சில ராகங்களை கேட்கும் போது ,பிரமிப்பில் ஆழ்ந்து விடுவோம். அவை புரிந்து உணரவே சில வருடங்கள் ஆகும்.பாடி முயலவோ பல பிறவிகள்.ஆனால் ஒரு ராகம் மட்டும் கேட்டதும் ,அட இது நம்ம தோஸ்த் ,நாமும் பாடலாம் என்ற உணர்வை லகுவாக ஏற்படுத்தும் இதமான ராகம் ஷன்முகபிரியா. தமிழ் கடவுளின் பெயரில் அமைந்த ,லேசான ,அன்றாட உணர்வுகளுக்கு தோதான ராகம். எப்போ கேட்டாலும் மனசுக்கு பிடிக்கும்.எல்லோருக்கும் பிடிக்கும்.
இதுவும் ஒரு சம்பூர்ண மேளகர்த்தா.அவன்தான் மனிதன் ரவிகுமார் போல நிறைய உறவுகள் (ஜன்யம்)இல்லாத ராகம்.
நிறைய பாடல்கள் இந்த ராகத்தில் ஜனங்களின் ஜனரஞ்சகம் அல்லவா?
காதல் காட்சிகளில் முதன்மை என்று யார் என்னை கேட்டாலும் நான் இந்த படத்தில் கதாநாயகன் தன் கன்று காதலை விவரிப்பதும் ,அதில் நாயகி பொறாமையுடன் react செய்யும் சிவாஜி-வைஜயந்தி சம்பத்த பட்ட இரும்புத்திரை காட்சிதான் என்று சொல்வேன்..(hats off கொத்தமங்கலம் சுப்பு-வாசன்).அது முடிந்து வரும் இந்த தொடர்ச்சி பாடல் தொடாமலே ,இந்த ஜோடியை எண்ணி சிலிர்க்க வைக்கும்.(இயற்கையின் வளர்ச்சி முறை வரிகளில் நடிகர்திலகத்தின் புதிர் நிறைந்த பாவம் மற்றும் action அடடா).எஸ்.வீ.வெங்கட்ராமன் அவர்களின் "நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் இருக்கும்".
அந்த படமே ஒரு surprise package .அந்த மாதிரி ஒரு புராண படத்தையோ,நடிப்பையோ,சுவாரஸ்யத்தையோ அதுவரை உலகம் கண்டதில்லை.ஆனால் அந்த படத்தில் படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் நம்மை துள்ளி உட்கார வைத்த surprise package ஒவ்வையார் பாடல்.(சுந்தராம்பாள் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து திரையில் தோன்றி பாடினார்).திரை இசை திலகத்தின் "பழம் நீயப்பா ,ஞான பழம் நீயப்பா".
அந்த பாடகர் ,திலகங்களின் சாம்ராஜ்யத்தில் நிரந்தர சிற்றரசர்.பாடக சக்ரவர்த்தி.திடீரென நடிக்கும் ஆசை. திலகங்களையே இணைத்த பெரும் இயக்குனர் இந்த ஆசையை நிறைவேற்றுவதில் தயங்கவில்லை.அந்த பாடகரும் ,நடிகர்திலகத்தின் அங்கம் என்பதாலோ என்னவோ,அதே பாணியில் நடித்து,பேசி
ஒப்பேற்றியிருந்தார்.(ஒரு இடம் கிளாஸ் .தொழு நோய் கண்டு எங்கும் போக முடியாத நிலையில் மனைவியிடம் வேட்கையை வெளியிடும் காட்சி).அந்த படத்தின் இந்த பாடல் இப்படியும் ஒரு கடும் தமிழை இசையுடன் பாட ஒருவரா என்று இவரை எண்ணி வியக்க வைக்கும்.அருணகிரி நாதரின் திருப்புகழ் "முத்தை தரு பத்தி திருநகை".
சண்முக பிரியாவின் எனக்கு பிடித்த சில sample .
சிறு வயதில் எனக்கு சினிமா பார்க்கும் ஒரே தியேட்டர் அமராவதி(நெய்வேலி). சொன்னால் வெட்க கேடு. சென்னை சென்று சாந்தி,தேவி,மிட்லண்ட் என்று குளு குளு ஏ.சி தியேட்டர்களில் பார்த்த படத்தை கூட விடுமுறைக்கு வரும் போது அமராவதி திரையரங்கில் பார்த்தால்தான் நிறைவாகும்.ரொம்ப நாள் சுலேகா என்ற அடாசு தையல் காரனை ஆஸ்தான டெய்லர் ஆக பாவித்து சென்னையில் பெரிய பெரிய கடைகளை புறக்கணித்து,இவரிடமே லீவிற்கு வரும் போது அனைத்தையும் தைத்து போவேன்.அப்போது பாக்கெட் மணி சினிமாவிற்கே செலவாகி விடும். நைஸ் ஆக ஜெயா மெடிக்கல் கடையில் சோப்பு ,சீப்பு,கண்ணாடிகளை account இல் வாங்கி சென்று விடுவேன்.அம்மா அப்பா அவ்வப்போது செல்லமாக கண்டித்து மன்னித்தும் விடுவார்கள். நான் இவ்வளவு பற்று வைத்திருந்த tailor என்னை படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமில்லை.தீபாவளிக்கு முதல் நாள் அம்மா பதறுவார்கள். டேய் ...சுலேகா இன்னும் உங்கள் யார் டிரஸ்உம் தரவில்லை.எதை கட்டி கொள்ள போகிறீர்கள் என்று?அப்போ இப்போ என்று காஜா மட்டும் எடுக்கணும் என்று ஒரு வாரமாக தட்டி கழித்து வரும் சுலேகாவிடம் இரவு 10 மணிக்கு சென்றால் ,தம்பி அந்த துணிகளை எடு என்பார்..புது மெருகு அழியாமல் நாங்கள் கொடுத்த கடை label உடன் எங்கள் துணிகள்.நீங்க போங்க தம்பி.ஒரே மணிநேரம் ,முடிச்சு கொடுத்துறேன் என்ற சத்தியத்தை நம்பாமல் அங்கேயே உட்கார்ந்து ,கண்ணுறங்காமல் ,வேலை முடித்து ,சரியாக 4.32 க்கு காவல் தெய்வம் சிவகுமார் போல் வீடு வந்து சேருவேன்.(ஒரு தீபாவளிக்காவது முதல் நாள் உறங்கும் சுகத்தை எனக்கு சுலேகா தந்ததில்லை).இந்த முறை வாசுதேவனுடன் மெயின் பஜார் சுற்றிய போது சுலேகா அங்கு இல்லாதது ஒரு வெறுமையை தந்தது.இத்தனைக்கும் எங்கள் தங்க ராஜா பாணியில் பெல்ஸ் தைத்து ,நண்பர்களிடம் என்னை நாண செய்யும் tailor .
அப்போது டவுன் கிளப் என்ற பொழுது போக்கு கிளப்பில் ஒவ்வொரு வாரம் புதன் ஒரு ஆங்கில படமோ,தமிழ் படமோ போடுவார்கள்.35mm with projector . ஆஜராகி விடுவோம். அதில் என்னை கவர்ந்த இரு படங்கள் வரிசையாக இரு வாரங்கள் .தேன் மழை (காமெடி,பாடல்கள் பிடிக்கும் ),நினைவில் நின்றவள் (முழுபடமும் பிடிக்கும்)அதிலும் குறிப்பாக குமாரின் இசையில் ,ஈஸ்வரி குரலில்,ஆனந்தன்-தேவகி இணைவில் இந்த பாடல்.(எனக்கு மனோகர்-ஷீலா இணைவில் அம்மாம்மாவும் உயிர்)
பார்த்து மகிழுங்கள்.
Last edited by Gopal.s; 5th July 2014 at 08:17 AM.
படமாக்கம் ,ஸ்டைல் எல்லாவற்றிலும் உச்சம் தொட்ட ராட்சஷி ,வேதாசலத்தின் (வேதா) மந்திர வல்லவன் ஒருவன் அம்மம்மா.
மனோகர் வண்ண கிளியில் ரௌடி வேஷத்தில்,பட்டணத்தில் பூதத்தில் காமெடி கலந்த நம்பர் 3 ஆக ,மீண்டும் வாழ்வேன் படத்தில் டீச்சர் சுட குறி வைத்து சொல்லும் பிழைத்து போ action ,சிவகாமியின் செல்வனின் நானேதான் தலையசைப்பு,ராஜாவின் விஸ்வம் என்று என்னை கவர்ந்த தமிழ் படத்தில் under -utilise செய்ய பட்டவர்.(கருமாந்திர நம்பியாரையே எத்தனை படத்தில் சகித்தோம்)இந்த படத்தில் style personfied என்று சொல்லும் பாடல்.பார்த்தும் கேட்டும் மகிழவும்.
சிவந்த மண் படத்தின் பல தங்க புதையல்களின் நடுவே தொலைந்து விட்ட பிளாட்டின புதையலை பற்றி இந்த பதிவு.பிளாட்டினத்தின் மதிப்பு மக்களுக்கு புரியாததாலோ என்னவோ.
ஒரு நாளிலே உறவானதே
கனவாயிரம் நினைவானதே
வா வெண்ணிலா இசையோடு வா
மழை மேகமே அழகோடு வா
மகராணியே மடி மீது வா
நாளை வரும் "நாளை" என நானும் எதிர்பார்த்தேன்.
காலம் இது காலம் என காதல் மொழி கேட்டேன்
போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும்
போதும் என கூறும் வரை பூவே விளையாடு
வரும் நாளெல்லாம் இது போதுமே
மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு
கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு .
தஞ்சம் இது தஞ்சம் என தழுவும் சுவையோடு.
மிஞ்சும் சுகம் யாவும் பெற வேண்டும் துணையோடு
வரும் நாளெல்லாம்.இது போதுமே
ஒரு நிர்ப்பந்தமாய் நடந்த காதல் ஜோடியின் நாலு பக்கம் வேடர் சூழ்ந்த நிலையில் (நண்பர் செஞ்சியும்)மானிரெண்டின் காதல்.(மகாராணியின் முதலிரவு கட்டாந்தரையில்).இரவு ஊருறங்கிய பின் குளிக்கும் மனைவியிடம் தாபத்தை கண்ணியமாய் வெளியிடும் புரட்சியாளன்.
காஞ்சனாவின் தாபம் நிறைந்த விழிகளும்,நடிகர்திலகத்தின் காதல் வயப்பட்ட மோவாய் முத்தங்களும்.போதும் என கூறும் வரை அணைத்து,வினாடி கண் சொக்குவாரே !!!!!வரும் நாளெல்லாம் என்று வீணை மாதிரி மடி கிடத்துவாறே (50 ஆவது நாள் போஸ்டர் என நினைவு),மிஞ்சும் சுகம் யாவும் வரிகளில் காஞ்சனாவின் கண்களை பாருங்கள் .வரும் நாளெல்லாம் என மடியில் இரு கால்களை வெவ்வேறு நிலை மடித்து மயக்குவாறே....
புரட்சியாளனின் இயல்பான முடியழகும் ,ஆண்மை நிறைந்த கட்டம் போட்ட சட்டையும்,make -up மிதமாக திராவிட மன்மதனின் இளமை பொங்கும் handsome என படும் ஆணழகும்(அந்த மூக்கு ...அடடா) ,காஞ்சனாவின் நாணம்,தாபம் நிறை பெண்மையும், ஆபாசமில்லாத உறுத்தாத ஈர உடையும் உங்களை வேறு உலகத்துக்கே அனுப்பும்.
நடிகர்திலகத்தின் முதல் ஐந்து காதல்களுக்குள் வரும். நல்ல வேளை ...அசல் திட்ட படி பாலமுரளி இதை பாடவில்லை. டி.எம்.எஸ் -சுசிலாவின் மயக்கும் குரலும் (ரெண்டு பெரும் சௌகரியமான pitch இல் ),எம்.எஸ்.வியின் சாதனை பாடல்களில் ஒன்று.
பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ,கேட்டு,கேட்டு,கேட்டு,கேட்டு மகிழவும்.
Last edited by Gopal.s; 5th July 2014 at 12:07 PM.
வாலி-விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைவில் வந்த பாட்டுக்கொரு படகோட்டியில் ,அத்தனை பாடல்களும் உச்சம் ஆனாலும் துருவ நட்சத்திரமாய் அதிகம் பேச படாத ஒரு டி.கே.ராமமூர்த்தி stamp போட்ட பாடல். சுசிலாவின் மெல்லிய erotic voice ராட்சஷியை விழுங்கும்.
வில்லன் நம்பியார் ஜெயந்தியை ,சரோஜா தேவியை வரித்து ரசிக்கும் காட்சி.ஆரம்பத்தை கேளுங்கள் .சுசிலாவின் குரல் ஜாலத்தை கேளுங்கள் .இந்த பாடல் சிறு வயது முதல் என்னோடு வாழும் அதிசயம். சுசிலா பாடலை பதியும் போதெல்லாம் இந்த பாடலை என் கைகள் சொன்னது நீதானா,மாலை பொழுதின்,.என்ன என்ன வார்த்தைகளோ,பெண் பார்த்த இவற்றிற்கு ஈடாக எழுத வைத்து விடும் ஈர்ப்பு.
டி.ஆர்.பாப்பா நல்லவன் வாழ்வான்,வைரம்,மறுபிறவி ,இரவும் பகலும் போன்ற படங்களில் படு வித்யாசமான இசையமைப்பில் அசத்தியிருப்பார். இவர் ஒரு நிலைய வித்வான் என கேள்வி .(அந்த கால வானொலி நேயர்களுக்கு புரிந்திருக்கும்)
பல புதிய வரவுகள் நிறைந்த 64-65 ஆம் வருடங்களில் ,பல சோக நிகழ்வுகளும் உண்டு.முக்கியமாக இசை துறைக்கு.ஆனால் பல land mark படங்கள் வெளியான வருடங்கள் இவை. ஒரு புதியவருக்கு வாசல் திறந்து விட்டு ,மக்களின் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் வாசல் மூட வைத்த ஆரம்ப படம்.
ஆனாலும் இசையமைப்பு அருமை .முக்கியமாக இந்த வித்தியாச குத்து பாடல்.
விவாதத்தை வளர்க்க விரும்பவில்லைஎன்று சொல்லிவிட்டு, புதிய விவாதத்துக்கான மேட்டர்களைக் கொண்டு வந்துள்ளீர்கள். ஆனால் நிஜமாகவே நான் வளர்க்க விரும்பாததால் அவற்றுக்கு பதில் சொல்லி, திரியின் போக்கை மாற்ற விரும்பவில்லை.
// இவருடைய சகாக்கள் காற்று வீசும் (பண காற்று,இசை காற்றல்ல)திசையில் பறக்க,இசை கலைஞர்களை கூட வேலைக்கு வைக்க வசதியில்லாமல் ,ராமண்ணா ஒருவர் புண்ணியத்தில் எவ்வளவு நாள் ஓட்டுவது?
இவர் கொடுத்த லைப்ரரி tunes வேறொரு வசதியுள்ள முன்னாள் சகாவால் மூன்று நான்கு வருடங்கள் வசதியாக கோவர்தன்-வெங்கடேஷ்-ஹென்றி -ஜோசெப்-நோயல் -சங்கர்-கணேஷ் துணையோடு அரங்கேறி கொண்டிருக்க.....//
நல்ல சமாளிப்பு. ஏன் அதே ட்யூன்களை வைத்து இவரும் சில வருடங்கள் ஓட்டியிருக்க வேண்டியதுதானே. .
விஸ்வநாதனின் மெமரி பவர் பற்றி சொன்னீர்கள். அவருக்கு ரொம்ப ரொம்ப 'புவர் மெமரிபவர்' என்பது அவர் பங்குகொள்ளும் நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களுக்கு தெரியும். கேள்வி கேட்பவர் எவ்வளவு முயன்று நினைவுபடுத்தினாலும் அவருக்கு பழைய சம்பவங்கள் அவ்வளவாக நினைவுக்கு வராது. எதையாவது பொத்தாம் பொதுவாக சொல்லி சமாளிப்பார்.
சமீபத்தில் கூட அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஒரு பெண், ராமன் எத்தனை ராமனடி படத்திலிருந்து 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்' பாடலை பாட, 'இது எந்தப்படத்தில்?' என்று கேட்டு தெரிந்துகொண்டார். அவர் இசையமைத்ததே அவருக்கு நினைவில்லை. அப்படியிருக்க அவர் சகா சொன்ன ட்யூன்களையெல்லாம் எங்கே நினைவில் வைத்திருக்க?.
உதவியாளர்கள் சிலரது பெயர்களை மட்டும் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் அவரிடம் நூறுக்கு மேற்பட்ட உதவியாளர்கள் இருந்தார்கள். சிரமம் பாராமல் அனைவரையும் குறிப்பிட்டிருக்கலாம். இவர் ஒரு இசையமைப்பாளர் மட்டும்தான் உதவியாளர் வைத்திருந்தார். மற்றவர்களெல்லாம் எல்லா வாத்தியங்களையும் அவர்களேதான் வாசித்தார்கள். நீங்கள் சொன்ன அந்த உதவியாளர்களின் பெயர்கள் வெளியே தெரிந்ததே இவரால்தான். தன பெயருக்கு கீழே 'உதவி : ஹென்றி டேனியல் (அல்லது) கோவர்த்தனம் (அல்லது) ஜி.கே. வெங்கடேஷ் (அல்லது) ஜோசப் கிருஷ்ணா என்று போட்டு அவர்களுக்கு கௌரவம் தந்தவர் எம்.எஸ்.வி. (மாமா பெயருக்கு கீழே 'உதவி: புகழேந்தி' என்பது பெர்மெனன்ட்)
யாரும் தவறாக நினைக்க வேண்டாம். திரு இளையராஜா இதுவரை தன் உதவியாளர்கள் யாருடைய பெயரையும் தன் பெயரோடு போட்டுக் கொண்டதில்லை. அறிமுகமான காலத்தில் அவரது வலது கையாக விளங்கிய தம்பி கங்கைஅமரன் பெயர் உள்பட. அவர் மட்டுமல்ல அவர் துவங்கி இன்றைய இமான் வரையில் எல்லோருமே அப்படித்தான். (தேவா தம்பிகள் பெயரை தனியே போடச்செய்தார்).
திரு ராமமூர்த்தி மீது எனக்கும் மிகுந்த மரியாதை உண்டு. அவரது படைப்புகளான நான், மூன்றெழுத்து, மறக்க முடியுமா (2 பாடல்கள்), தேன்மழை போன்ற படங்களின் பாடல்கள் மிகவும் பிடித்தவை. ஆனால் இவரை உயர்த்துவதற்காக 'எம்.எஸ்.வி. ஒரு டோட்டல் ஜீரோ' என்கிற ரீதியில் பதிவுகள் இட்டால் என்னை என்னாலேயே கட்டுப்படுத்த முடியாது.
என்னைப்பொருத்தவரை எம்.எஸ்.வி. செய்த உலகமகா தவறு என்பது மீண்டும் அவர் ராமமூர்த்தியோடு இணைந்ததுதான்.
மற்றபடி தனிப்பட்ட முறையில் இவர்களோடு உங்கள் நெருக்கங்கள் கண்டு மகிழ்ச்சியே. நான் இவர்களை தூரத்தில் வைத்து பார்த்ததோடு சரி.
முத்துசிப்பி 1968
கிருஷ்ணன் நாயர் இயக்கம்
ஜெய் ஜெயலலிதா நடிப்பு
s m சுப்பையா நாய்டு இசை
சுசீலாவின் அருமையான மற்றும் எதிர்பார்ப்பான குரல்
மாலையிட்ட கணவன் நாளை வருவான்
இந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க
மாலையிட்ட கணவன் நாளை வருவான்
இந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க
பக்கம் வந்து மெல்ல பாடல் ஒன்று சொல்ல
வெட்கம் வந்து செல்ல சொர்க்கம் கண்டு கொள்ள
பக்கம் வந்து மெல்ல பாடல் ஒன்று சொல்ல
வெட்கம் வந்து செல்ல சொர்க்கம் கண்டு கொள்ள
மாலையிட்ட கணவன் நாளை வருவான்
இந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க
தூங்காத கண்ணெ துடித்தது போதும்
துடியிடையே நீ துவண்டது போதும்
தூங்காத கண்ணெ துடித்தது போதும்
துடியிடையே நீ துவண்டது போதும்
நீங்காத நினைவே அலைந்தது போதும்
நீ எதிர் பார்த்தது நடக்கும் எப்போதும்
நீங்காத நினைவே அலைந்தது போதும்
நீ எதிர் பார்த்தது நடக்கும் எப்போதும்
மாலையிட்ட கணவன் நாளை வருவான்
இந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க
இடையில் கலைச்செல்வியின் குரல் என்னண்ணா ?
சுசீலா : ஆனந்தக் கண்ணீர் அருவி என்றோட
ஆசை கொண்டேன் அதில் நான் விளையாட
ஆனந்தக் கண்ணீர் அருவி என்றோட
ஆசை கொண்டேன் அதில் நான் விளையாட
நால் விழி சேர்ந்தே நாடகமாட
நாயகன் வருவான் நான் உறவாட
நால் விழி சேர்ந்தே நாடகமாட
நாயகன் வருவான் நான் உறவாட
மாலையிட்ட கணவன் நாளை வருவான்
இந்த முத்து வண்ண சித்திரத்தின் முகம் பார்க்க
மூன்று அருமையான பாடல்களை காணொளியுடன் தந்து அசத்தியுள்ளீர்கள்.
'பறவைகள் சிறகினால்'
'அம்ம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்துக்கொள்ளு' (துவக்கம் கம்செப்டம்பரை நினைவு படுத்தும்)
'ஒரு நாளிலே உறவானதே' (தலைவரின் மிகச்சிறந்த டூயட்களில் ஒன்று). நீங்கள் சொன்னதுபோல மறக்கப்பட்ட பாடல் அல்ல. நல்ல ஹிட் தான். ஆனால் 'ஒரு ராஜா ராணியிடம்' பாடலும் 'பட்டத்து ராணி' பாடலும் டாமினேட் செய்ததால் கொஞ்சம் அழுந்திவிட்டது. மிக ரம்மியமான மேலோடி, குறிப்பாக ப்ளூட் மற்றும் சிதார் விளையாட்டு. இதைத்தொடர்ந்து வரும் சண்டைக்காட்சி சொதப்பல். தரையில் சண்டையிடுவதாக மட்டும் காட்டாமல் தண்ணீருக்குள்ளும் குதித்தது மேலும் சொதப்பல்.
இதுபோல அழுந்திய இன்னொரு பாடல் 'சொல்லவோ சுகமான கதை சொல்லவோ'.
பாட்டுக்கொரு படம் 'சிவந்த மண்' என்பதே சரியான பதம்.
Bookmarks