-
6th June 2014, 08:27 PM
#2271
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
6th June 2014 08:27 PM
# ADS
Circuit advertisement
-
6th June 2014, 08:36 PM
#2272
Junior Member
Diamond Hubber
MY FAVOURITE SCENE IN PATINATHIL BOOTHAM
BUT WHAT NAGESH SAYS IS NOT APPLICABLE TO THILAGAM MOVIES.
Last edited by saileshbasu; 6th June 2014 at 09:34 PM.
-
6th June 2014, 09:04 PM
#2273
Junior Member
Diamond Hubber
-
6th June 2014, 09:15 PM
#2274
Junior Member
Diamond Hubber
-
6th June 2014, 09:34 PM
#2275
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
6th June 2014, 09:47 PM
#2276
Junior Member
Diamond Hubber
thanks roop sir and sailesh sir for uploaidng today eve.show full display

Originally Posted by
saileshbasu
-
7th June 2014, 12:54 AM
#2277
Junior Member
Diamond Hubber
முதல் மரியாதை'' படத்தில் நடித்த பிறகு, தனது அடுத்த படமான "கடலோரக் கவிதைகள்'' படத்தில் என்னை கதாநாயகனாக்கி விட்டார் பாரதிராஜா.
ஆனால் அதற்கும் இடைப்பட்ட நேரத்தில் "சாவி'' என்ற படம் மூலம் நான் ஹீரோவாகி விட்டேன். இது `ஆன்டிஹீரோ' கதை. அதாவது, கதாநாயகனே வில்லத்தனம் செய்வான்!
பிரபல டைரக்டர் டி.ஆர்.ரகுநாத்தின் மகன் கார்த்திக் ரகுநாத் இந்தப் படத்தை இயக்கினார். இது லண்டனில் வருஷக் கணக்கில் மேடை நாடகமாக நடந்த "டயல் `எம்' பார் மர்டர்'' என்ற கதை. ஆனால் இதை முதலில் இந்தியில்தான் எடுத்தார்கள். ராஜ்கபூர் - டிம்பிள் கபாடியா நடித்திருந்தார்கள்.
இதுகூட முதலில் எனக்குத் தெரியாது. கமல் சாரின் சொந்தப்படமான `விக்ரம்' படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தபோது, கடைசி ஷெட்ïலில் படத்தில் நடித்த டிம்பிள் கபாடியாவிடம் "வில்லனாக நடிக்கும் கடைசி படம் இது. இனி ஹீரோவாக நடிக்கிறேன்'' என்று "சாவி'' படம் பற்றி கூறினேன். உடனே அவர் என்னை வாழ்த்துவதற்குப்பதில், "அய்யய்யோ! அது நான் இந்தியில் நடிச்சு சரியா ஓடாத படமாச்சே'' என்றார். எனக்கு அப்போதே `திக்' என்றாகிவிட்டது. அவர் சொன்ன ரிசல்ட்தான் `சாவி' படத்துக்கு கிடைத்தது. படம் சரியாகப் போகவில்லை.
இதையடுத்து நான் ஹீரோவாக நடித்து வந்த "ரசிகன் ஒரு ரசிகை'', "தர்மம்'' ஆகிய படங்களும் ஓடவில்லை.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், நான் ஹீரோவாக நடித்த படம் சரியாகப் போகவில்லையே தவிர, வில்லனாக நடித்த படங்கள் நன்றாக ஓடின. குங்குமப்பொட்டு கவுண்டராக நடித்த "முதல் வசந்தம்'' படம் 25 வாரம் ஓடியது.
இந்த நேரத்தில், "முதல் மரியாதை'' படம் பெற்ற பெரிய வெற்றியினால், பாரதிராஜா என்னை ஹீரோவாக போட்டு "கடலோரக் கவிதைகள்'' என்ற படத்தை எடுக்க இருந்தார்.
இந்தப் படத்துக்கு ஒப்பந்தமான நேரத்தில், டைரக்டர் ஸ்ரீதர்ராஜன், "இரவுப்பூக்கள்'' என்ற படத்தில் என்னை ஹீரோவாக்கினார். இந்தப்படம்தான், நான் ஹீரோ ஆகியபின் "டூயட்'' பாடிய முதல் படம். அதுவரை 3 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அந்தப் படங்களில் எனக்கு "டூயட்'' கிடையாது. அதனால் ஒருபக்கம் உற்சாகம் என்றாலும், மறுபக்கம் எனக்கு `டான்ஸ் தெரியாதே' என்று கவலை வந்து ஒட்டிக்கொண்டது.
படத்துக்கு ரகுராம்தான் டான்ஸ் மாஸ்டர். படத்தில் என் ஜோடியாக நடித்த நளினியும், நானும் டூயட் பாடலுக்கு நடனம்ஆடியாக வேண்டும். நான் டான்ஸ் மாஸ்டரிடம், "பாட்டு சீனை மைசூரில் எடுத்து விடலாமா?'' என்று கேட்டேன். அவர் `நடனம்' தெரியாத என் நிலையை புரிந்துகொண்டு, "மைசூர் போனால் `டான்ஸ் காட்சி' எடுக்காமல் விட்டு விடலாமா?'' என்று சிரித்தபடி கேட்டார்.
இந்தப்படத்தில் நண்பர் `நிழல்கள்' ரவியும் நடித்தார். மைசூரில் படப்பிடிப்பு இடைவேளையில் நான் எம்.ஜி.ஆர். மாதிரியும், ரவி நம்பியார் மாதிரியும் பேசி நடித்துக் காட்டுவோம். இதைப் பார்த்த டைரக்டரும், டான்ஸ் மாஸ்டரும், "எம்.ஜி.ஆரோட மேனரிசம் அப்படியே உங்களுக்கு வருது. இந்த பாடல் காட்சியை நீங்கள் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் நடனமாடி நடித்தால் என்ன?'' என்று கேட்டார்கள்.
அப்போது எம்.ஜி.ஆர். சார் முதல்வராக இருந்தார். அதனால் தைரியமாக அந்த பாடல் காட்சியில் `எம்.ஜி.ஆர். ஸ்டைலில்' நடித்து முடித்தேன். படம் வெளியானபோது இந்தப் பாடல்காட்சிக்கு ரசிகர்கள் `ஒன்ஸ்மோர்' கேட்டார்கள். படமும் வெற்றி பெற்றது. இந்த வகையில் நான் ஹீரோவாக ஜெயித்த முதல் படமும் இதுதான்.''
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
-
7th June 2014, 05:52 AM
#2278
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் இந்த வார படங்கள் -6.6.2014
ஆயிரத்தில் ஒருவன் - சென்னை - சத்யம் - ஆல்பர்ட்
தாய் சொல்லை தட்டாதே - பைலட்
ஒரு தாய் மக்கள் - கோவை - டிலைட்
எங்க வீட்டு பிள்ளை - மதுரை - ராம்
தேடி வந்த மாப்பிள்ளை - திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி
-
7th June 2014, 06:02 AM
#2279
Junior Member
Platinum Hubber
ஒரு தாய் மக்கள் - கடந்த ஆண்டில் கோவை நகரில் 10 நாட்கள் ஓடியது .ஒரு வருட இடைவெளியில் மீண்டும் ஒரு தாய் மக்கள் திரையிடப்பட்டு இரண்டாவது வாரமாக ஓடுகிறது .முதல் வெளியீட்டில் சுமாராக ஓடிய படம் மறு வெளியீடுகளில் 1971 முதல் இன்று வரை 43 ஆண்டுகளில் இந்த படம் பல முறை திரைக்கு வந்து ஓடியுள்ளது மூலம் ஒரு தாய் மக்கள் ஒரு வெற்றி படமாக கருதப்படுகிறது .
அரசகட்டளை
தாலி பாக்கியம்
காதல் வாகனம்
தலைவன்
தாழம்பூ
ஆசை முகம்
தாயின் மடியில்
தாய்க்கு தலைமகன்
அன்னமிட்டகை
தேர்த்திருவிழா
கணவன்
புதியபூமி
விவசாயி
மேற்கண்ட மக்கள் திலகத்தின் படங்கள் மறு வெளியீடுகளில் பல வருடங்களில் பல முறை ஓடி
விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது .
-
7th June 2014, 06:18 AM
#2280
Junior Member
Platinum Hubber
எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.
இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!
எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்.
115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவர முடிந்தது? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? என்றேல்லாம் வினாக்கள் எழும்!
வினாக்களுக்கான விடைகள்!
கண்டறியப்பட வேண்டும்!
கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை, அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட நடிப்புலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?
இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்.ஜி.ஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.
இப்போது எம்.ஜி.ஆர் நடித்த படப்பாடல்களில், கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக.
எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 115 படங்களில் ஐம்பது படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றுள்ளன.
இவை தவிர, எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்றுபோன பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூமே நான் உனக்கே சொந்தம், போன்ற பல படங்களுக்கும் கண்ணதாசனே பாடல்கள் எழுதியுள்ளார்.
எவ்வாறு ஆய்வு செய்தாலும், எம்.ஜி.ஆர். நடித்த அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையையும், எம்.ஜி.ஆர். படங்களுக்கென அதிக எண்ணிக்கையில் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையினையும் கண்ணதாசனே பெறுகிறார்.
1951 – ஆம் ஆண்டு ஜூபிடர் பிலிம்ஸாரின், கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி’ படத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய கண்ணதாசன், 1974 – ஆம் ஆண்டு, அமல்ராஜ் பிலிம்ஸ், ப. நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘நேற்று, இன்று, நாளை’ படத்திற்கும்; இதே ஆண்டில், சித்ரயுகா வெளியீடாக ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான மிகப்பெரும் வெற்றிப்படமான ‘உரிமைக்குரல்’ படத்திற்கும்; 1975 – ஆம் ஆண்டில் வெளியான ஓரியண்டல் பிக்சர்ஸ் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்கும் கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதனை, இன்றைய இளைஞர் சமுதாயத்தில் எத்தனை இதயங்கள் அறியக்கூடும்?
courtesy - net
Bookmarks