-
17th June 2014, 12:22 PM
#411
Senior Member
Senior Hubber
தப்புத் தாளங்கள் சுந்தர் பற்றி பேச்சு வந்திருந்தது..அவர் காளியிலும் வில்லன்களில் ஒருவராக வருவார்..(ஃபடாபட் பாடும் பாட்டு அழகழகாப் பூத்திருக்கு ஆசை வைக்கத்தெரியலையே நல்ல பாட்டு) பின் கன்னடத்தில் நடிக்கப் போய்விட்டார்.. அவரது மனைவியும் த்மிழ் நடிகைதான்..வைதேகி காத்திருந்தாளில் விஜயகாந்தைக் காதலித்ததால் அல்பாயுசில் இறந்து போகும் ரோலில் நடித்தவர்.. அவரும் கன்னடத்தில் நடிகையாகி செட்டில் ஆகிவிட இருவருக்கும் பிறந்த மேக்னா நாயுடுவோ மேகாவோ - ஒரு பெண் - சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்..
-
17th June 2014 12:22 PM
# ADS
Circuit advertisement
-
17th June 2014, 12:23 PM
#412
Senior Member
Diamond Hubber

Originally Posted by
mr_karthik
டியர் வாசு சார்,
தேவதை படம் சிவகுமார், லாவண்யா ஜோடியாக நடித்த படம். ஜெயந்திதான் அக்கா. நெசவுத்தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுவார். (தறி நெய்யும்போதுதான் 'கலீர் கலீர்' பாட்டு).
ஜெயந்தி மீது தவறான பழிசுமத்தி, அந்த ஊர் வழக்கப்படி வீட்டு வாசலில் சிவப்பு விளக்கைக் கட்டி விடுவார்கள். வெளியிருந்து திரும்பும் சிவகுமார் தன் வீட்டு வாசலில் கட்டப்பட்ட சிவப்பு விளக்கை உடைத்தெறிந்து தன் அக்காவுக்காக ஊர் மக்களிடம் ஆக்ரோஷமாக வாதாடுவார்.
ஜெயந்தியை ஒருவன் கற்பழிக்கும் (?????) காட்சி கூட உண்டு. ஒரு மாதிரி சவசவ கதை. சென்னை அலங்கார் தியேட்டரில் காலைக்காட்சி பார்த்து தலைவலி வந்தது.
ஆமாம் சார். நீங்கள் எழுதியதைப் படிக்க படிக்க காட்சிகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகின்றன. முற்றிப் போன ஜெயந்தி நன்கு நினைவில் இருக்கிறது. ஜெயந்தியிடம் சிவக்குமார் வாதாடும் காட்சிகளும் நினைவுக்கு வருகின்றன. நன்றி சார்!
-
17th June 2014, 12:24 PM
#413
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
தப்புத் தாளங்கள் சுந்தர் பற்றி பேச்சு வந்திருந்தது..அவர் காளியிலும் வில்லன்களில் ஒருவராக வருவார்..(ஃபடாபட் பாடும் பாட்டு அழகழகாப் பூத்திருக்கு ஆசை வைக்கத்தெரியலையே நல்ல பாட்டு) பின் கன்னடத்தில் நடிக்கப் போய்விட்டார்.. அவரது மனைவியும் த்மிழ் நடிகைதான்..வைதேகி காத்திருந்தாளில் விஜயகாந்தைக் காதலித்ததால் அல்பாயுசில் இறந்து போகும் ரோலில் நடித்தவர்.. அவரும் கன்னடத்தில் நடிகையாகி செட்டில் ஆகிவிட இருவருக்கும் பிறந்த மேக்னா நாயுடுவோ மேகாவோ - ஒரு பெண் - சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்..
தெய்வமே!
-
17th June 2014, 12:25 PM
#414
Senior Member
Veteran Hubber
பாபு மகாராஜா இயக்கத்தில், சந்திரபோஸ் இசையில் 1981-ல் வந்த படம் 'தரையில் வாழும் மீன்கள்'
விஜயபாபு-அம்பிகா ஜோடிக்கு இரண்டு டூய்ட்கள்.
'மணிமாளிகை கண்ட மகராணியே' ஜெயச்சந்திரன் சோலோ.
'அன்பே சிந்தாமணி... இன்பத்தேமாங்கனி' மலேசிய வாசுதேவன்-ஜானகி.
ஜானகிக்கு ஒரு தனிப்பாடல் 'அழகான சின்னக்குட்டி ஆட்டம் ஆடுது' . இந்தப்பாடல் படத்தில் உயர்ந்த நடிகை வனிதாவுக்கு.
படம் சுமார், ஓட்டம் சுமாருக்கும் கீழே.
-
17th June 2014, 12:27 PM
#415
Senior Member
Senior Hubber
//முற்றிப் போன ஜெயந்தி நன்கு நினைவில் இருக்கிறது. ஜெயந்தியிடம் சிவக்குமார் வாதாடும் காட்சிகளும் நினைவுக்கு வருகின்றன. நன்றி சார்// நான் வயதானதையெல்லாம் நினைவில் வைத்திருக்க மாட்டேன்..ஜெயந்தி என நினைத்தால் நீர்க்குமிழி தான் நினைவுக்கு வரும்.. கன்னி நதியோரம் மின்னி விளையாடும்..பெண்ணழகு மேஏஏனி...என்ன கதை கூறும் (ஒரு பெரிய நாவலே கூறும்
) வண்ண விழிமேடை வந்த இளம்பேடை சின்ன இடையோ டு டுடு சேர்ந்து கவிபாடும்..டிஎம் எஸ் அனுபவித்துப் பாடியிருப்பார்..
-
17th June 2014, 12:27 PM
#416
Senior Member
Diamond Hubber

சின்னக் கண்ணன் சார்,
குடமில்லாமல் நிற்பவர்தானே நீங்கள் சுந்தரின் மனைவியாகக் குறிப்பிட்டது?
-
17th June 2014, 12:29 PM
#417
Senior Member
Senior Hubber

Originally Posted by
mr_karthik
பாபு மகாராஜா இயக்கத்தில், சந்திரபோஸ் இசையில் 1981-ல் வந்த படம் 'தரையில் வாழும் மீன்கள்'
விஜயபாபு-அம்பிகா ஜோடிக்கு இரண்டு டூய்ட்கள்.
'மணிமாளிகை கண்ட மகராணியே' ஜெயச்சந்திரன் சோலோ.
'அன்பே சிந்தாமணி... இன்பத்தேமாங்கனி' மலேசிய வாசுதேவன்-ஜானகி.
ஜானகிக்கு ஒரு தனிப்பாடல் 'அழகான சின்னக்குட்டி ஆட்டம் ஆடுது' . இந்தப்பாடல் படத்தில் உயர்ந்த நடிகை வனிதாவுக்கு.
படம் சுமார், ஓட்டம் சுமாருக்கும் கீழே.
இது மீனாட்சி தியேட்டரில் காலைக் காட்சி - காலேஜ் கட் அடித்துப் பார்த்த படம் ..அம்பிகையின் இரண்டாவது படம்... முக்கியமான ஒரு பாட்ட விட்டுப்புட்டீங்களே.... மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து மலையின் முடிவில் பொழியும் வழியும் நிலமும் அதனால் குளிராதோ... நல்ல ஸோலோ..
-
17th June 2014, 12:29 PM
#418
Senior Member
Senior Hubber
கொஞ்சம் தெளிவாகத் தெரியவில்லை..இது வைதேகி காத்திருந்தாள் ஸ்டில் எனில் ஆம்..
-
17th June 2014, 12:30 PM
#419
Senior Member
Diamond Hubber
சின்னக் கண்ணன் சார்,
தங்களுக்கு குரும்பூர் குப்புசாமி என்று நீங்கள் அனுமதித்தால் பெயர் வைக்கலாம் போல் இருக்கிறதே!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th June 2014, 12:33 PM
#420
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
கொஞ்சம் தெளிவாகத் தெரியவில்லை..இது வைதேகி காத்திருந்தாள் ஸ்டில் எனில் ஆம்..

ஆம்! அது 'வைதேகி காத்திருந்தாள்' ஸ்டில்தான்.
Bookmarks