Page 325 of 401 FirstFirst ... 225275315323324325326327335375 ... LastLast
Results 3,241 to 3,250 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #3241
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கெளரவம்-1973

    கருணை கொலை,போர் குற்றம் என்பது போல சட்ட தர்மம் என்பதும் வினோத வழக்கு தொடராகவே எனக்கு படும்.கெளரவம் படத்தில் மேலெழுந்த வாரியாக இல்லாமல் பல அழுத்தமான விஷயங்கள் அருமையாக விவாதத்திற்குள்ளாகும் படி கதையுடன் பொருந்தி இடம் பெற்றுள்ளது இன்று வரை என்னை வியப்புக்குள்ளாக்கிறது .

    ஒரு வக்கீலின் தார்மீக பொறுப்பு,தர்ம நியாயங்கள் எது வரை செல்லலாம்? அல்லது இருட்டறையில் தர்க்க வாதம் என்ற விளக்கை ஏற்றுவதுடன் அவன் பணி முடிகிறதா?அவன் கொண்ட தொழில் சட்ட அறிவையும்,தர்க்க வாத குயுக்தி திறமையை அடிப்படையாக கொண்டது மட்டுமே.மதம்,ஆன்மிகம் சார்ந்த தர்ம நியாயங்களுக்கு அவன் பொறுப்பல்ல என்றால் ,அறிஞர்கள் கூடி விவாதிக்கும் ஒரு பட்டி மன்றமாக,நீதிபதி ஒரு பட்டி மன்ற நடுவர் என்ற வகையில் சுருங்கி விடாதா?அதை மீறிய ஒரு தொழில் தர்மம் வக்கீலுக்கு உள்ளதா?

    நீதிபதி ஸ்தானம் என்பது ஒருவன் விதியை தீர்மானிக்கும் கடவுளுக்கு சமமானது.அந்த பதவிக்கு அரசியல்,சிபாரிசு என்று நுழைந்து ,சட்ட வாயிலையே நீர்க்க செய்தால் ,தகுதியுள்ள திறமையாளன் என்ன மனநிலை அடைவான்?

    தன் தொழில் திறமை மீது அசைக்க முடியாத இறுமாப்பு கொண்டவன் ,அதை நேர்வழி செருக்காக(Constructive Arrogance) மாற்றாமல்,தோல்வியை மரணத்துக்கு சமமாக்குவது எந்த வகை தன்னம்பிக்கையில் சேரும்?

    தன்னை எடுத்து வளர்த்து போதித்து ஆளாக்கிய ஒரு தந்தை மற்றும் ஆசானுக்கு மகன் செலுத்த வேண்டிய கடன்,சமுதாய கடனுக்கு கீழே வைக்க பட வேண்டிய ஒன்றா?

    திருந்தி வாழ நினைக்கும் ஒரு தடம் புரண்ட மனிதன்,தப்பித்த குற்றங்களுக்காக,நிரபராதி நிலையில் தவறான தண்டனையை பெறுதல் ஒரு கவிதை ஞாய தீர்வாகுமா?

    ஒரு நேர்மையான கலை படத்துக்குரிய அம்சங்களுடன் வியாபார நுணுக்கங்களையும் நன்கு சேர்த்து செய்த படங்கள் வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்களாகும்.நடிகர்திலகம்-சுந்தரம் இணைவு நமக்களித்த கலை கொடைகளாகும்.

    இரண்டிலுமே பிராமண பாத்திரங்களானாலும்,பிரமிக்க வைக்கும் வேறுபாடு கதாபாத்திர இயல்புகள்,பிரச்சினையின் தன்மைகள் இவற்றுக்கு மேலாய் நடிகர்திலகத்தின் கூடு விட்டு கூடு மாறும் பாத்திர அணுகல்,புரிதல் என்று விரியும்.
    ரஜினிகாந்த் செல்வந்தன்.பத்மநாபன் நடுத்தரன்.ரஜினிகாந்த் ஒழுக்க நெறிகளை பற்றி கவலை படாத ,உயர் ரக வெற்றியில் மிதக்கும் ஒரு தொழில் தேர்ச்சி பெற்ற நாத்திகன்.பத்மநாபன் ஒழுக்க அறநெறியில் ஊறிய ஒரு உத்தியோக மேலாளன்.ரஜினி காந்திற்கு மகனுடன் பிணக்கு கர்வம் சம்பத்த பட்டது.பத்மனாபனுக்கோ மகன்/மகள் நெறி வழுவல் சம்பத்த பட்டது.
    ரஜினிகாந்தின் பிரச்சினைகள் எதிர்பார்ப்பில் கட்ட பட்டது.பத்மநாபனின் பிரச்சினைகள் அடிப்படை தேவைகளில் கட்டமைக்க பட்டது.இருவரும் ஒரே இனத்தை சார்ந்தாலும் ,இரு வேறு துருவங்கள்.நடிகர்திலகத்தின் பாத்திர வார்ப்பில் இதனை விரிவாக ஆராய்வோம்.இப்போது சிறிதே கதை களம் புகுவோம்.

    ரஜினிகாந்த்(வெற்றியின் மிதப்பில் உள்ள செல்வந்த கிரிமினல் லாயர்,உல்லாச விரும்பி ),மனைவி செல்லா,வளர்ப்பு மகன் கண்ணன்(குலநெறிமுரைகளில் திளைக்கும் அம்மா பிள்ளை .பெரியப்பா பெரியம்மாவை உலகமாய் கொண்டு வளர்ந்து வரும் லாயர்) என்று பிரச்சினையே புகாத குடும்பம்.

    ரஜினிகாந்த் ,தனக்குரிய அங்கீகாரம்(ஜட்ஜ் பதவி)வழங்க படாததால் கோபமுற்று ,குற்றவாளி என்று உறுதி செய்ய பட்டு தண்டனை விளிம்பில் நிற்போரை தன் வாத திறமையால் விடுவிக்கும் முறையில்,இந்த முறையற்ற அமைக்கெதிரான கோபத்தை வஞ்சமாக தீர்க்கும் முயற்சியில் கிடைத்த கருவி மோகன்தாஸ்.

    மோகன்தாஸ் என்பவன் ஒரு பணக்கார மைனெர் பெண்ணை கடத்தி ,அவள் வாழ்வை சீரழித்து ,அவள் மரணத்திற்கு காரணமானவன்.ஆனாலும் ரஜினிகாந்தின் வாத திறமையால் விடுதலை பெற்று ,திருந்தி ,தான் காதலிக்கும் நடன பெண்ணை மணந்து வாழ திட்டமிடும் போது,எதிர்பாராத அவளின் தற்செயல் மரணத்திற்கு குற்றம் சாட்ட பட்டு தண்டிக்க படுபவன்.

    மற்றோரின் பார்வைக்கு அதர்மமாக படும் ரஜினிகாந்த் செயலை எதிர்க்க சக வக்கீல் மற்றும் நண்பர்கள் கண்ணனை பப்ளிக் ப்ராசிகியூட்டர் ஆக்கி ,ரஜினிகாந்திற்கு எதிராக தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டுகிறார்கள்.கண்ணன் பெரியப்பா மனதை மாற்ற இயலாமல்,அவருக்கெதிராக நீதி மன்றத்தில் நிற்க வேண்டிய சூழலில் ,வீட்டை விட்டு வெளியேற்ற பட்டு ,வழக்கில் வென்று,பெரியப்பாவை நிரந்தரமாக தோற்கிறான்.

    நடிகர்திலகத்தால் மட்டுமே இந்த பாத்திரத்தை பண்ண முடியும் என்ற வகையே இதில் வரும் ரஜினிகாந்த் பாத்திரம்.prestige பத்மநாபனுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நாராயணசாமி போல இதில் வரும் ரஜினிகாந்துக்கு டி.வீ.எஸ்.கிருஷ்ணா என்ற தொழிலதிபர்,கோவிந்த் சுவாமிநாதன் என்ற வக்கீல்,மற்றும் மோகன் ராமின் தந்தை வீ.பீ ராமன் என்ற மூவர் கூட்டணியில் இந்த பாத்திரத்தை வடிவமைத்தார் நடிகர்திலகம்.

    குணசித்திர ஒருங்கமைவு,பேசும் பாணி,சிறு சிறு பாத்திர இயல்புகள்,ஸ்டைல்,பாமர மக்களையும் ,படித்தவர்களையும் ஒருங்கே ஈர்த்த பாத்திரம். ஆங்கில வசனங்கள் பாத்திர படைப்புக்கேற்ப அள்ளி தெறிக்க பட்டிருந்தாலும் ,பீ,சி சென்டர்களையும் வெற்றிகரமாக ஈர்த்த பெருமை இந்த படத்துக்குண்டு.

    இதில் ரஜினிகாந்த் பாத்திரம், உலவும் ரோல் மாடல்களை கொண்டு சிவாஜியின் கற்பனை திறனால் meisner முறை நடிப்பில் ,ஆஸ்கார் வைல்ட் பாணி சுதந்திர கற்பனை வளம் கொண்ட செழுமையான ஒன்று.

    கண்ணன் பாத்திரமோ ,இயல்பு பாணி கொண்ட stanislavsky கூறுகள் அதிகம் கொண்டது.எப்போதுமே ஒரு பாத்திரத்தை ஓங்க வைக்க நடிகர்திலகம் கையாளும் அற்புத உத்தி இதுவாகும்.

    An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .

    Doing justice to the character - என்பதைப் பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். அதற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. மேம்போக்கான அபிப்ராயம் உள்ளவர்களுக்கு அதைப் புரிய வைக்க, அணுக இலகுவாக்க, பார்வை விரிவடைய சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம்.

    அதே சமயத்தில், இதைத் தாண்டி 'இந்த நடிப்பை வெளிப்படுத்த வாகாக ஒரு பாத்திரம் தேவை' - என்ற வகையையும் நாம் சொல்லவேண்டும். End-product என்று பார்த்தால் 'பாத்திரத்துக்குக் கச்சிதமான நடிப்பு' என்ற சட்டகத்திலிருந்து பிரித்து சொல்லமுடியாதபடிக்கு இருக்கலாம். ஆனால் இந்த பாத்திரமே நடிப்புக்காக வார்க்கப்பட்டது என்பதை உணர்ந்து சுவைக்கும் துய்ப்பே தனி!

    நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.

    Strasberg&Stanislavsky focused on the Sense Memory technique using events in one’s past as a way of emotionalizing, Meisner developed his technique using Stanislavski’s revised method. Rather than delving exclusively into one’s past memories as a source of emotion, one could more effectively summon up the character’s thoughts and feelings through the concentrated use of the imagination and the belief in the given circumstances of the text. Meisner defined acting as doing things truthfully under imaginary circumstances and his technique is still known for its depth, reliability and balanced approach.

    நாம் ஏற்கெனெவே நடிப்பு பள்ளிகளை விரிவாக இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடரில் அலசி விட்டதால் இங்கு கோடி காட்டி விட்டு , நடிகர்திலகத்தின் பாத்திர அணுகலை,அது சார்ந்த என்னுடைய ரசனை துயிப்பை இனி விரிவாக அலசுவேன்.

    ரஜினிகாந்த என்ற கதாபாத்திரத்தை புரிந்தால்,நடிகர்திலகம் எந்த அளவு கவனம் செலுத்தி அதனை செதுக்கியுள்ளார் என்று புரிந்து கொள்ளலாம்.

    ரஜினி காந்த் எந்த ஒரு தொடர் வெற்றி பெற்ற திறமைசாலிகளையும் போல ,கடவுளை நம்பியாக வேண்டிய அவசியமில்லாதவர். சில நடத்தை முறைகளால் ,மேலை நாகரிகமானவர் என்று காட்டி கொண்டாலும் ,கீறி பார்த்தால் அக்ரகாரம் எட்டி பார்ப்பதை புன் முறுவலுடன் தொடரலாம்.
    பல சுவாரஸ்யங்கள் பட திரைகதையிலேயே உண்டு.குடிக்க ரஷ்யன் வோட்கா தேடும் மனிதன் ,கட்டி கொள்வதோ கடமுடா பட்டி பக்தையை.
    மகன் அம்மா புள்ளை என்று கேலி செய்தாலும், மகனிடம் எதிர்பார்ப்பது ,கோடு தாண்டா conservative mentality யைத்தான்.மகன் காதலிக்கும் போது அவர் அடையும் அதிர்ச்சி, அடக்கி வைக்க முற்படும் அதிகாரம்,தன் கருத்தை எதிர்க்கவே உரிமையில்லை என்று அவர் பண்ணும் ஆகத்தியம் .அதே போல தன் பெருமை பற்றி மனைவியிடம் செல்லமாக அலசும் சற்றே அக்ரகார நேர்த்தி. முதல் தோல்வி(justice post )அவர் ரத்தத்தை சூடாக்கி ,எல்லை மீறி தன் திறமையை நிலை நாட்டுவதில் முடிந்தாலும் ,தாங்க முடியாத எதிர்பார்ப்பு நிறைந்த வர போகும் தோல்வி ,திலகம் வேண்டும் அளவு sentiment ஆக்கி விடுவது,மதில் மேல் பூனையான விளிம்பு நிலை மனிதரை குறிக்கிறது.

    கண்ணனிடமோ ,குழப்பமே இல்லாத confimist .ஆனால் பெரியம்மாவை
    புரிந்த அளவு பெரியப்பாவை புரியாதவனோ என்ற குழப்பம் அவ்வப்போது.ஆனால் தர்மம்-அதர்ம போரில் இழு படுவது ஒரு வித moral preaching தந்த குழப்ப நிலையே.

    இப்போது படத்தை பார்த்தால் புரியும் ,எத்தனை ஆழமாக நடிகர்திலகத்தின் புரிதல் உள்ளது என்பது.ஒரு வக்கீலின் அதீத உடல் மொழி (கர்வம் நிறைந்த தன்னம்பிக்கை. ,தான் நினைப்பது சொல்வது மட்டுமே சரி என்று உணர்த்த அலையும் தொழில் சார்ந்த aggression )முதல்,அழுத்தி பேசி மற்றவரை ஆக்ரமிக்கும் வசன முறை.கிண்டல்,கேலி,துச்சம்,அகந்தை,என்ற எடுத்தெறிதல் என்று அவர் பண்ணும் அதகளம்,இந்த பாத்திரங்களுக்குதானே இவர் பிறந்து வந்தார் என்ற மலைப்பையே அளிக்கும்.

    ரஜனி காந்த் பாத்திரத்தை விட்டு விட்டு கண்ணனை மட்டும் பார்த்தாலும்,ஒரு சாத்திர முறையில்,சட்டதிட்டங்களுடன் வளர்க்க பட்ட ஒரு ஆசார குல பிள்ளையை அவர் நடித்து காட்டும் நேர்த்தி.அப்பப்பா....

    கவுரவத்தில் எதை எடுப்பது ,எதை விடுவது?

    ரஜனிகாந்த் ,கண்ணனிடமும்,செல்லாவிடமும் பேசும் ஆத்திக அடாவடி காட்சியா,கண்ணன் காதல் தெரிந்து கண்டிக்கும் காட்சியா,செந்தாமரையிடம் பேசி விட்டு உன் friend மொகத்திலே ஈயாடல பாத்தொயோ காட்சியா,மைலாபுர்லே எல்லாரும் என்னடி பேசிக்கிறா என்ற வம்பு காட்சியா, மோகனதாசிடம் போடா சொல்லும் அலட்சிய காட்சியா,monotony தவிர்க்க வீட்டிலேயே அமைக்க பட்ட கோர்ட் காட்சியா,கண்ணனிடம் confront பண்ணும் காட்சியா(curt ),தன்னுடைய பழைய கோட் வாங்க வரும் கண்ணனிடம் அவர் மாடியிலிருந்து பேசும் காட்சியா,கடைசியில் நம்பிக்கை தளரும் காட்சிகளா என்று படம் முழுதும் விருந்து.

    நடிகர்திலகம் படங்களில் நான் எப்போதுமே முதல் பத்துகளில் நடிப்பு,படம் இரண்டுக்குமாக நான் தேர்ந்தெடுக்கும் அதிசயம்.
    Last edited by Gopal.s; 8th June 2014 at 01:41 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Thanks KCSHEKAR thanked for this post
    Likes KCSHEKAR, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3242
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    முதலில் நீங்கள் 2000 பதிவை போடும் முன் என் பதிவு வந்தற்காக மன்னிக்க வேண்டுகிறேன் - உண்மையில் போதாத காலம் தான் - திரு ராமதாஸின் வேண்டுகோளுக்கு இணங்கி ஏன் திரி பொலிவை இழந்து விட்டது என்பதற்காக இன் கருத்துக்களை பதிவிட்டேன் - உங்கள் பதிலை எதிர்பார்க்கவில்லை

    1)நான் பதிவுகளின் தரம் குறைந்து வருவதை குறிப்பிட்டேன் தவிர ,யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை.

    பதிவுகள் போடுபவர்களே இப்போதைக்கு இரண்டோ , மூன்று பேர் தான் - தரம் குறைந்து விட்டது என்றால் என்ன அர்த்தம் - மொத்தமாக திட்டினால் என்ன , தனிப்பட்ட முறையில் திட்டினால் என்ன - பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லையே - அப்படி என்ன எங்களால் தரம் குறைந்து விட்டது - அதற்காக தரமே இல்லாமல் "torture " , "out of focus " என்று எழுத வேண்டுமா ?

    2.ராகுல் ராமை ஆரம்பத்திலிருந்தே நான் பாராட்டியும் உள்ளேன்.குட்டியும் உள்ளேன். படித்த இளைஞர்,எங்கள் எழுத்துக்களில் உள்ள வலிமையறிந்து ,தன் தரத்தை உயர்த்தி கொள்வார் என்ற நம்பிக்கையில் அந்த குட்டல் . ஆனால் எழுத்து பிழை முதல்,பதிவுகளின் உள்ளடக்கம்,தரம்,பாடுபொருளின் வலிமை புரியாமல் அவர் அதிகமாக எழுதுவதில் மட்டும் கவனம் கொண்டதால் ,மூத்த சகோதரர் என்ற முறையில் உரிமையுடன் அவரிடம் நான் எடுக்கும் சலுகை,இந்த கண்டிப்பு. அவர் மீது கொண்ட அன்பு,அக்கறை.

    நாம் ஏன் நம்மை ஒரு god father என்று எடுத்து கொள்ளவேண்டும் ? அவரவர்கள் இங்கே பாடம் படித்து பட்டம் பெற வரவில்லை - நாம் spoon feed பண்ண --- நீங்கள் அவரிடம் எடுக்கும் சலுகை அவருக்கு தெரியுமா ? கண்டிப்பாக இல்லை - மனம் ஒடிந்து போனவர்களில் அவரும் ஒருவர் - உங்கள் பதிவுகள் தான் தரத்தில் உயர்ந்தவை என்று ஒவ்வொருவரும் நினைத்தால் முன்னேறவே முடியாது - எழுத்தின் வலிமை என்பது சாதாரண மனிதனுக்கும் நாம் எழுதுவது புரிய வேண்டும், பிடிக்க வேண்டும் - புரிந்து கொள்ள இரண்டு மணி நேரம் தேவை இல்லை

    3.ரவி, உங்களுக்கு PM எழுதி கண்டிக்கும் அளவு நீங்கள் சிறியவர் அல்ல.உங்களை நோக்கி நான் எந்த கணையையும் எயவதில்லை

    இதில் சிறியவர் , பெரியவர் ஏது ? நீங்கள் பொதுவாக திட்டினதில் நானும் தானே அடக்கம்

    4.இங்கு ஆழமாக எழுத படுவதை பற்றி போதிய புரிதலோ,கவனமோ எடுத்து கொள்ளாமல் ,நானும் எழுதுகிறேன் என்ற போர்வையில் ,சுவாரஸ்யமற்ற பதிவுகள் அதிகமாகி வருவதை குறித்தேன்.

    எல்லோரும் உங்களை மாதிரியோ , முரளி மாதிரியோ எழுத முடியாது என்பதை பல முறை இங்கு பதிவிட்டுள்ளேன் - உங்கள் பதிவுகளை படித்து புரிந்து கொண்ட பின் தான் நாங்கள் பதிவிட வேண்டுமென்றால் ஒரு வருடத்திற்கு ஒருவர் ஒரு பதிவு போட்டால் அதுவே அதிகம் - எல்லா சுவையும் வேண்டும் - ஒரிஜினல் ஆகா இருக்க வேண்டும் , புது கண்ணோட்டத்தில் இருக்க வேண்டும் , நகைச்சுவையுடன் எழுத தெரிந்து இருக்க வேண்டும்

    5)உதாரணம் ,முரளி சாரின் பதிவுகளை,இரண்டு மணி நேரம் அலசி ஆய்ந்த பிறகே நான் பாராட்டினேன். அதே போல பாகம் ஒன்று முதல் இன்று வரை எந்த பதிவையும் நான் படிக்காமல் விட்டதில்லை.(உங்கள் பதிவு,ராகுல் பதிவு அனைவற்றையும் சேர்த்தே)

    என்ன சொல்ல வருகிண்டீர்கள் என்று என் சின்ன அறிவுக்கு எட்ட வில்லை

    வயது முதிர்ந்தால் கழுதைகள் ,குதிரைகளாகி விடும் என்று நம்பிக்கை வைப்பதை விட,கொஞ்சம் கடினமாய் நடந்து பயிற்சி கொடுத்தால் race குதிரை ஆகா விட்டாலும் ,வண்டி குதிரையாவேனும் ஆக வாய்ப்புண்டு.

    தேவையே இல்லாத உபமானம் - அவரவர்கள் அவர்கள் முயற்சியில் முன்னே வரத்தான் விரும்புவார்கள் - உங்களிடம் யாராவது உபதேசம் கேட்டால் தாரளாமாக அள்ளி வீசுங்கள் - otherwise there will not be any takers

    என்னால் இந்த திரி தரம் குறைந்து போவதை நான் விரும்பவில்லை கோபால் - இந்த பதிவுடன் இந்த திரியில் இருந்து விடை பெறுகிறேன் - நீங்கள் dictionary யில் புது புது வார்த்தைகளை கண்டு பிடித்து ஒட்டு மொத்தமாக எல்லோரையும் திட்டுவதை நான் விரும்பவில்லை - இதுவரை உங்களை torture பண்ணியதற்காகவும் , sub mediocre write-ups கொடுத்தற்காகவும் , இந்த திரியை out of focus இல் கொண்டு சென்றதற்காகவும் மன்னிக்கவும் -

    நீங்கள் இப்படியே தொடர்ந்து 2000, 3000 என்று பதிவுகளை போட்டு திரியை வளப்படுத்த என் வாழ்த்துக்கள்

    Good Bye

  5. #3243
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Gopal Sir. 'Yaanaikkuth than balam theriyadhu' enbaargal. That way your postings on NT's films and your methodology in analysing his acting skills... really worth for a submission to some University to get a Ph.D., if properly sequenced and logical interpretations are made. Amidst a busy schedule of your work commitments, it is really great to have come up with such painstaking efforts to glorify NT. Kindly formulate an appropriate title of the thesis, enumerate principal and auxiliary objectives, streamline your methodology, furnish informations and statistics in a tabular/graphical form, blow up your observations with a summary and conlusions.... I really feel that your works deserve a doctoral degree. Kindly make the hay when the sun shines! It is only a humble and heartfelt request from a fellow hubber who can perceive the worthiness of your work. Ravi, Raghul and an ardent devotee of NT like me will certainly follow your footsteps as a role model.
    Last edited by sivajisenthil; 8th June 2014 at 02:10 PM.

  6. #3244
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கடைசியாய் ஒன்று.

    நான் முத்திரை பதிவாய் எழுத நினைத்த கௌரவத்தை ,நான் நினைத்த படி எழுத விடாமல் செய்து விட்டது ரவியின் எடுத்தேன் கவிழ்த்தேன் பதிவு.

    கார்த்திக் சார் மட்டுமல்ல ,நானும் இனி பார்வையாளனே.என்னுடைய நாப்பது வருட உலக இலக்கிய பரிச்சயம்,உலக பட பரிச்சயம்,நடிகர்திலகம் பரிச்சயம்,பிரத்யேக எழுத்து திறமை எல்லாம் கொண்டதை இழக்க போவது நீங்களே. இனி ஊருக்கு ஒரு பிள்ளை . படத்தின் கதை சுருக்கம் படித்து கொண்டிருங்கள்.எனக் கென்ன போச்சு?கொஞ்சம் இந்த திரியின் தரமறிந்து , பதிவுகள் தரம் கூட்டுங்கள் என்று சொன்னதற்கு இத்தனை எதிர்ப்பு ,மாய்மாலம்.

    நேரமிருந்தால், இந்த திரியில் எழுத பட்ட தரமான விஷயங்களை படித்து சற்றே உங்களை வளர்த்து கொள்ளுங்கள். வயதானால் தானே ராகுல் முரளியாக,கோபாலாக ,கார்த்திக் ஆக வர முடியுமென்றால், ரவி....நீங்கள் எங்களை விட வயதானவர் என்று கேள்வி.

    தரத்தை தரம் தாழ்த்தாதீர்கள். இழப்பு உங்களுக்கே.

    அத்துடன் நில்லாமல் கார்த்திக்,ராகவேந்தர்,முரளி,வாசு, சாரதி,சின்ன கண்ணன்,rks ,பம்மலார் மற்றும் எங்களுக்குள் உள்ள பிணைப்பு ,நட்பு நீங்கள் அறியாதது,அறிய முடியாதது.

    சரி. எப்படியேனும்,எதனையேனும் எழுதி கொள்ளுங்கள்.பழையதை புரட்டி அறிவை வளர்த்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

    நன்றி.வணக்கம்.
    Last edited by Murali Srinivas; 10th June 2014 at 12:05 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #3245
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    என்னால் இந்த திரி தரம் குறைந்து போவதை நான் விரும்பவில்லை கோபால் - இந்த பதிவுடன் இந்த திரியில் இருந்து விடை பெறுகிறேன் - நீங்கள் dictionary யில் புது புது வார்த்தைகளை கண்டு பிடித்து ஒட்டு மொத்தமாக எல்லோரையும் திட்டுவதை நான் விரும்பவில்லை - இதுவரை உங்களை torture பண்ணியதற்காகவும் , sub mediocre write-ups கொடுத்தற்காகவும் , இந்த திரியை out of focus இல் கொண்டு சென்றதற்காகவும் மன்னிக்கவும் -

    Dear Ravi. We all learn by trial and error. We can also perfect our writings with logic and sequence over time. We should neither be shaken nor be stirred by criticisms. Like NT transform the criticisms as stepping rungs for our going up the ladder. This thread is an open forum where any one has the right to interact and express their views. Kindly try to be a stable granite than a sublime camphor, Ravi. We need not create factions.
    Last edited by sivajisenthil; 8th June 2014 at 03:26 PM.

  8. #3246
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கார்த்திக் - என் பதிவை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன் - இந்த திரி இன்று பலமாக இருப்பதற்கு நீங்களும் ஒரு முக்கிய காரணம் - இதை மறுக்க முடியாது . உங்கள் பதிவுகளில் மனதை பறி கொடுத்தவர்களில் நானும் ஒருவன் - உங்கள் மீது ஒரு கோபம் இருந்தது - அதை மறைக்க வில்லை - கோபால் அப்படி எழுதினதை நீங்களோ , வேறு எவரோ மறுக்க வில்லை , கண்டிக்கவோ வில்லை - - பாராட்டும் போது மட்டும் மன அமைதி வருவதில்லை - ஒருவரை மட்டம் தட்டும் போதும் அதை எதிர்க்க இந்த திரியில் யாருமே இல்லையே என்று எண்ணி வருத்த பட்டேன் - நம் பதிவுகளை நாமே குறைத்து எடைப்போட்டால் இந்த திரியில் தொடருவதில் என்ன பயன் ?

    நீங்கள் விலக வேண்டாம் - உங்கள் சேவை இந்த திரிக்கு இப்பொழுது மிகவும் தேவை - நான் விலகி விட்டேன் - இனி திரி நன்றாக செல்லும் என்று நம்புகிறேன்

  9. #3247
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நான் இந்த திரியில் சேர்ந்த வருடம் 2012 . அதற்கு முன்பு திரு பம்மலர் , நெய்வேலி வாசுதேவன் , சாரதா மேடம் , ராகவேந்திரன் சார் , கார்த்திக் சார் எழுத்துகளை படித்து உள்ளேன் . குறிப்பாக ஜெய்ஷங்கர் , ரவிச்சந்திரன் திரிகளில் தான் முதலில் இவர்களின் எழுத்துகளை பார்த்தேன் . முதலில் சூப்பர் , thanks என்றே சில வார்த்தைகளை மட்டுமே எழுதி வந்தேன் . அப்புறம் ஆங்கிலத்தில் தான் எழுதினேன் பிறகு வாசு சார் சொல்லி தான் எழுதினேன் , எனக்கு தமிழ் எழுத தெரியாது , தமிழ் தான் தாய் மொழி ) (என்னை பொறுத்த வரைக்கும் ர என்றால் ரஜினிகாந்த , ப என்றல் பணக்காரன் இது தான் நான் பார்த்த முதல் படம் , தமிழ் எழுதுவது இப்போ கொஞ்ச காலமாக தான் அதுவும் நடிகர் திலகம் திரிக்காக தான் வாசு சார் தான் என் குரு , இன்னும் சொல்ல போனால் இந்த திரியில் பல நண்பர்கள் இருந்தாலும் என் நண்பர் , guide வாசு சார் தான்

    இந்த திரியில் சண்டைகள் ,கருத்து மோதல்கள் அடிகடி நடப்பது வாடிக்கை ஆகி விட்டது . மக்கள் திலகம் திரியில் சண்டை என்ற பேச்சுக்கு இடம் இல்லை , நாம் அவர்களிடம் கற்று கொள்ள வேண்டிய பல நல்ல விஷ்யங்களில் முக்கியமான அம்சம் இது

    இந்த திரியில் இருக்கும் அளவுக்கு ஒரு நடிகரை இப்படி அலச முடியுமா என்பது கேள்வி குறியே .
    கடந்த 1 மாத காலத்தில் இந்த திரியால் எனக்கு கிடைத்த நல்ல உள்ளங்கள் திரு ரவி சார் மற்றும் செந்தில் சார்
    ரவி சார் உடன் பேசுவது ஒரு இனிய அனுபவம் , செந்தில் சாரை நேரில் பார்த்த போதும் இதே அனுபவம்

    இப்போது நம் திரியில் பிரச்சனை காரணம்

    ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றி பேச போக , அது கர்ணன் படத்தில் மக்கள் திலகம் நடித்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை பற்றி திரு ரவி எழுத அதற்க்கு "Thread was losing the focus with sub-mediocre write-ups. " , & some of the write-ups were really a torture.your domination for these two days have brought us fresh air and enjoyable. என்ற வார்த்தை

    இதை தவிர்த்து இருக்கலாம் அனைவரும் ஒரு வித relaxation மற்றும் நடிகர் திலகத்தின் மேல் மதிப்பு வைத்து அவர்களுக்கு தெரிந்ததை எழுதுகிறார்கள் , குறைகளை எடுத்து சொல்லும் பொது கவனமாக சொல்ல வேண்டும் , உதாரணம் :எனக்கு காபி பிடிக்காது அதை நண்பர் வீட்டில் கொடுக்க வருகிறார்கள் என்றால் சாரி எனக்கு பிடிக்காது என்று சொல்லுவது தானே முறை
    அதையே

    ச்சே காபி குடிப்பது வேஸ்ட் அதலாம் எதற்கு என்று கேட்பது சரி அல்ல என்பது என் கருத்து

    அதே போல் சீனியர் hubbers வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் . அவர்கள் இங்கே வரவில்லை என்றால் அவர்கள் உள்ளம் வருத்த பட்டு உள்ளது என்று தான் நினைக்க தோன்றுகிறது

    ஆனால் நடிகர் திலகத்துக்கு ஈகோ என்பதே கிடையாது அவர்க்கு இல்லை என்ற பொது நம்மளுக்கு எதற்கு

    அனைவரும் எழுத வேண்டும் , யாரும் விலக கூடாது என்பதே என் விருப்பம்

  10. Likes eehaiupehazij liked this post
  11. #3248
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஆனால் நடிகர் திலகத்துக்கு ஈகோ என்பதே கிடையாது அவர்க்கு இல்லை என்ற பொது நம்மளுக்கு எதற்கு

    அனைவரும் எழுத வேண்டும் , யாரும் விலக கூடாது என்பதே என் விருப்பம்

    Dear Raghul. Now I hope you have understood and can perceive the differences in your way of writing and the improvements on the quality of your write-ups since you started contributing in this thread. A hardcore Rajinikanth fan who has got motivated to write on NT,learning his achievements through his father! This is only a sample of how the younger generation is getting attracted by the magnetic charisma of NT after his digital Karnan! We, senior persons have almost seen all NT movies and we know the positive and negative elements even as we adore our icon. But young Turks like you are welcome to this thread and we welcome your write-ups even on NT's unsung movies. Continue your good works without any ego clash or hurt feel.
    Last edited by sivajisenthil; 8th June 2014 at 08:32 PM.

  12. #3249
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Rahul&Ravi,
    You are most welcome to make your contributions in your way. I only putforth my suggestions and opinion which should not be a deterrent in any way.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. #3250
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    NO one should leave as posted by Mr Rahul and humble request to all seniors
    to contribute as usual in their own style.

    Congratulations to Mr Gopal for touching the milestone of 2000 posts.

    Regards

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •