Page 324 of 401 FirstFirst ... 224274314322323324325326334374 ... LastLast
Results 3,231 to 3,240 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #3231
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Rama Doss Sir,

    I totally agree with your views. As far as myself concerned the postings of Mr Ravi really put the thread into new heights and
    the same person who have denigrated our NT posted some nonsense and that would have hurt the hardcore hyderabadi fan.

    I hope everything will end smoothly and Mr Ravi will come and post as early as possible.

    Regards

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3232
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    Dear Mr Sivaji Senthil,

    Could u pls upload the alapparai at the theatre and whether you have gone with
    Mr Rahul or alone. Anyhow thanks for posting immediately.
    there was no alapparai in the theatre as I expected.I went alone as Ragul had to go for some urgent works. Despite the picture quality the film was enjoyable. I have not taken any photos for uploading.

  4. #3233
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ;dear Thiru Ramadoss. Your anguish and anxiety are right and I fall in line with u to request our senior hubbers to come back to guide us. Ego problems need not surface out as every individual has his own individuality and originality in approaching the objectives of this thread with the sole purpose of implanting the achievements of NT in the minds of younger generations to come. Hyderabad Ravi's and our young turk Raghul's contributions are second to none in the perspective in which they were posted.
    Last edited by sivajisenthil; 7th June 2014 at 09:49 PM.

  5. #3234
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    தவிர்க்க முடியாத சில தனிப்பட்ட அலுவல் காரணமாக உடனே பதில் பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும்.

    யார் அந்த நிலவு பாடலின் பின்னணியில் நிகழ்ந்த நடப்புகளை பற்றிய எனது பதிவிற்கு பாராட்டுகளை வாரி வழங்கிய அனைவருக்கும் மனங்கனிந்த நன்றி.

    குறிப்பாக என் மீது உள்ள அதீத அன்பின் காரணமாக பாராட்டு மழையே பொழிந்த கோபால், கிருஷ்ணாஜி மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு இதயங்கனிந்த நன்றி.

    அதே போன்று பெரிய பாராட்டுகளை வழங்கிய சந்திரசேகர் சார், சாரதி ஆகியோருக்கு நன்றி. நிறைய எழுதுங்கள். ஆனால் தமிழில் எழுதுங்கள் என்று சொன்ன கண்ணனுக்கும் நன்றி. இது சில வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவு என்பதனால்தான் ஆங்கிலம்.

    இந்த பாடல் தொடர்பாக ஒரு சில வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்த மகேந்திர ராஜ் அவர்களுக்கம் நன்றி.

    மேலும் இந்த பதிவை பாராட்டிய பெரியவர் சுப்ரமணியன் ராமஜெயம் சார், சிவாஜி செந்தில். கல்நாயக், ராகுல் ராம் மற்றும் முதன் முறையாக நடிகர் திலகம் திரியில் தன் வருகையையும் வாசிப்பையும் பதிவு செய்த mappi [தமிழ் பிலிம்ஸ் forum-ல் பார்த்த திரைப்படங்கள் என்ற திரியில் mappi எழுதும் விமர்சனங்களை ரசித்துப் படிப்பேன்] மற்றும் திரியின் நூற்றுக்கணக்கான silent readers அனைவருக்கும் மீண்டும் மனங்கனிந்த நன்றி.

    அன்புடன்

  6. #3235
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ராமதாஸ் சார்,

    இப்போது மட்டுமல்ல எப்போதும் எல்லா நேரங்களிலும் அனைவரும் திரிக்கு வருகை புரிவது மட்டுமல்லாமல் பங்களிப்புகளை தொடர்ந்து தர வேண்டுமென்றே நான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன். இதில் ஒருவரை விட்டு விட்டு மற்றொருவர் என்ற சூழலே எழாமல் அனைவரையும் ஒரு போலவே அழைத்திருக்கின்றேன்.

    இந்த திரியின் moderator ஆன பிறகு ஒரு சில நேரங்களில் வந்த தேவையற்ற பதிவுகளை தவிர மற்ற எந்த பதிவையோ அல்லது பதிவாளரையோ வேண்டாம் என்று சொன்னதே இல்லை. இதற்கு முந்தைய நேரங்களில் ஒரு சில சந்தர்ப்பங்களில் ஒரு சில நண்பர்களின் மனம் காயப்பட்டது என்ற சூழலில் யார் அதை செய்திருந்தாலும் நான் அவர்கள் சார்பாக மன்னிப்பு கேட்டிருக்கிறேன்.

    எனவே அனைத்து பங்களிப்பாளர்களும் [இதில் புதிய பழைய என்ற வேறுபாட்டிற்கே இடமில்லை] மீண்டும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதில் மிக மிக ஆவலாகவே இருக்கின்றேன். சற்று தள்ளி நிற்பவர்கள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் சொன்னதில் ஒரு விஷயத்தில் முழுக்க உடன்படுகின்றேன். அதாவது இந்த திரியைப் பொறுத்தவரை எனக்கு ஈகோ இல்லை. யார் என்னை குற்றம் சொன்னாலும் கிண்டல் செய்தாலும் அது என்னை பாதிக்காது. அவர்களை சட்டை செய்யாமல் நான் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டே இருப்பேன். காரணம் பாட்டுடைத் தலைவன் நடிகர் திலகம் மட்டுமே என இலக்கு. அது அனைவருக்கும் வாய்த்தால் திரி பொலிவு பெறும்.

    அன்புடன்

  7. #3236
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புள்ள திரு ராமதாஸ் & திரு வாசுதேவன்

    உங்கள் பரிவும் , அன்பும் என் மௌனத்தை சற்றே கலைத்தன - என் வருத்தத்தை இங்கு மீண்டும் எழுதுவதால் இந்த திரியில் பெரிய மாற்றம் ஒன்றும் வந்து விடப்போவதில்லை என்று தெரிந்து இருந்தும் உங்கள் அன்பான கோரிக்கையினால் உந்தப்பட்டு இந்த பதிவை இடுகிறேன் - இந்த திரியில் எனக்கு தனிப்பட்ட முறையில் யாரிடமும் வருத்தம் இல்லை - ராகவேந்திரா சார் ,கோபால் , கார்த்திக் , முரளி , பம்மலார் , வாசு , இன்னும் பலர் இந்த திரி இந்த அளவுக்கு வர மிகவும் பாடு பட்டவர்கள் , நாங்கள் நேற்று முளைத்த காளான்கள் - அதிகமாக உரிமை கொண்டாடமுடியாது . அவர்களின் பதிவுகளில் இருக்கும் உழைப்புக்கு முன் நாங்கள் இன்னும் பிறக்கவே இல்லை ----- அவர்களின் எதிர்பார்ப்புக்கள் கண்டிப்பாக எங்கள் பதிவுகளில் இல்லாத போது அவர்களுக்கு கோபம் வருவதில் நியாயம் இருப்பது உண்மை தான் ! அவர்கள் அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் மீறி மற்ற பதிவுகளை மனம் உவந்து பாராட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பது மடத்தனம் என்பது என் தாழ்மையான கருத்து .

    ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் - இங்கு யாரும் மற்றவர்கள் பாராட்டியே தீர வேண்டும் என்பதற்காக பதிவுகள் போடுவதில்லை - ஒரு மன சாந்தி - ஒரு கோயிலுக்கு சென்று இறைவனை தரிசிப்பது போல இந்த திரியை ஒரு இறைவன் சன்னதியாக நினைத்து தான் பதிவிடுகிறோம் - பூஜைக்கு பல நிறமான பூக்கள் வருவதுபோல இங்கு பல பதிவுகளால் நடிப்பு கடவுளை வணங்குகிறோம் - முரளி சொல்வது போல பாட்டுடை தலைவன் இங்கு NT ஒருவரே - அதற்காக ஒருவர் எப்படி வேணுமானாலும் மற்ற பதிவுகளை மட்டமாக எழுதலாம் - அதை பொருட்படுத்தாமல் எழுதுங்கள் - அவர் என்னவேண்டுமானாலும் எழுதி விட்டு போகட்டும் - நான் மொத்தமாக கடைசியில் அவர் சார்பாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது - இப்படி சென்றால் திரி எப்படி பொலிவடையும் என்று நினைக்கிறார் என்று புரியவில்லை

    முரளியின் பதிவுகளை யாரும் தாக்கி எழுதுவதில்லை - அதனால் அவருக்கு எங்களுடைய வலி தெரிய வாய்ப்பில்லை


    உண்மையில் என்ன வருத்தம் என்றால் மிகவும் தரக்குறைவான , படித்தவர்கள் கூட எழுத தயங்கும் வார்த்தைகள் - "Thread was losing the focus with sub-mediocre write-ups. " , & some of the write-ups were really a torture.your domination for these two days have brought us fresh air and enjoyable.

    இப்படி பொதுவாக எழுதி எல்லோரையும் வருத்த பட வைக்க வேண்டுமா - வாந்தி வருகிறது , சீத பேதி வருகிறது என்றா பதிவுகள் போட்டோம் ? அங்கு அவர்களுடைய தலைவரை நம் தலைவரை மட்டம் தட்டி எழுதும் போது எப்படி காந்தி , புத்தன் வழியில் செல்ல நமக்கு மனம் வரும் ? அதை தட்டி கேட்டால் - அங்கு ஒருவருக்கு சமாதனம் பண்ணும் சாக்கில் நம் திரியின் நண்பர்களையே ஒரு நொடியில் விட்டு கொடுத்து விடுகிறோமே!! தட்டி கேட்பவர்களுக்கு NT யின் மீது பாசமோ , அக்கறையோ இல்லாதது போல் இங்கு உபதேசமும் , அறிவுரைகளும் அவர்களுக்கு உடனே குவிகின்றன

    கோபால் என்னை மட்டும் தாக்க வேண்டும் என்று நினைத்தால் எனக்கு PM அல்லது போன் பண்ணியிருக்கலாம் அதை விடுத்து பொதுவாக திட்டி எல்லோரையும் அவமானம் செய்து விட்டார் - இப்படி செய்வது அவருக்கு வேண்டுமானால் புதியதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இப்படி அவமானம் அடைவது எங்களுக்கு புதியது.

    ராகவேந்திரா சார் : இப்படியும் உழைக்க முடியுமா என்று மலைக்க வைத்தவர் - இன்று மிகவும் அமைதியாக இருக்கிறார் - கொடும் வார்த்தைகளால் ஏற்பட்ட வடு இன்னும் மறைய வில்லை ..

    நெய்வேலி வாசு : உழைப்பின் மறு பெயர் - பாராட்டுக்களுக்க்காகவே பதிவுகள் போடுகிறார் என்று ஒருவர் பதிவு போட அதை யாருமே மறுப்பு தெரிவிக்க உடனே முன் வராமல் இருந்துவிட AK 47 னால் சுட்டது போல துவண்டு விட்டார் - அவர் சொன்ன விரும்பினது அவருடைய பதிவுகளை படித்தவுடன் கருத்துக்களை பதிவிடுங்கள் என்பததுதான் - ஒரு துளி விஷம் போதுமே , அல்லது ஹிட்லர் உமா நாத் பட அலசல் போதும் - எவ்வளவு பெரிய ரசிகரை இந்த திரி தங்க வைத்து கொள்ள தவறி விட்டது என்பதை அறிய

    பம்மலார் : இந்த ஆவண திலகத்தையும் நாம் விட்டு வைக்க வில்லை - அவர் ஆவணங்கள் நகைப்புக்கு உள்ளாகின - எதிர் முகாம் அவரை பயன் படுத்திக்கொள்ள தவற விடவில்லை

    ராகுல் : இப்படி ஒருவர் இந்த திரிக்கு கிடைத்தது இந்த திரி செய்த பெரிய புண்ணியம் - இந்த சின்ன வயதில் எவள்ளவு maturity - மிகவும் இந்த திரிக்கு சமீப காலத்தில் நேரம் ஒதுக்கியவர் இவரே - மனம் நொந்து போன பலரில் இவரும் ஒருவர் - பல படங்களை அலசி ஒவ்வொன்றாக போடும் தருவாயில் " torture " என்ற வார்த்தை இவரின் வையிர நெஞ்சத்தை பண் படுத்தாமல் புண் படுத்தி விட்டது - கார்த்திக் சற்றே தாமதமாக அவரின் வையிர நெஞ்சம் மீள் பதிவை போட்டிருக்கலாம் - கார்த்திக்கின் எழுத்தின் வலிமையின் முன் இவருடைய பதிவு ஜொலிக்க முடியவில்லை - பல எழுதாத சட்டங்கள் இந்த திரியில் - ஒருவர் மாதிரி மற்றவர் எழுத முடியாது - அப்படி எழுதினால் அது நன்றாக அமையாது என்பதை இந்த திரியில் யாரும் ஒப்புக்கொள்வதில்லை - நமக்கு பிறகு இந்த திரியை பல generations க்கு NT யின் புகழை பரப்ப ராகுல் மாதிரி youth தேவை - கோபால் , முரளி இவர்களின் வயதில் ராகுல் எங்கோ இருப்பார் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை - கோபால் இதற்கும் இரட்டை நாயினம் , good chemistry என்று என்னை கிண்டல் செய்தார் ---

    CK : இவருடைய திறமையை புரிந்து கொள்ளவேண்டும் என்றால் ஈகரை யில் இவரின் பதிவுகளை பாருங்கள் - இவரை சின்ன கண்ணன் என்பதை விட - சின்ன கண்ணதாசன் என்று சொன்னால் மிகையாகாது - நல்ல திறமை உடையவரை இந்த திரி சரியாக உபயோக படுத்தி கொள்ள தவறி விட்டது

    சிவாஜி செந்தில் : இவருடன் போனில் பேசின பிறகு தான் புரிந்தது இந்த திரியில் எவள்ளவு மேன்மையான , அடக்கமே உருவாக , ஈகோ கொஞ்சம் கூட இல்லாத பண்பாளர்கள் இருக்கிறார்கள் என்று - இந்த திரியில் பதிவுகள் போடுவதற்காக இவருடன் பேசிய பிறகு பெருமை பட்டுக்கொண்டேன் - இவரும் கடுமையான வார்த்தைகளால் ஒருமுறை பாதிப்புக்கு உள்ளானவர்

    கல்நாயக் : நகைச்சுவையை , நகைச்சுவையாக ரசிக்க தெரிந்தவர் - யாராவது தவறாக NT யை பற்றி இந்த திரியில் எழுதினால் முதல் எதிர்ப்பு இவரிடம் இருந்து தான் வரும் - இவரும் கடுமையான வார்த்தைகளால் பாதிக்க பட்டவர்

    RKS : இந்த திரியின் வேகம் சற்றே குறைந்தாலும் , கர்ணன் மாதிரி கொடையில் , பதிவுகளையும் , சண்டையில் நாகாஸ்திரத்தை விடுவதிலும் இவருக்கு இணை இவர் தான் - உடனே உடனே மனதில் உள்ளதை இவர் கொட்டிவிடுவதால் , மற்றவர்களின் கேளிவார்த்தைகள் இவரை பாதிப்பதில்லை

    இன்னும் பலர் "போனால் போகட்டும் போடா" என்று சொல்ல முடியாமல் இங்கு தவிக்கிறார்கள் ..

    நான் சொல்ல வருவது இவைகள் தான்

    1. ஒரு பதிவு நன்றாக இல்லை என்றால் அப்படி பதிவு போட்டவருக்கு தனிப்பட்ட முறையில் PM அனுப்புங்கள் - பொதுவாக திட்டி பதிவுகள் போடும் எல்லோரையும் மட்டம் தட்டாதீர்கள்

    2. பாராட்ட மனம் வரவில்லை என்றாலும் , கொடுமையான வார்த்தைகளால் மற்றவர்களை அவமானபடுத்தாதீர்கள்

    3. மற்றவர்கள் நம்மை தாக்கி எழுத வரும்போது நம் திரியின் நண்பர்களை அவர்கள் முன் எக்காலம் கொண்டும் விட்டு கொடுத்து விடாதீர்கள்

    4. பதிவுகளில் அநாகரிகம் அதிகமாக வெளிப்பட்டால் moderator அந்த பதிவை வளர விடாமல் உடனே நீக்க வேண்டும் -தன் மறுப்பை கால தாமத படுத்தாமல் பதிவிட வேண்டும் - இது மனம் புண் பட்டவர்களுக்கு சற்றே ஆறுதல் தரும் - அநாகரிகமான பதிவுகள் யாரிடம் இருந்து வந்தாலும் moderator தயவு தாட்ச்சண்யம் பார்க்காமல் நடந்து கொள்ள வேண்டும்

    5. மற்றவர்கள் ஒரு முரளி மாதிரியோ , கோபால் மாதிரியோ , கார்த்திக் மாதிரியோ பதிவுகள் போடுவார்கள் என்று எதிர்பார்ப்பது மிக பெரிய தவறு - எல்லோரும் ஒரே மாதிரி பதிவுகள் போட்டால் இனிப்பு திகட்டி விடும்

    திரியின் பொலிவு எல்லோரும் சேர்ந்து இந்த திரிக்காக பாடுபடுவதில் தான் இருக்கிறது - ஒருவரை ஒருவர் மதித்து ( மிதித்து அல்ல ) , அரவணைத்துக்கொண்டு மேலே செல்ல வேண்டும் - மற்றவர்கள் மட்டம் என்று நினைத்து பதிவுகள் போடும் பாணி மாறவேண்டும் - இந்த திரி இதனால் அடையும் வெற்றி ஒரு அளவிட முடியாத ஒன்று - அப்படி ஒரு மாறுதல் இங்கு வரவில்லை என்றால் - இந்த திரியில் பதிவிடுபவர்களை விட பார்வையாளர்கள் எண்ணிக்கைத்தான் அதிகமாக இருக்கும் .

    நன்றி

    அன்புடன்
    ரவி

  8. #3237
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ரவி,

    எனது இரண்டாயிரத்தை முத்திரை பதிவாக்க எண்ணியிருந்த போது ,போதாத காலமாய் உங்கள் பதிவு வந்து விட்டது.

    1)நான் பதிவுகளின் தரம் குறைந்து வருவதை குறிப்பிட்டேன் தவிர ,யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை.

    2)ராகுல் ராமை ஆரம்பத்திலிருந்தே நான் பாராட்டியும் உள்ளேன்.குட்டியும் உள்ளேன். படித்த இளைஞர்,எங்கள் எழுத்துக்களில் உள்ள வலிமையறிந்து ,தன் தரத்தை உயர்த்தி கொள்வார் என்ற நம்பிக்கையில் அந்த குட்டல் . ஆனால் எழுத்து பிழை முதல்,பதிவுகளின் உள்ளடக்கம்,தரம்,பாடுபொருளின் வலிமை புரியாமல் அவர் அதிகமாக எழுதுவதில் மட்டும் கவனம் கொண்டதால் ,மூத்த சகோதரர் என்ற முறையில் உரிமையுடன் அவரிடம் நான் எடுக்கும் சலுகை,இந்த கண்டிப்பு. அவர் மீது கொண்ட அன்பு,அக்கறை.

    3)ரவி, உங்களுக்கு PM எழுதி கண்டிக்கும் அளவு நீங்கள் சிறியவர் அல்ல.உங்களை நோக்கி நான் எந்த கணையையும் எயவதில்லை.

    4)இங்கு ஆழமாக எழுத படுவதை பற்றி போதிய புரிதலோ,கவனமோ எடுத்து கொள்ளாமல் ,நானும் எழுதுகிறேன் என்ற போர்வையில் ,சுவாரஸ்யமற்ற பதிவுகள் அதிகமாகி வருவதை குறித்தேன்.

    5)உதாரணம் ,முரளி சாரின் பதிவுகளை,இரண்டு மணி நேரம் அலசி ஆய்ந்த பிறகே நான் பாராட்டினேன். அதே போல பாகம் ஒன்று முதல் இன்று வரை எந்த பதிவையும் நான் படிக்காமல் விட்டதில்லை.(உங்கள் பதிவு,ராகுல் பதிவு அனைவற்றையும் சேர்த்தே)

    6)வயது முதிர்ந்தால் கழுதைகள் ,குதிரைகளாகி விடும் என்று நம்பிக்கை வைப்பதை விட,கொஞ்சம் கடினமாய் நடந்து பயிற்சி கொடுத்தால் race குதிரை ஆகா விட்டாலும் ,வண்டி குதிரையாவேனும் ஆக வாய்ப்புண்டு.
    Last edited by Gopal.s; 8th June 2014 at 12:57 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #3238
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    When we are confident that what we see is a mammoth elephant, there is no need for us to act as if we are those six blind men trying to identify that elephant. This thread has seen so many stalwarts and thespians with contributions towards establishing the legacy of NT in the minds of generations to come. We are just a drop in the ocean while NT remains the ocean itself. No body knows everything. With our limited knowledge and limitations of space and time each of us try to contribute to the dissemination of NT's name and fame. If there is ego clash and superiority complex, then that will be a bad omen heralding the end of a good initiative. Ravi, kindly erase such a feeling from your heart. We always respect Gopal sir for his intelligent analyses and diligent interpretations on NT's films and his multi-dimensional acting prowess on a global scale. From the point of view of the perspective element of NT's achievements, Ravi and Raghul are contributing with a lateral thinking. RKS, Kalnayak. Murali sir, Ragahavendra sir, Chinnakkannan (a totally different but novel and attractve approach).... Vasudevan, latest Ramadoss ayya... and all our missing stalwarts of the past....see a thread flooded with doyens.....now it should not become 'too many cooks spoiling the sauce'! NT is a 'patttai theettappatta' diamond forever! When younger generation contributors come in as the growing buds, we... the wilting plants with withering leaves... have to pave way for them...encourage them rather than nipping off the buds. We are happy that NT is anchoring into the minds of younger generation too after his KARNAN, as the unique God of acting!
    Last edited by sivajisenthil; 8th June 2014 at 01:51 PM.

  10. #3239
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Neyveli Vasu Sir,

    Come to this thread and start your posting as early as possible for the millions of NT's Fans.

    Regards

  11. #3240
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்பு நண்பர் ரவி அவர்களின் பதிவில் என் பெயரும் இழுக்கப்பட்டிருப்பதால் பதில் சொல்வது அவசியமாகிறது.

    "மற்றவர்கள் பதிவுகளை பாராட்டாதவர்" என்று என்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு. இது எவ்வளவு அபத்தமானது என்பது இத்திரியைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு தெரியும். ஒவ்வொரு பதிவையும், அது யாருடையது என்ற பேதம் பார்க்காமல் பாராட்டுபவன் நான். அதுவும் வெறும் மேம்போக்கான பாராட்டாக இல்லாமல், அவருடைய பதிவுக்கு நம்மால் எவ்வளவு கூடுதல் விவரங்களை சேர்க்க முடியும் என்று மெனக்கெடுபவன். இது ராகவேந்தர், கோபால், முரளி, பம்மலார், வாசு ஆகியோருக்கு மட்டுமல்ல்ல, இளைஞர் ராகுல்ராமுக்கும் நன்கு தெரியும். ரவி அவர்களுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமே. சில நேரங்களில் பதிவிட நேரமின்மை, இணைப்பு கிடைக்காமை போன்ற காரணங்களால் பாராட்ட முடியாமல் போயிருக்கலாம். (வாசுவின் 'துளி விஷம்' பற்றி சொன்னீர்கள். அந்தப்பதிவை திரியின் அத்தனை உறுப்பினர்களும் பாராட்டினார்கள், என்பது மட்டுமல்ல அது பற்றிய பதிவுகளுக்காக தங்கள் மற்ற பதிவுகளை நிறுத்தி வைத்திருந்தார்கள். வாசு அவர்களின் நன்றி பட்டியலைப் பார்த்தால் தெரியும்).

    இன்னொரு முக்கிய விஷயம், நான் சில பதிவுகளைப் பாராட்டாமல் இருந்திருக்கலாமே தவிர, "யாருடைய பதிவையும் கேலி செய்ததோ, கிண்டல் அடித்ததோ, தாக்கி பதிவுகள் இட்டதோ கிடையவே கிடையாது". அவர்களின் பதிவில் தகவல் பிழையிருந்தால் திருத்தியிருக்கிறேன். அதுவும் கூட தவறான தகவல் மக்களுக்கு போய்விடக்கூடாது என்பதற்கே தவிர, நான் ரொம்பத்தெரிந்தவன் என்று காட்டிக்கொள்ள அல்ல. அதுபோல என் பலவீனங்களை பகிரங்கமாக ஒப்புக்கொள்பவன், மூடி மறைப்பவன் அல்ல. (உ-ம்: ஆங்கிலப் படங்களைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கோபாலிடம் சொன்னது).

    ஒரு படத்தைப்பற்றி திரியில் பதிவு வரும்போது அது சம்மந்தமான நம் பதிவை இட்டால் கூடுதல் வலு சேர்க்குமே என்ற எண்ணத்தில்தான் 'வைர நெஞ்சம்' மீள்பதிவை தந்தேனே தவிர யாரையும் மட்டம் தட்ட வேண்டுமென்றோ, என்னை ரொம்ப விவரம் தெரிந்தவனாக காட்டிக்கொள்வதற்கோ அல்ல. (உண்மையில் நான் ரொம்ப விவரம் தெரிந்தவனும் அல்ல).

    இறுதியாக........., என்னுடைய பதிவுகள், யாரேனும் திரியில் பங்கேற்க தடையாக இருக்குமாயின், நான் ஒதுங்கிக் கொள்கிறேன். (இப்போதே ஒதுங்கித்தான் இருக்கிறேன், இனி முற்றிலுமாக ஒதுங்கிக் கொள்கிறேன்). என் பொருட்டு யாரும் ஒதுங்கியிருக்க வேண்டாம். 'தடை(அப்படி ஒன்று இருந்தால்) நீங்கியது' என்று தாராளமாக வந்து பதிவிடுங்கள்.

    இதுவரை அன்பு காட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றியுடன்...
    எஸ். கார்த்திகேயன்.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •