை வரமாட்டேன் என்கிறது என்று மக்கள் நினைக்கவேண்டும் !

    அவர்கள் காரணம் என்றால்..இப்போது ஆட்சியில் இருப்பது அவர்கள் இல்லை...!

    அந்த குறைகளை...நிவர்த்தி செய்யாமல்...குறைகளில் குளிர் காயும் அரசியல் கட்சிக்கு ஓட்டு மீண்டும் போட்டு மக்கள் பலிகடா ஆக கூடாது ..!

    முதலில் பிரதம மந்திரி பதவிக்கு தகுதி இருப்பவர்களை தான் தேர்ந்தெடுக்க வேண்டும்..!

    பக்கத்து மாநிலங்கள், அதன் முதலமைச்சர்கள், இவ்வளவு ஏன்...பிரதமர்...சுப்ரீம் கோர்ட் கூறுவதையே மதிக்காத அரசியல்வாதி இவர்கள் எல்லாம் பிரதமர் கனவு காண்பது அவர்கள் உரிமை..மக்களாகிய நாம் இவர்களை போல அரசியல்வாதிகளை இந்தியாவை ஆள ஒரு போதும் துணை போக கூடாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும் !

    மக்களாட்சி என்றால் என்ன ? மக்களுக்காக ஆட்சி செய்வதுதான் மக்களாட்சி !

    ...ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு ...வந்தவுடன்..மக்களை மதிக்காமல்...மிதிக்கும் அரசியல் !

    வந்தவுடன்...மின்சாரம் இருக்கிறதோ இல்லையோ..அதை சீர் செய்யாமல்..மூன்று மடங்கு மின்சார கட்டணம் உயர்வு...மற்றும் அதன் வைப்பு தொகை உயர்வு...

    சாமான்ய மக்கள் உபயோக படுத்தும் பஸ் ...அதன் கட்டணம் வானளவு உயர்வு....!

    சாமான்ய மக்கள் உபயோக படுத்தும்..பச்சை குழந்தைக்கு கொடுக்கும் பால் ...அதன் விலை மூன்று மடங்கு உயர்வு...

    110 ருபாய் இருந்த ஆவின் வெண்ணை...130 என்று உயர்ந்தது...இப்போது 160 ரூபாயாக உயர்வு...!

    இப்படி எதை எடுத்தாலும் ....நிர்வாக incapability , மற்றும் சீரழிவு...!

    கூடங்குளம் அணு மின் நிலையம் நல்ல நிலையில் செயல்படுத்தி இருந்தால் மின்சார பற்றாகுறை ஓரளவு கட்டுகடங்கி இருக்கும்..! அனால்...கேவலமான அரசியல் காழ்புணர்ச்சியால் , அதை ஒழுங்காக இயங்கவிடாமல் அரசியல் செய்துகொண்டிருப்பது...மக்களை எவ்வளவு துன்புருத்தவேண்டும் என்ற இவர்கள் சிந்தையை காட்டுகிறது !

    முற்றிலுமாக இந்த maturity இல்லாத அரசியல்வாதிகளை மக்கள் அடையாளம் கண்டு

    இலவசத்துக்கும்...பணத்துக்கும் தங்களை தாங்களே விற்காமல்....

    அடிமைகளை போல ..செய்வீர்களா,...என்ற கேள்விக்கு...செய்வோம்....செய்வோம் ...என்று கூட கும்பிடு போடாமல்...

    "நீங்கள் செய்யவில்லை..அதனால் நாங்களும் செய்யமாட்டோம்..." என்று ஒரே சேர இவர்களை ஒதுக்கிவிடவேண்டும்...!

    பிரதமர் நாற்காலி ....மோடி...லேடி...டாடி...என்ற முறையில் இல்லாமல் ...நல்லது செய்பவர்களுக்குதான் என்று நல்ல முடிவெடுத்து ஓட்டு போடவேண்டும் !

  14. Thanks Russellhaj thanked for this post
    Likes Russellhaj liked this post

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •