Page 266 of 401 FirstFirst ... 166216256264265266267268276316366 ... LastLast
Results 2,651 to 2,660 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2651
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகுல் ராம் ,

    உன்னுடைய ஆய் (வு) கள் எப்படியோ! பாராட்டுகளில் ரொம்பவே maturity தெரிகிறது. keep it up .உனக்கும் ,ரவி சாருக்கும் நல்ல chemistry .


    ராம தாசு சார்,


    உங்கள் பதிவுகளின் தொடக்கம் அருமை.


    சின்ன கண்ணா,


    சிரிப்பு மட்டுமே எங்கள் ரசிகர்களிடம். உன் பதிவை பார்த்து அழுகை வருமா என்ன?


    முரளி ,


    உண்மை உணரும் நேரம்.நாங்கள் உணர்ந்த உண்மை முரளியை விட சிறப்பான பதிவர் இல்லவே இல்லை என்பதை.


    ரவி,


    ரசிக்க கூடிய பதிவுகள். தொடருங்கள்.


    ரவிகிரண் சூர்யா,


    உங்களை பற்றி நான் சொல்லியா தெரிய வேண்டும்?தூள் பரத்துங்கள்.


    நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நிறைய எழுதுங்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2652
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    1000 பதிவிகளை கடந்ததற்கு வாழ்த்து தெரிவித்த ராகவேந்திரன் சார் , ராமஜெயம் சார் , ரவி சார் , சின்ன கண்ணன் சார் , சிவாஜி செந்தில் சார் அனைவருக்கும் நன்றி

    THANKS , SUPER , WELCOME இந்த வார்த்தைகள் தான் நான் அதிகம் பயன்படுத்தியது முதல் 25-30 பதிவிகளில் , அப்புறம் விகிபெடியாவில் இறக்கும் விஷியத்தை எடுத்து பதிவு போடுவது என்று அடுத்த 20 பதிவு


    நெய்வேலி வாசு சாரின் encouragement தமிழில் எழுத , தப்ப்பும் , தவறுமாக எழுதுவதை பெரிதாக எடுத்து கொண்டு discourage செய்யமால் encourage செய்த KC SEKAR சார் , ராகவேந்திரன் சார் , கோபால் சார் , நாயக் சார் , சிவாஜி செந்தில் சார் (இவரை நேரில் சந்தித்தது ஒரு இனிய அனுபவம்), சிவா சார் , சின்ன கண்ணன் சார் , நான் போடும் பதிவிகளுக்கு complementary ஆக எழுதும் ரவி சார்
    திரி வேகம் குறைந்து இருந்த சமயத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்த ரவி கிரண் சூர்யா சார் அனைவருக்கும் நன்றி

  4. #2653
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகுல்,

    வாழ்த்துக்கள்.

  5. #2654
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கோபால் அவர்களே!

    நன்றிகள் பல. தங்கள் எழுத்துக்களை அணுஅணுவாகப் படித்து ரசித்து வருகிறேன். தங்கள் பதிவுகள் திரியோடு முடிந்து போகாமல் திக்கெட்டும் புகழ் பரவியதாய் இருக்க வேண்டும். கண்டிப்பாக புத்தகமாக வெளியிடப் படவேண்டும். உள்ளதை உள்ளபடி உரைக்கும் தங்கள் துணிச்சல் மெச்சத் தகுந்தது.

  6. #2655
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Murali Srinivas. Thanks for the statistics you have furnished regarding the collections of NT films over the other actor's films. Times have changed. Now the other actor's fans are in a confused stage due to the super duper disappointment fiasco of their much tomtommed AO in its rerelease. Time and again NT proves that he is the real crowd puller and ever green bankable icon, as proved by the rerun collections of his timeless classics. It is really amazing that AO was lifted in all theatres within a week except two theatres in Chennai where with lot of hardship and pressure the movie is being shown in an artificial urge to prove their icon's market value! Even this rerun of AO is just a follow up of NT's footsteps after the thunderous victory of Karnan. Now it is time they realized that their icons movies are becoming outdated and unable to pull crowds to theatres.

  7. #2656
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    dear ragul. it was really a nice experience when we met together. Within a short time of our meet, we could exchange our thoughts and almost we were of the same wavelength. Hope in future too we will have frequent meets, amidst our tight schedules. We may try to meet other kovai senthilvel and ramesh babu too. Day by day your writings show the level of your refinement and maturity in dealing with presentations. keep up ragul!

