Page 195 of 402 FirstFirst ... 95145185193194195196197205245295 ... LastLast
Results 1,941 to 1,950 of 4016

Thread: Makkal thilgam m.g.r. Part-9

  1. #1941
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சத்யம் அரங்கில் ஆயிரத்தில் ஒருவன் இடைவேளையின் போது திரு.சொக்கலிங்கம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார் திரு.பி.எஸ்.ராஜு அருகில் திருவாளர்கள் ஹயாத் , தூதூக்குடி செல்வன் , சுப்பிரமணியம் , ரா.லோகநாதன் , குமார் , மாரிமுத்து ஆகியோர் .


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1942
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நாடோடி மன்னன்

    எங்க வீட்டு பிள்ளை

    இரண்டு படங்களும் மறு வெளியீட்டில் முறையே 1959, 1965 ஆண்டுகளில் திருவண்ணாமலை- கிருஷ்ணா வில்
    நாடோடி மன்னனும் . தர்மபுரி - கணேசாவில் எங்கவீட்டு பிள்ளையும் 100 நாட்கள் ஓடியது .

  4. #1943
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜியார் தனி கதாநாயகனாக நடித்தது 47ல். 53 ஆம் ஆண்டு அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின் 72ல் அங்கிருந்து வெளியேறினார். பின்னர் அதிமுகவைத் தொடங்கி 77 வரை நடித்தார்.

    47 முதல் 53 வரை வெளியான படங்களின் வெற்றியும், அப்போதைய அரசியல் சூழ்நிலையும் எம்ஜியார் தனக்கான பாதை எது என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ள உதவியது.

    மந்திரி குமாரி, மருத நாட்டு இளவரசி (வசனம் : கருணாநிதி), மர்மயோகி, சர்வாதிகாரி ஆகிய சரித்திர பிண்ணனி உள்ள படங்கள், அதில் எம்ஜியாரின் பாத்திரப் படைப்பு, அவர் பேசிய வசனங்கள் அவருக்கு நல்ல இமேஜைக் கொடுத்திருந்தன.

    இப்போது அந்த கால அரசியல் சூழ்நிலையைப் பார்ப்போம். சுதந்திரம் கிடைத்து காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. பெரும்பாலான மாவட்டங்களுக்கு ஜமீன்தார்கள், பண்ணையார்கள், தொழிலதிபர்கள் தான் பிரதிநிதியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதிகாரம் பரவலாக்கப்படாமல் ஓரிடத்தில் குவிந்திருந்தது.

    ஒரு மனிதன் இளைஞனாயிருக்கும் வரை அவனுக்கு அமைப்பை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணம் தன்னிச்சையாகவே இருக்கும். திருமணம் முடிந்தோ அல்லது பொறுப்புக்கள் அதிகரிக்கும் போதோ அமைப்புடன் சமரசம் செய்து வாழ்க்கையை ஓட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கும். அப்போதைய கால கட்டத்தில் வெள்ளையர் ஆட்சி இல்லை. அமைப்பு என்பது நிலப்பிரபுத்துவம் ஆக இருந்தது. அது காங்கிரஸையும் நேரடியாகக் குறித்தது.

    பெரியார், 1925ல் இருந்தே காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாடில் இருந்தார். அவர்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களைப் பரப்பி வந்தார். அவரால் கவரப் பட்ட இளைஞர்கள் அந்த அமைப்புக்கு எதிரான மனநிலையில் இருந்து வந்தார்கள்.

    1953ல் எம்ஜியார் திமுகவில் இணைந்து பின் 72ல் வெளியேறும் வரை அவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் பெரியாருடைய கருத்துகளையும், திமுகவின் கொள்கைகளையும் பிரதிபலித்துக் கொண்டே தான் வந்தார்.

    இந்தக் கால கட்டத்தில் அவர் நடித்த அப்போதைய சமூகத்தை பிண்ணனியாகக் கொண்ட படங்களில் எல்லாம், அவர் ஒரு சாதாரண குடும்பப் பிண்ணனி கொண்டவராக இருப்பார். பெருந்தனக்காரர்கள் ஊரை சுரண்டுவார்கள். எதிர்த்துக் கேட்பார். உடனே அவர்கள் சூழ்ச்சி செய்து இவரை சிக்கலில் தள்ளுவார்கள். பின் அதில் இருந்து மீள்வார். ஊர் கொண்டாடும்.

    இந்த சிக்கலில் இருந்து மீள அவர் பெரிய வித்தையெல்லாம் செய்ய மாட்டார். தனி மனித ஒழுக்கமுள்ளவராக, பொது வாழ்வில் நேர்மையானவராக இருந்தே அதை சாதிப்பார். முக்கியமாக தன் பாத்திரப் படைப்பில் எந்த ஜாதியின் சாயலும் வராமல் பார்த்துக் கொண்டார்.

    பெருந்தனக்காரர்கள் அப்போதைய காங்கிரஸ் முதலாளிகளையும், சாதாரணன் அப்போதைய நடுத்தர, ஏழை இளைஞனையும் பிரதிபலித்தது. அப்போது திமுகவில் இப்படிப்பட்ட இளைஞர்களே இருந்தார்கள். அவர்கள் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள இது உதவியது.

    அதனால் தான் எம்ஜியார் உபயோகப் படுத்தும் உடையை உடுத்தும் (பேகிஸ்) , கடவுள் விஷயத்தில் தான் நேரடியாகப் பங்கு கொள்ளாத மனோபாவம், ஜாதிப் பெயர்களை தன் பெயரில் பின்னால் போட்டுக்கொள்ளாத ஒரு இளைஞர் கூட்டம் உருவாகியது.


    53-72 காலகட்டம். ஆத்மார்த்தமாக, எந்த இடையூறுமின்றி படம் பார்க்கிறார்கள். தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். சில பண்புகளால் கவரப் பட்டு தங்களை மேம்படுத்தவும் அந்தக் கால இளைஞர்கள் முயல்கிறார்கள்.

    எம்ஜியாரும் அந்தப் பிம்பம் கலைந்து விடாமல் தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்தே வந்திருக்கிறார். அப்போதைய பிரம்மாண்ட பட நிறுவனங்களான, விஜயா வாகினி (எங்க வீட்டு பிள்ளை) , ஏவிஎம் (அன்பே வா) மற்றும் ஜெமினிக்கு (ஒளி விளக்கு) தலா ஒரு படங்கள் மட்டுமே செய்திருக்கிறார். மார்டன் தியேட்டர்ஸில் அதற்கு முன் இரு படங்களிலும், 53க்கு பின் ஒரே படத்திலும் (அலிபாபாவும் 40 திருடர்களும்) மட்டுமே நடித்திருக்கிறார். இவை எல்லாமே பிளாக் பஸ்டர்ஸ்.

    அந்தக் கால கட்டத்தில் பல தயாரிப்பாளர்களை (உதா தேவர் பிலிம்ஸ், சத்யா மூவிஸ் ) எம்ஜியார் உருவாக்கியிருக்கிறார் (அவர் வசதிக்காக என்றே பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்). என்றாலும் தனக்கு மிகப் பெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற முன் வர வில்லை என்பதும் பல சாமானியர்களை தயாரிப்பாளர் ஆக்கியதும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருக்கலாம்.

    இந்த காலகட்டத்தில் அவர் நடித்த அரசர் கதைகளிலும் கூட சுத்த தமிழ்ப் பெயர்களை தான் தன் பாத்திரத்துக்கு வைத்தார். (நாடோடி மன்னன் : மார்தாண்டன், வீராங்கன், ஆயிரத்தில் ஒருவன் : மணிமாறன்). அவர் மன்னனாக இருந்தால் மக்கள் நலமே சிந்தனையாக இருப்பதாகவே காட்சிகள் இருக்கும். எனவே இளைஞர்கள் இந்தப் படங்களிலும் தங்களை அடையாளப் அடுத்திக் கொள்ள முடிந்தது.


    சமூகப் படங்களில் அவர் ஒழுக்கமானவராக தன்னை காட்டியதோடு மட்டுமல்லாமல் தன் உடைகளிலும் எளிமையைக் காட்டினார். சட்டை பேண்ட் அணிந்திருப்பார். வாட்ச் அணிந்திருப்பார். மோதிரம், செயின் ஆகியவை வெளிப்படையாகத் தெரியாது.

    இப்போது கூட அறுபது வயதுக்கு மேல் உள்ள பல ஆண்களைப் பாருங்கள். வசதி இருந்தும் வாட்சுடன் நிறுத்திக் கொண்டிருப்பார்கள். நன்கு மீசை வளரும் அளவுக்கு மரபணு இருக்கும். ஆனாலும் அதை உதட்டுக்கு மேல் ஒரு மெல்லிய கோடாக மட்டுமே வைத்திருப்பார்கள். இதற்கு எம்ஜியாரின் மீசைதான் காரணம்.

    அப்போது தொலைக்காட்சி இல்லை. மீடியாக்கள் 24 மணி நேரமும் செய்திக்காக அசுரப்பசியோடு இரை தேடி அலையவில்லை. இத்தனை நாளிதழ், பத்திரிக்கைகளும் இல்லை. எனவே அவரின் உண்மையான கேரக்டர் என்பது படத்தில் வந்ததுதான் என்று மக்கள் நம்பவேண்டிய கட்டாயம். இது இளைஞர்களிடம் நல்ல தாக்கத்தையே ஏற்படுத்தியது. ராமனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் பல இளைஞர்களுக்கு ஏற்பட்டது.

    அடுத்ததாகப் பார்க்கப் போனால் அவர் குறிப்பிட்ட தொழில் செய்தவராக நடித்த படங்கள். ரிக்*ஷாகாரன், படகோட்டி, மாட்டுக்கார வேலன், இவையெல்லாம் அந்தந்த செக்மெண்ட் இளைஞர்களுக்கு ஒரு அந்தரங்க பூரிப்பைக் கொடுத்ததாக சொல்வார்கள். எனக்குத் தெரிந்த வளையல்காரர் ஒருவரின் வீட்டில் பெரிய எம்ஜியார் படமிருக்கும். காரணம் கேட்டதற்கு அவர் சொன்னது “ படகோட்டியில வளையல் காரரா வருவார்”

    அது மாறுவேடம். இருந்தும் அவருக்கு ஒரு அகமகிழ்ச்சி.

    பொதுவாக எம்ஜியாரின் படங்களில் காவல்துறை அதிகாரி நேர்மையானவராகவே காட்டப்படுவார். அது நம்பியாராக இருந்தாலும் சரி. அசோகனாக இருந்தாலும் சரி. உயர் அதிகாரிகள் நன்மையையே செய்வார்கள். எனவே இவர் படங்களைப் பார்ப்பவர்கள் காவலர்களை மரியாதையுடன்தான் பார்த்தார்கள்.

    இவர் கட்டமைத்த எதிரி என்று பார்த்தால் பணக்காரர்களும், தவறான அரசர்களும் தான். இது இயல்பாக திமுகவிற்கு இளைஞர்களை திருப்பிவிட ஏதுவாக இருந்தது.



    ஆனால் 72க்குப் பின் நடித்த படங்களில் மறைமுகமாக கருணாநிதி மற்றும் திமுகவுக்கு எதிரான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கும். கவர்ச்சி காட்சிகளும் கூடுதலாக இருக்கும் வகையில் படங்கள் இருந்தன. அவற்றாலும் கவரப்பட்ட ஒரு தலைமுறை உருவானது.

    எம்ஜியார் என்ற பிம்பத்தை கட்டமைக்க உதவியதும், அதன்மூலம் அவர் அக்கால இளைஞர்களை நல் வழியில் பாதித்ததும் 53-72ல் வெளியான படங்களின் மூலமே. அது திமுகவிற்கும் பெரும் உதவியாக இருந்தது.
    courtesy - net
    Thanks Thiru Murali Kannan

  5. Thanks Russellisf thanked for this post
  6. #1944
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    courtesy - net
    ஜவஹர்லால் நேருவை எடுத்துக் கொண்டால் அவர் உடை உடுத்துவதில் ஒரு தனித்துவம் பெற்ற ஸ்டைலை மேற்கொண்டார். பளீரென்ற உடை, குல்லாய், ரோஜாப்பூ, சிரித்த முகம் இவை நேருவை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. அவர், திறமை வாய்ந்த செய்தி ஒருங்கிணைப்பாளர்கள் உதவியால் செய்தித் தாள், வானொலி முதலிய ஊடகங்களில் தன்னைப் பற்றிய படிமம் எப்போதுமே positive-ஆக இருக்கும்படி கவனித்துக் கொண்டார். நம் நாடு விடுதலை பெற பலர் பலவித தியாகங்கள் செய்திருகஷ்மீர் விஷயந்தாலும், தன்னலமில்லா உழைப்பை அளித்திருந்தாலும், எல்லோருமே நேரு பெற்ற பெயரைப் பெறவில்லையே! அவரைச் சுற்றி இருந்தவர்கள் தவறு செய்ததாக அறியப் பட்டலும், அதில் சிறிது அழுக்கு கூட நேரு மேல் ஒட்டாது பார்த்துக் கொண்டார்கள். தன்னிலையைக் காத்துக் கொண்டார். இன்று வரை நேரு என்றொரு காந்த சக்தி நம்மை ஆட்கொண்டிருக்கிறது!

    எம்.ஜி.ஆர் தன் இமேஜை சினிமா மூலம் மிக்க அறிவாற்றலுடன் வளர்த்துக் கொண்டார். அவர் ஒரு போதும் அண்ணனாக நடிக்கமாட்டார். ஏழை பங்காளனாகவே தோன்றுவார். திரையில் தோன்றும் எம்ஜியார் புகை பிடிக்க மாட்டர், மது அருந்த மாட்டார். அவர் ஏழையாகத் தான் நடிப்பார். அவர் ஏற்கும் பாத்திரங்கள் நற்குணங்களின் முழு உருவகமாக இருக்கும். அவர் தோன்றும் திரைப்படத்தின் ஒவ்வொரு சிறு விஷயத்தையும் நுணுக்கமாகக் கவனித்து, தன் இமேஜுக்குக் குந்தகமில்லாமல் பார்த்துக் கொள்வார்.

  7. Thanks Russellisf thanked for this post
  8. #1945
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    பிரபலங்கள் எம் ஜி யார் படங்களால் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

    ஓட்டேரி பக்கம் போய் பார்த்தீங்கண்னா, அங்க இப்பவும் தண்டால், பஸ்கி எடுத்துக்கிட்டு ஒரு கூட்டமே இருக்கும். மது அருந்த மாட்டாங்க, சிகரெட் குடிக்க மாட்டாங்க. அவங்க அப்படி செய்யுற இடத்துல ஒரு எம்ஜியார் புகைப்படம் இருக்கும். அப்படி அவங்கள மாத்துனவர் எம்ஜியார்.

    இது கமல்ஹாசன் பல வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியில் சொன்னது.

    எம்ஜியார் படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னா அந்தப் படத்தோட ஸ்டில்லுகள பார்த்துட்டு, அதே மாதிரி டிரஸ் பண்ணிட்டு போயிருவோம். அப்படி ஒரு தடவை சிந்தாமணி தியேட்டருக்குப் போன போது, எங்களை மாதிரியே நிறையப் பேர் வந்திருந்தாங்க.

    இது விஜயகாந்த், ஆனந்த விகடனில் வெளியான அவரைப்பற்றிய தொடரில் சொன்னது.

    நான் வித்தியாசமா டிஸைன் செஞ்சு, ஒரு பேண்ட் தைக்கச் சொல்லி போட்டுக்கிட்டேன். எங்கப்பா அதைப் பார்த்து திட்டுனாரு. ஆனா அதுக்கடுத்து வெளியான படத்துல எம்ஜியார் அந்த மாடல் பேண்ட் தான் போட்டிருந்தார். இளைஞர்கள்கிட்ட நல்ல வரவேற்பு. அப்பதான் எனக்குத் தெரிஞ்சது. ஏன் எங்கப்பா ட்ரான்ஸ்போர்ட்ல வேலை பார்க்குறாரு, எம்ஜியார் சூப்பர் ஸ்டாரா இருக்காருன்னு.

    பாண்டியராஜன் – தான் தயாரித்த குமுதம் இதழில் எழுதியது.

  9. #1946
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

    நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!

    பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1

    இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்” என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..” எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும் அந்த நேரத்து ஸென் ZEN. அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.

    எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.

    கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!
    courtesy - Rudhran -net

  10. #1947
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    பிரபலங்கள் எம் ஜி யார் படங்களால் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

    ஓட்டேரி பக்கம் போய் பார்த்தீங்கண்னா, அங்க இப்பவும் தண்டால், பஸ்கி எடுத்துக்கிட்டு ஒரு கூட்டமே இருக்கும். மது அருந்த மாட்டாங்க, சிகரெட் குடிக்க மாட்டாங்க. அவங்க அப்படி செய்யுற இடத்துல ஒரு எம்ஜியார் புகைப்படம் இருக்கும். அப்படி அவங்கள மாத்துனவர் எம்ஜியார்.

    இது கமல்ஹாசன் பல வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியில் சொன்னது.

    எம்ஜியார் படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னா அந்தப் படத்தோட ஸ்டில்லுகள பார்த்துட்டு, அதே மாதிரி டிரஸ் பண்ணிட்டு போயிருவோம். அப்படி ஒரு தடவை சிந்தாமணி தியேட்டருக்குப் போன போது, எங்களை மாதிரியே நிறையப் பேர் வந்திருந்தாங்க.

    இது விஜயகாந்த், ஆனந்த விகடனில் வெளியான அவரைப்பற்றிய தொடரில் சொன்னது.

    நான் வித்தியாசமா டிஸைன் செஞ்சு, ஒரு பேண்ட் தைக்கச் சொல்லி போட்டுக்கிட்டேன். எங்கப்பா அதைப் பார்த்து திட்டுனாரு. ஆனா அதுக்கடுத்து வெளியான படத்துல எம்ஜியார் அந்த மாடல் பேண்ட் தான் போட்டிருந்தார். இளைஞர்கள்கிட்ட நல்ல வரவேற்பு. அப்பதான் எனக்குத் தெரிஞ்சது. ஏன் எங்கப்பா ட்ரான்ஸ்போர்ட்ல வேலை பார்க்குறாரு, எம்ஜியார் சூப்பர் ஸ்டாரா இருக்காருன்னு.

    பாண்டியராஜன் – தான் தயாரித்த குமுதம் இதழில் எழுதியது.
    Vinod Sir,

    Since you talked about GYM I would like to present 2 incidents which happened in 1986-1988.

    In Chennai Ayanavaram, there is Solai Street. one prominent person [ we affectionately call him Neela Anna] labour union leader @ MRF [ now may be in v.good post in the party(AIADMK)]. He started a GYM, free for all. Anyone in Ayanvaram will know about solai street. I still recall two incidents one by fans of one Actor and another by a party. In the first instance, the moment they saw the youth from the GYM the crowd of the Actor vanished! As regards the party supporters - they wanted to burn Super Cosmic Power cutout [ Mr. GV used it for film chamber association, since "Mathi Oli" Shanmugam Uncle requested on our behalf he gave the cut-out]. I got the news at home before my persons could reach the spot Neela Anna's GYM boys, each capable of managing 5-6 persons individually, were standing there, as usual ready for anything. My only question was where are the trouble creaters. Their reply was "எங்களை பார்த்ததும் துண்ட காணும் துணியை கானம் என்று ஓடி விட்டார்கள்" and further one person which escaping hurt his head and was hospitalised for nearly 3 months.

    Why I have to mention the above is because in those days many GYM facilities were provided for youth in respective areas by MGR Fan's. In can straightaway say OLD chetpet, Chetpet, Taylors Road, Otteri, Choolaimedu were having GYM facility because most of them are/were my close friends. The list is endless GYM facilities in different areas started by MGR fans is endless. I am not sure if it is still the case!
    Last edited by saileshbasu; 30th May 2014 at 03:09 PM.

  11. #1948
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks Sailesh Sir

    very interesting incidents from your gym experience .

  12. #1949
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  13. Likes ujeetotei liked this post
  14. #1950
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Today booking status for Ayirathil Oruvan restored version in Sathyam Studio 5, 25 tickets remaining.
    Last edited by MGR Roop; 30th May 2014 at 05:14 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •