-
10th June 2014, 09:51 PM
#3301
Junior Member
Seasoned Hubber
நீங்கள் மீண்டும் என்னை இங்கு கூப்பிடும் அளவிற்கு உங்கள் எல்லோருக்கும் தொந்திரவு கொடுத்ததிற்காக , மிகவும் வருந்துகிறேன் - உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இவ்வளவு அன்பையும் பரிவையும் நான் எங்குமே சந்தித்ததில்லை - இந்த திரியில் பங்கு கொள்ள நான்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் -
இது ஒரு பொதுவான திரி - நம் எல்லோர் கவனமும் நம் நடிப்பு கடவுளை எப்படியெல்லாம் வர்ணிக்கலாம் , பூஜிக்கலாம் என்பதில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது என் அவா .. இப்படிதான் பூஜிக்க வேண்டும் என்று நாம் ஒரு சட்டம் போட்டால் அதில் ஈடுபாட்டுடன் பங்கு கொள்வதில் தடை வரலாம் - மனம் ஒத்துப்போக மறுக்கலாம் - கோபால் , பதிவுகளில் ஒரு தரம் இருக்க வேண்டும் என்று சொன்னதில் எந்த வித மறுப்பும் இல்லை - பிடிக்க பிடிக்க தான் பிள்ளையார் வரும் என்பார்கள் - பதிவுகள் போட போடத்தான் அதன் தரம் உயரும் - அதுவரை இந்த குழந்தையின் கோடுகளை ஒரு ஓவியமாகவும் , இந்த குருடன் வரைவதை ஒரு காவியமாகவும் எடுத்துக்கொள்ளும் படி கோபாலையும் , மற்ற திரியின் நண்பர்களையும் வேண்டி கேட்டுகொள்கிறேன் -
என்னால் யாருடைய மனமாவது புண் பட்டிருந்தால் மீண்டும் என்னுடைய sincere apologies - nothing intentional ..
அன்புடன் ரவி
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th June 2014 09:51 PM
# ADS
Circuit advertisement
-
10th June 2014, 10:23 PM
#3302
Junior Member
Veteran Hubber
happy come back Ravi. your orchestration with senior thespians like Gopal sir. Murali sir, Raghavendra Sir, Vasu Sir, Parthasarathy sir and contemporary doyens like RKS, Chinnakkannan, Kalnayak, Ramadoss ayya and Ragul and of course well wishers like me, sivaa, ss.,gkrishna... I think this thread is going to regain its dash and verve under a unified team work.
Last edited by sivajisenthil; 11th June 2014 at 08:11 AM.
-
11th June 2014, 04:14 AM
#3303
Junior Member
Newbie Hubber
New Thread manathai mayakkum madhura ganangal by Vasu in classic section is interesting. Keep it up vasu.our hearty wishes.
Last edited by Gopal.s; 11th June 2014 at 04:18 AM.
-
11th June 2014, 04:15 AM
#3304
Junior Member
Newbie Hubber
நண்பர்களே. வருக.தொடர்ந்து பங்களிப்பு தருக. நான் வெளிப்படையானவனே தவிர ,பகைமை பாராட்டும் வன்மமோ அல்லது மற்றவர்களை அவமான படுத்தி மகிழும் அகந்தையோ அற்றவன். தோன்றியதை தோன்றிய படியே வெளியிடுவது, சில நேரம் எனக்கு பகையாகிறது. குறைக்கவும் ,தவிர்க்கவும் முயல்கிறேன் பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய நாசுக்கு கருதி..
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
11th June 2014, 09:51 AM
#3305
Senior Member
Senior Hubber
வேண்டுகோள்களை ஏற்று களம் இறங்கியவர்களுக்கும், இறங்கப்போகிறவர்களுக்கும் நன்றி!!!
-
11th June 2014, 10:03 AM
#3306
Junior Member
Veteran Hubber
கல்வியறிவும் பகுத்தறிவும் நிறைந்த கண்ணியமான ரசிகர்கள் பங்களிப்பில் ஜொலிக்கும் மேன்மையான நடிகர் திலகத்த்தின் திரியில் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள், அவர்தம் திரைப்பட அலசல்கள் , அவர்தம் நடிப்பின் பரிணாம பரிமாணங்கள், இன்றைய தலைமுறைக்கும் அவர் நடிப்பின் வீச்சு பற்றிய ஆக்கப்பூர்வமான விவாதங்கள் பல்வேறு கோணங்களில் கோர்த்து அவர்தம் புகழ் மாலையாக அணிவிக்க மேற்க்கொள்ளப்படும் எவர் முயற்சியும் வரவேற்புக்குரியதே. அந்த வகையில் உயர்திருவாளர்கள் கோபால், ராகவேந்திரா, முரளி, கார்த்திக், பம்மலார், வாசு, பார்த்தசாரதி .....நீங்கள் மலை உச்சியில்....நாங்கள் அடிவாரத்தில். உங்கள் உயரம்..அதை அடைய நீங்கள் பட்டிருக்கும் துயரம்.. எங்களுக்குப் புரிகிறது. வயது மற்றும் அனுபவ முதிர்ச்சி, எழுதும் திறமை, சொற்களை கையாளும் லாவகம் நிச்சயமாக மாறுபடும். காலப்போக்கில் காயங்கள் மாயங்களாகி குறைகள் நிறைகளாகி இப்பதிவுகள் பொக்கிஷங்களாக மாறும்.
Last edited by sivajisenthil; 11th June 2014 at 10:44 AM.
-
11th June 2014, 10:12 AM
#3307
Junior Member
Junior Hubber
நண்பரே கோபால்,
உங்கள் இஷ்டத்திற்கு அனைவரையும் பேசுவர்கள். வைவீர்கள். பாதிக்கப்பட்டவர் மனம் வருத்தம் கொண்டு திரியிலிருந்து விலகுவதாக அறிவிப்பார். பின் நான் அப்படிச் சொல்லவில்லை இப்படி சொல்லவில்லை என்று டிராமா போடுவீர்கள். தலைமுடியை சம்பந்தப்படுத்தி அனைவரையும் காயப்படுத்துவீர்கள். உங்களுக்கு எந்த எச்சரிக்கையும் அளிக்காமல் ஆட்சேபத்துக்குரிய வரியை மாடேரேட்டர் நாசூக்காக நீக்குவார். ராகவேந்தர், வாசு, இன்னொரு வாசுதேவன், ரவி, முரளி, ராகுல், என்று நீங்கள் வசை பாடாத நபர் ஏது? வருத்தப்படாத நபர் ஏது? எல்லோரும் தங்களால் மனம் காயப்பட்டு விலகி நிற்கிறார்கள். திரி நாசமாக முழுக் காரணமும் நீங்கள்தான். இதை ஆணித்தரமாக நான் அடித்துச் சொல்வேன்.
இப்போது என்னடாவென்றால் எல்லோரையும் திரும்ப அழைக்கும் நாடகம். ஏன்.. திட்டுவதற்கு ஆட்கள் வேண்டுமென்றா...திரும்ப அழைத்துவிட்டு மறுபடியும் இவன் பதிவு சொத்தை, அவன் பதிவு நொள்ளை என்று ஏக வசனத்தில் திட்டித் தீர்ப்பதற்கா?
அடிக்கடி இத்துடன் முடித்துக் கொள்கிறேன் என்ற பாசாங்கு நாடகம் வேறு நீங்கள் ஆடி ஆடி எல்லோரையும் அலுக்க வைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் திடமாக இருக்கிறீர்கள். மற்றவர்கள்தான் மறைந்து போய் விடுகிறார்கள்.
வரச் சொல்லி அழைக்கும் நடிப்பு. பின் ஊருக்கு ஒரு பிள்ளை என்று எழுதித் தொலையுங்கள் என்று சாபம் வேறு. உங்களுக்கே முரணாகத் தெரியவில்லை.
உங்களைத் தவிர இங்கு திறமைசாலிகளே இல்லையா! நீங்கள்தான் கொம்பு முளைத்தவரா? உங்களைக் கேடக ஆளில்லை என்ற நினைப்பா?
உங்களுக்குத் தாத்தாவெல்லாம் இந்த ஹப் மையத்தில் தன்னடக்கத்தோடு பதிவுகள் இட்டிருக்கிறார்கள். இடுகிறார்கள். நீங்கள் என்ன ஜூஜுபி...
சும்மா தையா தக்கா என்று குதிப்பதை விட்டுவிட்டு பதிவாளர்களை ஒழுங்காகப் பதிவிட விடுங்கள். நீங்கள் என்ன பெரிய விமர்சன வித்தகர் சுப்புடு தாத்தாவா?
உங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன் பற்றி நான் உங்களைப் போல விமர்சனம் செய்ய ஆரம்பித்தால் நீங்கள் தாங்குவீர்களா? சும்மா தலையும் புரியாமல் வாலும் புரியாமல் நீங்கள் சொல்வது போல் போடும் உங்கள் வாந்திப் பதிவை விட ராகுல்ராமின் புரியும் பதிவு கோடி பங்குகுக்கு மேல்.
நானும் பார்த்துக் கொண்டே வருகிறேன். ரொம்ப ஓவராக போகிறீர்கள். மாடேரட்டர்களும், மற்றவர்களும் உங்களைக் கண்டு ஏன் மிரளுகிறார்கள் என்று புரியவில்லை. நீங்கள் என்ன சிங்கமா அல்லது சிறுத்தையா? நீங்களும் எங்களைப் போன்ற ஒரு சாதாரண உறுப்பினர்தான். உங்களுக்கு ஒன்றும் கொம்பு முளைக்கவில்லை.
நீங்கள் இப்படியே போய்க் கொண்டிருந்தால் நாங்கள் அனைவரும் உங்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்து கொடி பிடிப்போம். நானே அதற்கு தலைமை தாங்குவேன்.
இந்த லட்சணத்திற்கு நீங்கள் போட்ட 2000 திட்டுப் பதிவுகளை வாழ்த்தி இந்த அப்பாவி உறுப்பினர்கள் உங்களை வாழ்த்த வேறு செய்கிறார்கள். இதிலிருந்தே தெரியவில்லை அவர்களின் பெருந்தன்மை. புத்தியெல்லாம் சொன்னால் நீங்கள் திருந்தவா போகிறீர்கள்?
அன்பு மாடரேட்டருக்கு,
எல்லோருக்கும் பொதுவாகும் இந்தப் பதிவை நீங்கள் நீக்கினால் நீங்கள் ஒருதலைப்பட்சமாக கோபாலுக்கு ஆதரவாக செயல்பட்டு அனைவர் மனங்களையும் புண்படுத்துவதில் அவருக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள் என்று பொருள்பட்டுவிடும். எனக்குக் கவலையில்லை. நான் போனால் இன்னொரு ஆண்மகன் வந்து தட்டிக் கேட்பார்.
உங்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லுங்கள். இன்னும் எத்தனை நாள் இப்படியே கோபாலின் ஆட்சேபகரமான பதிவுகளை நீக்கிக் கொண்டிருப்பீர்கள்? அவரும் இப்படியே எழுதிக் கொண்டிருப்பார். என்னைப் போன்ற திரியின் மௌன வாசிப்பாளர்கள் எள்ளி நகையாட மாட்டார்கள்?
பாதிக்கப்பட்ட திரியின் உறுப்பினர்களே! மற்ற அங்கத்தினர்களே!
என்னுடைய இந்தப் பதிவில் தவறு இருந்தால்.உங்கள் யாருக்காவது ஆட்சேபகரம் இருந்தால் சொல்லுங்கள். ஆனால் பயந்து சொல்லாதீர்கள். நான் கண்டிப்பாக நீக்கி விடுகிறேன்.
இதை எனக்காக வாதாடவில்லை. நான் ஒன்றும் பதிவுகள் போட்டு கிழித்து விடவில்லை. உங்கள் எல்லோருக்காகவும், உங்கள் தன்மானத்திற்காகவும் உங்கள் உழைப்பைக் கேவலப்படுத்தும் இந்த நபரைக் கண்டித்தும் இடப்பட்ட பதிவிது. அப்புறம் உங்கள் தலையெழுத்து.
இதற்கும் மசமசவென நீங்கள் இருந்தால் உங்களை அந்த கடவுள் கூட காப்பாற்ற முடியாது. அப்புறம் உங்கள் இஷ்டம்.
நாமெல்லாம் இன்னும் சோற்றில் உப்புப் போட்டு தின்கிறோம் என்பதை மறக்காதீர்கள். ..... மட்டை என்று திட்ட இந்த நபர் யார்?
ராமதாஸ்.
Last edited by Rama Doss; 11th June 2014 at 10:23 AM.
-
11th June 2014, 10:26 AM
#3308
Senior Member
Devoted Hubber
அண்ணா தம்பி ஐயா ராசா
இத்திரி ஒரு சுமுகமான நிலைக்கு வருகுதென நினைக்கும் பொழுது
மறுபடியும் ஏன்?
தயவு நெய்து குழுப்பாதீர்கள்
உங்கள் பதிவை தயவு செய்து நீக்கிவிடுங்கள்
உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கின்றேன்
நன்றி நன்றி நன்றி
-
11th June 2014, 10:36 AM
#3309
Junior Member
Junior Hubber

Originally Posted by
sivaa
அண்ணா தம்பி ஐயா ராசா
இத்திரி ஒரு சுமுகமான நிலைக்கு வருகுதென நினைக்கும் பொழுது
மறுபடியும் ஏன்?
தயவு நெய்து குழுப்பாதீர்கள்
உங்கள் பதிவை தயவு செய்து நீக்கிவிடுங்கள்
உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கின்றேன்
நன்றி நன்றி நன்றி
ஏனய்யா இப்படி இருக்கிறீர்கள்?
உங்களைப் போல ஆட்கள் தலை குனியக் குனியத்தான் அந்த நபர் குட்டிக் கொண்டே இருக்கிறார். நீங்கள் எல்லாம் நிமிரவே மாட்டீர்களா. இப்போதுதானே எழுதினேன்.
நாமெல்லாம் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறோம் என்று. சுயகௌரவமும், சுயமானமும் சிவாஜியும், அவரது படங்களும் உங்களுக்கெல்லாம் கற்றுத் தரவில்லையா? இப்படி கோழையாய் அஞ்சி அஞ்சிச் சாவதை விட வீரனாக மடிவதே மேல் சிவா அய்யா. புரிந்து கொள்ளுகள். இதற்கு விடிவுகாலம் முதலில் வரட்டும். எவர் குறுக்கீடும் இல்லாமல் நாம் முதலில் சுதந்திரமாக எழுத வேண்டும். பிறகு நம் சிவாஜியின் புகழை தடை இல்லாமல், தடங்கல் இல்லாமல் தொடரலாம் எவருக்கும் பயப்படாமல்.
செய் அல்லது செத்துமடி.
இப்போதும் சொல்கிறேன்.
இந்தத் திரியின் மானம் காக்கவே போராட்டம் தொடங்கியுள்ளேன்.
புரிந்து கொள்ளுங்கள்.
Last edited by Rama Doss; 11th June 2014 at 10:40 AM.
-
11th June 2014, 10:50 AM
#3310
Senior Member
Devoted Hubber
அன்பு ராமதாஸ் சார் வணக்கம்
யாருக்காகவும் பயந்து நான் அதனை தெரிவிக்கவில்லை
இந்தத்திரி எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் தொடரவேண்டும் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே
அதனை எழுதினேன்
புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்
Bookmarks