Page 100 of 402 FirstFirst ... 50909899100101102110150200 ... LastLast
Results 991 to 1,000 of 4016

Thread: Makkal thilgam m.g.r. Part-9

  1. #991
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    உலகம் சுற்றும் வாலிபன் - 42 வது ஆண்டு துவக்கம் .-சிறப்பு பார்வை
    ----------------------------------------------------------------------------------------------------------------------

    1.உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் சந்தித்த சோதனைகள் ஏராளம் .

    2.உலகம் சுற்றும் வாலிபன் சாதித்த/சாதிக்கின்ற /சாதிக்க போகின்ற
    சாதனைகள் அதைவிட ஏராளம்.

    3.உ.சு.வாலிபன் தயாரிப்பு பற்றி , பொம்மை மாத இதழில் திரைகடலோடி
    திரைப்படம் எடுத்தோம் என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
    ஏற்கனவே பேட்டி அளித்துள்ளார்.

    4. தற்போது தினமலர் வாரமலரில் , ஞாயிறு தோறும் உ.சு. வாலிபன் தயாரான விதம் பற்றி புரட்சி தலைவர் எழுதிய "நான் ஏன் பிறந்தேன் "
    தொடரிலும் செய்திகள் வெளியாகின்றன.

    5. 1973ல் படம் வெளியாகும் முன்பே தி.மு. க.வினர் வரும் . ஆனால்
    வராது. என்றனர்.வந்தால் சேலை கட்டிக்கொள்ள தயார் என மதுரை முத்து அறிக்கை வெளியிட்டார். பின்னாளில் அதே மதுரை முத்துவை
    புரட்சி தலைவர் தன வசமாக்கி அவருக்கு பதவி அளித்து பெருமை
    சேர்த்தார் என்பது வேறு விஷயம்.

    6.தி.மு.க.வினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில் சென்னை
    ஏழுகிணறு (வடசென்னை) பகுதியில் நடந்த பொதுகூட்டத்தில் 1973 மார்ச் மாதத்தின்போது , கூட்டத்தில் இருந்த பகுதியினர் ஆர்வமிகுதியில் உ.சு.வாலிபன் பற்றி கேட்ட போது மே மாதம் 2 வது வாரம் உ.சு. வாலிபன் திட்டமிட்டபடி வெளியாகும் என்று அறிவித்தபோது மக்கள் இடையே எழுந்த மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க வெகுநேரமானது.

    7.சத்யா ஸ்டுடியோவில் பின்னணி இசை சேர்ப்பு நடக்கும்போது, தி.மு.க. வின் அடக்கு முறை, அராஜக ஆட்சியில் வேண்டுமென்றே அந்த பகுதியில் மின்வெட்டை அதிகபடுத்தி மின் விநியோகத்தை சராசரி
    அளவைவிட குறைந்த அளவில் அளித்து தொல்லைகள் கொடுத்த காலமும் உண்டு.

    8. உ.சு. வாலிபன் வெளியாகும் தருணத்தில் சுவரொட்டிகளுக்கு
    மாநகராட்சிகள் வரி அதிகம் விதித்தால் சுவரொட்டிகள் ஓட்ட முடியவில்லை. முதல் வெளியீட்டில் சுவரொட்டி விளம்பரம் இல்லாமல் ஓடிய ஒரே படம்

    9. உ.சு. வாலிபன் வெளியான பெருவாரியான் அரங்குகளில், மின்வெட்டு
    அமுலில் இருந்த காரணத்தினால் , ஜெனெரேட்டர்கள் பொருத்தப்பட்டு
    படம் வெளியானது. மின்வெட்டை பற்றி வாய் கிழிய பேசும் தி,மு.க. வினர் இந்த திரைப்படம் வெளியிடாமல் இருக்க அந்த காலத்தில்
    எவ்வளவு நெருக்கடி கொடுத்தார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.

    10. திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் படத்தை திரையிட்டால் பல
    தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும் என பகிரங்கமாக அரசு இயந்திரம்
    பயன்படுத்தப்பட்டது.

    11. எக்ஸ்போ 70-ல் படமாக்கப்பட்ட ஒரே தமிழ் படம்.

    12. மலேசியா, சிங்கப்பூர் , ஜப்பான், பாங்காக் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம்.

    13. 1973 க்கு முன்பும் , பின்பும் வெளியான/வெளியாகின்ற /வெளியாகபோகிற அனைத்து தமிழ் திரைப்படங்களின் வசூலையும் ,
    பார்வையாளர்கள் எண்ணிக்கையிலும்/ திரை அரங்குகளில் ஓடும்
    நாட்களையும் முறியடித்த /முறியடிக்கின்ற/முறியடிக்க போகின்ற
    ஒரே சாதனை திரைப்படம்.

    14.எப்போது திரையிட்டாலும் வசூலை வாரி குவிக்கும் விநியோகஸ்தர்களின் அமுதசுரபி.

    15.தமிழ் திரைப்பட உலகில் முதன் முறையாக 25 அரங்குகளுக்கு மேலாக 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது

    16.சென்னை தேவி பாரடைசில் அட்வான்ஸ் புக்கிங்கில் 160 காட்சிகள்
    தொடர்ந்து அரங்கு நிறைந்தது. கரண்ட் புகிங்கில் தொடர்ந்து 227 காட்சிகள் அரங்கு நிறைந்தது.

    17.அகஸ்தியா , உமா, வில்லிவாக்கம் ராயல் ஆகிய அரங்குகளிலும்
    தொடர்ந்து 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்தது.

    18.மதுரை மீனாட்சியில் 250 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள்.

    19.25 அரங்குகள் மேல் 100 நாட்கள் ஓடிய படம்.

    20.சென்னை தேவி பாரடைஸ் 182 நாட்கள். அகஸ்தியாவில் 175 நாட்கள்
    (வட சென்னையில் தினசரி 3 காட்சிகளில் ஓடிய ஒரே படம் )
    உமாவில் 112 நாட்கள். வில்லிவாக்கம் ராயலில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம். திருச்சி பேலஸ் -203 நாட்கள். மதுரை மீனாட்சியில் 217 நாட்கள் பெங்களுரு -3 அரங்குகளில் 105 நாட்கள். இலங்கையில்
    கொழும்பு கேபிடல் -200 நாட்கள்..

    21.மறு வெளியீடுகளில் விநியோகஸ்தர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

    22.பாடல்களில் / பின்னணி இசையில் பிரம்மாண்டம்.

    23.முதல் பாடலே (டைட்டில் ) அசத்தலானது. நமது வெற்றியை நாளை
    சரித்திரம் சொல்லும் - 1973-ல் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில்
    வெற்றி. உ.சு. வாலிபன் தயாரிப்பு /படமாக்கம் / வெளியீடு வெற்றி
    என்று மக்கள் திலகம் ரசிகர்களுக்கும், புரட்சி தலைவர் தொண்டர்களுக்கும் இரட்டை இலையில் விருந்தளித்தார்.

    தொடரும் ............


    17.

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #992
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    8000 Excellent Postings. Congratulations our dear Vinoth sir, Expecting more and more from you.Thanks.
    With regards,
    V.Jaisankar & J.Vallinayagam.
    Last edited by jaisankar68; 11th May 2014 at 02:04 PM.

  5. #993
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Professor sir,
    Excellent posting. Ulagam sutrum valiban Theatre song book. Never seen before. Thank you for your valuable postings.

  6. #994
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    திரைகடலோடி திரைப்படம் எடுத்தோம். விஜயா பதிப்பகம் மற்றும் வாரமலர் பதிவுகள் மூலம் மையம் வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான கட்டுரை தான் என்றாலும் பொம்மை புத்தகத்திலிருந்து புகைப்படங்களுடன் அன்பு நண்பர் வினோத் அவர்களுடைய பதிவுகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. முழு தொடரையும் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம். பிரம்மாண்டத்தின் பிரம்மாண்டம் என்ற தலைப்பு இந்தக் கட்டுரைத் தொடருக்கும் பொருந்தும் . நன்றி.

  7. #995
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் திரியில் என்னுடைய 8000 பதிவுகளை பாராட்டி இனிய வாழ்த்துக்களை தெரிவித்த இனிய நண்பர்கள் திரு ரவி [ ஹைதராபாத் ] திரு ரவிச்சந்திரன் , திரு செல்வகுமார் , திரு ஜெய்சங்கர் அவர்களுக்கு
    எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்

  8. #996
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த படங்கள் - ஒரு வரி விமர்சனம் .

    ராஜகுமாரி - வாள் வீச்சு அபாரம் .ராஜகுமாரிக்கு ஏற்ற ராஜகுமாரன் .

    பைத்தியக்காரன் - சற்று வித்தியாசனமான படம் .

    அபிமன்யு - பார்க்கலாம் .

    ராஜமுக்தி - சுமார்

    மோகினி - மாயாஜால் படம் .

    ரத்னகுமார் - சுமார்

    மருத நாட்டு இளவரசி - இரண்டு கைகளில் மக்கள் திலகம் வாள் ஏந்தி போடும் காட்சி - அருமை .

    மந்திரிகுமாரி - முழுக்க அரசியல் படம் .

    மர்மயோகி - எல்லோரும் வியந்தார்கள் .

    சர்வதிகாரி - வீழ்த்தினார் .

    அந்தமான் கைதி - நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் .

    குமாரி - நன்றாக இருந்தது .

    என்தங்கை - பாசமான நடிப்பிற்கு மற்றவர்களுக்கு வழி காட்டி .

    பணக்காரி - வித்தியாசமான படம் .

    ஜெனோவா - புதுமை

    மலைக்கள்ளன் - நட்சத்திர வசூல் நாயகன் .

    கூண்டுக்கிளி - மக்கள் இதயங்களில் எம்ஜிஆர் ...

    குலேபகாவலி - இஸ்லாமிய கதையில் மனம் கவர்ந்தார் .

    அலிபாபாவும் 40 திருடர்களும் - மீண்டும் நிரூபித்தார் .

    மதுரை வீரன் - தமிழ் பட உலகில் பல சாதனைகள் புரிந்த வீரன்

    தாய்க்கு பின் தாரம் - அபார நடிப்பில் எம்ஜிஆர் .

    சக்கரவர்த்தி திருமகள் - வெற்றி கண்டார் .

    ராஜராஜன் - வாள் சண்டை ஒன்றே போதும் .

    மகாதேவி - ஜெக ஜோதி .

    புதுமைபித்தன் - பலரும் எம்ஜிஆர் பித்தர்கள் .

    நாடோடி மன்னன் - நிரந்தர மன்னன் .

    தாய் மகளுக்கு கட்டிய தாலி - புதுமை .

    பாக்தாத் திருடன் - மனங்களை திருடினான் .

    ராஜாதேசிங்கு - வாழ்ந்தார் .

    மன்னாதி மன்னன் - நம் எல்லோருக்கும் .

    அரசிளங்குமரி - பொருத்தமானவள் .

    திருடாதே - ஒரு சமுதாயமே மாறியது .

    நல்லவன் வாழ்வான் - வாழ்ந்து கொண்டிருக்கிறார் .

    தாய் சொல்லை தட்டாதே - 1961 வசூலில் பிரளயம் .

    ராணி சம்யுக்தா - பிரமாதம் .

    மாடப்புறா - கண்ணுக்கு அழகு

    தாயை காத்த தனயன் - 1962ல் வசூல் மழை .

    குடும்ப தலைவன் - தங்கமானவன் .

    பாசம் - இன்னும் தொடர்கிறது .

    விக்கிரமாதித்தன் - பன் மொழி பகலவன் .
    Last edited by esvee; 11th May 2014 at 08:39 PM.

  9. #997
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Esvee sir,

    8000 postings - ovonrum thangathil udaleduthu sandhanathil uyirkoduthu maanikyam endru koorum padhivo.....neengal aezhu loga mannavanin uyiro ...!

    Poattigal irundhaalum....namakkul endrum poraamai ellalavum kidayaadhu !

    Vaazhga ungal thannalamatra thondu ! Valarga ungal narpani...!

    Nigazhvugal...padhivugal....kalangal neengal kadandha pala varudamaaga neril kandaalum....ungal tharaasu endrum oru pakkamaaga saayadhu enbadharkku pala udhaaranangal...

    8 aayiram.....latchangalaaga ...kodigalaaga pala nalla ullangaludan ungalukku vazhththu solvadhil perumai anandham padugiraen..!

    RKS

  10. #998
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    உலகம் சுற்றும் வாலிபன் - 42 வது ஆண்டு துவக்கம் .-சிறப்பு பார்வை

    20.சென்னை தேவி பாரடைஸ் 182 நாட்கள். அகஸ்தியாவில் 175 நாட்கள்
    (வட சென்னையில் தினசரி 3 காட்சிகளில் ஓடிய ஒரே படம் )
    Cant understand.....

    In North Chennai Engaveettu Pillai, Thiruvilaiyaadal, Mattukkara Velan, Thangapadhakkam were run Silver Jubilee in daily three shows. (I mean Before 1977. idhai mukkiyamaaga sollanum).

  11. #999
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    41 ஆண்டுகள் -ஆனாலும் உலகம் சுற்றும் வாலிபன் உருவாக்கிய தாக்கம் .இன்னும் தொடர்கிறது .

    மக்கள் திலகம் தோன்றும் அறிமுக காட்சியில் அவருடைய இளமை தோற்றமும் , ஆராய்ச்சி கூடம் - மின்னலின் சோதனை கூடமும் - பிரமாண்ட இசை ரசிகனை ஆர்வத்தின் உச்சிற்கே அழைத்து சென்றது .மக்கள் திலகத்தின் முதல் வசனமே சக்சஸ் ..சக்சஸ் ..சக்சஸ் ..என்று மகிழ்ச்சியாக கூறும்போதே படத்தின் வெற்றி உறுதியாகிவிட்டது .
    மாநாட்டில் ஆராய்ச்சி பற்றி மக்கள் திலகம் விவரிக்கும்போது நடை பெறும் வாதங்கள் பின்னர் மின்னல் சோதனை நிரூபிக்கும் இடமும் , இசையும் புதுமையாக இருந்தது .


    அசோகனிடம் தன்னுடய ஆராய்ச்சிக்கு மறு உயிர் தர முடியாது என்ற திட்டவட்டமாக கூறுமிடத்தில் எம்ஜிஆரின்
    நடிப்பு பிரமாதம் .மூன்றாவது உலக போர் எங்கு தோன்றுமோ எப்படி வெடிக்குமோ என்று அச்சத்துடன் மக்கள்திலகம் எழுப்பும் வினா அருமை .
    மக்கள் திலகம் எம்ஜிஆர் - மஞ்சுளா முதல் சந்திப்பு - உரையாடல்கள் - அசோகன் குறிப்பு எடுக்கும் போது ஏமாறும் காட்சி - பின்னர் லில்லி மலருக்கு கொண்டாட்டம் - பாடல் காழ்மீர் - சிங்கப்பூர் என்று மாறி மாறி வரும் கண்ணுக்கு விருந்தான காட்சிகள் .பாடல் முடிவில் மக்கள் திலகத்தை அசோகன் துப்பாக்கியால் சுடும் காட்சி .. அடுத்த காட்சியில் தம்பி ராஜாக எம்ஜிஆர் ஓட்டலில் அறிமுக காட்சியில் பின்னணி இசை சூப்பர் .மனோகருடன் மோதும் சண்டை காட்சி புல்லரிக்கும் அளவிற்கு இருந்தது .

    நாகேஷின் அறிமுக காட்சி - மிகவும் அமர்க்களம் . சிங்கப்பூர் டைகர் பாம் கார்டனில் படமாக்கப்பட்ட சிரித்து வாழ வேண்டும் பாடல் - இனிமை . பரத நாட்டியத்துடன் அறிமுகமாகும் சந்திரகலாவின் பல்வேறு நடனங்கள் - ஜஸ்டின்
    மிரட்டலை தொடர்ந்து எம்ஜிஆர் அவருடன் மோதும் சண்டை கைத்தட்டல் பெறுகிறது .

    துப்பாக்கி சூட்டிலிருந்து உயிர் பிழைத்த எம்ஜிஆர் புத்தி சுவாதீனம் இழந்து கடலோரம் நிற்கும் காட்சியும் பின்னர் அவருடைய காதலி மஞ்சுளாவை அசோகன் தந்திரமாக கடத்தி வந்து கடலோரம் நிற்கும் எம்ஜிஆரிடம் சேர்க்கும் காட்சியும் தொடர்ந்து வரும் நிலவி வரும் பெண்ணாகி பாடல் - இலக்கிய பாடல் .

    ரகசிய குறிப்பு உள்ள ராபின்சன் மாளிகையில் மனோகருடன் பேசிக்கொண்டே எம்ஜிஆர் தப்பிக்கும் காட்சி சூப்பர் .
    பாங்காக் நகரில் படகு துரத்தும் காட்சி - எம்ஜிஆரின் சாதுரியமான முறையில் தப்பிக்கும் இடமும் மெல்லிசை மன்னரின் இசையும் மனதை மயக்க வைத்தது . புளோடிங் மார்கெட் காட்சியில் தாய்லாந்து நடிகை மேத்தா அறிமுகம் காட்சி - அவருடைய வீட்டில் நடை பெறும் விருந்து காட்சி - எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த
    '' பச்சைக்கிளி முத்த்துச்சரம் '' பாடல் - பரவசத்திற்கு எல்லையே இல்லை .

    கடலில் நடுவே படமாக்கப்பட்ட ''பன்சாயீ '' பாடல் படமாக்கப்பட்ட விதம் மக்கள் திலகத்தின் சிறப்பான இயக்கத்திற்கு ஒரு எடுத்துகாட்டு .மஞ்சுளாவுடன் அசோகன் எல்லை மீறி நடக்கும் போது மக்கள் திலகம் அவரை காப்பாற்றி அசோகனை துவம்சம் செய்யும் இடம் பிரமாதம் .

    புத்த மடத்தில் மக்கள் திலகம் - நம்பியார் - புத்தபிட்சு சந்திக்கும் காட்சிகள் - உரையாடல்கள் - தொடரும் நம்பியார்
    -எம்ஜிஆர் சண்டை காட்சி - நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அமைந்த பிரமாண்ட அரங்கம் - புதுமையான
    சண்டை காட்சி .

    லதாவின் கனவு பாடல் - அவள் ஒரு நவரச நாடகம் - மறக்கமுடியாத காதல் பாடல் .

    டோக்யோ நகர வீதி காட்சிகள் - எக்ஸ்போ -70 - உலகம் அழகும் கலைகளின் சுரங்கம் பாடல் - இறுதி கட்ட ஸ்கேடிங்
    சண்டை காட்சிகள் என்று 30 நிமிடம் நம்மை மிரள வைத்தது மக்கள் திலகத்தின் சாதனை .

    மொத்தத்தில் இந்திய திரைப்பட வரலாற்றில் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக படத்தை தயாரித்து , நடித்து , இயக்கி ,பல சோதனைகளை முறியடித்து மக்கள் - ரசிகர்கள் துணையுடன் வெற்றி கண்ட உலகம் சுற்றும் வாலிபன் நிச்சயம் வரலாறு படைத்த வாலிபன் .

    41 ஆண்டுகள் ஆனாலும் புத்தம் புது படம் போல் இருப்பது எம்ஜிஆருக்கே உரிய இளமை - இனிமை -புதுமை இந்த
    உலகம் சுற்றும் வாலிபன்
    Last edited by esvee; 11th May 2014 at 08:03 PM.

  12. #1000
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    நீண்ட நாட்களுக்கு பிறகு உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பாட்டு புத்தகத்தை காணும் வாய்ப்பை தந்த இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி . படம் வெளியான முதல் நாளிலே எல்லா பாட்டு புத்தகங்களும் விற்பனை ஆனதிலும் சாதனை படைத்தான் உலகம் சுற்றும் வாலிபன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •