-
29th May 2014, 08:45 PM
#11
Senior Member
Diamond Hubber
பல வருடங்கள் கழித்து எந்திரன் வெளியானபோதே பார்த்தேன். ஈர்ப்பான கதைக்களம். சரி.. இனி தொடர்ந்து ரஜினி படங்களைப் பார்க்கலாம் போல என நினைத்திருந்தால் அது நடக்காது போல. அடுத்த ஷங்கர் படத்தில் மீட் பண்ணலாம் (சிவாஜி போல அல்லாமல் எந்திரன் போல அமையும் என்ற எதிர்பார்ப்பில்). கே.எஸ்.ரவிக்குமார்-ரஜினி கூட்டணியில் நம்பிக்கையில்லை. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படங்களில் சிறப்பானவை கமலோடு இணைந்த படங்களே. அந்த பரந்த அனுபவம் கூட அவர் கமலைவிட்டு வேறொரு நடிகருடன் இணையும்போது கைகொடுப்பதில்லை. பிவாசு, ரவிக்குமாரை விட்டு மற்ற இயக்குனர்களிடம் ரஜினி பணிபுரியலாம். இனி வசூல் முக்கியமல்ல. எக்காலத்திற்கும் நினைத்துப் பார்த்து அசைபோடும் அளவுக்கான படைப்பு முக்கியம்..
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
29th May 2014 08:45 PM
# ADS
Circuit advertisement
Bookmarks