-
27th June 2014, 09:30 PM
#3591
Junior Member
Newbie Hubber
சிவாஜி செந்தில் கேட்டதை முன்னிட்டு ,என்னை கவர்ந்த இரு படங்களின் பழைய ஆய்வுகள் .
வியட்நாம் வீடு - 1970
பிராமணர்கள் கொஞ்சம் மிகையான தோரணை, நம்பிக்கைகள், அகந்தை, கொண்டு மற்றோருடன் இருந்து தனித்து தெரிந்த காலம். சில வீட்டில் பெரியோர்களை பார்க்கும் போது நிஜமாகவே வேற்று கிரக வாசிகள் போலவே நடந்து கொள்வார்கள்.நடை,உடை,பாவனை, தோரணை எல்லாவற்றிலும். இத்தனைக்கும் அவர்கள் வீட்டின் நிலவரம் சராசரிக்கும் கீழேதான் இருக்கும். அறிவில்,படிப்பில், சமூக அந்தஸ்தில்,பணத்தில். அப்போது, சில கதைகளில் பிராமணர்களை அறிய வாய்ப்பிருந்தது (அதிக பட்ச எழுத்தாளர்கள்) ஆனால் படங்களில் அந்த சமூகம் பிரதிபலிக்க பட்ட விதம் காமெடிக்காக மட்டுமே. அதுவும் வஞ்ச மனம் கொண்ட காமெடியன் ஆக. எனக்கு சிரிப்பாக வரும்.
இந்த சூழ்நிலையில் எழுபதில் வந்த படம் வியட்நாம் வீடு. இந்த படத்தை ஒரு நல்ல நடு முயற்சி என்று சொல்லலாம். Melodrama வில் இருந்து விலகாமல் , ஒரு ரியலிச படத்திற்கான அம்சங்களை கொண்டிருந்த படம். சமகால பிரச்சினைகளை பேசியது புதிய மீடியத்தில், சமூகத்தில் அந்நிய படுத்த பட்ட, மிகையான நம்பிக்கை,அகந்தை,கவுரவ மனப்பான்மை கொண்ட ஒரு சமூகத்தை மைய படுத்தி அவர்களின் சராசரி பிரச்சினைகளை பேசியது. ஓய்வு பெறவிருக்கும் ஒரு மேல் மத்யதர பிரைவேட் கம்பெனி ஊழியனை பேசியது.(கவர்மென்ட் ஊழியர் என்றால் வேலை பார்க்கும் போது வறுமையிலும்,retire ஆனதும் செழிப்பாகவும் இருப்பார்.பிரைவேட் என்றால் தலை கீழ் ) அவனின் சராசரி உடல் பிரச்சனையை பேசியது. சிறிது moral value வில் பிறழும் அவன் மகனை பற்றி பேசியது.பிறந்த குலத்தில் உள்ள அறிவு செருக்கை இழந்த படிக்காத அவன் மகன் பிரச்சினை பேசியது. பருவ வயதின் பால் பட்டு வழுவ இருந்த மகளை பேசியது. நன்கு சம்பாதித்தும் சேமிக்க தெரியா உயர் சம்பள காரர்களின் வயதான வாழ்க்கையை பேசியது. அவர்களின் positional importance வீட்டிலும்,வெளியிலும்,அலுவலகத்திலும் வதை படும் கொடுமை பேசியது. பிராமணர்களும் நம்மிடையே உள்ள ரத்தமும் ,சதையும் கொண்ட ,பிரச்சினைகளை அன்றாடம் சந்திக்கும் சராசரி மனிதர்களே என்று பேசியது. அந்த மனிதனின் மிகையான நம்பிக்கைகளும்,செருக்கும் சோதனைக்குள்ளான மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis சமாசாரங்களை ,அறிவு-ஜீவி மேர்பூச்சற்ற நேர்மையான,வெளிப்படையான,பாவனைகள் களைந்த நல்ல முன் முயற்சிதான் வியட்நாம் வீடு.
வியட்நாம் வீட்டின் கதை ஒன்றும் nerrative surprise கொண்டதல்ல. மிக சாதாரண அடுத்த வீட்டு கதை. Prestige பத்மநாபையர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த தகப்பனை சிறு வயதில் இழந்து,தாயாரால் வறுமையில் வளர்க்க பட்டு,அத்தையால் ஆதரிக்க பட்டு ,அத்தை மகளையே மணந்து நல்வாழ்க்கை
வாழும் ஒரு தனியார் நிறுவன உயர் நிலை ஊதியர்(B.P, இருதய நோய் உண்டு) நல்லொழுக்கம் ,நன்னடத்தை, பேணும்,மற்றோரை பேணும் படி கட்டாய படுத்தும், prestige என்பதை தன மந்திர சொல்லாக கொண்டு வாழ்பவர். அற்புதமான இவர் வாழ்வு, சரியான சேமிப்பில்லாமல், அலுவலகம் இவருக்கு ஓய்வு(retiement )கொடுத்து விட, தயாராய் இல்லாதவர் பிள்ளையை மலை போல் நம்புகிறார். ஆனால் நல்ல வேலையில் உள்ள மூத்தவன் மனைவி பேச்சால் தடம் புரண்டு, அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் அளவில் சென்று,குடும்ப பொறுப்பையும் ஏற்க மறுக்க, இளையவன் சரியான படிப்பு இல்லாமல் ,சாதாரண தொழிலாளி வேலைக்கு செல்லும் ஒரு பொறுப்பில்லா ஊதாரி. மகளோ ,ஒரு காதலில் மூழ்கி,ஓடி போகும் அளவு வரை சென்று ,சரியான நேரத்தில் ,தந்தையால் மீட்க படுகிறாள். இறுதியில் ,ஓரளவு குடும்பத்தில் அமைதி திரும்பி(புயலுக்கு பின்) ,அவர் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேரியும், அலுவலகம் அவரை மீண்டும் உயர் பணிக்கு கூப்பிட,ஆனந்த அதிர்ச்சியில் ,உயிர் துறக்கிறார். சாதாரண மேடை நாடக கதையல்லவா?
இனி நம் கடவுள் தன் திருவிளையாடலால் இதை ஒரு cult படமாக்கி,பிரம்மாண்ட வெற்றி பெற வைத்த விந்தையை பார்க்கலாம்.
முதலில் சொன்னால் ,இந்த மாதிரி பாத்திரங்களால்தான், NT , தனது தனித்தன்மையை நிரூபித்து, உலக நடிகர்களிலே முதல்வர் என்று புகழும் அளவு,உயர்ந்து இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் போற்ற படுகிறார்.(கமலும் இந்த பாத்திரத்தை மிக சிலாகிப்பார்).மற்ற நடிகர்கள்,தனது இயல்புடனே சிறிது மாற்றம் செய்து ,ஏற்ற பாத்திரத்தை தன் இயல்புக்கு மாற்றுவர். ஆனால் உலகத்திலேயே , கூடு விட்டு கூடு மாறி ஏற்று கொண்ட பாத்திரத்தில் தன்னை நுழைப்பவர் ,நம் NT ஒருவரே. அதனால் ,அவர் எடுக்கும் ரோல் மாடல்,Proto -type , அந்த genre type இல் ,ஒரு அதீத குண,மன நலன்களுடன், பல்வேறு மிகை இயல்பு கொண்ட பாத்திரங்களின் அசல் கலவையாக, அந்தந்த இனத்தையோ,மதத்தையோ,தொழிலையோ,குடும்ப பிரச்சினைகளையோ,மன-உடல் பிரச்சினைகளையோ பாத்திர வார்ப்பில் பிரதிபலிக்கும் போது அதீத கலவைகளின் வார்ப்பாக(சங்கராசார்யார்,டிவிஎஸ் ) இருக்கும். அதை stylised ஆக அவர் நடிக்கும் போது connoisseurs என்று சொல்ல படுபவர்கள் பரவசப்படுவார்கள் அல்லது சக நடிகர்கள் பாடம் கற்று கொள்வார்கள்.(Actors ' actor ) . இது ஒரே மனிதர் பல்வேறு கதாபாத்திரங்களை நடிக்கும் போது, வேறு பாடு காட்டவும், சிவாஜி என்ற கலைஞன், சிவாஜி என்ற கலைஞனை ஒவ்வொரு முறையும் தாண்டி,வேறு படுத்த மிக மிக அவசியம்.
இதில் வரும் prestige பத்மநாபன் பாத்திரம் ஒரு wonder . தான் நடித்ததை திரும்ப நடிக்காத ஒரே மேதை NT மட்டுமே.(ஒரே மாதிரி ரோல் ஆக இருந்த போதும்)
நீங்கள் ஒரு பிராமணரை (வெவ்வேறு வயது கொண்ட)அறுபதுகளில் observe செய்திருக்கீர்களா? செய்யா விட்டாலும் என்னோடு இப்போது பயணியுங்கள். முரண்பாடுகளின் மொத்த மூட்டைதான் அவர்கள். உலகத்திற்காக கிராப், லௌகீகம் காக்க குடுமி, அலுவலம் போக மேல் கோட் ,கீழே லௌகீகம் காக்க பஞ்ச-கச்சம், மேலாதிக்க மனம், ஆனால் பொருளாதாரத்தில் அன்றாடம் காய்ச்சிகள்,வேடிக்கையான சுத்தம், உடலை துடைத்து கொள்ளாமல் ஈரம் உடுத்தி மடி காப்பார்கள்.எல்லோரையும் ஒதுக்கி வைப்பார்கள் ஆசாரத்திற்கு. ஆனால் மிக சிறந்த தனி-மனித நேயம் மிக்கவர்கள்.வித்யாசமான பேச்சு வழக்கு.பேசும் பாணி. எல்லாம் அறிந்தது போல், எல்லாவற்றையும் பேசுவார்கள். வீட்டில் பேசுவது கூட அறிவுரை பாணியிலேயே இருக்கும்.சம்பந்தமில்லாத விருந்தாளியிடமும் அறிவுரை பாணிதான்.பேச்சில் ஒரு assertion , body -language ஒரு கண்டிப்பான ஒரு hand movements , side -on body swings ,வயதுக்கு மீறின ஒரு முதுமை,இயல்பான கோழைத்தனம், பிரச்சினைகளில் புலம்பும் மனம்,மற்றையோரை எல்லார் எதிரிலும்(பிரைவேட் ஆனா விஷயங்களிலும்)கண்டித்து தான் விரும்பியதை சொல்லும் அதீத ஸ்வாதீதம்,ஒரு confined -disciplin இதுதான் நான் பார்த்த பிராமணர்கள்.(தஞ்சாவூர்,திருநெல்வேலி,சென்னை ஆகிய இடங்களில்)
மற்ற எல்லாப்படங்களிலும் நடிகர்திலகம் நடித்த காட்சிகளில் ஹை லைட் என்று சொல்லும் காட்சிகள் இருக்கும். வியட் நாம் வீட்டில் அத்தனை காட்சிகளும் highlight . மேக்-அப் மிக சிறப்பாக இருக்கும். புருவம்,காது மயிர் உட்பட அத்தனை தத்ரூபம்.வியட்நாம் வீடு சுந்தரம் என்ற பிராமண குலத்தை சேர்ந்த ஏழை இளைஜெர் மிக சிறப்பாக வசனத்தை (அன்றாடம் பிராமணர்கள் வீட்டில் உபயோகிக்கும் பேச்சுக்களையே ) கொடுத்திருப்பார்.
சிவாஜியின் பிராமண பேச்சு அவ்வளவு அழகாக இருக்கும். அந்த modulations சாத்திரி என்று மனைவியை அழைக்கும் தொனியில் இருந்து எல்லாமே அருமை.(கண்ணதாசன் பாலக்காட்டு பாடலில் கோட்டை விட்டிருப்பார். இது பாலக்காடு பிராமணர் பேச்சு வழக்கு அல்ல.மனைவியும் புதியவள் அல்ல)ஆனால் பாடலின் அழகு கருதி (Puppet பாணி அற்புத நடன அசைவுகள்) மன்னித்து விடலாம்.
இந்த படத்தில், பின்னால் வரும் காட்சிகளை விட ஆரம்ப காட்சிகள் மிக நன்றாக இருக்கும். நகைச்சுவை மிக இயல்பாக கதையுடன் ,பேச்சு வழக்கை ஒட்டி இருக்கும். ஆரம்ப கிரக பிரவேச காட்சி,ஆபீஸ் புறப்பட தயார் ஆகும் காட்சி, வீட்டுக்கு வந்த பெண்ணின் நண்பிகளை கலாய்க்கும் காட்சி, ஆபிசில் அக்கௌன்டன்ட் நந்த கோபாலை கண்டிக்கும் காட்சி ,வீட்டின் அன்றாட காட்சிகள்,முள் குத்தி கொண்டு வீடு வரும் காட்சி,சின்ன மகன் முரளியின் மேல் கம்ப்ளைன்ட் வந்ததும் படிப்பை நிறுத்தி விட்டு தொழிலாளியை வேலைக்கு அனுப்பும் காட்சி,Retire ஆகும் காட்சி(லாஜிக் உதைத்தாலும்),மனைவியுடன் குடும்ப நிலை விவாதிக்கும் காட்சி, கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டில் மதிப்பிழக்கும் காட்சிகள், மகன்களை இயலாமை வாட்ட கண்டிக்கும் காட்சிகள், retire ஆனா பிறகு ஆபிஸ் வரும் காட்சி,அறுவை சிகிச்சைக்கும் புறப்படும் காட்சி எல்லாம் பார்த்து அனுபவிக்க வேண்டிய அற்புதம். பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை பார்த்திராத ஒரு சிவாஜி.(உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே)
ஒரு பிராமண குலத்து உயர் குடும்ப(கஷ்டப்பட்டு முன்னேறிய) பாத்திரத்தை அவ்வளவு perfection உடன் மற்ற பிராமண நடிகர்கள் கூட செய்ததில்லை. இதில் அவர் easy chair ,ஊஞ்சல் ஆகியவற்றை மிக கவனமாய் உபயோகித்து மூட், pasture , கொண்டு வருவார்.
இந்த படத்தில் inflexible preachy disciplinarian & ethical careerist ஆக வரும் பத்மநாபன் சாருக்கு பால்ய அரட்டை நண்பரகள் யாரும் இல்லாதது by design or default எப்படி இருந்த போதிலும் அருமையான விஷயம். அவருக்கு எல்லோரும் எதிர் நிலைதான். இரண்டே பேர் அவரிடம் நேர்மையாய் உள்ளவர்கள் அத்தை(நடு நிலை) அவரது சம்பந்தி justice ரங்கநாதன்(முழுக்க உடன்பாடு ஆனால் தள்ளி நின்று) . Open rebellions அவர் அக்கௌன்டன்ட் நந்த கோபால் ,அவரது மகன் முரளி,மருமகள் மாலா. தொழில் முறை நண்பர்கன் டாக்டர் ,சாஸ்திரிகள். மற்றபடி அவருடன் உடன் படாதவர்கள் மனைவி சாவித்திரி,மகன் ஸ்ரீதர்,மகள் அகிலா,ஆபிஸ் மேல் அதிகாரிகள், கீழ பணிபுரிவோர், அந்த தெரு ஆட்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் எதிர் வினை புரிவார்கள்.வேலையாள் முருகன் உட்பட.
இதில் முரளிக்கு காந்தியின் மகன் நிலைதான். சாவித்திரி மகன்களுக்கு சிறிது இடம் கொடுக்கிறாளா அல்லது மௌன எதிர் வினையா?மாலா தந்தை,மாமா இவர்களை சேர்த்து எதிரியாக பாவிக்கிறாள் என்பது பூடகம்.மகள் அகிலாவோ அளவு மீறிய கட்டுப்பாட்டுக்கு எதிர் வினை புரிகிறாள்.(வலுவாகவே) நந்தகோபால் நல்ல திறமை சாலி.(அல்லது பத்மநாபன் சிபாரிசு செய்வாரா).ஆனால் பத்மநாபனின் british cum brahmin work culture உடன் உடன் பட மறுத்ததால் ,கீழ் நிலை ஊழியர்கள் எதிரில் அவமதிக்க படுகிறான்.அவன் எதிர் வினை மிக சரியானது. மேலதிகாரிகளுக்கும் காலத்தோடு மாறாத அவரை extend பண்ணாமல் retire பண்ணுவது ஒரு எதிர்வினை.
காலத்தோட ஓட்ட ஒழுகாத பத்மநாபன் செயல். மேல் நிலை அடைந்தும் தன் பிடிவாத socio -cultural குணங்களை மட்டுமல்ல ,ஒரு விவசாய குடும்ப மனநிலையில் கூட்டு குடும்பம் பேணி, தனது inefficient finance planning (ஏதாவது எனக்கு தெரியாமல் சேத்து கீத்து வச்சுரிக்கியா-மனைவியிடம்) விளைத்த பிரச்சினையை ,ஒழுங்காக வாழக்கை நடத்தி வரும் மூத்த மகன் மேல் சுமத்தும் சராசரியாகவே உள்ளார்.சவடால் நிறைந்த prestige ,கவைக்குதவாமல் போனதில் ஆச்சர்யம் என்ன?
Retirement scene குறையாக சொல்வோரிடத்தில், பத்மநாபனின் வேலையிலோ,நேர்மையிலோ,விசுவாசத்திலோ குறை காண இயலாத அவர் மேலதிகாரம்,அவரை காலத்துக்கு ஒவ்வாதவர் என்ற காரணத்தால் ,சிறிய சலுகையும் காட்டாமல் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் பார்த்தால் அந்த காட்சியில் புது சுவை தெரியும்.அதனால் இந்த படம் protogonist கோணத்திலேயே பயணித்தாலும் பூடகமாய் புரிந்து கொள்ள நிறைய உண்டு.. ஒரு நேர்மையான திரை கதையமைப்பே அதுதானே?அதுவும் real life characters வைத்து பின்ன பட்ட இந்த படத்தில்?மற்றோருக்கு spacing கொடுக்காமல் உறவிலோ , அதிகாரத்திலோ ,imposing ஆக உள்ளோர் ,இந்த அடியை ,தான் பலவீன படும் பொது ,பிறரை சார்ந்து உள்ள போது பட்டுத்தானே ஆக வேண்டும்?
சிவாஜியின் நடிப்பு மூன்று வெவ்வேறு நிலைகளில் ஒரு தனித்து வேறுபட்ட கலாசார,சமூக ,பேச்சு வழக்கை கொண்டு இயங்கும். முற்பகுதி ( ஒய்வு பெரும் வரை) அவர் உச்சத்தில் இருந்து மற்றோருடன் ஆதிக்கம் செலுத்துவார். ஒரு டாமினன்ட்,assertive ,எள்ளலுடன் எல்லாவற்றையும் அணுகுவார். என்னை பொறுத்த வரை இந்த பகுதிதான் மிக மிக சிறந்தது. இந்த பகுதியில் அவர் பின்னால் பலவீனப்படப்போகும் போது இருக்க போகும் மனநிலையை உணர்த்துவது கண்ணாடி பீஸ் காலை கிழித்து அவர் பண்ணும் அதகளம். இரண்டாவது பகுதியில், எதிர்பாராத retirement அதிர்ச்சியில்,எப்படியாவது குடும்பத்தினர் உதவியுடன் சமாளிக்கலாம் அல்லது தன காலில் நிற்கலாம் என்று நம்பும் போது ,கண்ணெதிரேயே அவருடைய நிலை படி படியாக தாழும் நிலை. நிலைமையுடன் சமரசம் செய்ய முயன்று ,தோற்று ,புலம்பி ,சோர்வார். மூன்றாவது பகுதியில் சிறிது பொங்கி, நிலைமை படி படியாக சீரமையும் பகுதியில் ,வெளிப் படும் இயலாமை கோபம்,சாபம் கொடுக்கும் பாணி அறிவுரைகள் என்று போகும்.
வியட்நாம் வீடு சுந்தரத்தின் வசனங்கள் சிவாஜிக்கு அப்படி ஒரு தீனி போடும்.non -repetitive situation based punchlines பிரமாதமாக இருக்கும்.(சற்றே பாலச்சந்தர் பாணி!!??) பேய்க்கு வாழ்க்கை பட்டால் என்று சொல்லும் போது இவ்வளவு நாள் ஜாடை மாடையாய் புள்ளெல திட்ற மாதிரி வைவாள். இப்போ நேரிடையாய், you must stand on your own legs ,every action there is a reaction , position -possession , prestige -justice , இவ கெடுத்தா எல்லாத்தையும் என்ற லைன்கள் popular மட்டுமல்ல. அன்றாடம் நான் கேட்டவை . நான் பார்த்த இரண்டு பள்ளி கூட வாத்தியார்கள் , என் தாத்தா மற்றும் அவர் நண்பர்கள்,எனக்கு தெரிந்த ஒரு பிரபலம் எல்லோரும் பத்மநாப ஐயர் சாயல் கொண்டு இருந்ததால், NT நடிப்பின் வாழ்க்கைக்கு உள்ள reach என்னை அதிசயிக்க செய்யும்.( வாசன் அவர்கள் இந்த நாடகத்தை,படத்தை பார்த்து அதிசயித்து அழுதாராம்.சிவாஜியை மீறிய உலக நடிகரே இல்லை என்று சொன்னார் )
அவர் சம்பந்தி பிணங்கிய மகன்,மருமகளை வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியில் ஒடுங்கி படுத்திருப்பார். அந்த படுத்த நிலையில் எழுந்திருக்க முயன்று, சம்பந்தியை உபசரிக்க முயல்வார். இதற்கு ஈடான ஒரு நடிப்பை நான் எந்த உலக படத்திலும் கண்டதில்லை.
உன்கண்ணில் நீர் வழிந்தால் காட்சி சிவாஜி-பத்மினி ,எப்படி இணைந்து எல்லா வயதிலும் இந்த chemistry தர முடிந்தது என்பது ஆச்சர்யம்.(உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பிய இதயமல்லவா).முதல் stanza முழுவதும் பழைய இனிய பரவச நாட்களை நினைவு படுத்தும் போது easy சேரில் மடிந்து மடியில் மனைவியை கிடத்தி வருடுவார். இரண்டாவது stanza எல்லோராலும் கை விட பட்டு மனைவியால் அரவணைக்க படும் ஆதங்கம் ஊஞ்சலில் மார்பில் சாய்வார். கடைசி stanza விரக்தியில்,பிள்ளை போல் மடியில் படுத்து தேம்புவார். சிவாஜியின் நடிப்பும்,பத்மினி reaction எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காது. கொழந்தேள்லாம் ஒம மேல ஆசையாதாண்டி இருக்கா. ஒனக்கொண்ணுன்னா துடிச்சி போறா. என்னைத்தாண்டி வெறுக்கிரா என்ற புலம்பல் ஒவ்வொரு ஆணின் மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis வெளியீடு.அது நடிகர்திலகம் சொல்லும் விதம் மனதை கிண்டி காயப்படுத்தும். கடைசியில் என்ன பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிருப்பேன்,இவ கெடுத்தா எல்லாத்தையும் என்று மனைவியிடம் இயலாமை சீறல் ,நான் பல குடும்பங்களில் பார்த்த கேட்ட அனுபவம்.அவ்வளவு இயல்பாக தைக்கும்.
இந்த படத்துக்கு துன்பியல் முடிவு தேவையில்லாத ஒட்டாத ஒன்று. surprise twist என்று பார்த்தாலும் ,அந்த காலகட்டத்தில்,அவரை சாகடிக்காமல் விட்டால் தான் ரசிகர்களுக்கு surprise .
இந்த படத்துக்கு NT க்கு ஒத்திகை தேவையே இருந்திருக்காது. (பல முறை மேடையில் இதே ரோல்) .ஆனால் பத்மினி பிரமாதமாக காம்ப்ளிமென்ட் பண்ணி ,நடிப்புக்கு சரியான ஜோடி என்பதை உணர்த்தி விடுவார். (ஆனால் முரளி favourite ஜி.சகுந்தலாவின் மேடை நடிப்பு இதை விட பிரமாதம் என்போர் உண்டு). முக்கியமாய் தன அம்மாவிடம் ,தன மகன்களை குறை சொல்லிய பிரின்சிபாலை பொரிந்து கட்டும் இடம்.ஒரு தாயின் மனநிலையை அழகாக பிரதிபலிப்பார். எல்லோரும் நன்கு பண்ணியிருப்பார்கள்.(தங்கவேலு,நாகேஷ் உறுத்தல்.ஆனால் வியாபார தேவை போலும்).
மாதவன் ஒரு நல்ல creative இயக்குனர் என்று சொல்ல முடியா விட்டாலும், ஒரு நல்ல executive இயக்குனர். எல்லா genre படத்தையும் நன்கு பண்ணியுள்ளார்.(குறிப்பிட வியட்நாம் வீடு,ஞான ஒளி,பட்டிக்காடா பட்டணமா,தங்க பதக்கம்,பாட்டும் பரதமும், ராஜபார்ட் ரங்கதுரை).ஸ்ரீதர் உதவியாளராய் இருந்தவர். தேவராஜ்-மோகன் போன்ற நல்ல உதவியாளர்களை கொண்டவர்.
கே.வீ.மகாதேவன் இந்த படத்திற்கு பலம். எந்த படம் என்றாலும் நன்றாக பண்ண கூடியவர்.
இந்த மாதிரி பாவனைகள் அற்ற,நேரடியான, நேர்மையான கதை சொல்லும் படங்களை பார்ப்பதில் உள்ள சுவையே தனி. ஆனால் அதற்கு regress ஆகும் கலை மனம் வேண்டும் .பழைய ஓவியங்கள்,இலக்கியங்கள், கதைகள்,சரித்திரம் எல்லாம் ரசிக்க இந்த வகை தயாரிப்பு ரசிகனுக்கோ,வாசகனுக்கோ மிக அவசியம்.நாம் நம் இளைய தலைமுறையை சரியான aesthetic sense இல் வளர்ப்பதே இல்லை.
வியட்நாம் வீடு- நடிப்பில் ஒரு வடக்கு நோக்கி.வழிகாட்டி.(கமல் பாணியில் மலையாளத்தில்) .எந்த கமர்சியல் compromise இன்றி மாபெரும் வெற்றி பெற்ற NT படங்களில் ஒன்று.(அவர் ஸ்டார் ஆக இருந்தும் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.)
கெளரவம்-1973
கருணை கொலை,போர் குற்றம் என்பது போல சட்ட தர்மம் என்பதும் வினோத வழக்கு தொடராகவே எனக்கு படும்.கெளரவம் படத்தில் மேலெழுந்த வாரியாக இல்லாமல் பல அழுத்தமான விஷயங்கள் அருமையாக விவாதத்திற்குள்ளாகும் படி கதையுடன் பொருந்தி இடம் பெற்றுள்ளது இன்று வரை என்னை வியப்புக்குள்ளாக்கிறது .
ஒரு வக்கீலின் தார்மீக பொறுப்பு,தர்ம நியாயங்கள் எது வரை செல்லலாம்? அல்லது இருட்டறையில் தர்க்க வாதம் என்ற விளக்கை ஏற்றுவதுடன் அவன் பணி முடிகிறதா?அவன் கொண்ட தொழில் சட்ட அறிவையும்,தர்க்க வாத குயுக்தி திறமையை அடிப்படையாக கொண்டது மட்டுமே.மதம்,ஆன்மிகம் சார்ந்த தர்ம நியாயங்களுக்கு அவன் பொறுப்பல்ல என்றால் ,அறிஞர்கள் கூடி விவாதிக்கும் ஒரு பட்டி மன்றமாக,நீதிபதி ஒரு பட்டி மன்ற நடுவர் என்ற வகையில் சுருங்கி விடாதா?அதை மீறிய ஒரு தொழில் தர்மம் வக்கீலுக்கு உள்ளதா?
நீதிபதி ஸ்தானம் என்பது ஒருவன் விதியை தீர்மானிக்கும் கடவுளுக்கு சமமானது.அந்த பதவிக்கு அரசியல்,சிபாரிசு என்று நுழைந்து ,சட்ட வாயிலையே நீர்க்க செய்தால் ,தகுதியுள்ள திறமையாளன் என்ன மனநிலை அடைவான்?
தன் தொழில் திறமை மீது அசைக்க முடியாத இறுமாப்பு கொண்டவன் ,அதை நேர்வழி செருக்காக(Constructive Arrogance) மாற்றாமல்,தோல்வியை மரணத்துக்கு சமமாக்குவது எந்த வகை தன்னம்பிக்கையில் சேரும்?
தன்னை எடுத்து வளர்த்து போதித்து ஆளாக்கிய ஒரு தந்தை மற்றும் ஆசானுக்கு மகன் செலுத்த வேண்டிய கடன்,சமுதாய கடனுக்கு கீழே வைக்க பட வேண்டிய ஒன்றா?
திருந்தி வாழ நினைக்கும் ஒரு தடம் புரண்ட மனிதன்,தப்பித்த குற்றங்களுக்காக,நிரபராதி நிலையில் தவறான தண்டனையை பெறுதல் ஒரு கவிதை ஞாய தீர்வாகுமா?
ஒரு நேர்மையான கலை படத்துக்குரிய அம்சங்களுடன் வியாபார நுணுக்கங்களையும் நன்கு சேர்த்து செய்த படங்கள் வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்களாகும்.நடிகர்திலகம்-சுந்தரம் இணைவு நமக்களித்த கலை கொடைகளாகும்.
இரண்டிலுமே பிராமண பாத்திரங்களானாலும்,பிரமிக்க வைக்கும் வேறுபாடு கதாபாத்திர இயல்புகள்,பிரச்சினையின் தன்மைகள் இவற்றுக்கு மேலாய் நடிகர்திலகத்தின் கூடு விட்டு கூடு மாறும் பாத்திர அணுகல்,புரிதல் என்று விரியும்.
ரஜினிகாந்த் செல்வந்தன்.பத்மநாபன் நடுத்தரன்.ரஜினிகாந்த் ஒழுக்க நெறிகளை பற்றி கவலை படாத ,உயர் ரக வெற்றியில் மிதக்கும் ஒரு தொழில் தேர்ச்சி பெற்ற நாத்திகன்.பத்மநாபன் ஒழுக்க அறநெறியில் ஊறிய ஒரு உத்தியோக மேலாளன்.ரஜினி காந்திற்கு மகனுடன் பிணக்கு கர்வம் சம்பத்த பட்டது.பத்மனாபனுக்கோ மகன்/மகள் நெறி வழுவல் சம்பத்த பட்டது.
ரஜினிகாந்தின் பிரச்சினைகள் எதிர்பார்ப்பில் கட்ட பட்டது.பத்மநாபனின் பிரச்சினைகள் அடிப்படை தேவைகளில் கட்டமைக்க பட்டது.இருவரும் ஒரே இனத்தை சார்ந்தாலும் ,இரு வேறு துருவங்கள்.நடிகர்திலகத்தின் பாத்திர வார்ப்பில் இதனை விரிவாக ஆராய்வோம்.இப்போது சிறிதே கதை களம் புகுவோம்.
ரஜினிகாந்த்(வெற்றியின் மிதப்பில் உள்ள செல்வந்த கிரிமினல் லாயர்,உல்லாச விரும்பி ),மனைவி செல்லா,வளர்ப்பு மகன் கண்ணன்(குலநெறிமுரைகளில் திளைக்கும் அம்மா பிள்ளை .பெரியப்பா பெரியம்மாவை உலகமாய் கொண்டு வளர்ந்து வரும் லாயர்) என்று பிரச்சினையே புகாத குடும்பம்.
ரஜினிகாந்த் ,தனக்குரிய அங்கீகாரம்(ஜட்ஜ் பதவி)வழங்க படாததால் கோபமுற்று ,குற்றவாளி என்று உறுதி செய்ய பட்டு தண்டனை விளிம்பில் நிற்போரை தன் வாத திறமையால் விடுவிக்கும் முறையில்,இந்த முறையற்ற அமைக்கெதிரான கோபத்தை வஞ்சமாக தீர்க்கும் முயற்சியில் கிடைத்த கருவி மோகன்தாஸ்.
மோகன்தாஸ் என்பவன் ஒரு பணக்கார மைனெர் பெண்ணை கடத்தி ,அவள் வாழ்வை சீரழித்து ,அவள் மரணத்திற்கு காரணமானவன்.ஆனாலும் ரஜினிகாந்தின் வாத திறமையால் விடுதலை பெற்று ,திருந்தி ,தான் காதலிக்கும் நடன பெண்ணை மணந்து வாழ திட்டமிடும் போது,எதிர்பாராத அவளின் தற்செயல் மரணத்திற்கு குற்றம் சாட்ட பட்டு தண்டிக்க படுபவன்.
மற்றோரின் பார்வைக்கு அதர்மமாக படும் ரஜினிகாந்த் செயலை எதிர்க்க சக வக்கீல் மற்றும் நண்பர்கள் கண்ணனை பப்ளிக் ப்ராசிகியூட்டர் ஆக்கி ,ரஜினிகாந்திற்கு எதிராக தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டுகிறார்கள்.கண்ணன் பெரியப்பா மனதை மாற்ற இயலாமல்,அவருக்கெதிராக நீதி மன்றத்தில் நிற்க வேண்டிய சூழலில் ,வீட்டை விட்டு வெளியேற்ற பட்டு ,வழக்கில் வென்று,பெரியப்பாவை நிரந்தரமாக தோற்கிறான்.
நடிகர்திலகத்தால் மட்டுமே இந்த பாத்திரத்தை பண்ண முடியும் என்ற வகையே இதில் வரும் ரஜினிகாந்த் பாத்திரம்.prestige பத்மநாபனுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நாராயணசாமி போல இதில் வரும் ரஜினிகாந்துக்கு டி.வீ.எஸ்.கிருஷ்ணா என்ற தொழிலதிபர்,கோவிந்த் சுவாமிநாதன் என்ற வக்கீல்,மற்றும் மோகன் ராமின் தந்தை வீ.பீ ராமன் என்ற மூவர் கூட்டணியில் இந்த பாத்திரத்தை வடிவமைத்தார் நடிகர்திலகம்.
குணசித்திர ஒருங்கமைவு,பேசும் பாணி,சிறு சிறு பாத்திர இயல்புகள்,ஸ்டைல்,பாமர மக்களையும் ,படித்தவர்களையும் ஒருங்கே ஈர்த்த பாத்திரம். ஆங்கில வசனங்கள் பாத்திர படைப்புக்கேற்ப அள்ளி தெறிக்க பட்டிருந்தாலும் ,பீ,சி சென்டர்களையும் வெற்றிகரமாக ஈர்த்த பெருமை இந்த படத்துக்குண்டு.
இதில் ரஜினிகாந்த் பாத்திரம், உலவும் ரோல் மாடல்களை கொண்டு சிவாஜியின் கற்பனை திறனால் meisner முறை நடிப்பில் ,ஆஸ்கார் வைல்ட் பாணி சுதந்திர கற்பனை வளம் கொண்ட செழுமையான ஒன்று.
கண்ணன் பாத்திரமோ ,இயல்பு பாணி கொண்ட stanislavsky கூறுகள் அதிகம் கொண்டது.எப்போதுமே ஒரு பாத்திரத்தை ஓங்க வைக்க நடிகர்திலகம் கையாளும் அற்புத உத்தி இதுவாகும்.
An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .
Doing justice to the character - என்பதைப் பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். அதற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. மேம்போக்கான அபிப்ராயம் உள்ளவர்களுக்கு அதைப் புரிய வைக்க, அணுக இலகுவாக்க, பார்வை விரிவடைய சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம்.
அதே சமயத்தில், இதைத் தாண்டி 'இந்த நடிப்பை வெளிப்படுத்த வாகாக ஒரு பாத்திரம் தேவை' - என்ற வகையையும் நாம் சொல்லவேண்டும். End-product என்று பார்த்தால் 'பாத்திரத்துக்குக் கச்சிதமான நடிப்பு' என்ற சட்டகத்திலிருந்து பிரித்து சொல்லமுடியாதபடிக்கு இருக்கலாம். ஆனால் இந்த பாத்திரமே நடிப்புக்காக வார்க்கப்பட்டது என்பதை உணர்ந்து சுவைக்கும் துய்ப்பே தனி!
நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.
Strasberg&Stanislavsky focused on the Sense Memory technique using events in one’s past as a way of emotionalizing, Meisner developed his technique using Stanislavski’s revised method. Rather than delving exclusively into one’s past memories as a source of emotion, one could more effectively summon up the character’s thoughts and feelings through the concentrated use of the imagination and the belief in the given circumstances of the text. Meisner defined acting as doing things truthfully under imaginary circumstances and his technique is still known for its depth, reliability and balanced approach.
நாம் ஏற்கெனெவே நடிப்பு பள்ளிகளை விரிவாக இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடரில் அலசி விட்டதால் இங்கு கோடி காட்டி விட்டு , நடிகர்திலகத்தின் பாத்திர அணுகலை,அது சார்ந்த என்னுடைய ரசனை துயிப்பை இனி விரிவாக அலசுவேன்.
ரஜினிகாந்த என்ற கதாபாத்திரத்தை புரிந்தால்,நடிகர்திலகம் எந்த அளவு கவனம் செலுத்தி அதனை செதுக்கியுள்ளார் என்று புரிந்து கொள்ளலாம்.
ரஜினி காந்த் எந்த ஒரு தொடர் வெற்றி பெற்ற திறமைசாலிகளையும் போல ,கடவுளை நம்பியாக வேண்டிய அவசியமில்லாதவர். சில நடத்தை முறைகளால் ,மேலை நாகரிகமானவர் என்று காட்டி கொண்டாலும் ,கீறி பார்த்தால் அக்ரகாரம் எட்டி பார்ப்பதை புன் முறுவலுடன் தொடரலாம்.
பல சுவாரஸ்யங்கள் பட திரைகதையிலேயே உண்டு.குடிக்க ரஷ்யன் வோட்கா தேடும் மனிதன் ,கட்டி கொள்வதோ கடமுடா பட்டி பக்தையை.
மகன் அம்மா புள்ளை என்று கேலி செய்தாலும், மகனிடம் எதிர்பார்ப்பது ,கோடு தாண்டா conservative mentality யைத்தான்.மகன் காதலிக்கும் போது அவர் அடையும் அதிர்ச்சி, அடக்கி வைக்க முற்படும் அதிகாரம்,தன் கருத்தை எதிர்க்கவே உரிமையில்லை என்று அவர் பண்ணும் ஆகத்தியம் .அதே போல தன் பெருமை பற்றி மனைவியிடம் செல்லமாக அலசும் சற்றே அக்ரகார நேர்த்தி. முதல் தோல்வி(justice post )அவர் ரத்தத்தை சூடாக்கி ,எல்லை மீறி தன் திறமையை நிலை நாட்டுவதில் முடிந்தாலும் ,தாங்க முடியாத எதிர்பார்ப்பு நிறைந்த வர போகும் தோல்வி ,திலகம் வேண்டும் அளவு sentiment ஆக்கி விடுவது,மதில் மேல் பூனையான விளிம்பு நிலை மனிதரை குறிக்கிறது.
கண்ணனிடமோ ,குழப்பமே இல்லாத confimist .ஆனால் பெரியம்மாவை
புரிந்த அளவு பெரியப்பாவை புரியாதவனோ என்ற குழப்பம் அவ்வப்போது.ஆனால் தர்மம்-அதர்ம போரில் இழு படுவது ஒரு வித moral preaching தந்த குழப்ப நிலையே.
இப்போது படத்தை பார்த்தால் புரியும் ,எத்தனை ஆழமாக நடிகர்திலகத்தின் புரிதல் உள்ளது என்பது.ஒரு வக்கீலின் அதீத உடல் மொழி (கர்வம் நிறைந்த தன்னம்பிக்கை. ,தான் நினைப்பது சொல்வது மட்டுமே சரி என்று உணர்த்த அலையும் தொழில் சார்ந்த aggression )முதல்,அழுத்தி பேசி மற்றவரை ஆக்ரமிக்கும் வசன முறை.கிண்டல்,கேலி,துச்சம்,அகந்தை,என்ற எடுத்தெறிதல் என்று அவர் பண்ணும் அதகளம்,இந்த பாத்திரங்களுக்குதானே இவர் பிறந்து வந்தார் என்ற மலைப்பையே அளிக்கும்.
ரஜனி காந்த் பாத்திரத்தை விட்டு விட்டு கண்ணனை மட்டும் பார்த்தாலும்,ஒரு சாத்திர முறையில்,சட்டதிட்டங்களுடன் வளர்க்க பட்ட ஒரு ஆசார குல பிள்ளையை அவர் நடித்து காட்டும் நேர்த்தி.அப்பப்பா....
கவுரவத்தில் எதை எடுப்பது ,எதை விடுவது?
ரஜனிகாந்த் ,கண்ணனிடமும்,செல்லாவிடமும் பேசும் ஆத்திக அடாவடி காட்சியா,கண்ணன் காதல் தெரிந்து கண்டிக்கும் காட்சியா,செந்தாமரையிடம் பேசி விட்டு உன் friend மொகத்திலே ஈயாடல பாத்தொயோ காட்சியா,மைலாபுர்லே எல்லாரும் என்னடி பேசிக்கிறா என்ற வம்பு காட்சியா, மோகனதாசிடம் போடா சொல்லும் அலட்சிய காட்சியா,monotony தவிர்க்க வீட்டிலேயே அமைக்க பட்ட கோர்ட் காட்சியா,கண்ணனிடம் confront பண்ணும் காட்சியா(curt ),தன்னுடைய பழைய கோட் வாங்க வரும் கண்ணனிடம் அவர் மாடியிலிருந்து பேசும் காட்சியா,கடைசியில் நம்பிக்கை தளரும் காட்சிகளா என்று படம் முழுதும் விருந்து.
நடிகர்திலகம் படங்களில் நான் எப்போதுமே முதல் பத்துகளில் நடிப்பு,படம் இரண்டுக்குமாக நான் தேர்ந்தெடுக்கும் அதிசயம்.
Last edited by Gopal.s; 27th June 2014 at 09:45 PM.
-
Post Thanks / Like - 3 Thanks, 2 Likes
-
27th June 2014 09:30 PM
# ADS
Circuit advertisement
-
28th June 2014, 02:24 AM
#3592
Junior Member
Newbie Hubber
தெய்வ மகன்- 1969
பலர் ரசித்த காட்சிகளில் என்றுமே முன்னணியில் நிற்கும் மூன்று சிவாஜி தோன்றும் காட்சியை ரசித்த கோடி கணக்கானோருக்கு,தாங்கள் ரசித்தது மூன்று வெவ்வேறு உலக நடிப்பு கல்லூரி பாணியில் அந்த உலத்திலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நடிகன் நடித்த ஒப்பில்லாத காட்சிதான் ,என்பது புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. இப்போது நாம் அலச போவது அந்த படத்தை பற்றி அல்ல.
நான் ஏற்கெனவே விளக்கிய மூன்று முக்கிய நடிப்பு பள்ளி/கோட்பாடுகளான method Acting school ,Chekhov school ,Oscar wilde concept என்ற மூன்றையும்தான் மூன்று பாத்திரங்களாக்கி அந்த மேதை மூன்று பாணிகளையும் மோத விட்டார். வேறு வேறு நடிகர்கள் அந்த மூன்று பாத்திரங்களில் மோதியிருந்தால், ஒவ்வொரு நடிகனுக்கும் உள்ள திறமையளவின் ஏற்ற தாழ்வால்,நமக்கு முடிவு தெரியாமலே போயிருக்கும். ஒரே நடிகர்,சம திறமை,சம அக்கறையுடன் மூன்று பாத்திரங்களையும் வார்த்ததால் ,போட்டிக்கு ஒரு மாதிரி தீர்ப்பு வந்தது. இரண்டு சம வலுவுள்ள சங்கர்(அப்பா), கண்ணன்(மூத்த மகன்) பத்திரங்களை method acting (அப்பா),Chekhov (மூத்த மகன்) முறைகளிலும், மிக casual ஆக உருவான light ஆன விஜய்(இளைய மகன்) பாத்திரத்தை oscar Wilde பாணியில் சுதந்திர கற்பனை திறத்துடன் கையாண்டிருந்தார்.
இங்கேதான் நமக்கு ஒரு பாடமே நடத்த பட்டுள்ளது. உலக திறமையாளனான ஒரு versatile நடிகன்,தன் கற்பனை வளத்தை பயன் படுத்தி,சராசரி வாழ்க்கையில் பார்க்கவே முடியாத ஒரு பாத்திரத்தை தன் அழகுணர்ச்சியில் வடித்தால்?
எந்த கொம்பனி டம் வேண்டுமானாலும் இன்று கூட கேளுங்கள். தெய்வமகனில் உன்னை கவர்ந்த பாத்திரம் எதுவென்று? நூற்றுக்கு நூறு பேரின் விடை விஜய்தான்.இப்போது அந்த பள்ளிகளுக்கு போட்டி வைத்தால், சமமான பாத்திர வார்ப்பாக இல்லாவிடினும், Method Acting , Chekhov என்ற வலுவான பள்ளிகளை புறம் தள்ளி,Oscar Wilde சுதந்திர கற்பனை கோட்பாட்டில் ஜெயித்த அந்த ஒப்பற்ற கலைஞன்,மற்ற எல்லோரையும் விட எங்கு வேறு பட்டு நின்றார் என்பது உங்களுக்கு புரிந்திருக்குமே?இருந்தாலும் விளக்கத்தான் போகிறேன்,இந்த படங்களின் பாத்திரங்களையே பாடமாக்கி.
எந்த பள்ளிகளையும் முறையாக கல்லாமல், அந்தந்த பாத்திரங்களுக்கு , இன்னின்ன முறையில்தான் வடிவமைக்க வேண்டும், இந்த பாணியில்தான் நடிக்க வேண்டும் என்று அந்த மேதைக்கு எப்படி தெரிந்தது? பிறவி மேதை என்ற பிறகு இந்த ஆராய்ச்சியே தேவையில்லை.
தெய்வமகன் சங்கர், கண்ணன் பாத்திரங்களை எடுத்து கொள்வோம்.இரண்டுமே, தன் முகத்தின் அழகு கெட்டு ,விகாரமாகி, அதனால் மற்றவர்களின் கேலிக்கும், சீண்டலுக்கும் பாத்திரமாகி , inferiority complex இனால் அவதி படும் பாத்திரங்களே. தந்தை-மகன் என்ற உறவு முறை வேறு. நடிகர்திலகம் நினைத்திருந்தால், இரண்டையுமே, ஒரே பாணியில் வடிவமைத்து சில நுட்பங்களை மட்டுமே மாற்றியிருக்கலாம். ஆனால் பாத்திரங்களை அவர் பார்த்த முறையே வேறு.
சங்கர், சிறு வயதில் அவமானங்களை சுமந்து அவதி பட்டிருந்தாலும் ,அது அவன் வாழ்வில் ஒரு பகுதியே. Trauma என்ற சொல்லோடு கடந்து போகும். அவன் வாழ்வில், அப்பா,அம்மா, அன்பான மனைவி,பிள்ளை,நண்பர்கள் மற்றும் கஷ்ட பட்டு முன்னேறி அடைந்த தொழில் செல்வாக்கு எல்லாமே, ப்ரம்மாண்டமாகி அவன் குறையை சிறிதாக்குகிறது.தன் குறையை தினம் தினம் ஞாபக படுத்தி சித்திரவதை படுத்த வாய்ப்புள்ள ஒருவனை ,பிறவியிலேயே அழிக்க சொன்னது தனக்காக கூட இருக்கலாம்.
ஆனால் கண்ணனோ, அனாதை விடுதியில், அனுதினமும் குறையை மட்டுமே பார்க்கும் சக மனிதர்களுடன் கூட்டு புழுவாக வாழ்பவன்.மொழியறிவு, சிறிது இசை, சிறிது பாபாவின் அன்பு இவை தவிர வேறு வெளிச்சமே இல்லாத வாழ்க்கை. Herzog எடுத்த ஒரு ஜெர்மன் படத்தில், இருபது வயது வரை மோசமான நிலையில், captivity யில் இருந்த ஒரு மனிதனை, திடீரென்று ஒரு நகரத்தில் விட்டு விட்டு போய் விடுவார்கள்.(உண்மை கதை).கண்ணன் நிலை கிட்ட தட்ட அப்படித்தான்.டாக்டர் வீட்டிலும் இருட்டறை சிறை வாழ்வே. அப்போது கண்ணனின் வாழ்வே அவன் முகதழும்பு, அவமானம், சார்ந்தே சிறுது இசையுடன் பயணிக்கிறது. உள்ள போராட்டம் சங்கரை விட கண்ணனுக்கு ஏராளம்.
அதனால் சங்கருக்கு, inferiority காம்ப்ளெக்ஸ் கொண்ட ஒரு normal மனிதனை சித்தரிக்கும் method Acting .ஆனால் கண்ணனுக்கோ, முழுதும் ஆதி மனிதனின் impulsive basic instincts மட்டுமே தலை தூக்கும் பதுங்குதல்,பாய்தல்,அன்புக்கு உருகுதல் (இசை) என்ற அடிப்படை உணர்வு மட்டுமே கொண்ட,தந்தையின் தாக்கம் சிறிதளவே கொண்ட ,உளவியல் தாக்கம் நிறைந்த chekhov பாணி.
விஜய்க்கு, இப்படி எந்த சிக்கலும் இல்லாததால், சாதாரணமாக ஓயவெடுத்திருக்கலாம். ஆனால் மேதைகளுக்கு ஏது ஓய்வு? P _R சிலாகித்த அற்புத ராஜின் மேம்பட்ட பிரதியாக சிறிதே effeminacy கலந்த ஒரு spoilt lover boy .ஆக realism பாணியில் இன்றி, முழுக்க synthetic ஆக,ஒரு கலவையான கற்பனை கலந்த அழகுணர்ச்சியில் வடிவமைக்க பட்டு....
இப்போது கண்ணனை மிக நுணுக்கமாக ஆராய்வோம். ஆஸ்கார் பரிசு பெற்ற Robert de Niro போன்ற நடிகர்கள்,தங்கள் நடிப்பில் இயற்கையின் ,மிருகங்களின் சாயலில் தங்கள் பாத்திரங்களை வடிவமைத்து வெற்றி கரமாக தங்களது பாத்திரங்களை கையாண்டுள்ளனர்.
"He based the movement of his character Travis Bickle in Taxi Driver (1976) on that of a crab. He thought the character was indirect and tended to shift from side to side."
நடிகர்திலகம் 1954 இலிருந்தே இதனை கையாண்டுள்ளார். நடைகளில், சிரிப்பில்,உறுமலில், mannerism என்று சொல்லப்படும் mood related gesture இல்.பின்னாட்களில் பாலா பிதாமகன் பாத்திரத்தில் இதனை புகுத்தி வெற்றி கண்டார்.தெய்வ மகன் கண்ணன் , body language சில சமயம், மானின் மருளல், அடிபட்ட வேங்கையின் சீற்றம்,எலியின் survival ஒடுக்கம் ,நாயின் உருகும் அன்பு என்று. இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்றால் , திருடன் பட்டம் சுமந்து ,பெண்ணுடன் அவள் hand bag திருப்பி கொடுக்கும் காட்சி, ஜெயலலிதாவிடம் தன்னை மறைத்து ஒடுக்கும் காட்சி, மற்ற படி அவர் hyper ecstacy ,( அ ) extreme emotions like anger நிறைந்த காட்சிகள்,ஜெயலலிதா தன் காதலை வெளியிட்டதும் காட்டும் சுய வெறுப்பு காட்சிகளில் கவனித்து பாருங்கள்.(கர்ணனின் உறுமல் ,சாமுண்டியின் சீற்றம் obvious )
டாக்டர் தன்னை நிலை கண்ணாடியில் காட்டும் போது அலட்சியம் செய்யும் விகார முகம் , ஒரு பெண் தன்னை காதலிப்பதாய் கற்பனை செய்து (ஒதெல்லோ பற்றி சொன்னதும் டாக்டரின் கையை உடையும் அளவு இறுக்கும் வெறி கலந்த எதிர்பார்ப்பு),அது தன கற்பனையே என்றவுடன் சுய வெறுப்பின் உச்சமாய் கண்ணாடியில் தன் உருவத்தை தானே காறி உமிழ்ந்து, கண்ணாடியை உடைக்கும் மூர்க்க சுய வெறுப்பு.அந்த காட்சியில் அவர் காட்டும் subtle change in tempo and body position , தன் வீட்டுக்கு வந்து தாய்,தந்தை, தம்பியை கண்டு காட்டும் உருக்கம் கலந்த, euphoric ecstacy, டாக்டரிடம் அதை கொட்டி விட்டு, பசித்து சோர்ந்த நாய் குட்டி போல் மடி மேல் சோரும் கட்டம்.
கண்ணனை, விஜய் வெல்வதாவது என்று தோன்றுகிறதல்லவா?
சங்கர் பாத்திரத்தை method acting பாணியில் அந்த மேதை முடிவு செய்ததற்கு, இரண்டு காரணங்கள். முதல் காரணம் , குறையை பெரிதாக நினைக்க வேண்டாத நிலையில் நிகழ்காலத்தில் இருப்பவன்.அவன் இறந்த காலத்தை நினைக்க வேண்டிய மூன்று இடங்கள் முதல் பிள்ளை பிறந்த போது, மூத்த பிள்ளை உயிரோடு இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி கலந்த குற்றவுணர்ச்சி. டாக்டரை சந்திக்கும் போது. இந்த கட்டங்கள் எல்லாமே sense memory யில் அமைய வேண்டியவை. இரண்டாவது காரணம், method acting முறையில் மற்ற நடிகர்களின் performance தூக்கலாகும். கண்ணனும் விஜய்யும் ஓங்கி தெரிய ,சங்கரின் method acting முறையில் அமைந்த பாணி யாலும், இந்த முறையில் scene stealing என்பது முடியாதென்பதும் ஒரு காரணம்.(சமீபத்தில் Lincoln படத்தில் Daniel Day Lewis இதே முறையில் method Acting செய்திருக்கிறார்.now now now என்று சொல்லும் போது சங்கர் ,ராஜுவிடம் you you சொல்லும் அதே gesture )
முதல் காட்சியில்,புற முதுகு காட்டியே , குழந்தை பிறந்த மகிழ்ச்சிக்கு expansive hand ,gesture ,ராஜு சமாதான படுத்த வரும் போது elbowing gesture ...அடடா, எத்தனை மேதைமை!!! ராஜுவுடன், தான் சிறு வயது trauma வை விவரித்து, குழந்தையை கொன்று விட சொல்லி ,குற்ற உணர்ச்சியேயின்றி உலர்ந்த மனதோடு ஆணையிடுவது போல், சிறு வயதின் உணர்ச்சியின் பால் பட்டு maturity இன்றி பேசும் விதம், ஒரு method acting ஸ்கூலில் பாடமாக வைக்க வேண்டும்.sense memory அடிப்படையில் நடிக்க விரும்புவோருக்கு பாடம்.
விஜய் உடன் அவர் கண்டிப்பு காட்ட நினைத்து இளகி சிரிப்பது, மனைவியின் வற்புறுத்தல் பேரில் இணங்குவது போல் தன கனிவை,செல்லத்தை மறைப்பது, மனைவியிடன் காட்டும் romance கலந்த நன்றியுணர்வுடன் கூடிய அன்பு இவை பார்த்து அனுபவிக்க வேண்டியவை.
டாக்டருடன் பல வருடங்களுக்கு பிறகான சந்திப்பு காட்சி ஒரு கல்வெட்டு. தயக்கம் கலந்த anxiety உடன் நுழைவது ஓர கண்ணால் சிறி து தயக்கம்,சங்கடம், curiousity கலந்த eye follow up என்று ஆரம்பித்து, formal ஆக தொடங்கி,கேட்க விரும்புவதை கேட்டு, நட்பை re -assert செய்து விட்டு,முடிவில் சிதார் ஓசை கேட்டு அலையும் மனதுடன், restless ஆக ,மகனை பார்க்க விழைந்து ,அரை மனுதுடன் ,திரும்பி செல்லும் கட்டம்.சுந்தர்ராஜன்,சிவாஜி இருவருமே உணர்ந்து, அருமையாய் நிமிர்த் தியிருப்பார்கள் . இந்த காட்சி எதை உரைக்க வேண்டுமோ, அதை உரைத்து , எதை உயிர்ப்பிக்க வேண்டுமோ அதை உயிர்ப்பித்து, எதை அடைய வேண்டுமோ அதை அடைகிறது. perfect sub text for method acting .
கண்ணன் சந்திக்க வரும் காட்சியில், உணர்வுகளை காட்டும் அளவே காட்டி, மிகை குற்றவுணர்வு இன்றி, ஆனால் கண்ணன் அநாதையாக்க பட்டு வாழ்ந்ததன் வலிகளை மட்டுமே, ,ஒரு தந்தையாக empathise செய்வார். இந்த காட்சி ,இன்றளவும் பேச படுவதற்கு காரணமே,மற்றவர்களை தூக்கி காண்பிக்கும் அளவு perform செய்த சங்கரே.
காணாமல் போன விஜய் பற்றி வரும் டெலிபோன் காட்சியில் , பதற்றம் ,எச்சரிக்கை, பதைபதைப்பு,மகனுக்கு எதுவும் நேர கூடாது என்று அவர் விடும் இயலாமை கலந்த வெற்று மிரட்டல் என்று ,ஒரு சராசரி காட்சியில் கூட நடிப்பு கொடி பறக்கும்.
ஆயிற்று. இத்தனை மேம்பட்ட கண்ணன் பாத்திரத்தை,சங்கர் பத்திரத்தை, ஒரு மேதை தன் வாழ்நாளின் one of the best என்று சொல்லும் அளவு பண்ணி விட்ட பிறகு, to lighten the proceedings என்று filler பாத்திரமான விஜய் என்ன செய்து ,இவர்களை சமாளிக்க போகிறது?
விஜய் என்னதான் செய்யவில்லை?ஒரு உலகத்திலேயே சிறந்த மகா கலைஞன், தன் சுதந்திர கற்பனைகளோடு, எந்த realism சார்ந்த விஷயங்களோடும் சமரசம் செய்து கொள்ளாமல், முழுதும் தன் திறமை மற்றும் creativity ஐ நம்பி மட்டும் ஒரு பாத்திரத்தை conceptualise செய்து execute செய்தால்? தங்கத்தை போன்று ஜொலித்தன நெல் மணிகள் என்று கவிஞன் எழுதும் சுதந்திரத்தால் தான் கலைகள் ஜீவிக்கின்றன. மொக்கை தனமாக, நெல் மணிகள் நெல் போல தானே இருக்க வேண்டும் என்போருக்கு, கலைகளை ரசிக்கும் பக்குவமோ,அறிவோ இல்லை என்று பொருள். சரோஜா தேவியின் புத்தகம் கூட realism தான். அதை படிப்பதும் சுலபம். ஆனால் ஒரு காளிதாசன் ,கம்பனை பயில பயிற்சி தேவை. அல்லது என் போல ஒரு பொழிப்புரையாளன் தேவை.அப்படித்தான் அந்த உலக கலைஞனின் பாத்திர வார்ப்புகளும்.
விஜய் முதல் shot இலேயே ஈர்த்து விடுகிறான். பிறகு ஈர்க்க பட்டவர்களை தன்னிடையே தக்க வைக்கிறான். scene stealing செய்கிறான்.Antics செய்கிறான்.. பக்கத்திலிருக்கும் ,காமெடியன் ஒருவனை அவன் விளையாட்டிலேயே ஜெயிக்கிறான்.(beating bull in its game ). வேறு படுத்தி கொள்கிறான், நடை ,உடை,பாவனைகளில்.முக்கியமாய் இது வரை காணாத புதுமை ஆக்குகிறான். அதே நேரத்தில் ஒரு பாத்திரமாகவும் establish செய்கிறான்.ஜனங்களை ஆசுவாச படுத்துகிறான்.(heavy emotion ridden proceeding இல் இருந்து) .இன்னும் நிறைய காட்சிகளில் வர மாட்டானா என்று ஏங்கவே வைத்து விடுகிறான்.
கூர்ந்து கவனித்தால் , விஜய் much more than a spoilt mother 's virgin boy and a rich brat . பணத்தின் சௌகரியங்கள் கிடைத்தும், ஒரு identity crisis and false start உள்ளவன். vested interest கொண்ட நண்பர்களால் சூழ பட்டவன். அம்மா, அப்பாவின் அதீத அரவணைப்பில் இருந்தாலும், முழு அப்பாவியும் அல்ல.அதீத பாதுகாப்பே ,அவன் ஆபத்துகளை உணர முடியாமல் செய்து விடுகிறது.தன்னால் தன்னை காத்து கொள்ள முடியும் என்ற அசட்டு நம்பிக்கை வேறு.ஆனால் விஜய்யை புன்னகையோடு தொடர முடியும்.
நண்பன் என்று சூழ்ந்தவனின் அதீத gimmick ஐ எள்ளுகிறான். (அதான் நான் வரை வரைக்கும் கயிறு கூட மாட்டிக்காமே???), விஜய் உனக்குன்னு கேளு என்றதும், இல்லை,இல்லை உனக்குன்னு கேட்கிறேன், அப்பத்தான் குகுளுன்னு என் daddy கொடுக்கும் என்று சொல்லும் அழகு.(நாகேஷ் வேடிக்கை தான் பார்ப்பார் என்ன பண்ணி புகுரலாம் என்று. ம்ஹும் chance இல்லவே இல்லை). மழலையான ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்பிலிருந்து , சுருட்டி கொண்டு சோம்பேறி கோழி தூக்கம் போடுவதாகட்டும்,அம்மா வை ice வைப்பதாகட்டும் (first class Tamil Picture கூட்டிட்டு போறேன் )உன் மேலதான் daddy க்கு எவ்ளோ லவ்வு என்று லொள் விடுவது என்று. (பின்னாடி மௌன ராகம் கார்த்திக் character இதிலிருந்து inspire ஆனதே.சந்திரமௌலி போன்ற antics .அந்த character உம் ஈர்ப்பு கொண்ட synthetic கற்பனையே ).
தன் ரூமில் யாரோ இருப்பதை தெரிந்து, அப்பா அம்மா இல்லை என்று உறுதியானதும், thief என்று மிரட்டல் ,பயம் கலந்த மெல்லிய மிரட்டல், anxiety யுடன் தேய்ந்த குரலில் மூன்றாவது thief என்று விஜய் என்னை முழுவதும் ஆட்கொண்ட பிறகு, சங்கராவது,
கண்ணனாவது?
தன்னிடம் வீட்டிலிருக்கும் கண்ணனை பற்றி பேசும் நிம்மியிடம், அவள் மடியில் உறங்குவது போல் disinterest காட்டி பின் சகிப்பு தன்மை இருக்கிறது. யாரோ புல்புல்தாரா வாசிப்பான் அவன் ரூமுக்கு போறேன் என்று என் கிட்டேயே என்று cute ஆக காதலன் possessiveness குழந்தை தனமாக வெளியிடும் அழகு.(முந்திய வருடம் 80 வயது அப்பரான மனிதன், அடுத்த வருடம் retire ஆக போகும் ஒரு பிராமணன், 20 வயது lover boy ஆக எல்லோர் மனதையும் அள்ளும் அழகு ). அப்பா அமாவிடம் அவர் காதலியை அறிமுக படுத்தும் அழகே அழகு.(certainly not .அதனால்தான் மம்மியை கட்டிக்கிட்டீங்களா, இது செய்யனும்....போன்ற one liner ).
அது மட்டுமல்ல, விஜய்யின் entry தான் அந்த மூன்று சிவாஜி தோன்றும் காட்சிக்கே, epic cult status கொடுக்கிறது. தன் தம்பியே ,தன் பெற்றோர்களுக்கு போதும் என்று கண்ணனை convince செய்து விடுகிறது. அதற்கு முன்னாள் நடந்த அத்தனை உணர்ச்சி மிகு encounter செய்யாத அதிசயம். பார்வையாளர்களும் convince ஆகி விடுகிறோம்.(கண்ணன் cheque ஐ நிராகரிக்கும் நிர்தாட்சண்யம் , விஜய் அதை உரிமை நிறைந்த ஆவலுடன் எடுக்கும் அழகு-- இந்த காட்சியையே அர்த்த படுத்தி விடவில்லையா)
கடைசி காட்சியிலும், அவ்வளவு பெரிய வில்லன் கும்பலிடம், அசட்டு மிரட்டலுடன் போராட்டம். டே... head லியா அடிச்சே என்று மயங்கி சாய்வது.
எனக்கு தெரிந்து character identity establish செய்து சாதாரண one liners ஐ அதீத ரசிக்கும் காமெடி ஆக்கிய அதிசயம் இந்த படத்தில்தான் நிகழ்ந்தது. ஒரு சாதாரண வலுவில்லாத பாத்திர படைப்பு, உலகத்திலேயே அதிக வலுவுள்ள நடிகனின் கற்பனையால் மட்டும் அமர துவம் பெற்று, அவரே நடித்த வலுவுள்ள மற்ற பாத்திரங்களை இரண்டு, மூன்று என்று வரிசை படுத்தும் உலக அதிசயம் நிகழ்ந்த ஒரே காரணம்---தெய்வ மகன் விஜய்.
Last edited by Gopal.s; 28th June 2014 at 02:32 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
28th June 2014, 01:29 PM
#3593
Junior Member
Veteran Hubber
dear Gopal Sir. Many thanks for considering my request to present in your way of flamboyance, the centre core movies of NT like VV, G and DM.
திரைப்படத் திறனாய்வுத் திலகம் கோபால் ஸாரின் இராமபிரான் திருப்பாதம் பட்ட அகலிகைக்கல்களாக அவர்தம் தெளிந்த நீரோடை நடையில் நடிகர்திலகம் நடிப்பின் உச்சங்களைத் தொட்ட திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்மேன்மேலும் வந்துகொண்டே இருக்க நன்றி அறிதலுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்
Your mode of presentation establishes you as a seasoned wood. .the logic and sequence are really commendable and we need to emulate in order to refine our way of write-ups. Gratitudes for having given weightage to my request as an ordinary NT fan.
Last edited by sivajisenthil; 28th June 2014 at 01:42 PM.
-
28th June 2014, 06:34 PM
#3594
Junior Member
Veteran Hubber
deiva magan. the Oscar nominated Tamil movie. hats off Gopal Sir
Last edited by sivajisenthil; 28th June 2014 at 08:45 PM.
-
28th June 2014, 07:06 PM
#3595
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
28th June 2014, 07:07 PM
#3596
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
28th June 2014, 07:07 PM
#3597
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th June 2014, 07:08 PM
#3598
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th June 2014, 07:09 PM
#3599
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th June 2014, 07:09 PM
#3600
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks