-
27th May 2014, 12:54 PM
#11
Junior Member
Seasoned Hubber
AO 75வது நாட்களை தொட்டு விட்டதாம் - பாராட்டுக்கள் ஓட வைத்ததிற்கு - அமைதியாக கொண்டாடி இருந்தால் நாமும் அவர்களை வாழ்திருக்கலாம் , அவர்களுடன் சேர்ந்து இனிப்பு பதார்த்தங்களை எல்லோருக்கும் வழங்கி இருக்கலாம் - ஆனால் எப்படி கொண்டாடுகிறார்கள் பாருங்கள் - பொய்யும் , பித்தலாட்டமும் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும் - MGR க்கு நடிப்பு வந்ததோ இல்லையோ அவருடைய ரசிகர்கள் எல்லோருக்கும் "பாரத் " பட்டம் அவசியம் கொடுக்க வேண்டும் - நடிப்பதில் , உண்மைகளை மறைப்பதில் , பொய்களை அள்ளி அள்ளி வீசுவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான் -
இதோ அவர்கள் அளக்கும் பொய் மூட்டையை பாருங்கள் -----
" வெளியான நாள் முதல் சரி வர ஓடாத படம் 45 ஆண்டுகளுக்குப்பின் வெற்றி காண்பது பெரிதல்ல ( என்ன logic இது என்றே புரியவில்லை !!)
"வெளியிட்ட நாள் முதல் தொடர்ந்து 48 ஆண்டுகளாக எண்ணிக்கையில் அடங்காத திரை அரங்குகளில் திரையிடப்பட்டு வரலாற்று வசூல் காண்பதுதான் எங்கள் மக்கள் திலகம் MGR காவியங்களின் இமாலய வெற்றி !!!!"
நாடே ஒப்பு கொண்டாலும் , MGR அவர்களே உயிர் பெற்று வந்து அவர்களுக்கு புத்திமதி சொன்னாலும் - திருந்த முடியாத அளவிற்கு சென்று விட்டார்கள்
உண்மையான வெற்றியாக இருந்தால் அதில் பிறரை மட்டம் தட்டி பேசும் குணம் இருக்காது - வசூலில் புரட்சி ஏற்படுத்தி இருந்தால் , தன்னடக்கம் தானாகவே வெளிப்பட்டிருக்கும் - அதில் பொறாமை இருக்காது , வயத்தெரிச்சல் இருக்காது - MGR யை வணங்கும் இவர்கள் அவருடைய பண்புகளை வணங்குவதில்லை என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்
-
27th May 2014 12:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks