-
17th May 2014, 02:27 PM
#1251
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகத்துடன் பத்மினி நடித்த படங்கள் 10. 1. மோகினி படத்தில் நடனம் மட்டும் ஆடுவார்.மருதநாட்டு இளவரசி படத்திலும் நடனக் காட்சியில் மட்டும் தோன்றுவார்.1956இல் வெளியான மதுரை வீரன் படத்தில் தான் முதல் முதலாக ஜோடி சேர்ந்தார். 1957இல் ராஜராஜன் .1960இல் ராஜா தேசிங்கு.1960 ம் ஆண்டு மன்னாதி மன்னன் ,1961இல் அரசிளங்குமரி படத்தில் தங்கையாக நடித்தார்.1962இல் ராணி சம்யுக்தா.1962ம் ஆண்டு விக்ரமாதித்தன் திரைப்படம்.ஏறத்தாழ 9 வருடங்கள் கழித்து மீண்டும் ரிக்க்ஷாகாரன் படத்தில் மஞ்சுளாவின் பாதுகாவலராகவும் நடித்தார்.
-
17th May 2014 02:27 PM
# ADS
Circuit advertisement
-
17th May 2014, 02:28 PM
#1252
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் ,சக்கரபாணி,பி.எஸ்.வீரப்பா ,காசிலிங்கம் மு.கருணாநிதி ஆகிய ஐவரும் இணைந்து1953இல் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் மேகலா பிக்சர்ஸ்.மேகலா பிக்சர்ஸ் தயாரித்த முதல் படம் மக்கள் திலகம் நடித்த நாம் திரைப்படம்.மக்கள் திலகமும் சக்கரபாணியும் நாம் படம் வெளியானவுடன் மேகலா பிக்சர்சை விட்டு விலகினார்கள்.தொடர்ந்து சில வருடங்களில் பி.எஸ்.வீரப்பாவும் காசிலிங்கமும்விலகிவிட மேகலா பிக்சர்ஸ் மு.கருணாநிதியின் தயாரிப்பு நிறுவனமானது.இந்த நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் 1970ம் ஆண்டு மக்கள் திலகமும், கலைச்செல்வி ஜெயலலிதாவும் இணைந்து நடித்த எங்கள் தங்கம் திரைப்படம்.சுலைமான் சேட் என்பவரிடம் கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு அடமானத்தில் இருந்த போது இவர்கள் இருவரும் இலவசமாக நடித்துக் கொடுத்து எங்கள் தங்கம் படத்தின் மூலம் அடமானத்தில் இருந்த வீட்டை மீட்டுக் கொடுத்தனர்
-
17th May 2014, 02:28 PM
#1253
Junior Member
Diamond Hubber
கவிஞர் வாலி அவர்கள் மக்கள் திலகத்துக்கு எழுதிய முதல் பாடல் சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் 1961இல் வெளியான நல்லவன் வாழ்வான் படத்தில் இடம் பெற்ற பாடல் இது.நல்லவன் வாழ்வான் படத்தில் தொடங்கி மீனவ நண்பன் வரை 51படங்களில் ஏறத்தாழ 185 பாடல்கள் மக்கள் திலகத்துக்காக வாலி எழுதியுள்ளார்.
courtesy net
-
17th May 2014, 02:45 PM
#1254
Junior Member
Veteran Hubber
-
17th May 2014, 03:00 PM
#1255
Junior Member
Platinum Hubber
THANKS ROOP SIR
-
17th May 2014, 03:18 PM
#1256
Junior Member
Veteran Hubber
கோட்டைகட்டி கொண்டாட்டம்
போட்ட கூட்டங்கள் என்னானது ?
சில ஓட்டை வந்து தண்ணீரில்
மூழ்கும் ஓடங்கள் போலானது!
Meenava Nanban.
-
17th May 2014, 03:21 PM
#1257
Junior Member
Veteran Hubber
போடும் பொய் திரையை கிழித்துவிடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை.
நினைத்ததை முடிப்பவன்
-
17th May 2014, 03:23 PM
#1258
Junior Member
Diamond Hubber

Originally Posted by
esvee
THANKS ROOP SIR

Vada Chennai One friend won and one Friend Lost and same with Madhya Chennai. Also, my friend Sudheesh again lost by a big Margin! Little Sorrow while being happy, human afterall.
-
17th May 2014, 03:23 PM
#1259
Junior Member
Veteran Hubber
இருந்தாலும் மறைந்தாலும்
பேர்சொல்ல வேண்டும்.
இவர் போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்.
--- மறைந்தும் எங்கள் தெய்வம் சரித்திரம் படைக்கிறது. வாழ்க எம்ஜிஆர் புகழ்.
MGR Devotee Muthain in Facebook.
-
17th May 2014, 03:42 PM
#1260
Junior Member
Diamond Hubber
சென்னை, மே. 19–
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. வரலாற்று சாதனை படைத்தது. 39 தொகுதியில் தனித்து போட்டியிட்ட அந்த கட்சி 37 இடங்களில் அமோக வெற்றி பெற்று புதிய சகாப்தம் படைத்தது.
39 தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு 1 கோடியே 74 லட்சத்து 87 ஆயிரத்து 733 ஓட்டுகள் கிடைத்துள்ளன.இது பதிவான வாக்குகளில் 44.3 சதவீதமாகும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலை விட தற்போது அ.தி.மு.க.வுக்கு 21.3 சதவீத ஓட்டு அதிகரித்து உள்ளது. 2009 தேர்தலில் அந்த கட்சிக்கு 23 சதவீதம் ஓட்டு கிடைந்திருந்தது.
34 தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அந்த கட்சிக்கு 92 லட்சத்து 56 ஆயிரத்து 923 வாக்குகள் கிடைத்தன. ஓட்டு சதவீதம் 23.4 ஆகும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு 25.09 சதவீத ஓட்டுகள் கிடைத்திருந்தன.
கடந்த தேர்தலில் இரட்டை இலக்க எண்களில் ஓட்டு சதவீதத்தை பெற்ற கட்சிகள் தற்போது ஒற்றை இலக்குக்கு மாறியுள்ளன.
குறிப்பாக கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. 10.11 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் தற்போது பா.ஜனதா கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சி 5.1 சதவீத வாக்குகள் என்ற ஒற்றை இலக்கத்துக்கு மாறியது. அந்த கட்சிக்கு 20 லட்சத்து 19 ஆயிரத்து 796 ஓட்டுகள் கிடைத்தது.
கடந்த தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 15.03 சதவீத வாக்கை பெற்று இருந்தது. தற்போது அந்த கட்சி தனித்து போட்டியிட்டு 4.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. அந்த கட்சிக்கு 17 லட்சத்து 8 ஆயிரத்து 433 ஓட்டுகள் கிடைத்தது.
கடந்த தேர்தலில் 5.71 சதவீத வாக்குகளை பெற்ற பா.ம.க. தற்போது 4.5 சதவீதமே பெற்றுள்ளது. அந்த கட்சி 8 தொகுதிகளில் ஒன்றில் வெற்றி பெற்றது.
பாரதீய ஜனதாவுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளது. 9 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சி ஒரு இடத்தை பெற்றுள்ளது. 21லட்சத்து 44 ஆயிரத்து 558 வாக்குகள் அந்த கட்சிக்கு கிடைத்தன. ஓட்டு சதவீதம் 5.4 ஆகும். கடந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 2.3 சதவீதமே கிடைத்தது.
ம.தி.மு.க. தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டது. அந்த கட்சிக்கு 3.6 சதவீத வாக்கு கிடைத்தன.
கம்யூனிஸ்டு கட்சிகளின் வாக்கு சதவீதமும் கணிசமாக குறைந்துள்ளது.
Bookmarks