-
9th June 2014, 03:48 PM
#3271
Senior Member
Senior Hubber
ரவி.. சரி சரி ஒரு நாள் சுட்டி கொடுத்தாச்சு..ரிலாக்ஸ் ஆயாச்சோன்னோ..சீக்கிரம் வாங்க..
ராகுல்..ஆரம்பியுங்கள் உங்கள் லிஸ்ட்டை..
கோ..பா..ல்.. போதுங்க்ணா..வாங்க..
கார்த்திக்.. சும்மா சும்மா ஆலங்கட்டி மழை பெய்யாம எஸ்கேப் ஆகலாம் நு பார்க்கறீங்களா என்ன வாங்க..
சிவாஜி செந்தில்;ரவி - நீங்கள் சொன்ன கமெண்ட்ஸிற்கு நான் தகுதியானவனா என்பது தெரியவில்லை..பட் எழுதும் போது இன்னும் தெளிவாக பயத்துடன் இன்னும் சுவாரஸ்யமாக எழுதிப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்.. நன்றி..
-
9th June 2014 03:48 PM
# ADS
Circuit advertisement
-
9th June 2014, 04:15 PM
#3272
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
கெளரவம்-1973
நடிகர்திலகம் படங்களில் நான் எப்போதுமே முதல் பத்துகளில் நடிப்பு,படம் இரண்டுக்குமாக நான் தேர்ந்தெடுக்கும் அதிசயம்.
கெளரவம் திரைப்படத்தை சமீபத்தில் பார்த்துவிட்டு, பஹ்ரைனைச் சேர்ந்த திரு.சிங்காரவேலு பாலசுப்பிரமணியம் அவர்களுடைய முகநூல் பதிவு.
நீண்ட இடைவெளிக்கு பிறகு..பிரியமான இனிப்பை மீண்டும் ஆவலுடன் சுவைத்த ஒரு திருப்தி.." கெளரவம் " எனும் நடிகர் திலகத்தின் படைப்பை மீண்டும் பார்த்தபோது...கண்டு ரசித்தபோது... மனம் நிறைந்தது...அவரது நடிப்பு திறனுக்கு உரைகல்லாக அமைந்த பல படங்களில் தலையாய ஒரு படம் என்றே இதனை ..கூறலாம்..
அல்லது அவரது மணிமுடியை அலங்கரிக்கும் வைரங்களில் ஒன்று என்றும் கூறலாம்.. 41 வருடங்களுக்கு முன்பு வெளியான
என்ன... ஒரு அருமையான கலை பொக்கிஷம்...
பொதுவாக நல்ல ஒரு கதை அமையும்...அதில் இயக்குனர்கள்...நடிப்பதற்கு...இவரை போடலாமே...
ஏன்..இந்த கதைக்கு புதுமுகம் முயற்சிக்கலாமே..என்றெல்லாம் சிந்திப்பது...ஒருவகை....
படம் வெளியான அந்த கால கட்டத்தில்...இயக்குனர்களும், கதாசிரியர்களும்...நடிகர் திலகத்தின் நடிப்புக்கு தீனி போடவேண்டுமே...என்று...போட்டி போட்டு கொண்டு...கதைகளையும், வசனங்களையும் அமைத்து.. பெயர் பெற்றார்கள்...அதனால்தானோ என்னவோ..ரசிகர்களின் மனதில் இன்றும் சிம்மாசனமிட்டு அமரும் பேறு பெற்றார்கள்.
மிகவும் எளிய கதைதான்... பிரபல வக்கீலாக நகரத்தில் வலம் வரும் பாரிஸ்டர் ரஜினிகாந்த் செல்லம்மா தம்பதியருக்கு குழந்தை இல்லாததால் பாரிஸ்டரின் அண்ணன் மகன் கண்ணன் வாரிசாக அவரிடம் வளர்ந்து வருகிறார்...சிறுவயது முதலே..பக்திமானாக...கீதையையும் மகா பாரதத்தையும் கேட்டு லயித்து நேர்மையான மனிதனாக வளர்ந்து வரும் கண்ணன் வக்கீலாக தன் பெரியப்பாவிடம் உதவியாக...பணி புரிந்து வர,
தகுதி இருந்தும், தனக்கு தரப்பட வேண்டிய ஜஸ்டிஸ் போஸ்ட் தரப்படாததால்...கோபமுற்ற பாரிஸ்டர் ரஜினிகாந்த் வாலண்டியர் ஆக பெரிய கொலை கேஸ்களில் ஆஜராகி...வாதிட்டு தன் வாத திறமையினால் அவர்களை வெளிக்கொணர... வேறு வழியின்றி...அவருக்கு எதிரான கூட்டம்..இவரை மடக்க சரியான நபர் மகன் கண்ணன்தான் என கண்டு கொண்டு ..அவருக்கு சில பல விஷயங்களை எடுத்து கூறி ...அவரை பாரிஸ்டருக்கு எதிராக களம் காண வைக்கிறது ... தோல்வியே காணாத..தோல்வியினை தாளமுடியாத பாரிஸ்டருக்கு நேர்ந்தது என்ன..அவருக்கு ஜஸ்டிஸ் பதவி கிடைத்ததா...என்பதுதான் கதை.
என்ன ஒரு அருமையான கதை வசனம் ... இந்த கதைக்கு இதைவிட சிறப்பாக யாரால் எழுத முடியும் என்று கூறும் வண்ணம்...வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் வசனங்கள்...
காட்சிக்கு காட்சி...கூர் தீட்ட பட்ட ஈட்டிகளாக பாய்கிறது...
பெரியப்பா சிவாஜி, புகைக்கும் பைப்புக்கு லைட்டரை தேட, கண்ணன் ஆக வரும் சிவாஜி, இருங்கோ...நான் நெருப்பு வைக்கிறேன்...என கூற...
என் பைப்புக்கா...இல்லே எனக்கா...?
ரெண்டுக்குமே...நான்தானே...பெரியப்பா...என்று பதிலளிக்கும் இடம்...
பெரியப்பாவா ...நீதி தர்மமா...என தடுமாறும் கண்ணனை வசப்படுத்த மற்றோர் எடுத்து கூறும் வாதங்கள்...
பெரியம்மாவாக வரும் பண்டரிபாய்...ஆகா..என்ன ஒரு பண்பட்ட நடிப்பு...தாய்மை பாசத்தை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்...வீடு வந்த கண்ணனை.உரிமையுடன்...கோபமும், செல்லமுமாக கன்னத்தில் அறைந்து...அவர், டேய் கண்ணா...திரும்பி வந்துடுடா...என கேட்க மகன் சிவாஜி.. அவர் சொல்லி தந்த
மகா பாரத கதையினையே...மேற்கோள் காட்டி..நீதானே நீதிக்கு போராடணும்னு சொல்லி தந்தே...என்று வாதிடும் இடம்...என்று..நம்மை நெக்குருக வைக்கும் இடங்கள் பலப்பல..
ஒரு இடத்தில் கதாநாயகி, கண்ணன் ஆக வரும் சிவாஜியிடம்
அவர் பெரியப்பா குறித்து அவரின் செயல் நியாயமில்லை என்று வாதிடும்போது, Look here young girl,
நாம ரென்று பெரும் சந்திச்சு பேசும்போது நம்மை பற்றி பேசு, இல்லாட்டி, நம்ம எதிர்காலத்தை பத்தி பேசு, Life is Milk and Love is sugar. வாழ்க்கைன்ற பால்ல கலக்கற சர்க்கரைதான் காதல். சர்க்கரை இல்லாம பாலை குடிச்சுடலாம்...ஆனா...பால் இல்லாம சர்க்கரைய அள்ளி திங்க முடியாது...எங்க பெரியப்பா பால், நீ சர்க்கரை...எனக்கூறுவது....
வேறொரு காட்சியில், வீட்டை விட்டு வெளியே போன மகன் சிவாஜி, மறுநாள் கோர்ட்டில் வாதாட போகுமுன்...ஆசி...வாங்க வீட்டுக்கு வரும்போது...பாரிஸ்டர் ரஜினிகாந்த், வாங்கோ...நன்னா இருக்கேளா...சாப்டேளா....?
அதான்...கோர்ட்டுக்கு வரப்போறேளே.... என்று எள்ளலாக பேசும் அந்த காட்சி..
பாடல்களோ...தேனில் நனைத்தெடுத்த பலாச் சுளைகள்தான் ...
இசையமைத்து நம் மனதை கொள்ளை கொண்டவர் மெல்லிசை மன்னர் உயர்திரு. M.S. விஸ்வநாதன் அவர்கள்..பாடல் வரிகளோ...கவியரசு கண்ணதாசன்...பாடியது...டி.எம். சௌந்தரராஜன் எனும் மகா கலைஞன்..துணைக்கு எஸ்.பி பாலு அவர்களும்...பெண் குரலுக்கு P.சுசீலா, L.R.ஈஸ்வரி போன்றோர் பாடி உள்ளனர்.
நீயும் நானுமா....கண்ணா ..நீயும் நானுமா... பாலூட்டி வளர்த்த கிளி பாடலை எல்லாம்....கேட்கும்போது...மெய்சிலிர்க்கிறது.. . பாடுவது...நடிகர் திலகமா...? என சந்தேகிக்க வைக்கிறது...TMS ...அங்கே மறைந்து கரைந்து...போய் விடுகிறார்... அதிலும்...மெழுகுவர்த்தி எரிகின்றது பாடலில் அப்படியே..கண்ணன் கேரக்டருக்குள்.. தன்னை ஐக்கிய படுத்தி கொள்கின்றார்...கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் அற்புத வரிகள் நம்மை கட்டி போடுகின்றன...இத்தனை வருடங்கள் கழிந்தபோதும் அந்த வரிகள் மனப்பாடமாகி மனதுக்குள் கிடக்கிறது.
நாகேஷ் கிட்டத்தட்ட காமெடியன் / வில்லன் ரோல் (தில்லானா மோகனாம்பாள் படம் போல) அசத்தி இருக்கிறார், சுந்தர் ராஜன், வீ.கே ராமசாமி போன்றோரும்..தன் பங்கினை குறைவற நிறைவாக செய்து உள்ளார்கள்.
நடிப்பு என்று கூறினால் நடிகர் திலகம் அவர்கள், சம காலத்திய நடிகர்களுக்கும் எதிர்காலத்தில் வரவிருக்கும் நடிகர்களுக்கும் இரட்டை வேடத்தை எப்படி செய்ய வேண்டும் என பாடம் நடத்தி இருக்கிறார்.. இரண்டு கேரக்டர்களையும் அவர் கையாண்டுள்ள விதம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. என்ன ஒரு உடல் திறன், உடல்மொழி, குரல் வளத்தில் வித்தியாசம்...இவரும் அவரும் ஒன்றா...என்றென்னும் வண்ணம் முற்றிலுமாக வித்தியாசபடுத்தி நடித்துள்ளார். திரையில் வருகின்ற ஒவ்வொரு காட்சியிலும் நம் கவனத்தை முற்றிலுமாக ஈர்த்து தன் வயப்படுத்தி இருக்கிறார். ஒரு காட்சியில் 'அதிசய உலகம்' ...பாடல் காட்சியில் இவருக்கு பெரிய வேலையே கிடையாது...இவர் ஒரு பார்வையாளர் அல்லது முக்கிய விருந்தாளி...அந்த இடத்தில் கூட அவரின் முக பாவம்.. ரசிப்பு தன்மையுடன், கிட்டத்தட்ட போதைக்கு ஆட்படும்..மற்றும்..ரொமாண்டிக் மூடுக்கு போகின்றது போன்ற
பாவனைகளை நாம் நுட்பமாக கவனித்தால் காணலாம். நாம் மீண்டும் கண்டு ரசிக்க வேண்டிய, குறிப்பாக இன்றைய தலைமுறையினர் மற்றும் இன்றைய நடிகர்களும் கூட காண வேண்டிய ஒரு படம் என்றால் மிகை அல்ல.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th June 2014, 05:35 PM
#3273
Senior Member
Devoted Hubber
முகநூல் ஒன்றில் இருந்து
கவிரசர் கண்ணதாசன் வசனம் எழுதிய இந்தநாடகம் இடம்பெற்றது ராமன் எத்தனை ராமனடி திரைப்படத்தில். கண்ணதாசனை கருணாநிதி கிண்டல் பண்ணினதற்கு பதிலடியாக சில வார்த்தைகள் வரும்..இந்தியாவில் முதன்முதல் தொலைக்காட்சி சேவை ஆரம்பித்த பொழுது முதன் முதல் ப்லமொழிகளில் இந்த நாடகமே ஒளிபரப்பப்பட்டது.ஆக இந்திய தொலைக்காட்சி சேவை ஆரம்பித்தபொழுது முதன் முதலாக தெரிந்த முகம் தஞ்சாவூர் தமிழ்ச்சிங்கம்.வி சின்னையாபிள்ளை மகன் கணேசன் முகம்தான் யாருக்குக்கிடைக்கும் இப்படிப்பாக்கியம்.

Sivaji Ganesan acting.
sivaji ganesan act as the great king chatrapathi sivaji.
www.youtube.com
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th June 2014, 06:07 PM
#3274
Junior Member
Veteran Hubber
கூடும் உறவு கூட்டுரவென்று ஒன்றாய் வாழுங்கள்...கூடியபிறகு குற்றம் காணும் கொள்கையை தள்ளுங்கள் !
என்றும் ஒன்றே செய்யுங்கள் ஒன்றும் நன்றே செய்யுங்கள் நன்றும் இன்றே செய்யுங்கள் நீங்கள் எதிலும் வெல்லுங்கள்..
வீரனின் வாழ்விலே வெற்றி மேல் வெற்றியே....
தங்கங்களே ....!
-
9th June 2014, 07:46 PM
#3275
Junior Member
Newbie Hubber

Originally Posted by
vasudevan31355
Go,
2000-kku vaazhthukkal.

Thanks Vasu.
-
9th June 2014, 07:49 PM
#3276
Senior Member
Devoted Hubber
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தை பாருங்க
அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க
வீட்ட விட்டு வெளிய வந்தா நாலும் நடக்கலாம்
அந்த நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்
-
9th June 2014, 07:50 PM
#3277
Junior Member
Newbie Hubber
thank you ravi,vasudevan, rahul,sivaji senthil,ragavendhar,RKS,Sarathy,Chandrasekar,G.Kri shna,chinna kannan.
-
9th June 2014, 07:54 PM
#3278
Junior Member
Veteran Hubber
Gauravam : the movie teaches one as to how a double role should be approached, creating an illusion of two different persons performing the characters distinctly with a fantastic voice modulation and an unimaginable body language! Of course, double role characterisation even with a look alike character as in Uththamapuththiran or Ennaippol Oruvan or a triple role differentiation as in Deiva Magan or Bale Paandiya or trisoolam, or creating the illusion of 9 different personalities as in Navarathiri....nothing new to NT. But, this movie stands alone and above the rest by way of making us to feel that we get into the screen and move with the contradicting characters right from beginning to end, sometimes supporting Kannan and many a time with the barister Rajinikanth. NT is the hub of this wheel, he is the centre of gravity of the entire film shouldering the entire burden. The dress sense of the barister is absorbing and impressive, particularly in the song sequence 'Kannaa neeyum naanuma...' in the British Emperor's attire! Kaanakkann kodi vendum!A Characterization that cannot even be thought about by his contemporaries! The signature pose of NT as barister Rajinikanth with cigar pipe lingers in the viewers mind forever, like the signature pose of mentally haunted husband in Pudhiya Paravai's enge nimmadhi beginning!
Last edited by sivajisenthil; 9th June 2014 at 07:58 PM.
-
9th June 2014, 08:27 PM
#3279
Junior Member
Veteran Hubber

Originally Posted by
gopal,s.
thanks vasu.
vaniiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
-
9th June 2014, 08:28 PM
#3280
Junior Member
Seasoned Hubber
பார்த்ததில் பிடித்தது 37
மதங்கள் மனிதனை பிரிக்க கூடாது அனைவரும் ஒன்று தான் , ஒன்றே குளம் , ஒருவனே தேவன் , பிரச்சனைகளுக்கு தீர்வு அன்பு தான் என்று எடுத்து சொல்லிய , படமாக வந்த திரை காவியம்
1961 ல் நடிகர் திலகத்தின் 67 வது படமாக வெளிவந்த பாவ மன்னிப்பு படத்தை பற்றி தான் இந்த பதிவு .
1961ம் ஆண்டின் அகில இந்திய அளவில் சிறந்த படங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு நற்சான்றிதழ் பெற்றது.
படம் உருவான விதம் :
நடிகர் திரு சந்திரபாபு அவர்கள் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு இருந்த பொது அவர் மனதில் உருவான கதை தான் அப்துல்லா .ஒரு குழந்தை ஹிந்துவாக பிறந்து , முஸ்லிம் பெரியவராக வளர்க பட்டு , கிறிஸ்துவ பெண்ணை மணந்து கொள்ளும் கதை
வெகு நாட்களாக திரு சந்திரபாபுவின் மனதில் ஊறிப்போன கதை பீம்சிங் இயக்கி கொண்டு இருந்தார் , படம் மெதுவாக 2000 அடி வளர்ந்து படத்தை பார்த்த திரு ஏவிஎம் சரவணன் அந்த படத்தை தங்கள் தயாரிப்பில் எடுக்க வேண்டும் என்று விரும்பி திரு பீம்சிங்கை கேட்க அவரும் அதற்கு ஒப்பு கொண்டு படத்துக்கு ஸ்கிரிப்ட் வேலை செய்ய ஆரம்பித்தார் படத்தின் budget 4-5 லட்சம் என்று கணக்கு வைக்க பட்டது
அப்போது நடிகர் திலகத்தின் தம்பி சண்முகம் கல்யாணத்தில் சந்தித்து கொண்ட சரவணனும் , பீம்சிங்கும் படத்தை பற்றி பேச , பீம்சிங் படத்தின் திரை கதை பிரமாதமாக வந்து இருக்கு , படத்தின் மொத்த சுமையும் ஹீரோ பாத்திரத்தின் மேல் இருப்பதால் அதை சந்திரபாபு வைத்து எடுக்க இயலாது என்றும் நடிகர் திலகம் சிவாஜி தான் இதற்க்கு பொருத்தமானவர் என்றும் , மேலும் இதை பற்றி திரு சந்திரபாபுவிடம் தான் பேசி விட்டதையும் சொன்னார்
படத்தின் budget 10.5 lakhs என்று rework செய்ய பட்டது
சிவாஜி , பீம்சிங் படத்தில் நட்சத்திர பட்டாளத்துக்கு பஞ்சம் இருக்காது
திமிர் பிடித்த வில்லன் பாத்திரம் மேலும் அதில் நகைச்சுவையும் இருக்க வேண்டும் என்ற உடன் M R ராதா ஒப்பந்தம் செய்ய பட்டர்
ரத்த கண்ணீர் படத்துக்கு பிறகு M R ராதாவுக்கு அதிகம் பெயர் வாங்கி கொடுத்த படங்கள் பா வரிசை படங்கள் தான்
படத்தில் MR ராதாவின் மனைவியாக கண்ணன்பா நடித்து கொண்டு இருக்கும் பொது இறந்து போனதால் , MV ராஜம்மா நடித்தார் அதனால் படம் சிறுது தாமதம் ஆனது
பா series என்ற உடன் நினைவுக்கு வரும் ஜெமினி சார் , சாவித்ரி மேடம் இருவரும் படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று படத்துக்கு வலு ஊட்டினார்கள்
பா series என்றால் ஆரூர் தாஸ் என்பதை மாற்றி இந்த படத்துக்கு வசனத்தை எழுதாமல் திரு எம்.எஸ்.சோலைமலை படத்துக்கு வசனம் எழுதினார்
இசைக்கு MS விஸ்வநாதன் , ராமமூர்த்தி , பாடல்கள் திரு கண்ணதாசன் என்று படத்துக்கு கம்பீரம் கூடியது
அது வரை எந்த படத்துக்கும் செய்யாத ஒரு விஷயத்தை ஏவிஎம் நிறுவனம் செய்தது , படம் வெளிவர பல நாட்களுக்கு முன்பாக பாடல்கள் ரேடியோவில் ஒளிபரப்ப பட்டது , பாடல்கள் stale ஆகி விடும் அபயம் இருபதாக கருதினார் பீம்சிங் ஆனால் AVM பாட்டு போட்டி வைத்து அதற்க்கு 1000 ரூபாய்கள் பரிசு அறிவித்து படத்துக்கு publicity செய்தார்கள்
படத்துக்கு விளம்பரம் செய்ய தீர்மானித்து பெரிய ராட்சச பலூன் ஒன்றை ஜப்பானில் இருந்து வரவைத்து ஆங்கிலத்திலும் , தமிழிலும் படத்தின் பெயர் எழுதி படத்துக்கு மேலும் expectation கூட்டினார்கள்
சென்னை நகரில் முதல் முதலில் குளிர்சாதன திரையரங்கில் வெள்ளி விழாக் கண்ட படம். சென்னை சாந்தி திரையரங்கு திறக்கப் பட்டு வெளியான முதல் நடிகர் திலகத்தின் திரைப்படம்.
படத்தை சித்ராவில் ரிலீஸ் செய்யவேண்டும் என்று எல்லோரும் கருத , AVM நிறுவனம் சாந்தியில் வெளி வர வேண்டும் என்று நினைத்தார் காரணம் சாந்தியில் தான் தமிழ்நாட்டில் பெரிய பால்கனி இருந்தது
படம் வெளி வந்தது 100 நாள் தாண்டி வெளி விழா கொண்டாடியது
Last edited by ragulram11; 9th June 2014 at 08:40 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks