-
9th May 2014, 11:37 AM
#871
Junior Member
Diamond Hubber
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா !
இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா - வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா !
விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும் - மனம்
வெந்திடும் தோட்டக் காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் பல வரட்டு கீதமும் பாடும்
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா !
அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தைக் குரங்கு தாவும் - அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும் - சிலர்
குணமும் இது போல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா !
-
9th May 2014 11:37 AM
# ADS
Circuit advertisement
-
9th May 2014, 12:01 PM
#872
Junior Member
Diamond Hubber
எனக்கு சோறு போட்டது எம்.ஜி.ஆர்., திரைப்பட கல்லூரி - பி.சி.ஸ்ரீராம்!
சென்னை, தரமணியில் இயங்கி வருகிறது எம்.ஜி.ஆர்., திரைப்பட கல்லூரி. இங்கு சுமார் 200 மாணவர்கள் படித்து வருகிறார்கள். நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு உள்ளிட்ட பல பிரிவுகளில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படித்த ஆர்.கே.செல்வமணி, ஜெயம் ராஜா உள்ளிட்ட பலர் இப்போது சினிமாவில் பிரபலமாகி உள்ளனர். இந்நிலையில் இத்திரைப்பட கல்லூரியின் ஆண்டுவிழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கலந்து கொண்டார்.
விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, மாணவர்களுக்கு சான்று வழங்கி கவுரவித்தார் பி.சி.ஸ்ரீராம். பின்னர் அவர் பேசுகையில், இந்த கல்லூரியின் ஆண்டு விழாவில் நான் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் நானும் இந்த கல்லூரி மாணவன் தான். இங்குதான் படித்தேன். எனக்கு சோறு போட்டு வாழ்க்கையை கொடுத்தது இந்த கல்லூரி தான். இந்தளவுக்கு நான் உயர்ந்ததற்கு இந்த கல்லூரியும் முக்கிய காரணம் என்று பேசினார்.
courtesy dinamalar
-
9th May 2014, 12:06 PM
#873
Junior Member
Platinum Hubber
22.12.2013 - பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை
பூங்கா நகர் பெங்களூரில் மக்கள் திலகத்தின் ''நினைத்ததை முடிப்பவன் ''
மலர் மாலை சூட்டி மக்கள் வெள்ளத்தில் , சூப்பர் திரை அரங்கம் திரு விழா
காட்சியாக மக்கள் திலகத்தின் ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் நீந்திட வைத்த
மக்கள் திலகம் அவர்களின் சாதனை துளிகள் .

பெங்களுர் நகரில் பிரதான சாலை போக்குவரத்து நிறைந்த இடத்தில் பிற்பகல்
2மணிமுதல் திரை அரங்கில் ரசிகர்கள் வெள்ளம் அலை மோதி தொடர்ந்து
மலர் மாலைகள் -ராட்சத மலர்மாலைகள் - பட்டாசு வெடித்து மேல தாளத்துடன்
ஊர்வலமாக வந்து திரை அரங்கை சுற்றி ரசிகர்களும் - பொது மக்களும் ஆயிரக்கணக்கில் கூடி மகிழ்ந்தார்கள் .
மாலை 5 மணி முதல் 7 மணி வரை கட்டுகடங்காத கூட்டத்தை சமாளிக்க
இரண்டு போலீஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டது .
மறைந்த ஒரு நடிகரின் படம் அதுவும் 38 ஆண்டுகள் முன்பு வந்த ஒரு பழைய
படத்திற்கு இந்த அளவிற்கு பிரமாண்ட மாலைகள் - ஊர்வலம் - ஆயிரக்கணக்கில்
ரசிகர்கள் - சாலை போக்குவரத்து ஸ்தம்பிப்பு . பொது மக்கள் வியந்து பாராட்டி சென்ற
இனிய சம்பவங்கள் நடந்தது
உலக வரலாற்றில் இத்தகைய சாதனைகள் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள்
உண்டாக்குவது மக்கள் திலகத்தின் ரசிகர்களின் பெருமைக்கு பெருமை அல்லவோ ?
பெங்களுர் எம்ஜிஆர் ரசிகர்கள் மட்டுமலாமல் சென்னை - வேலூர் - கோவை - சேலம்
போன்ற நகரங்களிலிருந்தும் மக்கள் திலகம் ரசிகர்கள் பெங்களுர் வந்திருந்து
சிறப்பித்தார்கள் . பல மொழி பேசும் மக்களும் அந்நிய நாட்டு சுற்றலா பார்வையாளர்களும் மக்கள் திலகத்தின் செல்வாக்கை கண்டு வியந்து பாராட்டியது சிறப்பு அம்சமாகும் .
Last edited by esvee; 9th May 2014 at 12:08 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th May 2014, 12:13 PM
#874
Junior Member
Diamond Hubber
நினைத்ததை முடிப்பவன் - இடைவிடாது மறுவெளியிடுகளில் வலம் வந்து கொண்டுருக்கும் தலைவரின் பல படங்களில் இதுவும் ஒன்று
-
9th May 2014, 12:17 PM
#875
Junior Member
Diamond Hubber
நினைத்ததை முடிப்பவன் - தனியார் தொலைகாட்சிகளில் கூட இடைவிடாது ஒளிபரபபடுகிறது .
நினைத்ததை முடிப்பவன் - 1990 வாக்கில் நான்கு திரையரங்கில் வெளியீட்டனர் . ஸ்டார், ஸ்ரீனிவாசா , பாரத் மற்றும் திருவொற்றியூர் வெங்கடேஸ்வரா
-
9th May 2014, 12:19 PM
#876
Junior Member
Diamond Hubber
திரையங்குகளில் ஒனஸ் மோர் அதிகம் கேட்ட பாடல்களில் இந்த படத்தின் வரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து என்ற பாடல்
-
9th May 2014, 12:29 PM
#877
Junior Member
Diamond Hubber
திரையங்குகளில் ஒனஸ் மோர் அதிகம் கேட்ட பாடல்களில் இந்த படத்தின் வரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து என்ற பாடல் in HINDI VERSION SACHAA JHUTHA STARRING RAJESH KHANNA
-
9th May 2014, 12:34 PM
#878
Junior Member
Diamond Hubber
-
9th May 2014, 12:35 PM
#879
Junior Member
Diamond Hubber
-
9th May 2014, 12:36 PM
#880
Junior Member
Diamond Hubber
POO MALAI THOOVI SONG ( FIRST TIME IN MOVIE)
Bookmarks