Page 23 of 402 FirstFirst ... 1321222324253373123 ... LastLast
Results 221 to 230 of 4016

Thread: Makkal thilgam m.g.r. Part-9

  1. #221
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #222
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #223
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #224
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #225
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. #226
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    THALAIVAR ID CARD WHILE HE ADMITTED IN APOLLO HOSPITAL

  8. #227
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    1977 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியன்று ‘இந்து’ ஏடு முதல்வர் எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதியிருந்த ஒரு கட்டுரையில் பின்வருமாறு கூறியிருந்தது.

    ”முதல்வர் பதவி என்பது அதிகாரம் வாய்ந்தது அல்ல. அதிகாரமும் பணபலமும் உள்ள பலரைத் தினமும் ச்ந்திக்க வேண்டிய ஓர் இடமே தவிர அதிகாரம் குவிந்துள்ள இடமல்ல என்று எம்.ஜி.ஆர் கூறியிருப்பதைப் பார்த்தால், அவர் முதல்வர் பதவி என்பது எவ்வளவு கடுமையானது என்பதை உணர்ந்திருக்கிறார் என்பதையே தெளிவு படுத்துகிறது. தம்மை முதல்வர் பதவியில் அமர்த்திய அந்த மக்கள் சக்தியே தமக்கு எல்லாவிதமான எதிர்ப்புகளிலிருந்தும் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார். மக்களிடமிருந்து எந்தக் கருத்து வந்தாலும் அதை அவர் சீர்தூக்கி ஆராய்ந்து ஏற்பார் என்பது உறுதி. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் எம்.ஜீ.ஆர். உற்சாகத்துடன் ஏழை மக்களின் வாழ்வை முன்னேற்ற முடியும் என்னும் நம்பிக்கையில் இருக்கிறார்”என்று கூறியிருந்தது.

    முதல்வர் பதவியேற்ற புரட்சித் தலைவர், அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற தம் சகாக்களை அழைத்து, ”எதைச் செய்தாலும் அதில் ஏழைகளுக்கு என்ன நன்மை கிட்டும் என்பதைக் கருத்தில் கொண்டு செய்யுங்கள்” என்று கூறினார்.

    மாநில அரசுகள் எதற்கும் மத்திய அரசின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இருப்பதை புரட்சித் தலைவர் புரிந்து கொண்டார். மாநில அரசின் வருவாய் முழுவதும் கல்வி, சுகாதாரம், அரசு நிருவாகம் ஆகியவற்றுக்கே போய்விடுகிறது என்பதையும் புரிந்து கொண்டார்.

    மாநிலத்தில் தொழில்கள் வளர வேண்டுமென்றால் மத்திய அரசின் உதவியும் அனுமதியும் முதலீடும் அவசியம்; தனியார் துறையின் ஆரவமும் அதிகரிக்க வேண்டும் என்பதையும் அவர் மிக விரைவிலேயே புரிந்து கொண்டார் என்றாலும் இருக்கின்ற நிதி வசதியை வைத்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்குப் பயன்படுமாறு என்னென்ன திட்டங்களை உருவாக்க முடியும் என்று யோசித்தார்.

    ”ஏழைமக்களை வாட்டும் இரு பிரச்சினைகள் பசிக் கொடுமையும், வேலையில்லாத திண்டாட்டமுந்தான் இவை இரண்டையும் நான் நன்றாய் அறிவேன். என் இளமைக்காலத்தில் இவ்விரண்டையும் நான் அனுபவித்திருக்கிறேன்.!”

    இது முதல்வர் புரட்சித் தலைவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதாகும்.

    இவ்வாறு ஏழைகளின் முக்கிய தேவையைத் துல்லியமாகய் உணர்ந்திருந்த புரட்சித் தலைவர் எடுத்துக்கொண்ட முதல் திட்டம் கிராம மேம்பாட்டுத் திட்டமாகும்.

    1978 ஆம் ஆண்டில் மதுரை மாநகராட்சிக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, இந்திரா காங்கிரஸ் ஆகிய மூன்று அணிகள் மோதின. அந்தத் தேர்தலில் புரட்சித் தலைவரின் அணிக்கே மோதின. அந்தத் தேர்தலில் புரட்சித் தலைவரின் அணிக்கே மகத்தான வெற்றி கிட்டியது. மொத்தமுள்ள 65 வட்டங்களில் (Wards) அ.தி.மு.க.வுக்கு 37 இடங்களும், இந்திரா காங்கிரசுக்கு 9 இடங்களும், கிடைத்தன. ஜனதாக்கட்சி தோல்வியடைந்தது. மதுரை மாநகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது! இதுவும் புரட்சித் தலைவரின் சாதனைகளுள் ஒன்றாகும்.

    1978 ஆம் ஆண்டு செப்டம்பரில் மக்கள தி.மு.க. கலைக்கப்பட்டது. அக்கட்சி
    யில் இருந்த நாவலர், ப.உ.ச, கே.இராஜாராம், செ.மாதவன் முதலியவர்கள் அ.இ.அ.தி.மு.க வில் சேர்ந்தனர்.

    நாவலரைத் அ.இ.அ.தி.மு.க. தலைவர் பதவியிலும், ப.உ.ச.வை பொதுச் செயலாளர் பதவியிலும், மாதவனை கழகப் பொருளாளர் பதவியிலும், அமர்த்திக் கவுரவித்தார். புரட்சித் தலைவர். மாதவனைத் தவிர மற்ற மூவரையும் பின்னர் தம் அமைச்சரவையிலும் சேர்த்துக் கொண்டார்.

  9. #228
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    எங்கோ பிறந்தார், நமக்காக வந்தார், தமிழகத்தை மட்டுமா ஆண்டார்? இல்லை உலக மக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த தன்னிகரற்ற தலைவர் நம் மனதையும் அல்லவா இந்த நிமிடம் வரை ஆண்டு வருகிறார்! இதய தெய்வம் எம்.ஜி.ஆர்!! ஆம் இவர் மறைந்தார் இந்த உலகை விட்டு மட்டுமே, இன்றும் மறையாது வாழ்கிறார் கோடான கோடி அன்பு நெஞ்சங்களில்
    Last edited by Yukesh Babu; 29th April 2014 at 11:40 PM.

  10. #229
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    மீண்டும் வருமா அந்த " பொன்னான " நாட்கள் !

    காவேரி நீர் திறந்து விடப்படவில்லை . இது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் MGR பெங்களூர் சென்று கர்நாடக முதல்வர் குண்டுராவை சந்தித்து பேச செல்கிறார் ( குண்டுராவ் அவர்கள் MGR அவர்களின் தீவிர ரசிகர் ) . சென்னையில் இருந்து MGR அவர்கள் நேராக முதல்வர் குண்டு ராவ் வீட்டுக்கு சென்று "டிபன் கொண்டுவா அம்மா, ஆனால் முதலில் குடிக்க நீர் கொடுங்கள் ( காவேரி ) " என்று அவர் துணைவியாரிடம் கேட்டு வங்கி சாப்பிட்டு விட்டு , குண்டுராவிடம் பேசிவிட்டு கூட்டம் நடக்கும் இடத்துக்கு செல்லாமல் சென்னை திரும்பிவிடுகிறார் . " காவிரியில் நீர் திறந்து விடப்பட்டது "

    ---காங்கிரஸ் கட்சி K.S.அழகிரி MP ( பாலிமர் TV பேட்டி ) ...

  11. #230
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    அரிய படம் !
    வாத்தியார் ......
    சிலம்பாட்டத்தை ராசிக்கு
    மக்கள் திலகம் "MGR"....

    courtesy facebook

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •