-
11th June 2014, 04:09 PM
#3321
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Rama Doss
[SIZE=3]
பாதிக்கப்பட்ட திரியின் உறுப்பினர்களே! மற்ற அங்கத்தினர்களே!
ராமதாஸ்.
-
11th June 2014 04:09 PM
# ADS
Circuit advertisement
-
11th June 2014, 04:13 PM
#3322
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
ராமதாஸ் சார்,
என்னை எதிர்த்து பேச கூடாதென்று நான் கூறியதும் இல்லை.கூற போவதும் இல்லை.
நீங்கள் எதிராக அணி திரட்ட அவசியமே இல்லை. ஆண்மை இருந்தால்தனி மனிதனை தனியாக எதிர் கொள்ளவும்.எழுத்தை எழுத்தால் எதிர்கொள்ளவும். நான் உங்களை விட அதிகமான அரசியல் செய்பவர்களை எதிர்கொண்டவன்.(அதற்கென்று உங்களை ஜுஜுபி என்று உதற மாட்டேன்.) கிருபா ,ராமதாஸ் என்று வினோத அவதார புருஷன் ஆவதை நிறுத்தி ,பாண்டியை சேர்ந்த நீங்கள் என் எழுத்துடன் நேரடியாக மோதினால் எனக்கும் பெருமை ,உங்களுக்கும் பெருமை.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th June 2014, 04:21 PM
#3323
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th June 2014, 05:34 PM
#3324
Junior Member
Newbie Hubber

Originally Posted by
sivajisenthil
OK. there is a point beyond which I never go. If it is an ego clash between two stalwarts,
??????????????????????????????????????!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
(Junior Member Newbie Hubber
Join Date
Apr 2014
Posts
17
Last edited by Gopal.s; 11th June 2014 at 05:57 PM.
-
11th June 2014, 06:08 PM
#3325
Junior Member
Veteran Hubber
Gopal Sir. Mostly well educated and scholarly people interact in our prestigious NT threads, as one can sense from their way of writing. Mere number of posts thus far, may not be a comparative measure. I, from my observations, always consider you as a stalwart on account of your hard work and presentation capabilities which has helped this thread grow to this level. Ramadoss sir too, I presume he is a retired teacher, is no less a stalwart as we can sense from his way of writings as an offshoot of his rich teaching experience. For me you two can be plus into plus plus rather than minus into minus plus! For the welfare of this thread....kindly avoid warfare between you two!
Last edited by sivajisenthil; 12th June 2014 at 10:33 AM.
-
11th June 2014, 06:47 PM
#3326
Junior Member
Newbie Hubber

Originally Posted by
sivajisenthil
Ramadoss sir too, I presume he is a retired teacher,
இன்னுமாயா இந்த உலகம் நம்மை நம்புது....வூவ்வ்
-
11th June 2014, 07:25 PM
#3327
Junior Member
Seasoned Hubber
பாவ மன்னிப்பு
மிகவும் அழகாக , ஆழமாக பழைய திரிகளிலும் , இந்த திரியினிலும் அலசப்பட்ட படம் - படம் என்று சொல்வதை விட , பாடம் என்று சொல்லலாம் - "ஒரு பாடல் ஒரு லக்க்ஷம் " என்று சமீபத்தில் முரளி இந்த படத்தில் வரும் ஒரு பாடலையே ஒரு படமாக மாற்றி அருமையாக எடுத்து சொன்னார் - ராகுலின் பதிவுகளும் சுவையை அதிகபடுத்தின .
மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை இருப்பது எவ்வளவு அற்புதமாக இருகின்றது பார்த்தீர்களா ? - இந்த வார்த்தை இருப்பதால் பல நட்புக்கள் இன்னும் குழி தோண்டி புதைக்கபடாமல் உள்ளன -- பலகசப்பான அனுபவங்கள் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையின் மூலம் மறைந்து போகின்றன கால போக்கில் -----
இந்த படமும் மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இன்னும் எவ்வளவு மரியாதை இருக்கின்றதோ அந்த அளவிற்கு தரத்திலும் , கதையின் வலுவிலும் , நடிப்பின் உச்ச கட்டத்திலும் இன்னும் பரவலாக பேசப்படும் படம் - தரமான படம் என்றால் என்ன என்று முதல் தடவையாக எழுப்பப்பட்ட கேள்விக்கு "இதோ நான் தான்" என்று பதில் கொடுத்த படம் - இதன் முன்போ , அதற்கு பின்போ இப்படி பட்ட தரமான படம் ஒன்று வந்ததா / வருமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு இதுவரை இல்லை என்ற பதில் தான் உயர்ந்து நிற்கின்றது
ரஹீம் - இப்படி பட்ட ஒரு மனிதனை உலகம் சந்தித்ததே இல்லை - என்ன கருணை உள்ளம் ? ஈகோ விற்கு ஒரு சவாலாக இருந்தவன் - என்றுமே வார்த்தைகளில் , செயல்களில் ஒரு பணிவும் , அன்பும் இருக்கும் - இவனால் வெறுக்கப்பட்டவர்கள் யாருமே இல்லை - அதனால் இவனை வெறுத்தவர்களும் யாரும் இல்லை . இந்த படம் வந்த பின் ஒவ்வொரு முஸ்லீம் தோழர்களும் தன் சட்டை காலரை மேலே உயர்த்தி கொண்டு , இந்து நண்பர் தோள்களில் கைகளை போட்டு கொண்டு ஒன்றாக சேர்ந்து கிறிஸ்டியன் நடத்தும் ஹோட்டலில் சென்று உணவு உண்டார்கள் , பிறகு ஒரே குரலில் நம்மை "எல்லோரும் கொண்டாடுவோம்" என்று பாடி மகிழ்ந்தனர்
உள்ளங்கள் அன்புடன் இருந்தால் ஒரு மதம் தேவை இல்லை - தனிப்பட்ட வழிபாடுகள் தேவை இல்லை , honour killing என்பது அகராதியிலே இருக்காது -
தந்தை என்று தெரியாமல் போராடுவதிலாகட்டும் , தாய் யார் என்று தெரியாமல் பாசத்திற்கு ஏங்குவதிலாகட்டும் , காதலில் ஒரு மென்மையை தேடுவதிலாகட்டும் , அண்ணனிடம் அடி வாங்கிய பின் , அவனிடம் கருணையை பொழிவதிலாகட்டும் , குடிசை மக்களுக்காக தன்னையே தருவதிலாகட்டும் , ரஹீமின் தாக்கம் இன்னும் நம்மை பயித்தியமாக ஆக்குகிறதே ---
படத்தை ரசிக்கும் நாம் உண்மையான பாடத்தை கற்று கொள்ள மறந்து விடுகிறோம் - படத்தில் கைகொட்டும் நாம் உண்மை வாழ்க்கையில் இரு கரங்களையும் பின்பக்கம் சேர்த்து கட்டிகொள்கிறோம்.
மத சண்டை , இன சண்டை , மொழி சண்டை , இன்னும் எத்தனையோ நடக்கும் இந்த நாட்டில் ரஹீம் போன்றவர்கள் மிகவும் தேவை - என்றோ வந்த படம் - இன்றும் நமக்கு படிப்பினையை கொடுக்கின்றது என்றால் , நாம் இதுவரை என்ன கற்று கொண்டோம் என்ற கேள்வியும் கூடவே எழுகின்றது - NT யின் படங்கள் சாகா வரம் பெற்றவைகள் - அந்த வரிசைகளில் பாவ மன்னிப்பு என்றுமே முதலிடம் பெரும் - யார் வேண்டுமானலும் இந்த படத்தை அலசலாம் ,எவ்வளவு தடவை வேண்டுமானாலும் இந்த படத்தை பற்றி எழுதலாம் - முடிவில் கிடைப்பது ஒரு மன அமைதி - ஒற்றுமை , சகோதர உணர்வு , ஈகோ எல்லாத ஒரு வாழ்வு - இந்த படம் வெளி வந்தபின் தான் தமிழ் அகராதியில் "தரம் " என்ற வார்த்தை சேர்க்கபட்டதாம் !!
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
11th June 2014, 07:50 PM
#3328
Junior Member
Veteran Hubber
dear RKS. You are a stalwart in uploading songs to the situations! Paragraphs I write won't have the impact of what you have done!! I admire your quick wit and your penchant in maintaining your equilibrium even in pathos situations like this. you are the fiddle Nero.. sorry ... Fidel Hero!
Last edited by sivajisenthil; 11th June 2014 at 08:11 PM.
-
11th June 2014, 07:56 PM
#3329
Junior Member
Veteran Hubber
dear ravi. your presentation on 'Paava Mannippu' oru thelindha neerodai. Ippadaththin tharam nirandharam.
-
11th June 2014, 08:30 PM
#3330
Junior Member
Seasoned Hubber
என்றும் அழியாத கதாபத்திரங்கள் -2
நெஞ்சிருக்கும் வரை
ரகுராமன் : ரஹீம் உடைய மறு அவதாரம் - ஏழ்மையை ஆடையாக உடுத்தி , தன் மானத்தை தன் உயிரினும் மேலாக மதித்து , வயிரை என்றுமே ஈரமாக வைத்துக்கொண்டு , கிடைப்பது தண்ணீர் என்றாலும் அதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு , பிறர் நலத்தையே என்றும் நாடும் ஒரு விசித்திரமான பாத்திரம்
தாழ்வு மனப்பான்மை என்பது இவனது விரோதி - கவலை என்பது இவன் அறியாத ஒரு வார்த்தை - ஏழ்மையாக இருந்தாலும் , சந்தோஷம் இவன் வீடு தேடி வந்து இவனிடம் சற்றே உரை யாடிவிட்டு செல்லும் . நண்பனுக்காக வாழ்ந்தான் - தான் காதலித்த பெண் தன்னை விரும்பவில்லை என்று அறிந்து அவளை பழிவாங்கவில்லை - அவளுக்கு அவள் விரும்பிய காதலனை கட்டிவைக்க பாடு பட்டான் - எவ்வளவு அவமதிப்புக்கள் - அவன் நடக்கும் பாதை எங்கும் விதி கொடிய முள்களை தூவியது - அவனுடைய தியாகத்தை உலகம் உணரவில்லை - உற்ற நண்பன் அவனை வெறுத்தான் - என்றாவது தன் முயற்ச்சியை விட்டு கொடுத்தானா? - சிரித்த முகத்துடன் தோல்விகளையும் , வேதனைகளையும் ஏற்று கொண்டான் - முடிவில் தன் உயிரை தன் நண்பனுக்கு காணிக்கையாக்கி தியாகம் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தான் -
" சில நாள் தானே சுமைகள் குறைய " என்று சொன்னவன் ஒரு காவியமாகி நெஞ்சிருக்கும் வரை வாழ்ந்து கொண்டிருப்பான் - நட்பில் உண்மை வேண்டும் - வாழ்வில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் ; வாழும் வாழ்க்கை மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும் - உபத்திரமாக இருக்க கூடாது - ரகுராமன் வாழ்ந்து கட்டினனான் , நாம் கடை பிடிக்க ------
தொடரும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks