முத்துச்சிப்பியில் இடம்பெற்ற 'மாலையிட்ட கணவன் நாளை வருவான்' என்ற அருமையான பாடலுடன் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளீர்கள். உங்கள் பதிவுகள் இல்லாததால் திரியின் வேகம் சற்று குறைந்திருந்தது உண்மை. இனி வேகம் எடுத்துவிடும்.
பாடலின் வரிகள் அனைத்தையும் மிக நேர்த்தியாக அளித்துள்ளீர்கள். இப்பாடலில் 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின்' நடிப்பு மிகச்சிறப்பாக இருக்கும்.
மாடர்ன் தியேட்டர்ஸ்
சுந்தரம் இயக்கம்
ஷ்யாம் பிலிப்ஸ் இசை (இவர் என்ன ஆனார் )
நெல்லையில் கொக்கிரகுளம் என்ற சிறிய ஊரில் லோகாம்பாள் சுப்ரமணிய அயர் புத்திரனாக பிறந்த சுப்ரமணியம் ஷங்கர் அலைஸ் ஜெய்ஷங்கர் ,
குமாரி ருக்மணியின் புத்திரியும், சாந்த மீனா என்ற ஐஸ்வர்யாவின் தாயாரும் ஆன லக்ஷ்மி இணை
லக்ஷ்மியோட தோப்பனார் பெயர் தெரியவில்லை
பாலாவின் இளைய இனிய குரல் வசந்தாவின் துணை ஹம்மிங் குரல்
"நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
இன்று எந்தன் கண்ணில் விழுநதா ளோ
அவள் முகம் "
பாட்டு நடுவில் வரும் பாலாவின் பேச்சு குரல் ஐயோ சம்திங் marvellous
பாலா மனோரமா குரல்களில்
"பூந்தமல்லியெலெ ஒரு பொண்ணு பின்னாலே நான் போய் வந்தேண்டி
அவ புடவை நல்ல இல்லை "
விளகேற்றியவள் 1965
ஆதித்தன் (இவரை பற்றி குமுதம் வார இதழில் படித்த நினவு) ,(இரவும் பகலும் )வசந்தா
ஜோசப் தளியத் படம்
T R பாப்பா இசை
பாடகர் திலகம்,கண்ணிய நாயகி குரல்களில் என்ன ஒரு டூயட்
"முத்தமா ஆசை முத்தமா "
"ஆமாம் முத்தம்மா வேணும் மொத்தமா "
இந்த பாட்டைசிலோன் ரேடியோவில் ரொம்ப நாள் கேட்கும் போது ssr ,விஜயகுமாரி ஜோடி பாடும் பாடல் என்றே நினைத்து கொண்டு இருந்தேன். ஏன் என்றால் "ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக " பாடலை போன்றே இந்த முத்தமா பாடலும் அமைந்திருக்கும் .
இந்த விளகேற்றியவள் படத்தில் எல்லா பாடல்களுமே இனிமை
"கத்தியே தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு "
இந்த பாட்டை எழுதியது கண்ணதாசன் என்று நினைத்தேன் ஆனால்
என் நண்பர் ஒருவர் ஆலங்குடி சோமு என்று கூறினார்
நான் இன்று காலை ஷிப்ட் சென்ற வேளையில் எனக்கு மிகவும் பிடித்த என்னுடைய அழகான ராகத்தை எனக்கு முன்னால் நான் வீடு வருவதற்குள் பதிவாகப் போட்டு விட்ட வியட்நாம் வீட்டாரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
Bookmarks