  8. #2657
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பார்த்ததில் பிடித்தது 31

    இந்த series ஆரம்பித்ததில் இருந்து பெரிதாக விவாதிக்கத படங்களை தான் அதிகம் தேர்ந்து எடுத்து எழுதி உள்ளேன் , சில சமயம் அனைவருக்கும் தெரிந்த , ரசித்த படங்களை பற்றியும் எழுதி உள்ளேன் , தொடரும் சில பதிவுகள் நாம் எல்லோரும் ரசித்த என் தம்பி , திருடன் , அன்பளிப்பு படங்களை பற்றி தான்

    முதலில் நான் எழுதி உள்ள படம்

    என் தம்பி

    1968 வருடம் நடிகர் திலகம் back to back ஹிட்ஸ் கொடுத்த வருடங்களில் ஒன்று , கலாட்டா கல்யாணம் , தில்லான மோகனாம்பாள் , என் தம்பி என்று படங்கள் அனைத்தும் வித்யாசமான கதைகள் கொண்ட படங்கள்

    கதை :

    முருகபூபதி. (மேஜர் ) ஒரு ஜமிந்தார் .அவரின் மனைவி இறந்து விடவே இரண்டாம் திருமணம் செய்து கொள்ளுகிறார் . மூத்த மனைவியின் மகன் கண்ணன் (சிவாஜி ) நல்ல குணம் ,அறிவு , ஏழைகளிடம் கனிவு என்று ஜாமீனில் எல்லோராலும் மதிக்க படுகிறார் ஜமீன் விவகாரங்களையும் நிர்வாகம் செய்கிறார் . குதிரையேற்றம், வாள் பயிற்சி போன்றவற்றில் எல்லாம் தேர்ச்சி பெற்ற கண்ணன் நீச்சல் பயிற்சி பெறாததன் காரணம் அவனுக்கு நீரில் ஒரு கண்டம் இருப்பதாக ஜோசியர் சொன்னதை நம்பி அவனது தந்தை நீச்சல் சொல்லி தரவில்லை. இரண்டாவது மனைவியின் மகன் விஸ்வம் (பாலாஜி ) ஊதாரியாக சுற்றிக் கொண்டிருக்கிறான் , கண்ணனுக்கு விஸ்வம் மீது அளவு கடந்த பிரியம் .முருகபூபதி விதவை தங்கையும் (பண்டரி பாய் ) அவரது மகன் சபாபதி (நாகேஷ்) மற்றும் மகள் ராதா (சரோஜா தேவி ) , இவர்களை தவிர தங்கச்சி உமா (ரோஜா ரமணி )

  9. #2658
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணனுக்கு எல்லாம் இருக்கிறது , பணம் , செல்வாக்கு அந்தஸ்து , அவரை விரும்பும் ராதா , தாய் ஸ்தானத்தில் அத்தை , சபாபதி , கண்ணனிடம் அன்பை பொழியும் சிறுமி உமா . கண்ணனுக்கு ஒரே குறை தம்பி விஸ்வத்தின் அன்பு மட்டும் தான் கண்ணனுக்கு கிடைக்கவில்லை , காரணம் விஸ்வம் கண்ணனை தன் எதிரியாக நினைக்கிறார் , சொத்து மீது கண் வைத்து காய் நகர்த்துகிறார் .தம்பியின் மீது மிகுந்த பாசம் கொண்ட கண்ணன் அவனை திருத்த பல முயற்சிகள் மேற்கொண்டும் பலன் ஒன்றுமில்லை. தினமும் குடிக்க பணம் வாங்கி செல்லுகிறார் விஸ்வம் .

    இதை பார்த்து ஜமீந்தார் விஸ்வத்தின் செயல்களை முடக்க்குகிறார் . இதனால் ஆத்திரம் அடையும் விஸ்வம் தன் அப்பாவை சுட துப்பாக்கி எடுக்க , அதிர்ச்சியில் நெஞ்சுவலியால் படுகையில் விழுகிறார்

    சொத்தை தன் மூத்த மகன் கண்ணனும் தங்கை அவர் தங்கை பண்டரி பாய் நிர்வகிக்கும் பொறுப்பை எழுதிவைக்கிறார்
    தன் மூத்தமகன் கண்ணனுக்கு விஸ்வதினால் ஆபத்து வரும் என்று யூகித்து யாருக்கும் தெரியாத தன் குடும்ப ரகசியம் ஒன்றை கண்ணனிடம் சொல்லி தனக்கு பிரச்சனை வரும் பொது இதை சொல்லி தன்னை தற்காத்து கொள்ள சொல்லுகிறார்

  10. #2659
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    முருகபூபதி இறந்து போக , சொத்து தன்னுக்கு இல்லை என்று அறிந்து விஸ்வம் முதலில் ஆத்திர பட்டாலும் பிறகு தந்திரமாக நல்லவன் போல் நாடகம் ஆடுகிறார் , எஸ்டேட் பங்களாவில் வேலைக்கார பெண்ணிடம் பழகுவது பற்றி புகார்கள் வர, கண்ணன் அதைப் பற்றி விசாரிக்கிறான். அதற்கு முதலில் சரியாக பதில் சொல்லாமல் பிறகு நாடகம் ஆடுகிறார் . கண்ணனுக்கு தன் தம்பி கிடைத்த திருப்தி
    விஸ்வம் ஒரு நாள் தங்கள் தந்தைக்கு ஒரு நினைவிடம் அமைப்பதற்கு பக்கத்திலுள்ள தீவில் இடம் பார்த்திருப்பதாகவும் அதை பார்க்க வர வேண்டும் என்று சொல்லி கண்ணனை அழைத்துப் போகிறான். படகில் செல்லும் பொது கண்ணனை தவிக்க விட்டு தான் மட்டும் குதித்து தப்பித்து கொள்ளுகிறார் . வீட்டில் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்க விஸ்வமும் அவர்களுடன் சேர்ந்து சோகமாக இருப்பது போல் நடிக்கிறான்


    இந்த நேரத்தில் எஸ்டேட் வேலைக்காரன் ஒருவன் சபாபதியிடம் வந்து பக்கத்து கிராமத்தில் ஒரு நாடக குழு முகாமிட்டிருப்பதாகவும் அதில் கள்ளபார்ட் போடும் நடிகன் கண்ணனைப் போலவே இருப்பதாக சொல்கிறான். நாடகத்தை பார்க்க செல்லும் சபாபதி நாடக நடிகன் கந்தப்பாவை பார்த்து பிரமித்துப் போகிறான். காரணம் அச்சு அசல் அவன் கண்ணனைப் போலவே இருப்பதால். சபாபதி கந்தப்பாவை கண்ணாக மாற பயிற்சி கொடுக்கிறார் . அதில் வெற்றி பெறுகிறார் , கந்தப்பா, கண்ணனாக உள்ளே நுழைய அனைவருக்கும் மகிழ்ச்சி , விஸ்வத்துக்கு அதிர்ச்சி

  11. #2660
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வந்திருப்பவர் தன் அண்ணன் இல்லை என்பதை பல முறை நிரூபிக்க முயற்சி செய்கிறார் , கத்தி சண்டை , சாட்டையால் பூவை எடுப்பது என்று வைக்கும் அத்தனை பரீட்சைகளிலும் வெற்றி பெறுகிறார் கந்தப்பா. இவரை ஜெயிக்க முடியாது என்று பணம் தருவாதாக ஆசை காட்டும் விஸ்வதிடம் பேசும் பொது கேட்டு விடும் பண்டரி பாய் அவனை தவறாக புரிந்துக் கொண்டு விடுகிறாள். சபாபதியும் உண்மையை சொல்ல, தான் கந்தப்பா அல்ல கண்ணன்தான் என்ற உண்மையை கண்ணன் சொல்ல யாரும் நம்ப மறுக்கிறார்கள். தான் தான் கண்ணன் என்றும் ஆற்றில் விழிந்த உடன் , நாடக குழு காப்பாற்றியதாகவும், அதன் மூலமாகதான் தான் உயிர் பிழைத்து வந்ததாகவும், குடும்பத்தில் உள்ள குழப்பங்களை தீர்க்கவே வேறு வேடத்தில் வந்ததாகவும் கண்ணன் சொல்வது எடுபடாமல் போகிறது.

    தன் தந்தை தன்னிடம் சொன்ன ரகசியம் நினைவுக்கு வர , (தன் குடும்ப நகை பற்றிய ரகசியம் ) இந்த ரகசியத்தை சொல்ல அதை அடைய விஸ்வமும் துடிக்கிறார் , அதில் விஸ்வத்துக்கு ஆபத்து வர , கண்ணன் விஸ்வதை காப்பாற்ற , விஸ்வம் திருந்த

    சுபம்

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •