Page 329 of 401 FirstFirst ... 229279319327328329330331339379 ... LastLast
Results 3,281 to 3,290 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #3281
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கதை :

    தான் செய்யாத தவறுக்கு தன்னை சிறைக்கு அனுப்பிய தன் முதலாளி mr ராதாவை பழி வாங்க அவர் மகனை கடத்தி விடுகிறார் டிரைவர் பாலையா , அந்த குழந்தையை ரயில் தண்டவாளத்தில் போட்டு விடுகிறார் , அந்த குழந்தையை வளர்கிறார் இஸ்மாயில் (வி.நாகய்யா) . தன் கணவர் செய்த தவறை நினைத்து ராதாவின் மனைவி டிரைவரின் பெண் குழந்தையை தான் அண்ணனாக நினைக்கும் கிறிஸ்துவர் எஸ்.வி.சுப்பய்யா விடம் கொடுக்கிறார் . டிரைவரின் இன்னும் ஒரு குழந்தையை காப்பாற்ற முடியாமல் போய் விடுகிறது . அந்த குழந்தை சேரியில் வளர்கிறது

    ஜமீன்தாரின் மகன் சின்ன மகன் ரவி

    பல வருடங்களுக்கு பிறகு
    இஸ்மாயிலின் மகன் ரஹீம் வளர்ந்து அந்த சேரியில் நல்ல பெயருடன் வளம் வருகிறார் , சேரியில் மத , ஜாதி சண்டை வராமல் பார்த்து கொள்ளுகிறார் , அந்த இடத்தை தன் வசமாக வேண்டும் என்று திட்டம் போடும் ஜமீந்தார் சதி செய்கிறார் , அது பலிக்காமல் போகிறது
    ரவி (ஜெமினி ) போலீஸ் இன்ஸ்பெக்டராக அதே ஊருக்கு வருகிறார் , ரஹீம் , ரவி இருவருக்கும் மோதல் வருகிறது , அதை ஊதி பெருசாகி விடுகிறார் ரவியின் தந்தை , ரவி ரஹீம் தங்கை போல் பாவிக்கும் சாவித்ரியை காதலிக்கிறார் , ரவியின் தந்தை மத வெறி இருந்தாலும் தன் மகன் தன் கிறிஸ்துவர் எஸ்.வி.சுப்பய்யா வின் மகளை தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் (பணத்துக்கு ஆசைப்பட்டு )

    ரஹீமை காதலிக்கிறார் தேவிகா எஸ்.வி.சுப்பய்யாவின் மகள்
    ரஹீமை அழிக்க திராவகம் ஊற்றி விடுகிறார் ராதா , ரஹீம் செய்யாத குற்றத்துக்கு ரவி அவரை கைது செய்து விடுகிறார் . அப்போ தான் ரஹீம் இஸ்மாயில் தன் தந்தை அல்ல என்றும் தன்னை எதிரியாக நினைக்கும் ராதாதான் தன் தந்தை என்றும் அறிந்து கொள்ளுகிறார் (இஸ்மாயில் சாக போகும் தருவாயில் உண்மையை சொல்லி விடுகிறார் )
    ரஹீம் இல்லாததால் சேரியை சுலபமாக காலி செய்து விடுகிறார் ராதா , தன் காதலி மேல் தப்பாக ஒரு பொய்யை சொல்லி ரவியை நம்ப வைத்து விடுகிறார்
    ஜெயில் இருந்து வெளியே வரும் ரஹீம் ராதா உடன் சமாதானமாக போக விரும்புகிறார் அதை ஏற்க மறுக்கிறார் ராதா .
    பாலையா திரும்பி வந்து தன் முதலாளியின் மனைவியை சந்தித்து மன்னிப்பு கேட்க அவரோ பாலையாவின் மகள் தான் எஸ்.வி.சுப்பய்யா வின் வீட்டில் வளர்கிறது என்று சொல்ல , சேரியில் வளர்ந்து வந்த தங்கம்(சாவித்ரி ) தான் பாலைய்யாவின் 2 வது மகள் என்று அறிய பிறந்தவர்கள் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்
    ரஹீமை அழிக்க அவர் இருக்கும் இடத்துக்கு தீ வைக்கிறார் அவர் தந்தை ராதாவுக்கு உண்மை தெரிய வருகிறது

    முடிவில் அவர் மனம் திருந்த , ரஹீம் , ரவி இருவருக்கும் தங்கள் விருப்ப படி திருமணம் நடக்கிறது

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3282
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    படத்தில் யாரும் நடிக்க வில்லை அனைவரும் வாழ்ந்து இருக்கிறார்கள்

    ஒரு முஸ்லிம் இளைஞர் எப்படி இருப்பாரோ அப்படியே காட்சி அளித்தார் நடிகர் திலகம் , நடிகர் திலகத்தின் நடிப்பில் இந்த படத்தில் இருக்கும் காட்சிகளை எதை சொல்ல , எதை விட

    முஸ்லிம்கள் 5 வேலை தொழுவதை அறிந்து ஒப்பனையில் தன் நெற்றியில் கருப்பாக தழும்பு வரும் படி பார்த்து கொண்டதை பற்றி சொல்வதா
    அசிட் வீச்சில் பாதிக்க பட்ட உடன் அலறி துடிப்பாரே அதை சொல்வதா
    இந்த காட்சி ஒரே டேக் ல் ஓகே செய்ய பட்டது , நள்ளிரவு 2 மணிக்கு அந்த காட்சியை பற்றி பேசி காலை 6 மணிக்கு எடுக்க பட்டது

    எந்த நடிகரால் முடியும் ?


    காதல் காட்சியில் இருக்கும் இனிமை , இளமை , அதே சமயம் கண்ணியத்தை கடை பிடித்து இருப்பதை சொல்வதா
    ஜெமினி சண்டைக்கு வரும் பொது வார்த்தைகளில் காட்டும் நிதானத்தை சொல்வதா
    ஒரே பிரேமில் நான்கு பரிமாணங்களில் சிவாஜியைத் தோற்றுவித்த சிலர் சிரிப்பார் பாடல் காட்சி, அக்காலத்தில் புதுமையாக்க் கருதப் பட்டது.


    இந்த படத்தில் என்னை கவர்ந்த பிற பாத்திரங்கள் எஸ்.வி.சுப்பய்யா மனிதர் பிச்சு உதறி இருப்பார் , ஆர்பாட்டம் இல்லாமல் , அமைதியே உருவை அவர் பேசும் வசனம் அனைத்தும் சூப்பர்

    ராதா - இவரை பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை , படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவர் ராஜ்ஜியம் தான் , மனிதர் வசனத்தை விட timing reaction ல் அபாரமாக ஸ்கோர் செய்கிறார் , ஜெமினி யிடம் சாவித்திரி பற்றி அவர் தப்பாக சொல்லும் ஒரு காட்சி போதும் body language என்றால் என்ன என்பதை சொல்ல

    ஆரமபத்தில் அவர் செய்யும் தவறும் , அவர் மனைவி கேட்ட உடன் அதற்கு துடுக்கு தனமாக பதில் சொல்லுவது ராதாவை தவற யாரும் செய்ய முடியாத காட்சி , அதில் அவர் பேசும் வசனம் யார் பேசினாலும் எடுபடாது

    சாவித்திரி , தேவிகா , வி.நாகய்யா, டி.எஸ்.பாலய்யா, அனைவரும் பாத்திரங்களுக்கு பொருந்தி உள்ளார்கள்
    தேவிகா , சிவாஜி சந்தித்து கொள்ளும் சைக்கிள் காட்சி தான் தேவிகாவின் முதல் combination ஷாட் நடிகர் திலகத்துடன்
    படத்தில் அவருக்கு பல காட்சிகளில் நடிப்பு சொல்லி கொடுத்தவர் , குறிப்பாக , அசிட் வீச பட்டு இருக்கும் சிவாஜியை பார்க்க வரும் காட்சியில் எப்படி அழ வேண்டும் என்று தேவிகாவுக்கு நடிப்பு சொல்லி கொடுத்தவர் நடிகர் திலகம் .

    பாடல்களை பற்றி ஒரே வார்த்தை இன்றும் கேட்கலாம் , தேனில் ஊறிய பலா சோலை

    சிவாஜி சாரின் கிரீடத்தில் ஒரு வைரம்
    Last edited by ragulram11; 9th June 2014 at 08:36 PM.

  5. Likes kalnayak, chinnakkannan liked this post
  6. #3283
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    that's it Ragul! You are able to break the shell and come out normalized. Keep up and keep going. Ravi also must be back. This thread should not lose any one, whatever may be the magnitude and direction of his contribution vector.

  7. #3284
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Senthil sir,

    Thanks for your comments

    I just wished to say a few things , I have said it already, its over. I will contribute sir, I hope others especially Ravi sir would come back
    Last edited by ragulram11; 9th June 2014 at 08:53 PM.

  8. Likes eehaiupehazij liked this post
  9. #3285
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு கோபால்

    உங்களுடைய 2000 பதிவுகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் . தனி திறமைகள் - சிறப்பான பதிவுகள் - அருமையான
    அலசல்கள்பாராட்டுக்குரியது .அமைதி - அடக்கம் - பரந்த மனப்பான்மை - பாராட்டும் குணம் -விட்டு கொடுத்தல் -என்ற உயர்ந்த குணங்கள் உங்களிடமிருந்து தொடரட்டும் .
    Last edited by esvee; 9th June 2014 at 08:45 PM.

  10. #3286
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    டியர் கார்த்திக் சார்

    நான் எழுதிய வைர நெஞ்சம் பதிவுக்கு நீங்கள் போட்ட பதிவை நான் ஒரு வித interaction ஆகவும் , என் பதிவுக்கு complementary ஆகவும் தான் எடுத்து கொண்டேன் , நீங்கள் வருத்த பட வேண்டியது இல்லை , தொடர்ந்து எழுதுங்கள் ,

  11. #3287
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Posted in another thread for vasu.

    வாசு,

    நிச்சயம் இங்கு பங்கு பெற்று ,அபூர்வ பாடல்கள் பற்றி அலசுவேன்.நீ குறிப்பிட்டது போல 55 முதல் 80 வரை தமிழ் திரை கண்ட அனைத்து பாடல்களையும் prompt இல்லாமல் முழுக்க என்னால் பாட முடியும்.

    ரவி திரியிலும் பங்களிப்பேன்.(ஜெமினி திரியிலும்).

    ஆனால் ,இதெல்லாம் வார இறுதி பொழுது போக்கு போன்றது. நம் தாய் வீடு நம் திரிதானே?ஆயிரம் சச்சரவுகள் வந்தாலும் தாய் வீடு தாய் வீடுதான்.உன்னுடைய ஆடை அழகர்,கதாயகியர் வரிசை,சண்டை காட்சி எல்லாம் தொங்கலில் விட்டு,இங்கு வந்து முழு நேரம் இருப்பது.....என்னமோ போ. ரவி சொல்வது போல,துளி விஷம் நீ வெளியேற காரணமாக முடியாது.அதிக பாராட்டு பெற்ற பதிவு அது.கொண்டாட பட்டது.

    பாராட்டுதல்களை எதிர்பார்த்திருந்தால் நான் இரண்டாயிரம் பதிவுகளை இட்டே இருக்க முடியாது.என் உழைப்புக்கேற்ற அளவு நான் ஒன்றும் பெரிதாக கொண்டாட பட்டதில்லை.ஆனால் ,நம்மிடையே வாழ்ந்த ,உலகத்திலேயே கண்டிராத,காண முடியாத அபார திறமையுள்ள தமிழ் தெய்வத்தை போற்றும் ,அவர் எனக்களித்த மாலை கொடைகளுக்கு காணிக்கையாக,அந்த தெய்வத்துக்கு நான் பண்ணும் சத்திய பூஜை.

    உனக்காக நாங்கள் அங்கு காத்திருக்கிறோம் .வந்து விடு.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #3288
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    Posted in another thread for vasu.

    வாசு,

    அந்த தெய்வத்துக்கு நான் பண்ணும் சத்திய பூஜை.

    உனக்காக நாங்கள் அங்கு காத்திருக்கிறோம் .வந்து விடு.

  13. #3289
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நம் நடிகர் திலகத்தின் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் மதிப்பும் கொண்ட "மனிதரில் மாணிக்யம்" "மனிதநேய செம்மல்" "கொடைவள்ளல்" "தென்னகத்து JAMESBOND " " BUDGET தயாரிப்பாளர்களின் மற்றொரு விடிவெள்ளி மறைதிரு ஜெய்ஷங்கர் அவர்களின் இளைய புதல்வர் திரு சஞ்சய் அவர்கள் விரைவில் இசை என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆகிறார்.

    தந்தையை போல இவரும் பல நல்ல பண்புகளுக்கு சொந்தக்காரர். உண்மையான மனிதநேயமும், மக்களுக்கு உதவும் பண்பும் கொண்டவர். அன்னாரை போலவே இவரும் திரை உலகில் நல்ல முறையில் வலம்வர வாழ்த்துக்கள் !

    "விரைவில் இசை" திரைப்படம் சிறந்த வெற்றி அடைந்து "இளைய மக்கள் கலைஞர்" சஞ்சய் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !

    Last edited by RavikiranSurya; 10th June 2014 at 08:04 AM.

  14. #3290
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    பாட்டுடைத் தலைவன் பற்றி பாடுவதை விட பாடுபவர்களின் பாடுகள் தான் இங்கே பாடாய் படுகிறது . பார்ப்போம் எப்போது தான் விடியுமென்று

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •