-
11th June 2014, 11:06 AM
#3311
-
11th June 2014 11:06 AM
# ADS
Circuit advertisement
-
11th June 2014, 11:08 AM
#3312
Senior Member
Devoted Hubber
கொடைச் சக்கரவர்த்தி
1974-75ல், இராமநாதபுரம் மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சியும்-பஞ்சமும் தலைவிரித்தாடியபோது, ஒரு லட்சம் ரூபாய்களை [ரூ. 1,00,000/-] நிவாரண நிதியாக அள்ளி அளித்தார் நமது தேசிய திலகம். அதுகுறித்த ஒரு உன்னத ஆவணம்:
வரலாற்று ஆவணம் : மதி ஒளி : 7.2.1975

1975-ல் ஒரு லட்சம் ரூபாய் என்பது இன்றைய மதிப்பீட்டில் பற்பல கோடி ரூபாய்களுக்குச் சமம்.
பக்தியுடன்,
பம்மலார்.
-
11th June 2014, 11:14 AM
#3313
Junior Member
Newbie Hubber
ராமதாஸ் சார்,
என்னை எதிர்த்து பேச கூடாதென்று நான் கூறியதும் இல்லை.கூற போவதும் இல்லை. மாடரட்டர் என் எந்த பதிவையும் நீக்கலாம்.உரிமை உண்டு.
நீங்கள் எதை ரசிப்பதும் ஆதரிப்பதும் உங்கள் உரிமை. அதே போல திரியின் தரத்தினை உயரத்தில் வைக்க எண்ணுவது என் உரிமை.
என் நோக்கமெல்லாம் ஒன்றே ஒன்று. என் எழுத்தை நம்பி படம் பார்ப்பவர்கள் ,அதை விட படம் உயரமே என்று பேச வைக்க வேண்டும்.புதிய கோணத்தில் 2014 வருட அறிவோடு அவர் அணுக பட வேண்டும்.
1958 இல் வந்த விமரிசனங்களை விட கூரிய பார்வையுடன் கூடியதை வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே மாதிரி நிராகரிக்க பட்ட மோசமான படங்களை நினைவு கூர்வதிலோ,தூக்கி பிடிப்பதிலோ யாரையும் யாரும் ஏமாற்ற முடியாது. நம்பக தன்மை,புதிய அணுகுமுறை,உண்மை தகவல்கள், இதை வேண்டும் என்று நான் வேண்டுவது தவறானால் ,நான் அப்படி இருந்து விட்டே போகிறேன்.
நீங்கள் எதிராக அணி திரட்ட அவசியமே இல்லை. ஆண்மை இருந்தால்
தனி மனிதனை தனியாக எதிர் கொள்ளவும்.எழுத்தை எழுத்தால் எதிர்கொள்ளவும். நான் உங்களை விட அதிகமான அரசியல் செய்பவர்களை எதிர்கொண்டவன்.(அதற்கென்று உங்களை ஜுஜுபி என்று உதற மாட்டேன்.) கிருபா ,ராமதாஸ் என்று வினோத அவதார புருஷன் ஆவதை நிறுத்தி ,பாண்டியை சேர்ந்த நீங்கள் என் எழுத்துடன் நேரடியாக மோதினால் எனக்கும் பெருமை ,உங்களுக்கும் பெருமை.
உங்களை நான் உதாசீனம் செய்ய போவதில்லை.
Last edited by Gopal.s; 11th June 2014 at 12:03 PM.
-
11th June 2014, 11:23 AM
#3314
Junior Member
Veteran Hubber
மதிப்புக்குரிய ராமதாசு அய்யா. மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். நம் திரியின் மாண்பினை காத்திட நம் வேறுபாடுகளைக் களைந்து இந்நிகழ்வினை ஒரு கெட்ட கனவாக மறந்து நம் நடிகப்பேரரசர் புகழ் பரப்புவது மட்டுமே குறிக்கோளாக கொள்வோமே
-
11th June 2014, 12:03 PM
#3315
Junior Member
Junior Hubber
கோபாலரே!
நீங்கள் சொல்வது போல நான் பல்வேறு முகங்களில் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். நீங்கள்தானே ஒருவரே நான்கைந்து ஐடிக்களில் வந்தால் அதை ரசிப்போமே ரிஷிமூலம் நதிமூலம் பார்க்க வேண்டாம் என்று வாய்சவடால் அடித்தது?
இப்போது உங்களுக்கு எதிராகப் போராடப் போகிறேன் என்றதும் அதே எண்ணம் கசக்கிறதோ! என்னய்யா நியாயம் இது! பாண்டியில் என் பக்கத்து வீட்டில் இருந்தது போல ஜம்பம் பிளக்கிறீர். பாவமாய் இருக்கிறதய்யா உம்மைப் பார்த்தால்.
எழுத்தோடு எழுத்து மோத வேண்டுமோ!
இங்கு என்ன இரண்டாம் பானிப்பட்டு போரா நடக்கிறது. ஒத்தைக்கு ஒத்தை வா என்று கத்தி எடுக்க.
உங்கள் புரியாத மொக்கை எழுத்துக்களை விட ரவி சார், ராகுல் பதிவுகளை இங்கிருப்பவர்கள் அநேகம் பேர் ரசிக்கிறார்கள்.
ஒன்றுமே சொல்லாமலேயே உங்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே! நீங்கள் எத்தனை பேரை என்னென்ன அருவருக்கத்தக்க வகையில் வசை பாடினீர்? அப்போது அவர்களுக்கெல்லாம் எப்படி இருந்திருக்கும்?
இவர்தான் என்னவோ அரசியல் பார்த்தவராம். நீங்கள் என்ன சமுதாயத்தை சீர்திருத்த வந்த பெரியாரா? இந்திரா காந்திக்கு போட்டியாக நின்று ஜெயித்தவரோ! இங்கு சிவாஜியைப் போற்றும் உரிமை, அவரவர்களால் முடிந்த இயன்ற அந்த மகானைப் பற்றிய கருத்துக்கள் பதியும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது. இதில் தகுதி என்னய்யா வந்தது? கண்ணப்ப நாயனார் தகுதி பார்த்தா பரமன் அவனுக்கு அருள் புரிந்தான்?
நீங்கள் என்ன பெரிய தரநிர்ணயிப்பு அதிகாரியா. தரத்தைப் பற்றி பேசுகிறீரே! தராதரம் இல்லாமல் கண்ட கண்ட தரங்கெட்ட வார்த்தையை கூறி அனைவரையும் திட்டும் உமக்கு தரத்தைப் பற்றி பேச தகுதி உள்ளதா?
உங்கள் பதிவை நீங்களே மெச்சிக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் மெச்ச வேண்டும். உங்கள் பதிவுகள் புரியாத குப்பைகள் என்று ஆயிரம் முறை அடித்து சொல்லுவேன். எவருக்காவது ஏதாவது புரிகிறதா?
இதில் நான்தான் பெரிய ஆள் என்று பெருமை பீற்றல் வேறு. மற்றவர்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டி கொள்ளாமல் அனைவருக்கும் நல்லவனாக, வல்லவனாக வாழ்பவனே உண்மையான ஆண்மையுள்ளவன்.
தரங்கெட்ட வார்த்தைகளை உபயோகித்து அனைவர் பாவத்தையும் கொட்டிக் கொள்பவர் ஆண்மையுள்ளவர் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை.
உங்கள் உட்டாலக்கடி வேலையெல்லாம் ராகுல், ரவி போன்ற இளிச்சவாயர்களுடன் தொடரட்டும். அங்கு வேண்டுமானால் உங்கள் ஆண்மை எடுபடலாம்.
சொல்வதை புரிந்து கொள்ளத் தெரியவில்லை. உங்கள் இஷ்டத்திற்கு நீங்கள் எழுதுங்கள். அவர்கள் இஷ்டத்திற்கு அவர்கள் எழுதட்டும்.
பல ஜாம்பவான்களைத் துரத்தி விட்டீர்கள்.
இருப்பது ஒன்றிரண்டு அப்பாவி நல்ல உள்ளங்கள். அவர்களையும் துரத்திவிட்டு கம்மர்கட் முட்டாய் தனியாக ஈ ஓட்டிக் கொண்டு விற்பீர்களா?
இப்போதும் சொல்கிறேன். நீங்கள் எதையாது எழுதிவிட்டுப் போங்கள். நாங்கள் கேட்கவில்லை. ஆனால் பதிவாளர்களை அவமானப் படுத்தாதீர்கள். நீங்கள் ஒன்றும் உலகத்தைத் திருத்த வந்த போதிமத புத்தர் இல்லை.
இங்கு தகுதியானவர்களை அழைத்து வைத்து பொற்காசுகளோ, நந்தி அவார்டோ, நீங்கள் அடிக்கடி உளறுவீர்களே ஆஸ்கார் அவார்டோ யாரும் கொடுக்கப் போவதில்லை. அவரவர்கள் சிவாஜியின் மேல் கொண்ட பற்றுதல்களை தத்தம் பாணியில் வெளிப்படுத்தி மகிழ்கிறார்கள். அனைவரையும் மகிழ்விக்கிறார்கள். நீங்கள் பேப்பர் திருத்தி மார்க் போடாதீர்கள். யாரும் உங்களை வெற்றிலை வைத்து அழைக்கவில்லை. திருத்துவதற்குத் தகுதியானவரும் நீங்கள் இல்லை. இதை அனைவரும் அறிவார்கள்.
நீங்கள் வேண்டுமானால் நாளந்தா பல்கலைக் கழகம் ஆரம்பித்து தகுதி, தரத்துடன் நீங்கள் ஒருவரே நடத்துங்கள். இங்குள்ளவர்கள் பஞ்சயாத்து யூனியன் பஞ்சைகளாகவே இருந்து விட்டுப் போகட்டும்.
என்ன புரிந்ததா? வீண் சவடால்கள் விடாமல் சிவனே என்று உங்கள் வேலையைப் பாருங்கள்.
எதாவது உஸ்கி... புஸ்கி என்று ரஷ்யப் பெயர்களை உச்சரிப்பது போல உளறிக் கொட்டுவீர்களே! அது போல எதாவது எழுத முனையுங்கள். போனால் போகிறது என்று படித்து விட்டுப் போகிறோம்.
Last edited by Rama Doss; 11th June 2014 at 12:06 PM.
-
11th June 2014, 12:09 PM
#3316
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Rama Doss
[SIZE=3]நண்பரே கோபால்,
தலைமுடியை சம்பந்தப்படுத்தி அனைவரையும் காயப்படுத்துவீர்கள்.
ராமதாஸ்.
அப்ஜெகஷன் யுவர் ஆனர் ,அது "தலை"முடியை சம்பத்த படுத்தியல்ல என தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
-
11th June 2014, 12:18 PM
#3317
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Rama Doss
கோபாலரே!
என்ன புரிந்ததா? வீண் சவடால்கள் விடாமல் சிவனே என்று உங்கள் வேலையைப் பாருங்கள்.
எதாவது உஸ்கி... புஸ்கி என்று ரஷ்யப் பெயர்களை உச்சரிப்பது போல உளறிக் கொட்டுவீர்களே! அது போல எதாவது எழுத முனையுங்கள். போனால் போகிறது என்று படித்து விட்டுப் போகிறோம்.
ஹய் ...இஸ்கி...புஸ்கி...ஆசை....தோசை....அப்பளம்...வடை.. ..
-
11th June 2014, 12:39 PM
#3318
Junior Member
Junior Hubber

Originally Posted by
sivajisenthil
மதிப்புக்குரிய ராமதாசு அய்யா. மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். நம் திரியின் மாண்பினை காத்திட நம் வேறுபாடுகளைக் களைந்து இந்நிகழ்வினை ஒரு கெட்ட கனவாக மறந்து நம் நடிகப்பேரரசர் புகழ் பரப்புவது மட்டுமே குறிக்கோளாக கொள்வோமே
சிவாஜி செந்தில் சார்,
நீங்கள் சொல்வது வாஸ்தவம். ஒத்துக் கொள்கிறேன். சிவாஜி புகழ் பாடுவது மட்டுமே நமது குறிக்கோள்.
ஆனால் அதை செய்ய விட்டால்தானே! மற்றவர்கள் பதிவுகள் இட ஆரம்பித்ததும் உடனே கேவலமான ரியாக்ஷன். தோனித் துலங்கி சர்ச்சைகளுக்குப் பிறகு ஒன்றிரண்டு பதிவுகள் வர ஆரம்பித்தவுடன் வசவு ஆரம்பித்து இடையில் மீண்டும் தடங்கல்கள். வாக்குவாதங்கள். இதைத்தான் வேண்டாமென்கிறேன். நிம்மதியாக அனைவரும் பதிவுகள் போட வேண்டும். யாரும் தரக்குறைவான வார்த்தைகள் இடுவதில்லை கோபாலைத் தவிர. அவர் யாரையும் போட விடுவதில்லை. இதனால் பதிவுகள் மீண்டும் நின்றுவிடுகின்றன. இது தேவையா என்கிறேன். ஒரு நபரால் அனைவரும் பதிவுகள் இடுவது தடையாகிறதே! அதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீகள்?
வாய்க்காலில் இருக்கும் அழுக்குக் கட்டிகளைத் தூக்கித் தூரப் போட்டால்தானே வயலுக்குத் தண்ணீர் தடையின்றிப் பாயும். தடையை நீக்காமலேயே வயலுக்குத் தண்ணீர் போக வேண்டும் என்றால் எப்படி?
அப்படியென்றால் வயலுக்குக் கொஞ்சம்தானே தண்ணீர் போகும்?
நான் தடைகளை நீக்கச் சொல்லுகிறேன். அவ்வளவுதான். கோபாலை திரியை விட்டு நீக்கச் சொல்லவில்லை. அது மனிதமும் ஆகாது. அதற்கு நமக்கு உரிமையும் இல்லை.
பதிவாளர்களை பதிவுகளை அவர் எள்ளி நகையாட வேண்டாம் என்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது?
அவர் எகத்தாளமாய் பேசுவதனால்தானே பதிவுகள் குறைகின்றன. பதிவுகள் குறைந்தால் சிவாஜி புகழ் எப்படி பாடப்படும்? களைகளைக் களைய வேண்டாமா?
இப்போது முரளி இருக்கிறார். அவருக்கும் பிடிக்காத பதிவுகள் இருக்கும். அவர் கண்டு கொள்ளாமல் ஜென்டிலாகத் தான் உண்டு தன் பதிவுண்டு என்று இருக்க வில்லையா?
அடுத்தவர் பதிவை விமர்சிக்கட்டும். வேண்டாம் என்று கூறவில்லை. அரைவேக்காட்டுத்தனமான விமர்சங்கள் எதற்கு? அதுவும் படிக்கக் கூசக் கூடிய கெட்ட வார்த்தைகளில். ராகுலின் பதிவுகளை ஆய் என்று மலத்திற்கு சமமாக ஒப்பிடுகிறார்.
இதில் உங்களுக்கு உடன்பாடா? இதைக் கண்டு பேசாமல் நாம் செல்லலாமா! சொல்லுங்கள். நாம் கேட்காவிட்டால் அந்தப் பதிவுகளைப் போட்ட ராகுல் என்ன நினைப்பார் நம்மைப் பற்றி. ராகுலின் பதிவுகளை, ரவியின் பதிவுகளை படித்து ரசிப்பதோடு நமது வேலை முடிந்து விட்டதா? அவர்கள் அவமானப்படும்போது நான் அவர்களுக்காக குரல் கொடுக்க ஓடி வரவேண்டாமா?
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
என்று வள்ளுவர் சொல்கிறாரே!
பதிவுகளை மட்டும் படித்து விடுகிறேன்.... பதிவாளர்கள் எக்கேடேனும் கெட்டு போகட்டும் என்று நாம் வாளாவிருந்தால் அது நீதியா? நியாயமா? தர்மமா?
அவர்களுக்கு ஒரு அவமானம் என்றால் அது நமக்கும் இல்லையா?
நாம் என்ன சுயநலப் பேய்களா?
பதிவாளர்கள் யாருக்கு உழைக்கிறார்கள். நடிகர் திலகத்திற்குதானே!
-
11th June 2014, 01:55 PM
#3319
Junior Member
Veteran Hubber
ஐயா . நமது குறிக்கோள் நடிகர் திலகத்தின் அழியாப் புகழை கட்டிக்காப்பதுவே . கடின வார்த்தைகள் கொட்டினால் அள்ளமுடியாது . சீரும் சிறப்பும் மிக்க தமிழறிஞர் என்ற முறையில் தயவு செய்து இதை புறம் தள்ளி முதிர்வுடன் நம் பணி தொடர வேண்டுகிறேன்.
Very unfortunate that this issue is dragged ultimately for nothing. Such a vehement protest has never been done in the past 11 threads. Arguments were there but the misunderstandings now assume unimaginable proportions.
Gopal Sir and Ramadoss Sir...please .... let us not become laughing stock due to such avoidable ego clashes. Humble request sirs not to open any Pandora's box!
Last edited by sivajisenthil; 11th June 2014 at 02:02 PM.
-
11th June 2014, 03:23 PM
#3320
Junior Member
Veteran Hubber
OK. there is a point beyond which I never go. If it is an ego clash between two stalwarts, then they need to settle it out since they have posted their own opinions only. For the betterment of this thread, time being, I have to make my stand as a silent spectator only. The moderator knows pretty well as to do what and when. I don't intend to drag in our contemporaries in this issue as they are also watching helplessly
Bookmarks