-
6th July 2014, 11:18 AM
#3721
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
1974 முதல் 1978 வரை இலங்கை திரைப்பட கூட்டுஸ்தாபனம் மூலம்வெளியான 12 எம்ஜிஆரின் படங்களில் 7 படங்கள் 100 நாட்கள் ஓடியது . 25 சிவாஜியின் படங்களில் 3 படங்கள் 100 நாட்கள்
ஓடியது .
ராமன் தேடிய சீதை
நல்ல நேரம்
உலகம் சுற்றும் வாலிபன்
இதயக்கனி
நீதிக்கு தலை வணங்கு
நாளை நமதே
ஊருக்கு உழைப்பவன்
சிவாஜி படங்கள்
எங்கள் தங்க ராஜா
தங்கப்பதக்கம்
அவன்தான் மனிதன் .
கூட்டுஸ்தாபனம் மூலம் வெளியான படங்கள் என்றால் என்ன ?
தயவு செய்து விளக்கவும் எஸ்வி சார்
கேட்பதற்கு காரணம் தங்களுக்கு வந்தடைந்த தகவலில் தவறு இருக்க நிறைய வாய்ப்புள்ளது என்பதால்
-
6th July 2014 11:18 AM
# ADS
Circuit advertisement
-
6th July 2014, 12:44 PM
#3722
Junior Member
Devoted Hubber
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்- அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
-
6th July 2014, 12:59 PM
#3723
Junior Member
Diamond Hubber
வெற்றியில் சொந்தம் கொண்டாடுவது - இதில் சமரசம் செய்து கொல்லாத தார்மீக உரிமை- எனும் ரீதியில் உரிய வெகுமதி பெறுவது என்பது எப்பொழுதும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., படைப்புகளே!!! என்பது ஊர் அறிந்த, உலகம் அறிந்த உண்மை...இதுதான் மக்கள்திலகம் அவர்களுக்கும், மற்ற பிற நடிகர், நடிகைகளும் உள்ள பெருத்த வித்தியாசம்?!!!!! ஆதலின் mgr., அவர்களின் திரைப்பட வசூல் வெற்றிகளோடு பிற நடிகர்களின் சாதனை என எதனையும் ஒப்பிடுவது மாபெரும் தவறு - என ஆணித்தரமாக, பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறோம்... நன்றி...
-
6th July 2014, 02:01 PM
#3724
Junior Member
Devoted Hubber
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்- அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
-
6th July 2014, 03:22 PM
#3725
Junior Member
Platinum Hubber
திரு ரவி கிரண்
யாழ் நகரில் இருந்த பாரத் எம்ஜிஆர் மன்ற அமைப்பாளர் திரு டேவிட் என்பவர் கடந்த காலத்தில் எங்களுக்கு அனுப்பிய
மக்கள் திலகத்தின் படங்கள் - வசூல் பட்டியல் - இதர நடிகர்களின் படங்கள் பற்றிய செய்திகள் பற்றி இங்கு பதிவிட்டவுடன் உடனே துள்ளி குதித்து கேள்விகளை தொடுத்து அவசர கோலத்தில் ஆத்திரமாக பதிவுகளை வழங்கி இருக்கீறார்கள் .
நிதானம் தேவை நண்பரே
இன்னும் நான் அந்த இலங்கை பட பதிவுகளை முழுமையாக போடவில்லை .
எந்த நிலையிலும் நான் என் பதிவை ஆவணம் என்று கூறவில்லை .எதுவும் பத்திரிகை விளம்பரம் இல்லை .
நான் போடும் பதிவுகளை நீங்கள் நம்ப வேண்டும் என்று கூறவில்லை .
உங்களுக்குத்தான் பொறுமை இல்லையே ரவிகிரண்
நீங்கள் மட்டும் 55 கடந்தவராக் இருந்தால் உங்களின் ஆர்வத்திற்கும் , கடினமான உழைப்பிற்கும் , உங்கள் அபிமான
நடிகரின் அன்பை பெற்று நீங்கள் இந்நேரம் அந்த அபிமான நடிகரை வைத்து படம் எடுத்து வெற்றி கண்டு இருப்பீர்கள் .
அல்லது அவரது பெயரால் பத்திரிகை துவங்கி பெரிய ரசிக மன்ற தலைவராக் வளர்ந்திருப்பீர்கள் . எதுவும் இல்லை என்றால் அவரது கட்சியில் பெரிய தலைவராக வலம் வந்து இருப்பீர்கள் . என்ன செய்வது . வயதும் அனுபவமும்
உங்களுக்கு கிடைக்கவில்லையே.
இனிமேலாவது பக்குவமாக நிதானமாக பொறுமையுடன் செயல் படவும் .
இன்று முதல் நீங்கள் சாதாரண ரவிகிரண் இல்லை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகம் -14 துவக்கியவர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் .மிகவும் பொறுப்புடன் செயல் பட்டு எல்லா புகழும் பெற்று நல்ல பெயர் எடுக்க நாங்கள் வாழ்த்துகிறோம் .
-
6th July 2014, 03:42 PM
#3726
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு
விரைவில் புதிய மாத இதழ் உங்கள பார்வைக்கு .........
மக்கள் திலகத்தின் புகழுக்கு புகழ் சேர்க்கும் உன்னத படைப்பு
புதுமையான வடிவில்
மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றை கண் முன் நிறுத்தும் பக்கங்கள் .
''புதிய பூமி''

வண்ண மாத இதழ் .
விபரங்கள் விரைவில் ........
-
6th July 2014, 03:48 PM
#3727
Junior Member
Platinum Hubber
REPRODUCED- TO OPEN EYES.
நன்றி ... நன்றி ... நன்றி ..
14.4.2013 இன்று மக்கள் திலகத்தின் மகத்தான புகழுக்கு மலர் மாலை சூடிய திருநாள் .
பெங்களூர் - இந்திரா நகர் - கோகுல் ஓட்டலில் இன்று காலை புத்தக வெளியீட்டு விழா இனிதே துவங்கியது .
சிறப்பு அழைப்பாளர்கள்
திரு முனியப்பா - முன்னாள் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் .
திரு சம்பத் - சிமோகா நகர அதிமுக தலைவர் .
திரு மணி - பெங்களூர்
சூலூர் ரோகிணி குமார் -அவர்களின் இனிய மக்கள் திலகத்தின் பாடலுடன் விழா துவங்கியது .
சென்னை பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின் உணர்சிகரமான உரையுடன் வரவேற்புரை துவங்கியது .அவரது உரையில் மக்கள் திலகத்தின் மாண்புகளை , பல்வேறு கடந்த கால நிகழ்வுகளை கோர்வையாக தொகுத்து வழங்கினார் .
பின்னர் நூல் ஆசிரியர் திரு பம்மலார் அவர்கள் அறிமுகபடுத்தபட்டார் .
திரு முனியப்பா அவர்கள் மக்கள் திலகம் மலர் மாலை புத்தகம் வெளியிட திரு ஞானபிரகாசம் அவர்கள் பெற்று கொண்டார் .
திருப்பூர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் விழா நிகழ்சிகளை அருமையாக தொகுத்து வழங்கினார் .
பெங்களூர் திரு மோகன் குமார் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது .
விழா செய்தி துளிகள்
விழாவில் கலந்து சிறப்பித்த நண்பர்கள் .
சென்னை - திருவாளர்கள் பேராசிரியர் செல்வகுமார் - திரு லோகநாதன் - திரு நாகராஜ் - திரு பெருமாள் -சேலம் - முருகேசன் - கொளத்தூர் திரு ஜெய்சங்கர்- மாஸ்டர் வள்ளி நாயகம்
திருப்பூர் திரு ரவிச்சந்திரன் - திரு ரோகிணி குமார் - திரு தேனி ராஜாதாசன் - புதுவை கலியபெருமாள் - திருவண்ணாமலை திரு கலீல் - சிமோகா திரு சிவகுமார் மற்றும் பெங்களூர் மக்கள் திலகம் நண்பர்கள் உட்பட சுமார் 60 நண்பர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்ப்பித்தனர் .
மக்கள் திலகம் மலர் மாலை உருவான விதம் பற்றி திரு பம்மலார் அவர்கள் மிக அருமையாக விவரித்து கூறினார் .
உண்மையிலே திரு பம்மலார் அவர்கள் பத்திரிக்கை உலகில் ஒரு புரட்சியினை உருவாக்கி உள்ளார் .
உலக சினிமா புத்தக வரலாற்றில் முதன் முறையாக
டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் . உயர்தர வழ வழப்பு தாளில் a 4 - தாளில் 150 பக்கங்களுடன் பிரமாண்டமான மக்கள் திலகத்தின் 134 படங்களின் அருமையான பட தொகுப்பினை பிரமாதமாக அச்சிட்டு மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் திரு சுவாமிநாதன் .
திலகங்கள் சங்கமம் - சந்திப்பின் மூலம் உருவான இந்த அரிய சாதனை உருவாக மூல கர்த்தர்
திரு சுப்பு அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமை பட்டுள்ளேன் .
நடிகர் திலகத்தின் தீவிர விசுவாசிகளான திரு ராகவேந்திரன் - திரு நெய்வேலி வாசுதேவன்
மற்றும் அலைபேசி மூலமும் , திரி யுலும் வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் திலகம் நண்பர்கள்
மற்றும் மக்கள் திலகம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
மக்கள் திலகத்துக்கு முதல் முறையாக மிகவும் உயர்ந்த விலையில் வெளி வந்த
மக்கள் திலகம் மலர் மாலை விழா முடிவுறும் தருவாயில் விற்பனைக்கு வந்த 100 புத்தகங்களும் விற்று சாதனை படைத்தது .
நிறைவாக
மக்கள் திலகத்தை நேரிலே பார்ப்பது போல பிரமையை உண்டாக்கிய
ஆவணதிலகம் பம்மலார்
பாராட்ட வார்த்தை இல்லை .
இன்று முதல் மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்களில் குடி புகுந்த உயர்ந்த உள்ளம் கொண்ட
பம்மலார் - இனி எங்கள் வீட்டு பிள்ளை பம்மலார் .
-
6th July 2014, 03:53 PM
#3728
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் மலர் மாலை - மதிப்புரை
திரு பம்மலார் சுவாமிநாதன் அவர்கள் முதல் முறையாக மக்கள் திலகத்துக்கு வெளியிட்ட பிரமாண்டமான நூல் .
இதுவரை மக்கள் திலகத்துக்கு பலர் புத்தகங்கள் வெளியிட்டு உள்ளனர் .
திரு பம்மலாரின் அயராத உழைப்பில் இந்த புத்தகம் சிறப்பாக வந்துள்ளது .
சிறப்பு அம்சங்கள்
a 4 அளவில் வந்த முதல் டிஜிட்டல் மலர் .
மக்கள் திலகம் நடித்த 134 படங்களின் சோலோ ஸ்டில்ஸ் மட்டும் இடம் பெற்றுள்ளது .
விளம்பரங்கள் இன்றி எல்லா பக்கமும் படங்களுடன் வந்த முதல் மலர் .[ உலகளவில் சினிமா வரலாற்றில் ஒரு நடிகரின் முழு பட ஆல்பம் ]
காவிய நாயகனுக்கு பம்மலார் சூட்டிய தலையங்கம் - வைர வரிகள் .
மக்கள் திலகம் நடித்த 134 படங்கள் - பட்டியல் அருமை .
இதுவரை காணாத மக்கள் திலகத்தின் அரிய் நிழற் படங்கள்
மக்கள் திலகம் அவர்கள் உலக பட வரலாற்றில் சாதனை
வீரம்
விவேகம்
ஆவேசம்
ஆனந்தம்
சாந்தம்
புன்னகை
வியப்பு
என்ற பலதரப்பட்ட நடிப்பாற்றல் கொண்ட நடிகப்பேரசரின்
விதவிதமான தோற்றங்கள் காண்போரின் நெஞ்சை அள்ளுகிறது .
என்ன ஒரு மயக்கும் வசீகரமான மக்கள் திலகத்தின்
அட்டகாசமான படங்கள் ..
மொத்தத்தில் இந்த புத்தகம் காண்போரின் உள்ளங்களில் மக்கள் திலகம் நேரிலேயே தோன்றி அவர்களுடன் பேசுவது போல் உள்ளது .
எல்லா துறைகளிலும் முதன்மை இடத்தை பிடித்து வரலாற்று சாதனை புரிந்தவர் நம் மக்கள் திலகம் .
திரைப்படத்துறை விட்டு 36 ஆண்டுகள் மற்றும் விண்ணுலகம் சென்று 25 ஆண்டுகள் ஆனபின்னும்
அவரது புகழுக்கு புகழ் மாலை அணிவித்து அழகு பார்த்த
திரு பம்மலாரின் துணிச்சலான முயற்சிக்கு பாராட்ட வார்த்தையில்லை .
அவரது அடுத்த படைப்பான மக்கள் திலகத்தின் பிரமாண்டமான மக்கள் திலகம் தகவல் களஞ்சியம் என்ற புத்தகம் விரைவில் வந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் .
-
6th July 2014, 04:03 PM
#3729
Junior Member
Diamond Hubber
-
6th July 2014, 04:10 PM
#3730
Junior Member
Platinum Hubber
Thanks thiru jai sankar [our hubber]
பம்மலார் சார்,
பார்க்கப் பார்க்க பரவசம் அளிக்கும் அற்புதமான தொகுப்பு தங்களது தமிழ்த்திரைக்களஞ்சியம் மக்கக் திலகம் மலர் மாலை-1 . மக்கள் திலகத்தின் மணிமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல். இதுவரை பார்க்காத பல அரிய படங்கள். எத்தனையோ
புத்தகங்களில் பார்த்துப் பழக்கப்பட்ட படங்கள் கூட தரமான டிஜிட்டல் பிரிண்ட்டிங்கில் பார்க்கும் போது புதியதாகப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு புகைப்படத்தினைப் பற்றியும் விரிவாகப் பேச வேண்டும் என்று தோன்றியது.
முதல் படம் சதிலீலாவதி தொடங்கி கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அனைத்து திரைப்படங்களிலிருந்தும் (இரண்டு படங்கள் தவிர) தலைவரின் தனி புகைப்படங்களைத் தொகுத்து நேர்த்தியாக வழங்கியுள்ள தங்களது கடின உழைப்புக்கும் கலைத்திறனுக்கும் சபாஷ் . அனைத்து புகைப்படங்களிலும் எனது மனதினை மிகவும் கவர்ந்தது பெற்றால் தான் பிள்ளையா படத்தின் புகைப்படம் தான்.
அந்தப் புகைப்படம் ஒன்றே ஆயிரம் கதைகளைச் சொல்கிறது. அடுத்த பக்கத்தைப் புரட்ட மனமே வரவில்லை. அவ்வளவு அழகு. குழந்தையின் அழகோடு போட்டி போடும் மக்கள் திலகத்தின் அழகு. கள்ளமில்லாச் சிரிப்பு . மனதைவிட்டு என்றும் அகலாது. அடுத்து கலங்கரை விளக்கம் படத்தில் அழகோவியத்தின் அருகில் உயிரோவியமாய் மக்கள் திலகம் அமர்ந்திருக்கும் காட்சி. இதுவரை பார்க்காதது. பார்க்கப் பார்க்க பரவசமளிப்பது.
அடுத்து அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் அழகுக் கோலம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புகைப்படத்தினைப் பார்க்கும் பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுத்த தங்களுக்கு பல்லாயிரம் வணக்கங்கள். மலைக்கள்ளனின் மாறுவேடக்காட்சியை புதுப்படத்தின் புகைப்படம் போல பளபளக்கும் மெருகுடன் பதிவிட்டமைக்குப் பாராட்டுகள். நாடோடி மன்னன் திரைப்படம் என்றாலே நமக்கு ஞாபகம் வரும் வழக்கமான புகைப்படங்களுக்கு மாறாக வித்தியாசமான புகைப்படம் தந்தமைக்குப் பாராட்டுக்கள்.
நாடோடி படத்தில் நவரசம் ததும்பும் முகபாவத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு பாராட்டுக்கள். நவரத்தினம் படத்தில் தலைவர் பிலியட்ஸ் விளையாடும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். எல்லாவற்றுக்கும் மேலாக கருத்தாழம் நிறைந்த தங்களது தலையங்கம். இப்படி எத்தனை பாராட்டுக்கள் சொன்னாலும் தகும். வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
இப்படி ஓர் அருமையான புத்தகத்தை வெளியிட்ட தங்களுக்கும் அற்புதமான புகைப்படங்களை அளித்த திரு.ஞானம் அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த வினோத் சார் அவர்களுக்கும், இந்நூல் நல்ல முறையில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற தோன்றாத் துணையாக இருந்த அத்துணை மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் நன்றி.
Bookmarks